அகிலா கிடுக்கை மாதிரி இருக்கு அவஸ்தைப்படுங்க என்று கரிநாக்கால் சபித்தாள் பத்தினி அல்லவா.சாபம் பலித்தது,
மாயா பஜாரில் கடோத்கஜனின் சிஷ்யர்களாக ஜம்பு, லம்பு என்ற கெட்டப்பில் ஏ.கருணாநிதியும், பலராமனும் நடிப்பார்கள். அவர்களது வாத்தியார் ஏழுமலை,(சின்னமயன்) இம்மூவரே கல்யாண காரியஸ்தர்கள்
கெளரவர்களின் புரோகிதர்கள் சாய்ராம், சேதுராம் சரியான வினை பிடித்தவர்கள் சகுனி நம்பியாரை திருப்திப் படுத்த இவர்கள் இருவரும் சம்மந்திகளை அதாவது கிருஷ்ணரின் குடும்பத்தை மானபங்கப்படுத்த முயற்சிப்பார்கள். தங்கவேலு வேறு மாப்பிள்ளையாக (லக்கண குமாரனாக) தூள் கிளப்பிக் கொண்டிருப்பார். படுக்கையை காண்பித்தால் கிடுக்கை கேட்பார்கள். கம்பளத்தில் அமர்த்தினால் கிம்பளம் கேட்பார்கள். எல்லாம் மாயமாக படைக்கப்பட்டு விடப்படும் ஏழுமலையால்.கிடுக்கை செய்யும் அட்டகாசம் அமர்க்களமாக இருக்கும். வேகமாக சுற்றும், முன்னும் பின்னும் கன்னா பின்னா வென்று நகரும். கோல்கள் தலையில் அடிக்கும். கிம்பளம் சுருட்டிக் கொள்ளும் ஒரு பக்கம் நீட்டினால் மறுபக்கம் சுருட்டிக் கொள்ளும் மாப்பிள்ளை தோழன் சாரதியை கிடுக்கைகைக்கு மேல் அழகுபடுத்தும் சப்பரம் போன்ற ஒன்று மேலும் கீழும் நகர்ந்து மண்டையைப் பிளக்கும். தியேட்டரே அதிரும்.
இத்தகைய ஆராதனைதான் மைல்டாக சிவராமனுக்கு அன்று இரவு நடந்தது. உணர்வில்தான். .காலையில் எழுந்தால் எவ்வித அயர்வும் இல்லை. வினோத அனுபவம்.
மறுநாள் அகிலாவை தாஜா செய்து, மாயக்கட்டிலில் உறங்க வைத்தார் சிவா.
இரவு ஒரு மணிக்கு அகிலா சிவராமனை எழுப்பி குதூகலத்துடன் அம்மாவின் அரவணைப்பில் இருந்ததாக உணர்ந்தேன், என்றாள். சிவராமன் எரிச்சலுடன் திட்டினவங்களுக்கு கட்டில் நல்லது பண்ணும் போல இருக்கு என்று அங்கலாய்த்துக் கொண்டார்.
“அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே”, அன்னையைப் போல் ஒரு தெய்வம் உண்டோ. உடலும் நீயே, உயிரும் நீயே போன்ற பாடல்கள் கொண்ட ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியை அம்மா அரவணைப்பில் கண்டு களீத்திருக்கிறாள் அகிலா.
காலை எழுந்ததும் அகிலாவைப் பார்த்து உங்கம்மாவை திருச்சியிலிருந்து கூட்டிண்டு வந்து இந்த கட்டிலில் படுக்க வைச்சா என்ன ஆகும்னு நான் சொல்லட்டுமா என்றார்.
அகிலா ஆவலுடன் என்னவாகும் சொல்லுங்க என்றாள். சிவா உடனே “உங்கப்பா ஆவியா வந்து “மெதுவா மெதுவா தொடலாமா” என்று வேட்டைக்காரன் கெட்டப்பில் பாட உங்கம்மா பதிலுக்கு கைய தட்டிவிட்டு “தொடாமல் நான் மலர்ந்தேன்” என்று தென்னை மரத்த பிடிச்சுண்டு போஸ் கொடுப்பாங்க என்றார்.
அகிலாவிற்கு கோபம் பொத்துக் கொண்டு வர “காபி கிடையாது போங்கன்னு” மீண்டும் மாயக்கட்டிலில் படுத்தாள். ரொம்ப தூங்காதே! உனக்கே அந்த சீன் வந்துடப் போறது என்று சதாய்த்துக் கொண்டே பர்ஸுடன் நடைபயிற்சிக்கு புறப்பட்டார்.
நடைபயிற்சியின் போது அவரது பால்ய நண்பர் நரஹரி கைபேசியில் தொடர்பு கொண்டார்.
“கட்டில் நல்லா இருக்கா” பிரமாதம் என்று பதில் வந்தது.
“ஆமா, நான் பாகீரதியுடன் நாளைக்கு சென்னை வரேன். ரெண்டு நாள் இருப்பேன். ஒரு ஆயுஷ்ஹோமம், புதுக்கட்டில்லே தான் படுத்துக்க போறேன்” என்றார்.
“அனுபவி ராஜா அனுபவி” சிவாவின் பதில்.
ஹரி நல்ல எழுத்தாளர். விமர்சகர்.மதுரையில்
மத்வ சபையின் செயலர். மாயக்கட்டில் அவரை என்ன படுத்தப் போகிறதோ என சிவா ஆவலுடன் காத்திருந்தார். அவர் மனைவி பாகீரதி ஒரு தீவிர கமல் ரசிகை.
ஆழ்வார் பேட்டையில் ஆயுஷ்ஹோமம் ஒன்றை முடித்துக் கொண்டு, உறவினர் வீடுகளுக்கு சென்று விட்டு இரவு எட்டு மணிக்கு சிவா வீட்டிற்கு வந்தார்கள். அபி அவர்களுடன் சிறிது நேரம் லூட்டி அடித்தான்.
அவர்கள் மிகவும் களைத்திருந்ததால் சிவா குறிப்பறிந்து “இப்ப தூங்கிட்டு நாளைக்கு அரட்டை அடிக்கலாம்” என்றார். 8.30
மணிக்கு ஹரியை மாயக்கட்டிலில் கிடத்தினார். பக்கத்தில் அகிலா கட்டிலில் பாகீரதி
“எழுத்தாளரின் மாயக்கட்டில் அனுபவம் எப்படி இருக்கப் போகிறதோ” என்று மெல்லிய குரலில் சிவா முணு முணுமுணுத்ததைக் கேட்டு அகிலாவிற்கு ஒரே சிரிப்பு, எதிர்பார்ப்பு.
காலையில் ருசியான காபியுடன் அரட்டடையை ஆரம்பித்தார்கள். இன்னிங்கி சிவா ஆத்திலே அய்யர்-ராயர் சமையல் என்று ஹரி சொல்லி பாகீரதியை உசுப்போத்தினார். “எனக்கு எல்லாம் தெரியும், வாய மூடிண்டு வாக் போயிட்டு வாங்கோ”” என்று பாகீரதி பார்வையில் புரியவைத்தார். சிவா கவனிக்கத் தவறவில்லை.
டேய் சிவராமா உங்க கட்டில் அற்புதன்டா, நான் நேத்து ராத்திரி 3ட்-;ல் மாயா பஜார் பார்த்தேன். ஹெச்.டி.ஒலி எல்.இ.டி வண்ணம் என்ன அருமை பாரு என் உடம்பு புல்லரிக்கிறது என்றார். தொடர்ந்து “ஆஹா இன்ப நிலாவினிலே” பாட்டு மாத்திரம் கருப்பு வெள்ளையிலே வந்தது பிரமாதம். 3Dல் கல்யாண சமையல் சாதம் சீன் கண்கொள்ளாக் காட்சி நாமளே லட்டு சாப்பிடற மாதிரி இருந்தது.
சிவா உடனே “மாயமே நான் அறியேன்” என்றார். பிறகு “டேய், இன்னிக்கு பாகீரதி முறை, அவ என்ன அனுபவிக்கிறா பாக்கலாம். நீ அவகிட்ட ஒன்னும் சொல்லாதே என்றார்.
நிஷாக்கு, அபிக்கெல்லாம் என்ன அனுபவம் என்றார் ஹரி. நீ மதுரைக்கு போனவன்னே தான் அவங்க முறை வரும் என்றார் சிவா.
இரவு முடிந்துவிடும். முடிந்தால் பொழுது விடிந்துவிடும். ஆனால் பாகீரதிக்கு அது அற்புத இரவு. முடிகிறதே என்று வருந்த வைத்த இரவு.
பாகீரதி பார்த்தது. “கமலின், “மருதநாயகம்” முதல் பிரிண்டிட் பாகு பலியை விட பிரம்மாண்டம். சத்ரபதி சிவாஜியாக ரஜினி தோன்றும் காட்சிகள் பிரமாதம் கமலின் மாக்னம் ஓபஸ். ஹரிக்கு பெருமையாகவும் பொறாமையாகவும் இருந்தது. ஹீரோயின் யார் என்று கேட்டால் ஸ்ரீதேவி, த்ரிஷா, நயன்தாரா, ஸ்ருதி என்று அடுக்கினாள். கமல் பிறந்த நாள் அன்னிக்கு மருதநாயகம் பார்த்தது அவளுக்கு பரமதிருப்தி. நான் ரொம்ப அதிருஷ்டம் செஞ்சவா. சிவாண்ணா என்னோட விருப்பத்தை நான் சொல்லாமலேயே நிறைவேத்திட்டார் என்று பூரித்தாள்.
அதன்பிறகு நடந்த அதிசயம் விந்தைக்கும் அப்பாற்பட்டது.சிவராமனின் கைப்பேசி மதியம் மூன்று மணிக்கு ஒலித்தது. ஹலோ சிவராமன் பேசறேன். மறுமுனையில்
நான் கமலஹாசன் பேசறேன்.மாலை வணக்கங்கள் என்றார்.
கமல் நீங்களா? நம்பவே முடியவில்லையே! ம் உங்க குரல் தான் என்னை எப்படி இவ்வளவு பெரிய பாக்யசாலி ஆக்கினேங்க?
“சார், விஷயம் இல்லாம பேசுவேனா? நீங்க எனக்கு ஒரு உதவி பண்ணணுமே” என்றார் கமல்
“என்ன சொல்லுக்க சார்.” உங்கள் சித்தம், என் பாக்யம்
எந்தன் சித்தம், ஓர் இரவு உங்கள் மாயக்கட்டிலில் உறங்க வேண்டும்”
நான் ரெடி, நீங்க ரெடியா என்று சிரித்தார் சிவராமன்.
நான் ரெடி, நீங்க ரெடியா என்று சிரித்தார் சிவராமன்.
நானே என்னிக்குன்ன போன் பண்றேன் இது நமக்குள் இருக்கட்டும்”
என் வேண்டுகோளும் அதுவே.
என்னோட,சாரி ,எங்களோட அரை மணி பேசிட்டு, அப்புறம் தூங்கப் போகணும்”
சரி கண்டிப்பாக விரைவில் வருகிறேன்.BYE
சிவராமன் சுய நினைவிற்கு வர அரைமணி நேரம் ஆயிற்று.
மாயக்கட்டில்
பற்றி எவ்வாறு அறிந்தார் என்று கேட்டிருக்கலாம் என எண்னினார்.பின் நேரிலேயே
கேட்டால் போச்சு எனத் தெளிந்தார்.
பின்னர், கமலை எப்படி வரவேற்பது.
என்பது குறித்து சிந்திக்க தூங்காவனத்தில் நிஷ்டையில்
ஆழ்ந்தார்.அவன் வருவானோ? வாராதிருப்பானோ வண்ண மலர்க்
கண்ணனவன்?
---பார்த்தசாரதி
டிஸ்கி:இதில் ஒரு சிறிய பத்தியை நீக்கி விட்டேன்;பார்த்தசாரதி மன்னிக்க;அது என்ன என்பதும்,அதன் விளைவும் பிறிதொரு நாள் தெரிவிப்பேன்! சுவாரஸ்யம்!
மாயக்கட்டிலின் மகிமை அறிந்தேன். அந்த நீக்கிய பத்திக்காகக் காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குகடைசி இரண்டு பாராவுமே படிக்க முடியவில்லை ,இதில் நீக்கியது வேறா :)
பதிலளிநீக்குஇன்று விடுப்பா?
நீக்குஇப்போது பாருங்கள்
மாயக்கட்டில் பற்றி எவ்வாறு அறிந்தார் என்று கேட்டிருக்கலாம் என எண்னினார்.பின் நேரிலேயே கேட்டால் போச்சு எனத்தெளிந்தார்.
பதிலளிநீக்குபின்னர், கமலை எப்படி வரவேற்பது. என்பது குறித்து சிந்திக்கதூங்காவனத்தில் நிஷ்டையில் ஆழ்ந்தார்.அவன் வருவானோ? வாராதிருப்பானோ வண்ண மலர்க் கண்ணனவன்?//
இதுதான் அந்தக் கடைசி பாரா
நினைத்தது போல் அந்தக் கட்டில் மாயாபஜார் கட்டில் போல பல மாய்மாலங்களைச் செய்திருக்கிறதே...ஹும் சிவராமன் கொடுத்துவைத்தவர்...கமல் வீட்டுக்கு வந்து கட்டிலில் படுத்து என்ன புதுப்படம் திரைக்கதை எழுதப் போறாரோ....சிவராமனுக்குத் தூங்காவனம் அந்தக் கட்டிலிலேயே ஃப்ரீயா கிடைத்தாலும் கிடைக்கலாம்...ரசித்தோம் சார்...
பதிலளிநீக்குநீக்கிய பத்தி எப்போது சார்...காத்திருக்கின்றோம்.
நினைத்தது போல் அந்தக் கட்டில் மாயாபஜார் கட்டில் போல பல மாய்மாலங்களைச் செய்திருக்கிறதே...ஹும் சிவராமன் கொடுத்துவைத்தவர்...கமல் வீட்டுக்கு வந்து கட்டிலில் படுத்து என்ன புதுப்படம் திரைக்கதை எழுதப் போறாரோ....சிவராமனுக்குத் தூங்காவனம் அந்தக் கட்டிலிலேயே ஃப்ரீயா கிடைத்தாலும் கிடைக்கலாம்...ரசித்தோம் சார்...
பதிலளிநீக்குநீக்கிய பத்தி எப்போது சார்...காத்திருக்கின்றோம்.
மாயக்கட்டிலின் சாகஸங்கள் ஜோர்!
பதிலளிநீக்குஐயா. நீங்கள் கடைசி பத்தியை நீக்கிவிட்டதால் என்ன நடந்தது என அறிய குழப்பமாக இருக்கிறது. இறுதிப்பகுதி என சொல்லிவிட்டு இப்படி செய்யலாமோ? சீக்கிரம் அந்த ‘இரகசியத்தை’ சொல்லிவிடுங்களேன்!
பதிலளிநீக்குஐயா கமல் போண் நம்பர் எனக்கு மின்னஞ்சலில் அனுப்புங்களேன் ப்ளீஸ் இது நமக்குள்ளேயே இருக்கட்டும்
பதிலளிநீக்குஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா...
பதிலளிநீக்குநீக்கிய பத்திக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா
பதிலளிநீக்குதம+1
மாயக்கட்ட்லின் மர்ம ஜாலங்கள்.... ரசித்தேன்....
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
அருமையான பகிர்வு... படித்து மகிழ்ந்தேன் த.ம8
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-