தொடரும் தோழர்கள்

வியாழன், நவம்பர் 05, 2015

தில்லானா மோகனாம்பாள்--கண்டதும்,காணாததும்!

 பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியே பாட்டு எல்லோருக்கும் தெரியும்

அந்தக்கால மணமகள் படத்திலேயே பிரபலமானது அந்தப் பாட்டு.

அதில் ஒரு  வரி “உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரங்கொட்டுதடி”

இந்தப்பாட்டை  நாகஸ்வரத்தில் காருகுரிச்சி வாசிக்கும்போது இந்த வரியில் நம்மை அழ  வைத்து விடுவார்!

இந்தப்பாட்டு எந்தப் படத்தில் என்று கேட்டால் உடனே “வியட்நாம் வீடு”  என்பீர்கள்!

இந்த வரிகளை ஆரம்பமாகக் கொண்ட பாட்டு ,அவ்வளவே.

நாகஸ்வரத்தில் மத்ரை சேதுராமன்,பொன்னுசாமி  இதை வாசிக்க ,அதை சிவாஜி குழுவினர்  காட்சியாக்க, பத்மினி பார்த்துக் கண்ணில்  நீர் வழியும் காட்சி தில்லானா மோகனாம்பாள் படத்துக்காக எடுக்கப்பட்டுப் பின் திரைக்கு வராமல் போய் விட்டது

நீங்கள் பார்க்காத அந்தக்காட்சி,  படப்பிடிப்பின் போது......


உன் கண்ணில் நீர் வழிந்தால்........

கிளசரின் கண்ணீர்!

முதல் 50 விநாடிகள் காத்திருங்கள்.




இந்தத் திரைக் காவியத்தில் சம்பந்தப்பட்ட மகா கலைஞர்கள் பலர் இன்று நம்மிடையே இல்லை.யாரைச் சொல்வது,யாரை விடுவது? எனவே சமீபத்தில் மறைந்த அந்த மகத்தான நடிகை,ஜில்ஜில் ரமாமணியை  மட்டும் நினைவு கூர்கிறேன்.


12 கருத்துகள்:

  1. அருமை அய்யா! உண்மையாக அழுதவர்கள் யாராவது இருக்கூறார்களா? திறந்து (ஆடையை) காட்டி நடித்தவர்களில் திறமையை காட்டி நடித்தவர் அல்லவா இவர்! நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
  2. தில்லானா மோகனாம்பாளில் ஜில்ஜில் ரமாமணியை யாராலும் மறக்க முடியாது! சிறப்பான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  3. கிட்டத்தட்ட" என்ன கவி பாடினாலும் " மாதிரி இருக்கே

    பதிலளிநீக்கு
  4. இப்போ வர்ற சில படங்கள், கிளிசரின் போடாமலே நமக்கு கண்ணீரை வரவழைத்து விடுகின்றனவே :)

    பதிலளிநீக்கு
  5. அருமையான காட்சிப் பிடிப்பு...திரைக்கு ஏன் வரவில்லை என்று தெரியவில்லை..ம்ம் எல்லா காட்சிகளும் வராதுதான்..

    ஜில் ஜில் ரமாமணியை மறக்க இயலுமா!! ஆச்சி ஆட்சி புரிந்தார்களே!!

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் ஐயா சமீபத்தில் இந்த காணொளியைக் கண்டேன் மீண்டும் தந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  7. இந்தக் காட்சியை நானும் ஃபேஸ்புக்கில் பார்த்தேன். எனக்கு அப்போதே இந்தக் காட்சியை திரைப்படத்தில் பார்க்கவில்லையே என்ற சந்தேகம் இருந்தது!

    பி என் சுந்தரம் குரலில் அந்த வரியைக் கேட்கும்போது மிகச் சில சமயங்களில் கண்ணில் நீர் துளிர்த்து விடும்.

    பதிலளிநீக்கு
  8. காணக் கிடைக்காத காணொளி ஐயா
    இன்று தங்களால் கண்டேன்
    நன்றி ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  9. இந்தக் காணொளி நான் முகநூலில் சில தினங்களுக்கு முன்னர் பார்த்தேன்... அருமையான காணொளி ஐயா...

    மீண்டும் இங்கு பார்க்கிறேன்....

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. காணக் கிடைக்காத காட்சி அய்யா!
    த ம 8

    பதிலளிநீக்கு
  11. இந்த காட்சியை நானும் YOU TUBE இல் பார்த்திருக்கிறேன். இவர்கள் போன்ற கலைஞர்களை இனி தமிழ்த் திரைப்பட உலகம் காணுமா என்பது ஐயமே. பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  12. காணொளியை சில நாட்களுக்கு முன்னர் ஃபேஸ்புக்கிலும் பார்த்தேன்.... நல்லதொரு காணொளி. மீண்டும் பார்க்கத் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு