கவலையென்னும் மேகங்கள் மனத்தில் சூழ்ந்து
கரையானாய் அரிக்கும் நிலையொன்று நேரில்
கரும்பாய் இனிக்கின்ற கற்பனைகள் வந்தால்
கருமேகக் கூட்டங்கள் கலைந்து போகும்!
…….கவிஞர் பித்துக்குளி
சிவதாஸ்
பஞ்சால்
துடைத்தாலும் நோகுமே
உன்
பாதம்!
துவண்டு
போகாதோ வெள்ளிக் கொலுசின்
பாரத்தால்!
பதிந்த
இடமெல்லாம் கன்றிச் சிவக்காதோ
கொலுசே
உன்னை நான் வெறுக்கிறேன்1
அவளுக்கு
துன்பம் தந்ததற்கு மட்டுமல்ல!
அவள்
காலோடு ஒட்டி உறவாடியதற்கும்!
…………
அவளுடல்
தழுவிக் கிடப்பாய்அவள் வருவதைச் சொல்வாய்
கால் கொலுசு!
(ஹைக்கூ)
…………..
மனைவியிடம்
சொன்னேன்,அவிழ்த்து விட்டு வா!
முகம்
சுளித்தாள்”என்ன இது”
கண்ணே!
நான் உன் கால் கொலுசைச் சொன்னேன்
அதன்
சத்தம் இரவெல்லாம் என் உறக்கத்தைக் கெடுக்கிறது!!
……….
ஆதரவாளர்:
ஆதரவாளர்:
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
பதிலளிநீக்குஅடிக்கு நெருஞ்சிப் பழம் (1120)
சந்தேகமின்றி!(அந்நாளில்?!)
நீக்குநன்றி சித்தரே
குட்டிக் கவிதைகள் அருமை.
பதிலளிநீக்குநன்றி முரளி
நீக்கு
பதிலளிநீக்குகவிதையை இரசித்தேன். பாராட்டுக்கள்!
கொலுசு கவிதைக்கு ஆதரவாளர் ரம்யா தங்கமாளிகை ஜூவல்லரியா? அந்த விளம்பரம் எதற்கு என புரியவில்லை.
அந்தப் பெண் கொலுசை அங்குதான் வாங்கினாளோ?!
நீக்குநன்றி சார்
இன்னும் இளமை துள்ளுகிறதே உங்களிடம் :)
பதிலளிநீக்குஎன்றும் இருபத்தைந்து!
நீக்குநன்றி பகவான் ஜி
பதிந்த இடமெல்லாம் கன்றிச் சிவக்காதோ
பதிலளிநீக்குகொலுசே உன்னை நான் வெறுக்கிறேன்!
அவளுக்கு துன்பம் தந்ததற்கு மட்டுமல்ல!
அவள் காலோடு ஒட்டி உறவாடியதற்கும்!//
மிகவும் ரம்யமான வரிகள். கொலுசினைப்பார்க்கும் போதெல்லாம் ஆண்களுக்கு இதுபோல உள்ளூர கொஞ்சம் பொறாமை ஏற்படுவது மிகவும் இயல்புதான். முதல்படத் தேர்வு ஜோர் ஜோர் !!
பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
-=-=-=-=-=-=-
அடுத்த பகிர்வு ‘ஜிமிக்கிகளாக’ இருக்கட்டும் என நான் சொல்வதை நீங்க காதில் போட்டுப்பீங்களோ மாட்டீங்களோ. :)
அதற்கு முன் இதையும் படம் பார்த்துப் படித்துக் கொள்ளுங்கோ. http://gopu1949.blogspot.in/2014/03/vgk-10.html நன்கு எழுதவரும்.
படித்து விட்டேன் சார்;கடைசியில் கலங்க வைத்து விட்டீர்கள்!
நீக்குஜிமிக்கி என்றால் எனக்கு ஏனோ ஒரு பாடகி நினைவுதான் வருகிறது!
நன்றி சார்
கவிதை நன்று ஐயா ரம்யா தங்கமாளிகை ஜூவல்லரி விளம்பரத்துக்கு எவ்வளவு கொடுத்தாங்க ? ஹாஹாஹா
பதிலளிநீக்குகொலுசு! படத்தில் ரம்யா எனும் தங்க மாளிகை அணிந்திருப்பது!
நீக்குநன்றி கில்லர்ஜி
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
கொலுசுக் கவிதை மிகச் சிறப்பு ஐயா. வாழ்த்துக்கள் த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜோஷ்வா
நீக்குஇளமை துள்ளும் கவிதைகள்
பதிலளிநீக்குநன்றி பாரதி
நீக்குஐயா வணக்கம் !
பதிலளிநீக்குநளமகாராஜா மனைவி தமயந்திக்கு தயிர் பிழிந்தாலும் கை சிவக்குமாம் ஆனால் இங்கே பஞ்சால் துடைத்தாலும் பாதம் நோகுதாம்
ஐயோ ஐயோ அவ்வளவு மேன்மையாவா இருக்கு ????
அவிழ்த்துவிட்டு வா !???? அசத்தல்
கவிதையும் அருமை தொடர வாழ்த்துக்கள் ஐயா !
தம +1
மெல்லடி அல்லவா!
நீக்குநன்றி சீராளன்.
சார்! உங்கள் வயது என்ன செபி சார்!! இந்த வயதிலும் இப்படி இனிமையான கவிதைகள் எழுதி அசத்துகின்றீர்களே சார்......பார்த்தசாரதியும், பித்தானந்த சுவாமியும் ஒன்றும் சொல்லவில்லையா!!?? ஹஹஹ
பதிலளிநீக்கும்ம்ம்ம் ரம்யா ஜுவல்லரிக்கு நல்ல அம்பாசிடர் கிடைத்தார்!!
ரொம்ம்ம்ம்ம்பவே ரசித்தோம் சார் உங்கள் கவிதையையும் இந்த வயதான வாலிபரையும்!
25 ஐத் தாண்ட மறுக்கிறது மனம்!பித்தானந்தா பகிர்வின் போது 71க்குப்ோய் விடுகிறது!
நீக்குமிக்க நன்ரி
கொலுசு கவிதை அருமை ஐயா.வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி கும்மாச்சி
நீக்குதங்கள் உடல்நலமும் அம்மாவின் உடல் நலமும் இப்போது தேவலாமா? மழையின் பாதிப்போ? உடல்நலம் பேணுங்கள்.
பதிலளிநீக்குகீதா: அடையாரில் பல தெருக்களில் தண்ணீர் தேங்கி இருந்தது நான் வந்த போது. ரொம்ப முக்கியமான மருந்து வாங்க வேண்டி வந்ததால்.... கஸ்தூரிபாய்நகர் 3 வது மெயின் ரோடு எக்ஸ்டென்ஷன்....இப்படிப் பல தெருக்கள்..எது வழி செல்ல என்று தெரியாமல், எனது மயில் வாகனம் (டிவிஎஸ் எக்ஸ் எல்) இதற்கு மேல் முடியாது என்னால் என்று தண்ணீரைக் குடித்து தன் இயக்கத்தை நிறுத்த....அதையும் சேர்த்துத் தள்ளிக் கொண்டே கணபதிராம் தியேட்டரின் பின்பக்கம் இருக்கும் எக்ஸ்டென்ஷன் தெரு அங்கு உறவினர் வீட்டில் வைத்துவிட்டுப் போகலாம் என்றால் முட்டி அளவு தண்ணீர். ஹும் பின்னர் அதே பக்தவத்சலம் தெரு 2 ல் இருந்த மற்றொரு உறவினர் வீட்டில் வைத்துவிட்டு நடராஜா சர்வீஸ்..தண்ணீரில்...
இப்போது பரவாயில்லை!
நீக்குநான் இருப்பது பக்தவத்சலம் நகர் முதல் தெரு!எங்கள் தெருவிலிலும் பாதி தண்ணீர்! எங்கள் காலனியின் முற்றத்தில்(நடுவில் இருக்கும் இடம்)தண்ணீர்!
நன்றி
அருமை. திண்டுக்கல் தனபாலன் உடனே குறளிலிருந்து ஒன்று எடுத்து விட்டார் பாருங்க! சூப்பர்!
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்!
நீக்குமனைவியிடம் சொன்னேன்,அவிழ்த்து விட்டு வா!
பதிலளிநீக்குமுகம் சுளித்தாள்”என்ன இது”
கண்ணே! நான் உன் கால் கொலுசைச் சொன்னேன்
அதன் சத்தம் இரவெல்லாம் என் உறக்கத்தைக் கெடுக்கிறது!!
இளமை, இளமை பகிர்வுக்கு நன்றி...
Joshva
நன்றி ஜோஷ்வா
பதிலளிநீக்கு