தொடரும் தோழர்கள்

வெள்ளி, நவம்பர் 06, 2015

மாயக் கட்டில்!


சிவராமனுக்கு கருங்காலி (ரோஸ்வுட்) மற்றும் தேக்கு மரப் பொருட்கள் மீது ஒரு மாபெரும் ஈர்ப்பு. அதுவும் தொல்பொருட்கள் என்றால் கேட்கவே வேண்டியதில்லை. கார்பெண்டர் மணி, சிவராமனிடம், நூறு வருடங்களுக்கு மேலான ஒரு ரோஸ்வுட் கட்டில் விலைக்கு வந்திருக்கு பாருங்களேன்என்றார்.

சிவராமனுக்குக் கட்டில் என்றாலே தொட்டிலுக்கு அன்னை கட்டிலுக்குக் கன்னிஎன்ற பாடல் தான் மனதில் ஒலிக்கும் தொடர்ந்து காதல் என்னும் கவிதை தந்தேன்கட்டிலின் மேலே அந்த கவிதைக்கு நான்பரிசு தந்தேன் தொட்டிலின்மேலே

கட்டில், தொட்டில், தாய், தந்தை, கணவன், மனைவி, மகன், மருமகள், பேரன் பேத்தி................. காதல், கவிதை, கட்டில், தொட்டில் வாழ்க்கையின் சுழற்சி.

மனைவி அகிலா தந்த பரிசு மகள் நிஷா. அவள்  தன் கணவனுக்கு தந்த பரிசு அபி என்ற அபிஷேக்.

அம்மாவுடன்தான் படுத்துக் கொள்வேன் என்று ஆறு வயது அபி பிடிவாதமாக இருப்ப தால் பையனும், கணவனும் சேர்ந்து நிஷாவை உறங்க விடுவதில்லை.

குறை தூக்கம் உடம்பு பாதிப்பை ஏற்படுத்த வல்லது.

இதையெல்லாம் உத்தேசித்து ஒரு கட்டிலை வாங்கலாம் என்று கடையில் நுழைந்தார் சிவா

 கட்டில் நேர்த்தியாக இருந்தது. தன் இரு தாத்தாக்களின் வீடுகளிலும் இந்த மாதிரிக் கட்டில்கள் இருந்தது நினைவில் மலர்ந்தது. ரோஸ்வுட் என்றாலே தனி கிக் தானே!.

சட்டென்று பார்க்க மாயா பஜாரில் வந்த கடோத்கஜனின் மாய சபையில்  சின்ன மயனால் சிருஷ்டிக்கப்பட்ட கிடுக்கை போல இருந்தது. சிவாவிற்கு அதை வாங்கிவிட வேண்டும் என்ற உத்வேகம் வலுத்தது.

அக்டோபர் கடைசியில் ரமணனின் சொல்படி (கொஞ்சம் அப்படி இப்படி என்றாலும்) பருவமழை தொடங்கியது. கட்டிலை 3 நிமிடத்தில் பிரித்து உள்ளேவைத்தார்கள். ஒரே விலை”. எவ்வளவு சொல்றீங்கஎன்றார் சிவா.

ரூபாய் 7,000/-  கொடுத்தால் உடனே வீட்டுக்கு வந்து, செட் பண்ணிக் கொடுக்கறேன்என்றான் மணி.

சிவராமன் உடனே, இந்தக் கட்டிலைப் பார்த்த எங்கள் மூதாதையர்களின் ஞாபகம் வருது, நீங்க ரோஸ்வுட்டுனு சொல்றேங்க. நான் எதைவைச்சு மறுக்க முடியும். உங்களை நம்பிதான் வாங்கறேன். ரூ.6,000/- ரூபாய்னா சரி என்றார்.

உங்களுக்காக தாரேன். நாளைக்கு டிம்பர் கடை திறந்தவுடனே மேலே போட பிளைவுட் வாங்கிட்டு  வீட்டுக்கு கொண்டாறேன். பணம் கேஷாவே கிடைக்கும்லே  என்றார்.

சரி, இன்னொரு தடவை நல்ல பளபளப்பு வர்ற மாதிரி பாலிஷ் போட்டு கொண்டாங்க என்று கூறி கைபேசி எண்ணையும், விலாசத்தையும் கொடுத்தார்.

வீட்டில் விழப் போகும் இடியை நினைத்து தாங்கிக் கொள்ள சக்தி வரவழைத்துக் கொண்டார்

மறுநாள் காலை 10 மணிக்கு டாண் என்று போன் வந்தது. மணி ஒசைக்குப் பின் யானை வந்தது. அகிலா தாளித்துக் கொண்டிருந்தாள் சமையலையும் சிவராமனையும் சேர்த்து!

மணியின் மகன் வாசு தான் அதை எடுத்து வந்தான். சமத்துப் பையன். சொன்னதை அழகாக செய்து முடித்தான்

பெண் நிஷா, கட்டில் நன்றாக இருந்தாலும், வெவ்வேறு கட்டில்களை ஒன்று சேர்த்துப் போடுவது படுக்கை அறை தர்மத்துக்கு புறம்பானது என்று கட்டிலை மறுத்து விட்டாள்.

பேரனுக்காக வாங்கிய கட்டிலை தாத்தா தான் உபயோகப் படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. கட்டில (மெத்தைய) வாங்கினேன், சுகத்த வாங்கலே கதை.

மதியம் புதுக்கட்டிலில் சொகுசாக உறங்கினார். ராத்திரி வேணா எப்படி இருக்குன்னு யூஸ் பண்ணிப் பாரேன்என்று அகிலாவிடம் குழைந்தார். இப்போது அவர் மீது மட்டும் எள்ளும் கொள்ளும் வெடித்தாள். பிறகு நக்கலாக சிரித்துக் கொண்டு நீங்களே அந்த கிடுக்கைலே படுத்துண்டு அவதிப்படுங்கஎன்று விநயமாக சிரித்தாள்.

பேரன் அபி, மாலை பள்ளியிருந்து திரும்பி வந்து கட்டிலைப் பார்த்து அசந்து போனான்.  அதன்மேல் தாறு மாறாக குதித்துப் பார்த்தான். அவன் மாபெரும் நிலை குலைக்கும் சக்தி. அவனது முயற்சி களுக்கு இம்மி அளவு கூட அசைந்து கொடுக்கவில்லை அந்த அதிசய கட்டில்” “இரண்டு பக்கமும் ஸ்டாண்ட் இருக்கு. சைடிலேயும் இருந்தா கிரேடில் மாதிரி இருக்கும்என்றான்.


சனியன்று அபி அதில் தான் தூங்குவேன் என்று சூளுரைத்துவிட்டு மற்ற நிலைகுலைப்பு வேலைகள் செய்ய நகர்ந்தான்.

இரவு வந்தது. 10.30க்கு சிவாவிற்கு தூக்கம் கண்ணை சுழற்றியது.

அவரால் தூங்க முடிந்ததா?

இல்லவே இல்லை.

மாயக்கட்டில் தன் சுயரூபத்தைக் காட்டியது.

…………...தொடரும்.

31 கருத்துகள்:

  1. மாயக்கட்டில் மாய்மாலம் செய்ததோ....மாயாபஜார் படம் போல....அறிய தொடர்கின்றோம்...

    பதிலளிநீக்கு
  2. அருமை அய்யா! மாயக்கட்டில் என்ன மாயம் செய்தது திகிலுடன் தொடர்கின்றேன் அய்யா!

    பதிலளிநீக்கு
  3. அடுத்துஎன்னஆகுமோ.?ஆர்வத்துடன்ஆவலாககாத்திருக்கும்...நாகப்பூர்..மோகன்

    பதிலளிநீக்கு
  4. அந்த மாயக் கட்டில் காட்டிய சுயரூபத்தைக் காண காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. மாயக்கட்டில் என்ன மாயம் செய்ததோ ? தொடர்கிறேன் சார்.

    பதிலளிநீக்கு
  6. ஆகா
    அடுத்து என்ன
    அறிந்து கொள்வதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  7. மாயக்கட்டில்... நிச்சயம் ஏதாவது மந்திர தந்திர மாயஜாலப் படம்
    போல ட்விஸ்ட் இருக்கப்போகிறது..

    காத்திருப்புடன்...

    பதிலளிநீக்கு
  8. மாயக்கட்டில் செய்யப்போகும் மாயமென்ன,,,,, ஆவலுடன்...

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்
    ஐயா
    அடுத்தது என்வென்று அறிய ஆவலாக உள்ளேன்.... தொடருங்கள் த.ம9
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  10. அடுத்து என்ன என்பதை அறியக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  11. இதே மாதிரி கட்டில் கதை என்னிடமும் உண்டு! தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
  12. மாயக்கட்டில் செய்த மாயம் என்னவோ..... தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு