தொடரும் தோழர்கள்

வியாழன், நவம்பர் 12, 2015

வேதாளம்!



அது ஓர் அடர்ந்த வனம்

சூரிய ஒளியே உட்புகாததால், பகலில் கூட இருண்டு காட்சியளிக்கும் வனம்.

ஆனால் அங்கு வாழும் பறவைகள்,மிருகங்கள் கணக்கற்றவை;இரவிலும் அவை எழுப்பும் பல்வேறு விதமான ஒலிகள் வனமெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் .

எனவே தூங்கா வனம்!

அத் திக்குத் தெரியாத காட்டில் அதோ அங்கு மட்டும் என்ன ஒளி?

ஒரு பெரிய மரம்.

அதைச் சுற்றியே ஒளி வெள்ளம் பரவி நிற்கிறது.

எங்கிருந்து இந்த ஒளி?

மரத்தில் ஒரு வேதாளம் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது.

அவ்வப்போது நெருப்பைக் கக்குகிறது.

அதுவே ஒளிக்குக் காரணம்!

அந்த ஒளி இலைகளின் மீதும் பட்டுப் பிரதிபலித்து வேதாளத்தின் மீது விழும்போது வேதாளம்  பச்சை வண்ணத்தில் ஒரு தேவாங்கு போல் காட்சியளிக்கிறது

அது என்ன பப்பாளி மரமா?

அது பப்பாளி மர உச்சியில் ஆடும் பச்சைத் தேவாங்கா?

இல்லை அது பப்பாளி மரமும் அல்ல,அது தேவாங்கும் அல்ல;

அது வேதாளம்தான்!

அப்போது அந்த மரத்தை நோக்கி ஒருவன் வருகிறான்.என்ன கம்பீரமான ராஜ நடை

அரசன் போல்தான் தோன்றுகிறான்!

நெருங்கி வர வர முகம் தெரிகிறது

எனக்கு மிகவும் பரிச்சயமான முகம்

அந்த நடையே எனக்கு தெரிந்தவன் என்று உணர்த்தியது;இப்போது முகத்தைப் பார்க் கையில் அது உறுதியானது

யார் இவன்;மிகவும் பழக்கமானவன்.

யோசிக்கிறேன்.

அவன் மரத்தில் ஏறி வேதாளத்தை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு புறப்படு கிறான்

அது ஒரு சிரிப்பு,அல்ல,இளிப்பு இளிக்கிறது

“விக்ரமாதித்யா!இன்று ஒரு மாறுதலுக்கு நான் உன்னைச் சுமக்கிறேன்” என்று கூறிக் கிழே குதித்து மன்னனைத் தோளில் போட்டுக் கொள்கிறது

“இப்போது ஒரு கேள்வி கேட்பேன்,அதற்குச் சரியான விடையை நீ சொல்லா விட்டால் உன் தலையத் தெறிக்கவிடலாமா?” என்று பயங்கரமாகக் கேட்கிறது

மன்னன் (யார் இவன் மிகவும் தெரிந்த முகம்?) சரி என்கிறான்

”ஒரு தீபாவளி.நான்கு படங்கள் ரிலீஸ் ஆகின்றன;சூப்பர் ஸ்டார், உலக நாயகன், தல,தளபதி இவர்களின் படங்கள்;முதல் நாள் வசூல் எந்தப் படத்துக்கு அதிகம்”

மன்னன் உடனே சொல்கிறான்”சூப்பர் ஸ்டார் படத்துக்குத்தான்”

வேதாளம் அவனைத் தொபகடீர்,என்று கீழே போடுகிறது”கிடையாது.முதல்நாள் மன்னன் தலதான்;அந்தப் படத்துக்குத்தான் வசூல் அதிகம்;அதுவும் படத்துக்கு என்பேர் வச்சதாலே ஒரு வசூல் சாதனை” என்று கூத்தாடுகிறது

”இப்போ உன் தலையைத் தெறிக்க விடலாமா?”

மன்னன் தலை இஞ்சி நூறாகிறது(சுக்குக்குப் பதில் இஞ்சி!)

“ஐயோ ஐயோ”என்று அலறியவாறே தலையைப் பிடித்தபடி எழுந்திருக்கிறேன்!

மாயக்கட்டிலில் படுக்கும் முன் வேதாளம் படம் பற்றிய நினைவுகளோடு படுத்ததால் வந்த வினை!

......................

// இத்துடன் நிற்கவில்லை. சென்னை பித்தனையும் மாயக்கட்டில், விடவில்லை. அவர் அன்னையை அன்றிரவு பராமரிக்க பிரத்யேக ஏற்பாடுகளை செய்து சிவாவின் வீட்டிற்கு இரவு 10 மணிக்கு வந்தார்.//

இது மாயக்கட்டில் இறுதிப்பகுதியில் நான் நீக்கிய பத்தி!

படுத்ததின் விளைவைத்தான் படித்து விட்டீர்களே!

அந்த மன்னன்.......வேறு யார்?நான்தான்!





28 கருத்துகள்:

  1. ஓஹோ, இதுதானா அந்த விடுபாடு. மன்னனை அறியவைத்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. வேதாளம் மறுபடியும் மரமேறி விட்டதா :)

    பதிலளிநீக்கு
  3. விடுபட்ட பகுதியா...ஹஹஹஹ செம! வேதாளம் என்றதும்...நினைத்தோம் நிச்சயமாகப் படத்தைப் பற்றி இல்லை என்றாலும் அதை வைத்துப் பதிவில் வந்திருக்கும் . என்று...தூங்காவனமும் வந்துவிட்டது.

    செபியையும் விடவில்லை...சரி அதில் பித்தானந்தா சுவாமி சிவாவின் வீட்டிற்கு வருகின்றாராமே...பக்த கோடிகள் எல்லாரும் பார்த்தசாரதி உட்பட வருகின்றார்களாமே..அப்போ இருவரும் மாயக்கட்டிலில் படுடுத்தால் இன்னும் இரு பதிவுகள் இருக்குனு சொல்லுங்க....

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் தான் அடையார் அஜீத் ஆயிற்றே எப்படி ’தல’ படத்தை விட்டுவிட்டு ‘சூப்பர் ஸ்டார்’ படம் என்று சொன்னீர்கள். ஒருவேளை அந்த மாயக் கட்டில் நினைத்ததை சொல்ல விடாதோ?

    வேதாளம் சொன்னதுபோல முதல் நாள் வசூல் தமிழகத்தில் மட்டும் வேதாளம் படத்திற்கு 15.5 கோடி ரூபாய்களாம். சூப்பர் ஸ்டார் மற்றும் தளபதி படங்களின் முதல் நாள் வசூலை வேதாளம் முறியடித்துவிட்டதாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அந்த மாயக் கட்டில் நினைத்ததை சொல்ல விடாதோ? //
      அப்படித்தான் இருக்க வேண்டும்!
      வசூலில் வேதாளம்!
      நன்ரி சார்

      நீக்கு
  5. ஹாஹாஹா மன்னன் நீங்கதானா....ஸூப்பர் ஐயா

    பதிலளிநீக்கு
  6. எனக்கும் சினிமாவிற்கும் சொஞ்சம் தூரம் அதிகம். சூபர் ஸ்டார், உலக நாயகன் கேள்விப்பட்டிருக்கிறேன். அது யாருங்க தல, தளபதி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் கொட்டகைக்கு சென்று படம் பார்ப்பதில்லை;ஆனால் சினிமா மீது ஆர்வம் உண்டு..இந்தக் கேள்வி நீங்கள் கேட்டது தெரிந்தால் அஜீத்,விஜய் ரசிகர்கள் கோபம் கொள்வார்கள்!
      வருகைக்கு நன்றி ஐயா

      நீக்கு
  7. வணக்கம் ஐயா !

    அசத்தல் பதிவு விக்கிரமாதித்தன் கதைகள் நிறையப் படித்து இருக்கீங்க போல அப்பப்போ தல ரசிகன் என்பதும் புரிகிறது ! சுக்குக்கு பதில் இஞ்சி செம ! அத்தனையும் அருமை ஐயா இது தூக்கத்தில் வந்ததா இல்லை உங்களைத் துரத்தி வந்ததா ஐயோ ஐயோ !

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    தமிழ்மணம் +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய சூடான செய்தி வேதாளம்தானே!எனவே.....
      நன்றி சீராளன்

      நீக்கு
  8. பித்தன் தாத்தா...... நீங்க எங்கேயோ போயிட்டீங்க.

    நீங்கள் தான் வலை உலகின் பெரிய ‘தல‘
    வணங்குகிறேன்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்
    ஐயா
    விடுபட்ட பகுதி எதுவென்று பார்த்தால்.. இறுதியில் சொல்லியது.. சிரிக்கவைத்தது ஐயா
    படித்து மகிழ்ந்தேன். த.ம10
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  10. விடுபட்ட நிறைவு... நன்றி ஐயா

    பதிலளிநீக்கு