தொடரும் தோழர்கள்

வெள்ளி, செப்டம்பர் 04, 2015

நன்கடன்! -- நிறைவுப்பகுதி



சோமு காந்தி நகர் கிரிக்கெட் சங்கத்தின் வாழ் நாள் அங்கத்தினர். காலையில் ஆறு மணியிலிருந்து நாற்பத்தைந்து நிமிடங்கள் தவறாமல் நடை பயிற்சி தினம்தோறும் மேற்கொள்வார். ஒரு முப்பதாயிரம் ரூபாய் அதிகமாக கொடுப்பதற்கு பட்டம்மாவின் தராதரத்தை காட்டி கடன் கொடுக்க இப்படி லொள்ளு பண்றீங்களேஎன்று மீனாட்சி கடிந்து கொண்டது அவரை சிறிது உறுத்தியது. 


ஆனால் தன் பிடியில் இருந்து தளர வங்கி தர்மம் அவரை அனுமதிக்கவில்லை.


தான் ஏதாவது வாராக்கடனை கொடுத்திருக்கிறோமா என யோசித்தார். அவரது மூளையின் “Byte” கள் நீண்ட தேடலுக்கு பிறகு ஒரு ஐநூறு ரூபாயை ஐம்பது வருடங்களுக்கு முன்னதாக அளித்ததாக அறிவுறுத்தியது. பொறி தட்டியது போல் ஒரு உணர்வு .ரூபாய் ஐநூறு சம்பந் தப்பட்ட எல்லா விவரங்களையும் மனத்திரையில் பளிச்சிட வைத்தது. 


1962ல் சத்தியமூர்த்தி என்பவர் பெங்களூரில் தனியார் குழுமத்தின் விற்பனை அதிகாரியாக இருந்தார். திறமைமிக்கவர். நம் சோமசுந்தரமும் அதே சமயத்தில் தான் அதிகாரியாக வங்கியில் பெங்களூர் கிளையில் பணியமர்ந்தார். சத்யாவும் சோமுவும் நெருங்கிய நண்பர்களாக ஆயினர். பார்த்த சினிமாக்கள், பெங்களூர் பாரில் குடித்த பீர்கள் ஏராளம். சத்யாவிற்கு 1964ல் கல்யாணம் ஆனது. 


மனைவியுடன் வாரக் கடைசியை கொண்டாட ரூபாய் ஐநூறு வேண்டுமென்று சத்யா சோமுவை அணுக, சோமு உடனே பர்ஸில் இருந்த ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளை அப்படியே கொடுத்தார். பிறகு ஒரு மாதத்தில் சத்யாவிற்கு ஏர் கெனடாவில் நல்ல வேலை கிடைக்க, அவர் மனைவியுடன் பறந்தார். அப்போது சோமு கல்யாணம் முடிந்து மீனாவுடன் தேனிலவு சென்றிருந்தார். சத்யாவின் கெனடா பயணம் சோமுவிற்கு கடிதம் மூலமாகத் தான் தெரிவிக்கப்பட்டது. அப்போது துண்டிக்கப்பட்டதொடர்பு பின்னால் இணையவே இல்லை. வங்கியில் அனுபவமற்ற நிலையில் அப்போது உயிர் நண்பனுக் கான வழங்கப்பட்ட கடனை சிறிது நாளில் சோமு முமுவதும் மறந்தார். 


நடைப்பயிற்சி முடிந்து வீடு திரும்பும் போது பட்டம்மா அவரை பார்த்தும் பார்க்காதது போல் வேலையை முடித்து வெளியேறினாள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒரு நாள், திடீரென்று சோமுவின் B.S.N.L. தொலைபேசி ஒலித்தது. மறுமுனையில் ஒலித்த குரல் புதிதாக இருந்தது. சோமசுந்தரம் இருக்கிறாரா? என்றது. தன்னை சத்யமூர்த்தி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஐம்பது வருட சுக துக்கங்களை சோமுவிடம் பகிர்ந்து கொண்டது. மனத் தொடர்பு கிடைத்த சில நாட்களிலேயே நிஜத் தொடர்பும் கிடைத்தது. சோமுவை பிரமிக்க வைத்தது. பிரம்மப் பிரயத்தனம் செய்து பென்ஷன் சங்கத்தின் மூலம் சோமுவின் தொலைபேசி மற்றும் விலாசத்தை பெற்றதாக சத்யா கூறினார். பிறகு சோமு நான் ஒன்று சொன்னால் மறுக்காமல் கேட்பாயா?” என்றார் சத்யா. ஒ ஸ்யூர் சோமு பதிலளித்தார். என் கல்யாணம் ஆனவுடனே, வீக் எண்டை கொண்டாட ரூபாய் ஐநூறு உங்கிட்ட கைமாத்த வாங்கினேன்” 

ஞாபகம் இருக்கா.

அதுக்கென்ன இப்ப. 

அதை எப்படியாவது திருப்பித் தரணும்னு திட்டவட்டமா இருந்தேன். பிறகு உன்னை கண்டுபிடிக்கவே முடியல. அதை ஒரு வைப்புக் கணக்கில போட்டு ஐம்பது வருஷமா கண்காணிச்சேன். ரூபாய் ஐநூறு ஐம்பது வருடங்கள்ல 41.397/- ஆக வளர்ந்து விட்டது. அந்த தொகைக்கு உன்னோட விலாசத்துக்கு காசோலை ஒண்ண நான் அனுப்பி யிருக்கேன். கண்டிப்பா அதை உன்னோட கணக்குல வரவு வை”.  என்று தொடர்பை துண்டித்தார் சத்யா. 

சோமு நிதான நிலைக்கு வரப் பல நிமிடங்கள் ஆனது. 



என்னமோ ஏதோ- சோமு ஐம்பது வருடத்திற்கு முன் கொடுத்த நன்கடன் பட்டம்மாவிற்கு நன்கொடையாக ஆனது. 

ஆனாலும் பட்டம்மாவின் கடன் எல்லை ரூபாய் 20,000/- அப்படியே தொடர்ந்தது.

(ஆக்கம்- நண்பர் பார்த்தசாரதி)

டிஸ்கி:திருமூலரின் சூனிய சம்பாஷணை பற்றி அறிய  விருப்பமா?


 இங்கே  பாருங்கள்


16 கருத்துகள்:

  1. ஆஹா! அருமை அய்யா! சத்யா ஸாரின் மனசு மகத்தானது!!

    பதிலளிநீக்கு
  2. 50 ஆண்டுகளில் ஒரு கைமாற்றுக் கடன், நன்கடன் தர உதவியது என்பது ஒரு எதிர்பாரா அதிசயம் தான். கதை அருமை. ஒரு வங்கியாளரின் படைப்பு அல்லவா? அதனால்தான் நடக்கக்கூடிய சாத்தியக்கூறை கதையில் காணமுடிக்கிறது, திரு பார்த்தசாரதி அவர்களுக்கு பாராட்டுக்கள்!. கதையை பகிர்ந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்!

    திருமூலரின் சூனிய உரையாடல் முன்பே படித்தது தான் இருப்பினும் திரும்பவும் படிக்கத்தூண்டிய உங்கள் எழுத்துக்கு திரும்பவும் பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  3. முன்பகுதிகளைப் படித்துவிட்டு வந்து கருத்திடுகிறேன் ஐயா!
    வந்தமையைப் பதிவிட்டுப் போகிறேன்!

    வாழ்த்துக்கள் ஐயா!

    த ம+

    பதிலளிநீக்கு
  4. ஆச்சர்யமான நிகழ்வு. சம்பந்தப் பட்டவர்களுக்கு உதவி கிடைக்க வேண்டுமென்றால் எப்படியும் கிடைத்து விடுகிறது!

    பதிலளிநீக்கு
  5. அவரது மூளையின் “Byte” கள் என்ற சொற்றொடரை அதிகம் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  6. உதவி கிடைக்க வேண்டியது கிடைத்து விட்டது

    பதிலளிநீக்கு
  7. பட்டம்மா பட்ட கடன் ,அவர் பேரன் மூலமா நிச்சயம் தீரும் :)

    பதிலளிநீக்கு
  8. நல்லவர் நல்லது செய்ய வாராக்கடனும் வரும்!

    பதிலளிநீக்கு
  9. ஆஹா! இப்படியுமா!!! ம்ம்ம் பரவாயில்லை....ஆச்சரியம்தான் அதுவும் பண விஷயத்தில் இப்படி!!! நாங்களும் யோசிக்க ஆரம்பித்தோம் இப்படி ஒரு 25 வருஷத்துக்கு முன்னாடி யாருக்காவது கடன் கொடுத்தோமா? திரும்பி வருமா அதுவும் இப்படி என்று..ஹஹஹ்

    நடக்கும் என்றால் நடக்கும் போல!!!

    பதிலளிநீக்கு
  10. சத்ய மூர்த்தி சத்தியம் தவறாதவராக இருந்திருக்கிறார்! வியத்தகு மனிதர்தான்! எப்படியோ ஏழைக்கு உதவி கிடைத்ததில் மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு