தொடரும் தோழர்கள்

புதன், செப்டம்பர் 02, 2015

நன்கடன்!



சோமசுந்தரம் இந்தியாவின் பெரிய வங்கியில் பொது மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். ஒரே மகன் யு.எஸ்ஸில் இருப்பதால் மனைவி மீனாட்சி யுடன் அடையாறில் காந்தி நகரில் ஒரு தனிவீட்டில்75 வயதுக்கேற்ற நீரிழிவு, ரத்த அழுத்தம், மூட்டு வலியுடன் வாழ்ந்து வருகிறார். ஓய்வூதியம், சேமிப்புக் கள் ஈட்டுத் தரும் வட்டி, மாடிப்பகுதியின் வாடகை இந்த வரவு களை வைத்து கணிசமான மருத்துவ செலவு பெட்ரோல், இதர செலவுகளை திறம்பட சமாளித்து அமைதியான வாழ்க்கையை நடத்துகிறார். இரண்டு ஆண்டுக ளுக்கு  ஒரு முறை மனைவியுடன் யு.எஸ்  சென்று பேரப்பிள்ளைகளுடன் மூன்று மாதங்கள் குதூகலித்து வருவார்கள். வீட்டில் ஒரு அழகான தோட்டத்தையும் திறம்பட பராமரித்து வந்தார். 


மீனாட்சிக்கு பிரியமான வேலைக்காரி பட்டம்மா. லீவு போடாமல் இரண்டு வேளை வேலைக்கு வந்துதிருப்திகரமாக வேலைகளை முடித்துவிட்டு செல்வாள். இன்னும் சொல்லப் போனால் பட்டம்மாவின் குடும்பமே இவர்க ளுக்கு பணி செய்து வந்தது. வேலைக்காரியின் மகன் தன் சொற்ப சம்பளத்தை நம்பி கோவளத்தில் ஒரு சிறு வீடு சொந்தமாக கட்டுகிறான். அதில் குடியேறும் அளவுக்கு அதை கட்டி முடிக்க ரூபாய் 50,000/- வேண்டிய சூழலில் பட்டம்மாவின் குடும்பம் மீனாட்சியை உதவிக்கு அணுகினர். 


வீட்டு வேலை தவிர தோட்ட வேலை, சமயங்களில் காவலாளி வேலை, செய்ய மொத்தம்அவர்களுக்கு மாதம் ரூ.6.000/- அவர்களுக்கு சம்பளமாக்க வருகிறது. சோமு அவர்களுக்கு ரூபாய் 20,000/-  வரை கடன் கொடுத்து மாதம் ரூபாய் ஆயிரம் பிடிப்பில் பாக்கியை வட்டியில்லாமல் வசூலிப்பார். ரூபாய் ஐம்பதாயிரம் கடன் சோமுக்கு அதிகமாக பட்டது. மீனாட்சி ஏற்கனவே கடன் கொடுப்பது என முடிவு செய்தாகிவிட்டது. அந்த தேதியில் பழைய கடன்கள் எல்லாம் முழுவதுமாகவசூலாகி இருந்தது. 


சோமு வங்கியில் கடன் வாங்கி தரலாமா என யோசனை செய்தார். தன்னால் வங்கியில் ஒரு வாராக் கடன் உருவாகுவதை அவர் விரும்பவில்லை. அதனால்  முதலில் ரூ.20.000/- கொடுத்து, இதை வைத்து வீட்டு வேலை களை தொடங்குங்கள் என அறிவுரை கூறினார். தனக்கு தெரிந்த கட்டு மானப் பொறியாளர் மூலம் மலிவாக ஆனால் உறுதியாக வீடு கட்டுவதற்கு எல்லா உதவிகளையும் அளித்தார். அடுத்த முப்பதாயிரம் ரூபாய்க்கு எங்கே போவது என்ற பட்டம்மாளின் கவலை மீனாட்சியின் மனதிலும் ஆழமாக இறங்கியது. 


மேலிடத்தின் அழுத்தத்தை எப்படி சமாளிப்பது என்ற உக்தியை சோமு நன்றாக அறிந்தவர். தகுதிக்கு மேலே ஒரு ரூபாய் கூட அவரிடம் கடன் பெற முடியாது. வங்கியின் கடன் இலாகாவில் ஊறியவர் ஆயிற்றே. 


பட்டம்மாவின் நேரம் ஜாதகப்படி அமோகமாக இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த இரண்டு நாட்களில் இப்படியொரு அதிசயம் நடந்திருக்குமா?

(தொடரும்)

 டிஸ்கி:இன்று என் கல்லுரித் தோழர் ஒருவர்,தற்சமயம் பெங்களூருவில் வசிப்பவர், என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.  சமீபத்தில்தான் என்  “நமக்குத் தொழில் பேச்சு” வலைப்பூவை(மதுரை சொக்கன் என்ற பெயரில்) முழுவதும் படித்ததாகவும், மிகவும் சிறப்பாக எழுதியிருப்பதாகவும் பாராட்டி விட்டு நீண்ட நாட்களாக எழுதாமல் இருப்ப தற்காகக் கடிந்து கொண்டார்.

எனவே சில நாட்கள்  அந்த வலைப்பூவுக்குப் போகலாமா என யோசித்துக் கொண்டிருக் கிறேன்.

13 கருத்துகள்:

  1. என்ன அதிசயம் நிகழ்ந்திருக்கும் என்று ஆவலாக காத்திருக்கிறேன்.
    மதுரை சொக்கன் ஆமாம் நானும் ஒரு முறை வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததாக நினைவு தொடருங்கள்.

    பதிலளிநீக்கு

  2. அந்த அதிசயம் என்ன என அறிய காத்திருக்கிறேன்.

    வகுப்புத் தோழர்களை பார்ப்பதே ஒரு தெம்பூட்டி சாப்பிடுவதுபோலத்தான். பெங்களூரு போய் வாருங்கள். புதிய தகவல்களை கொண்டுவாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! அங்கு என நான் குறிப்பிட்டது அந்த வலைப்பூவை,பெங்களூருவை அல்ல!
      நன்றி ஐயா

      நீக்கு

  3. அந்த அதிசயம் என்ன என அறிய காத்திருக்கிறேன்.

    வகுப்புத் தோழர்களை பார்ப்பதே ஒரு தெம்பூட்டி சாப்பிடுவதுபோலத்தான். பெங்களூரு போய் வாருங்கள். புதிய தகவல்களை கொண்டுவாருங்கள்.

    பதிலளிநீக்கு
  4. ஆஹா ஸூப்பர் ஜாதகம் தொடருங்கள் வருகிறேன்

    பதிலளிநீக்கு
  5. ஆனந்தம் தந்த அதிசயம் காண ஆவல் :)

    பதிலளிநீக்கு
  6. சுவாரஸ்யமான இடத்தில் ப்ரேக்! எங்கு வேண்டுமானாலும் எழுதுங்கள்! அதன் லிங்க் ஐ இங்கு கொடுத்து விடுங்கள் பிடித்துக்கொண்டு வந்துவிடுகிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் அய்யா! தங்கள் தளத்திற்கு புதியவன் இனி தொடர்ந்து வருகிறேன்!! அந்த ஆவலை அறிய நானும் காத்திருக்கின்றேன்!! தாங்கள் என்தளம் வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி அய்யா!!!

    அன்புடன் கரூர்பூபகீதன்!!!

    பதிலளிநீக்கு
  8. என்ன அதிசயம் நடந்திருக்கும் என்பதை அறிய காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. அவர்களிடமிருந்து உழைப்பைச் சுரண்டி விடும் நாம், அவர்களுக்கு உதவும் நேரம் மட்டும் பின் வாங்கி விடுகிறோம். மனித பலவீனம்! என்ன அதிசயம் என்று பார்த்திருக்கிறேன், காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. அந்த அதிசயத்தை அறிய காத்திருக்கிறேன் ஐயா
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  11. என்ன அதிசயம்? காத்திருக்கிறோம் தெரிந்துகொள்ள.

    பதிலளிநீக்கு