தொடரும் தோழர்கள்

சனி, செப்டம்பர் 12, 2015

எல்லாச் சாலைகளும் புதுக்கோட்டைக்குச் செல்கின்றன!




புதுக்கோட்டையின் சிறப்பு பற்றி,பார்க்க வேண்டிய இடங்கள் பற்றியெல்லாம் பலர் எழுதி விட்டனர்.

நான் புதுக்கோட்டைக்கு இன்று வரை போனதில்லை.

போக வேண்டும் என்றொரு ஆசை ,பலமான ஆசை சில முறை எழுந்ததுண்டு.

 1967 .....

ஒரு பகலில் ஓடும் ரயிலில்  சந்தித்த நட்பை மாலை பிரிகையில் அந்நட்பு புதுக்கோட்டை யைச்  சேர்ந்தது என்பது தவிர வேறெதுவும் அறியாமல்  திரும்பிய காலம்.

சில நாட்கள், சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்ததுண்டு. போய்த் தேடிப்
பார்க்கலாமா என.னாலும் ஓர் அச்சம்.   ஊரில் எங்கென்று தேடுவது.அங்கும் இங்கும் அலைந்து யாருக்காவது ஐயம் ஏற்பட்டால்?எனவே போகாமலே இருந்து விட்டேன்.இன்றும் புதுக்கோட்டை என்றால் நினைவுக்கு வருவது அந்த அழகிய நட்பே!

மற்றொரு தொடர்பு சாந்தானந்த சுவாமிகள்.என் உறவினர் ஒருவர் என்னை அவர் மடத்தில்
 (எதில் என்று சரியாகத் தெரியவில்லை) ஆயுட்கால உறுப்பினர் ஆக்கி விட்டார்.பணம் நான்தான் கட்டினேன்!முன்பெல்லாம் என் பிறந்தநாளன்று குங்குமப் பிரசாதம் வந்து கொண்டிருந்தது; இப்போது இல்லை.சுவாமிகளையும் நான் சேலத்தில்தான் பார்த்தேன்.


என் அம்மாவின் சித்தி,புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள்,கல்யாண சமையலைக் கூடக் கவனிக்கும் சாமர்த்தியம் பெற்றவர்கள்.புதுக்கோட்டைக் காரர்கள் எல்லாருமே சமையலில் விற்பன்னர்களோ என நினைக்கிறேன்


புதுக்கோட்டைப் பிரபலம் என்றால் என் நினைவுக்கு வருபவர் ஜெமினி கணேசன் அவர்கள்



இதெல்லாம் பழங்கதை.இன்று புதுக்கோட்டை என்றால் நினைவுக்கு வருவது அக்டோபர் 11 ஆம் நாள் நடக்க இருக்கும் மிகப் பிரம்மாண்டமான பதிவர் சந்திப்புதான்

எல்லாச் சாலைகளும் ரோமுக்குச் செல்கின்றன என்று சொல்வார்கள்.அதன் பொருள் வேறாக இருக்கலாம்.ஆனால் அந்த வாக்கியம் இன்று பொருத்தமாகப் படுகிறது …..


எல்லாச் சாலைகளும் புதுக்கோட்டைக்குச் செல்கின்றன”.

இங்கு ரோமையும் புதுக்கோட்டையும் ஒப்பிட்டுச் சொன்னதுகூட பொருத்தம்தான்!

இதைப் படியுங்கள்


//புதுக்கோட்டைப் பகுதியிலிருந்து பருத்தியும், பட்டு மெந்துகிலும், நல்லெண்னையும் ஏற்றுமதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. புதுக்கோட்டை வணிகர்கள் ரோமாபுரி வணிகர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் எனபதற்கு ஆதாரமாக ஆலங்குடிக்கு அருகிலுள்ள கருக்காக்குறிச்சியில் ரோம பொன் நாணயங்கள் நிறைய கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்த நாணயங்கள் கி.மு 29க்கும் கி.பி 79க்கும் இடைப்பட்ட காலத்தவை. ரோம் நாட்டு வரலாற்றில் புகழ்பெற்ற பல மன்னர்களின் நாணயங்கள் இவற்றுள் அடங்கியுள்ளன. இந்த நாணயங்கள் தமிழகத்தில் செலவாணியில் இல்லாவிட்டாலும் தங்கத்தின் மதிப்பிற்காக பாதுகாக்கப்பட்டு வந்தது(செலவாணியில் இருந்ததாக எட்கார் தர்ஸ்டன் குறிப்பிடுகிறார்.)// ......தமிழ் விக்கிபீடியா


பதிவர் சந்திப்புக்குச் செல்பவர்களுக்கு இதுநாள் வரை எழுத்தில் மட்டுமே அறிமுகமான நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புடன்,புதுக்கோட்டையிலும் அதை ஒட்டியும் உள்ள சிறப்பான இடங்களைப் பார்க்கவும் சந்தர்ப்பம் கிடைக்கிறது.


புதிய இடங்கள்.புதிய காட்சிகள்,சில புதிய நண்பர்களும் கூட உங்களுக்காகக் காத்திருக் கின்றன(ர்)

ஏற்கனவே சமையல் சாமர்த்தியம் பற்றிச் சொல்லி விட்டேன்!எனவே சிறப்பான உனவு காத்திருக்கிறது என்பதில் ஐயமில்லை!


சென்று வாருங்கள் அன்பு உள்ளங்களே!

நானும் உங்களுடன் இருப்பேன்.........

மனதால்!






18 கருத்துகள்:

  1. தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து எல்லோர் மனமும் அன்றைய தினம்விழாவில் இருக்கும் என்பதை சரியாகச்சான்னீர்கள் ஐயா. முயற்சி செய்து பாருங்கள் சென்னை அஜீத்தை அனைவரும் எதிர்பார்ப்பார்கள் அல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பான கருத்துக்கு நன்றி சசிகலா.அனைவரையும் சந்திக்க எனக்கும் ஆசைதான்.ஆனால் என் கடமைகள் அனுமதிக்கவில்லையே

      நீக்கு
    2. ஆமாம் ஐயா அம்மா எப்படி இருக்காங்க?

      நீக்கு
  2. 'அழகிய' நட்பு!

    :))))))

    புதுகை விழா சிறக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  3. நான் கண்டிப்பாக போக வேண்டும்!
    அய்யா!! தங்கள் மலரும் நனைவுகள் அருமை!!!

    பதிலளிநீக்கு
  4. உங்கள் அனுபவக் குறிப்புகள் அழகு! நட்பைப் பற்றிச் சொல்லும் போது நட்பு என்பது நண்பர்களுக்குள் மட்டுமல்ல எல்லா உறவுகளிலும் நட்புஇருந்தால் அழகுதான்....உங்களையும் நினைத்துக் கொள்கின்றோம் ஐயா! அன்று! தங்களுக்கு வர இயலாதது தெரியும் ஐயா...

    நாங்கள் செல்வதாக இருக்கின்றோம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகை பதிவுப் பட்டியலில் பெய்ர் பார்த்தேன்.மகிழ்ச்சி.சென்று வாருங்கள்
      நன்றி

      நீக்கு
  5. புதுக்கோட்டையில் நடக்க இருக்கும் பதிவர் திருவிழாவில் கலந்துகொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் தங்கள் பதிவு ஏற்படுத்திவிட்டது. நீங்கள் கலந்துகொள்ளாததால் ஒரு சுவையான பதிவை இழக்கப் போகிறோம்.

    பதிலளிநீக்கு
  6. ஆகா
    தாங்கள் புதுகைக்கு வருவீர்கள்
    தங்களைச் சந்திக்கலாம் என்றல்லவா
    ஆசையுடன் காத்திருந்தேன்
    முயன்று பாருங்கள் ஐயா
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  7. அழகிய கனாக்காலம்!.. பல விடயங்களைத் தொட்டுச்சென்ற பதிவு!
    ஏக்கம் உங்கள் எழுத்திலும் எகிறிப் பாய்கிறதே..
    நீங்களும் போக முடியாதா ஐயா..?

    புதுக்கோட்டை சமையல்லனாலே அற்புதம் என்று நானும் அறிந்திருக்கின்றேன்!.

    ஊர்ப்பெருமை கூறிய ’அழகிய’ பதிவு ஐயா!

    வாழ்த்துக்கள்!

    த ம +1

    பதிலளிநீக்கு
  8. தாங்கள் கலந்து கொள்ள முடியாதது குறித்து மிக்க வருத்தம் ஐயா...

    பதிலளிநீக்கு
  9. அடுத்த வருடம் கண்டிப்பாக இருவரும் கலந்து கொள்வோம் ஐயா

    பதிலளிநீக்கு
  10. புதுகை விழா சிறக்கட்டும் ஐயா...
    இந்த முறை நாங்களும் கலந்து கொள்ள முடியாத சூழல்..

    பதிலளிநீக்கு
  11. சித்தன்ன வாசல் போல் ஓவியம் போல்தானா அந்த அழகிய நட்பு :)

    பதிலளிநீக்கு
  12. எங்கள் ஊர்ப்பெருமையுடன் விழாப் பெருமை பற்றியும் அழகாகச் சொல்லிவிட்டுக் கடைசியில் தாங்கள் வராதது போல எழுதியிருப்பது வருத்தமளிக்கிறது அய்யா. எப்படியாவது வர முயற்சி செய்ய வேண்டுகிறேன். இப்போது தமிழ்இணையக் கல்விக் கழகத்துடன் இணைந்து நடத்தும் போட்டிகள் வேறு நிகழ்வை வேறு தளத்திற்குக் கொண்டு செல்கிறது அய்யா..ஏற்கெனவே முந்திய சந்திப்புகளில் இல்லாத சில -பதிவர் கையேடு, பதிவர் படைப்பு ஓவியங்கள், பதிவர் புத்தகக் காட்சி எனச் சிலவற்றை யோசித்திருக்கிறோம். இவற்றுக்கு எல்லாம் தங்களைப் போலும் மூத்தவர்கள் வந்து பார்த்துச் சொன்னால் தானே இன்னும் சிறப்பாக நடத்திட முடியும்.. எவ்வாறாயினும் தங்கள் வாழ்த்துகளோடு சிறப்பாக நடத்துவோம். இந்தப் பதிவிற்கும் எங்கள் உளமார்ந்த நன்றியும் வணக்கமும் அய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலந்து கொள்ள வேண்டும் என்ற அளவற்ற ஆவல் இருந்தாலும்,நான் சென்னையை விட்டு எங்கும் செல்ல முடியாத நிலையில் இருக்கிறேன்.விழா எற்பாடுகளைப் பார்த்துப் பிரமித்துப் போயிருக்கும் ஆயிரக்கணக் கான வர்களில் நானும் ஒருவன்..மெய்வருத்தம் பாராது,பசி நோக்காது ,கண் துஞ்சாது நீங்கள் அனைவரும் உழைத்து வருகையில் விழா ஒரு மகத்தான வெற்றியடைந்துதானே திர வேண்டும்! என் வாழ்த்துகள்,.
      நன்றி

      நீக்கு