தொடரும் தோழர்கள்

வெள்ளி, மார்ச் 30, 2012

தேடல்!!


களைத்து விட்டேன் நான்!
தேடித்தேடி!

தேடாத இடமில்லை

காற்று மழை கடுங்குளிர்
எதையும் பாராமல்

தேடிக் களைத்து விட்டேன்.

மெய் வருத்தம் பாராமல்
பசி நோக்காமல்
கண் துஞ்சாமல்

தேடிக் களைத்து விட்டேன்!

எங்கு தொலைத்தேன்
எப்படித் தொலைத்தேன்

எதுவும் புரியவில்லை.

எத்தனை தேடியும்
எங்கெங்கோ தேடியும் 

இன்னும்  கிடைக்கவில்லை!

ஏன் கிடைக்கும்?
எப்படிக் கிடைக்கும் ?


எதைத் தேடுகிறேன் என்று
எனக்கே தெரியாதபோது?!

18 கருத்துகள்:

  1. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே ... அவர் ஏதும் அறியாதவரடி ... ஞானத்தங்கமே!

    என்ற பாடல் ஏனோ ஞாபகம் வந்தது.
    நல்ல பதிவு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. சார் மனித வாழ்க்கையின் அடிப்படை தத்துவமே இதுதான் சார். அருமையான விளக்கம்.

    பதிலளிநீக்கு
  3. பித்தரே!
    எனக்குத் தெரியும்!
    அது...? நிம்மதி!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  4. பல நேரங்களில் இப்படித்தான்னே நமக்கும்!

    பதிலளிநீக்கு
  5. தேடலே ஒரு சுகம் தான் காரணம் இல்லாவிடினும்!தேடுங்கள்.
    நிச்சயம் ஏதாவது கிடைக்கும்! வாழ்த்துக்களோடு.

    பதிலளிநீக்கு
  6. கண்டு பிடிச்ச உடனே சொல்லுங்க...அனைவருக்கும் உபயோகமாகும் பித்தரே...

    பதிலளிநீக்கு
  7. தொலைத்த இடத்துல மீண்டும் தேடிப் பாருங்க ஐயா

    பதிலளிநீக்கு
  8. //எதைத் தேடுகிறேன் என்று
    எனக்கே தெரியாதபோது?!//

    :))) சீக்கிரம் என்ன தேடுகிறேன் என்பதையாவது கண்டுபிடிங்க!

    பதிலளிநீக்கு
  9. கிடைக்காட்டா என்ன
    சார்?

    எங்களுக்கு அருமையான-
    கவிதை கிடைத்ததே .!

    பதிலளிநீக்கு
  10. அருமை......அருமை...

    ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க
    ப்ளாக்கர் திரை மூட வைப்பது எப்படி?

    பதிலளிநீக்கு
  11. இருக்கும் இடத்தை விட்டு
    இல்லாத இடம் தேடி
    எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே...

    இந்தப் பாடல் தான் நினைவுக்கு வருகிறது ஐயா...

    பதிலளிநீக்கு
  12. வாழ்வு வெளி எங்கும் தேடல்கள் தடர்ந்து கொண்டே/ எந்நேரமும் அல்லது எப்பொழுதாவது/

    பதிலளிநீக்கு
  13. தொலைந்தது இதயமாக இருக்கும் பட்சத்தில் இந்த வேதனை சகஜம் ....வாசு

    பதிலளிநீக்கு