தொடரும் தோழர்கள்

வியாழன், ஜூன் 21, 2012

இதயத்தின் ரணம்!


                                           

என்னவென்று தெரியவில்லை சகி
என் மனத்தின் ரணம்  திறந்துகொண்டது
இன்று.

உன் மடியில் சிறிது தலை வைத்துப் படுக்க
உன் விழிக்கடலில் மூழ்கி என்னை இழக்க
என் தோளில்  உன்னைச் சாய்த்தணைத்து
உன் கூந்தல்  தடவி ,உச்சி முகர்ந்து முத்தமிட
என்ன இந்த ஆசைகள்
இத்தனை ஆண்டுக்குப் பின்?

காதலுக்குச் சாட்சியான இடங்கள் பல இன்றில்லை
காதல் மட்டும் சாகாமல் கனன்று எரிகிறதே.

நீயின்றி நானில்லை என்றே நாமுரைத்தோம்
பொய்யாக்கி விட்டு இருவரும் இன்னும் இருக்கிறோம்!
அங்கும் இங்குமாய்!

உன் காதல் தோற்றதா என நண்பன் கேட்டான்
உண்மைக் காதலுக்குத் தோல்வியும் உண்டோ?
காதலித்துப் பிரிந்த பின் காலம் பல கடந்த பின்னும் ,
காதலின் நினைவிலேயே வாழ்கின்ற நம்
காதல் வென்றதன்றோ!

என் நாடி நரம்புகளில் ரத்த நாளங்களில்
என் உயிரோடு உயிராய்க் கலந்தவளே
என்னை நீ விட்டு விட்டுப் போனாலும்
என் நெஞ்சை விட்டுப் போகவில்லையே
உன் நினைவு?

(இது  யாரோ ஒரு உண்மைக்காதலனின் உள்ளம் பேசும் பேச்சு.’என்’
என்று எழுதியதால் என்னை இதில் பார்க்காதீர்கள்)


வலையுலக நட்புகளுககு ஒரு மகிழ்வான அறிவிப்பு

ரும ஆகஸ்ட் 15 (புதன்) சுதந்திர தினத்தன்று சென்னையில பதிவர் சநதிப்புக்குத் திட்டமிடப்பட்டுளளது, புலவர் ச.இராமாநுசம் அவர்கள் தலைமையில் இந்தச் சந்திப்பு நிகழ இருககிறது, கவிதை பாடுபவர்கள் கவியரங்கத்தில் கவிதை படிக்கலாம், மற்றையோர் தங்களுக்குப பிடித்தமான ஏதேனும் ஒரு தலைப்பின் கீழ் (சுவாரஸ்ய அனுபவம். நகைச்சுவைத் துணுக்கு போன்றவை) பேசலாம்.இவை பற்றிய விரிவான அறிவிப்பு இனி வரும் நாட்களில் வெளிவரும். 

முழுக்க முழுக்க நமக்கான இந்த நிகழ்ச்சிக்கு அவசியம் வருகை தரும்படி அனைவரையும வேண்டுகிறோம். நிகழ்ச்சிக்கு வர இருப்பவர்கள் தங்களின் வருகையை 98941 24021 (மதுமதி), 73058 36166 (பா,கணேஷ்), 94445 12938 (சென்னைப் பித்தன்), 90947 66822 (புலவர் சா,இராமானுசம்) ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவித்தால் ஏற்பாடுகள் செய்வதற்கு வசதியாக இருக்கும்..

இத்தகவலை நட்புகள் அனைவரும் தங்கள் பதிவுகளில் வைத்து அனைவரிடமும் கொண்டு சேர்க்கும்படி வேண்டுகிறோம்..........(நன்றி:பா.கணேஷ்)


15 கருத்துகள்:

  1. அருமையான உளறல்கள்.!

    பதிவர் சந்திப்பிற்கு தாங்கள் எடுக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஐயா.!

    பதிலளிநீக்கு
  2. //இது யாரோ ஒரு உண்மைக்காதலனின் உள்ளம் பேசும் பேச்சு.’என்’என்று எழுதியதால் என்னை இதில் பார்க்காதீர்கள்)
    இது அப்பா குதிருக்குள் இல்லை என்பதுபோல் இல்லை?

    கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  3. உண்மைக் காதலனின் உள்ளம் பேசிய பேச்சு அருமை. ரசித்துப் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. "காதலுக்குச் சாட்சியான இடங்கள் பல இன்றில்லை
    காதல் மட்டும் சாகாமல் கனன்று எரிகிறதே"

    இது உண்மையான வரிகள் ஐயா..

    பதிலளிநீக்கு
  5. காதலின் ரசனை அருமை...........

    பதிலளிநீக்கு
  6. காதலின் வேதனை சொல்லும் அருமையான கவிதை பாஸ்

    பதிவர் சந்திப்பு சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. //இது யாரோ ஒரு உண்மைக்காதலனின் உள்ளம் பேசும் பேச்சு.’என்’
    என்று எழுதியதால் என்னை இதில் பார்க்காதீர்கள்// சரி சரி .....

    பதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  8. காதலிலும் கலக்குறீங்க..

    பதிலளிநீக்கு
  9. ரசித்துப் படித்தேன்...பதிவர் சந்திப்பிற்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  10. (இது யாரோ ஒரு உண்மைக்காதலனின் உள்ளம் பேசும் பேச்சு.’என்’
    என்று எழுதியதால் என்னை இதில் பார்க்காதீர்கள்)

    //

    நான் உங்களையே நினைச்சிட்டேன் ஐயா

    பதிலளிநீக்கு
  11. காதலுக்கு வெற்றியோ தோல்வியோ கிடையாது என்றே நானும் நினைக்கிறேன்.
    பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. மிகச் சரி
    காதலர்கள் தோற்கலாம்
    காதல் என்றும் தோற்றதில்லைதானே
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. mavithayaana pathivu aruma!

    pathivarkal santhippil en vaazhthukkalai sollungal!

    பதிலளிநீக்கு
  14. உண்மைக்காதல் வரிகள் உயிராய் .

    பதிலளிநீக்கு