தொடரும் தோழர்கள்

வியாழன், ஜூன் 07, 2012

கருணாநிதியின் நடிப்பு


கருணாநிதி ஒரு நல்ல நடிகர்.

வெறும் நடிப்பு மட்டுமின்றி வேறு திறமைகளும் அவருக்குண்டு.

அவர் ஒரு திறமையான புகைப்படக் கலஞர் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

நேற்று மிஸ்ஸியம்மா படம் பார்த்தேன்.

அதில் தங்கவேலுவின் உதவியாளராக வருவார் ஏ.கருணாநிதி.
தங்கவேலு சொல்வதையெல்லாம்,குறிப்பெடுக்கும் அவரது பாணி சிரிப்பை வரவழைக்கும்.

வீரபாண்டியக்  கட்டபொம்மனில் ஒரு மறக்க முடியாத பாத்திரத்தில் நடித்திருந்தார்.

நகைச்சுவை நடிகரான இவருக்குப் படங்களில் ஜோடியாக நகைச்சுவை நடிகைகளே நடிப்பது வழக்கம்.பெரும்பாலும் டி.பி முத்துலக்ஷ்மி அவர்கள் நடிப்பார்.

ஆனால் ஒரு பத்தில் தேவிகா இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்!
அந்தப் படம்”மணமகன் தேவை”

என்னால் மறக்க முடியாத ஒரு படம் இவரும் நாகேஷும் சேர்ந்து கலக்கிய “மெட்ராஸ் டு பாண்டிச்சேரி”

இவர் அறுபதுகளில் ஒரு ஓட்டல் நடத்தினார்.

பெயர் “ஓட்டல் மாமியா”-அசைவ ஒட்டல்

மாமியார் வீடு போல் சுவையான சமையல் என்பதால் அப்பெயர்.

புது விதமான உணவு வகைகள் அங்கு கிடைத்தன.

காடை ,கௌதாரி,உள்ளான் இப்படி.

ஒரு மறக்க முடியாத நடிகர் ஏ.கருணாநிதி!

28 கருத்துகள்:

  1. மறுபடியும் தலைப்பை வைத்தே பயமுறுத்துகிறீர்கள் ஐயா. ம்ம் வழக்கம் போல கலக்கல் .

    பதிலளிநீக்கு
  2. அ.தி.மு.க.வின் தீவிர விசுவாசியான நீங்கள் இப்படி எழுதுவீர்கள் என்பது எதிர்பார்த்ததுதான். அடுத்த தலைப்பு - ஸ்டாலினின் சர்வாதிகாரம் போல!!

    பதிலளிநீக்கு
  3. என்ன பாஸ் மறுபடியும் ஆரம்பிச்சாச்சா? :-)

    பதிலளிநீக்கு
  4. தலைப்பைப் பார்த்து வழக்கம்போல் ஏமாந்துவிட்டேன்.உண்மையில் தாங்கள் குறிப்பிட்டு இருப்பதுபோல் நகைச்சுவை நடிகர்
    திரு A கருணாநிதி ஒரு திறமையான நடிகர் தான். அவர் பெயரும் கலைஞர் கருணாநிதியின் பெயரும் ஒன்றாக இருந்ததால் திரு A. கருணாநிதி அவர்கள் மறைந்தபோது, கலைஞரின் எதிரிகள் ‘கருணாநிதி மறைந்தார்’ எனக் கொட்டை எழுத்துகளில் செய்தித்தாட்களில் வெளியிட்டு ‘அல்ப’ சந்தோஷம் அடைந்த நிகழ்வும் நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  5. தலைப்பிலே மயக்கம்! பித்தர்
    தருவதும் பழக்கம்!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  6. நான் கூட நம்ம கலைஞர தான் சொல்றீங்களோன்னு நெனச்சேன் ?!!

    பதிலளிநீக்கு
  7. தனக்கென்று தனி நடையை
    நகைச்சுவையில் வகுத்தவர்..
    அவரின் பேச்சு முறையே அழகு தான்..

    பதிலளிநீக்கு
  8. இப்போதெல்லாம் உங்கள் தலைப்பை பார்த்ததுமே யாரைப் பற்றி சொல்லப் போகிறீர்கள் என்று யூகித்துக் கொள்ள முடிகிறது. வேறு ஐடியாவை யோசியுங்கள்.

    பதிலளிநீக்கு
  9. தலைப்பின் ஈர்ப்பு பதிவிலும் இருந்தது
    வித்தியாசமான சிந்தனை
    சுவாரஸ்யமான பதிவு.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. A .கருணாநிதி ஒரு அற்புதமான கலைஞன் மிசியம்மாவிலும்,தில்லானாவிலும் வசனமே பேசாமல் அசத்தியிருப்பார்.கப்பலோட்டிய தமிழனில் நெல்லை சீமை பாஷையில் கலக்கி இருப்பார்.அடுத்த வீட்டு பெண்,பாலும்palamum என்று பல படங்களில் தான் ஒரு ஒரிஜினல் கலைஞன் என்று தன் நடிப்பின் மூலம் காண்பிப்பார்.தமிழன் மறக்ககூடாத மனிதர் A .கருணாநிதி.

    பதிலளிநீக்கு
  11. ! சிவகுமார் ! சொன்னது…

    // அ.தி.மு.க.வின் தீவிர விசுவாசியான நீங்கள் இப்படி எழுதுவீர்கள் என்பது எதிர்பார்த்ததுதான். அடுத்த தலைப்பு - ஸ்டாலினின் சர்வாதிகாரம் போல!!//
    உங்க ஜட்ஜ்மெண்ட்டே தப்பு! ஐடியாவுக்கு நன்றி! இன்னும்நாலைந்து தலைப்புக்கள் கொடுங்களேன்!
    நன்றி சிவா.

    பதிலளிநீக்கு
  12. ஜீ... சொன்னது…

    //என்ன பாஸ் மறுபடியும் ஆரம்பிச்சாச்சா? :-)//
    முடிந்தால்தானே ஆரம்பம்?:))
    நன்றி ஜீ

    பதிலளிநீக்கு
  13. சபாபதி சார் 1ஒரு சுவாரஸ்யமான தகவல் தந்தீர்கள்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. தி.தமிழ் இளங்கோ சொன்னது…

    //இப்போதெல்லாம் உங்கள் தலைப்பை பார்த்ததுமே யாரைப் பற்றி சொல்லப் போகிறீர்கள் என்று யூகித்துக் கொள்ள முடிகிறது. வேறு ஐடியாவை யோசியுங்கள்.//

    யோசிக்க வேண்டியதுதான்.!
    நன்ரி தமிழ் இளங்கோ

    பதிலளிநீக்கு
  15. தலைப்பிலேயே அசத்தறீங்களே தல.....

    பதிலளிநீக்கு
  16. கருணாநிதியின் நடிப்புமட்டுமல்ல உங்கள் பதிவும் அருமைதான்...... எழுதுங்கள் ஐயா இன்னும் எழுதுங்கள் உங்கள் தலைப்பை பார்த்து ஒடோடி ஒடோடி வந்தேன் அருமையாக இருந்தது நிறுத்தாமல் எழுதுங்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  17. அதிமுக விசுவாசியான நீங்கள் உங்கள் இதய தெய்வம் புரட்சித் தலைவியின் பெயரை தலைப்பாக வைத்து ஒரு பதிவு போட்டால் ஒரு நாய் கூட உங்க வலைப்பக்கத்தை எட்டிப் பார்க்காது என்பதை மிக நன்றாக புரிந்து வைத்து இருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  18. தலைப்பை சுண்டி இழுக்கும் வண்ணம் வைப்பது ஒரு கலையே ...தினத்தந்தி தலைப்புகள் நினைவிற்கு வருகின்றன ... பொதுவாக இந்த உலகமே ஒரு நாடக மேடை அதில் நாம் எல்லோரும் ! நடிகர்களே ! வாசு

    பதிலளிநீக்கு
  19. இன்றைய தலைமுறை அறியா நடிகர் இவர்.
    இவர் சிறந்த புகைப்படக் கலைஞர் என படித்துள்ளேன்.

    பதிலளிநீக்கு