தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஜூன் 12, 2012

நான் பதிவு எழுதுவதைத் தடுக்க முயற்சி!!


நான் பதிவு எழுதுவது சிலருக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது.

குறிப்பாக நான் தினம் ஒரு பதிவு எழுதுவது  அவர்களுக்கு பிடிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

வார இறுதி நாட்களில் மட்டுமாவது என்னை எழுத இயலாமல் முடக்கிப் போடும் முயற்சியைத் தொடங்கி விட்டார்கள்.

இரண்டு வாரமாக வெற்றியும் பெற்று விட்டார்கள். அவர்களது முயற்சியைத் தோற்கடிக்க வேறு ஏதாவது வழிதான் நான் தேட வேண்டும்.

ஏனெனில் அவர்களைத் தடுப்பதென்பது இயலாத செயல்.

நான் முடிவு செய்து விட்டேன்.

இன்னும் ஒரு வாரம் பொறுப்பேன்.

அடுத்த வார இறுதியிலும் அவர்கள் தங்கள் வேலையைத் தொடர்ந்தால்………?!

நண்பர்,லேப்டாப் நிபுணர்,நாஞ்சில் மனோ அவர்கள் மூலமாக ஒரு மடிக் கணினி வாங்கி ரிலையன்ஸ் நெட்கனெக்ட் அல்லது டாடா ஃபொடான் ஏதாவது இணைப்பைச் செருகி,என் பணியைத் தொடர்ந்து செய்ய வேண்டியதுதான்!

அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம், உங்களால் என் பதிவுகளைத் தடுத்து நிறுத்தமுடியாது.எனவே உங்கள் முயற்சியைக் கைவிடுங்கள் என்பதுதான்.

அடுத்த வாரம் பார்க்கலாம், BSNL!

(சென்ற வாரம் போலவே சனியன்று மதியம்  ஒரு மணியளவில், தொலைபேசித் தொடர்பும், இணையத் தொடர்பும்  அற்றுப் போயின!

வழக்கம் போல் புகார் பதிவு,பின் கோட்டப் பொறியாளருக்கு தொலை பேசிப் புகார், அவரிடமிருந்துகவனிக்கச் சொல்கிறேன்என்ற ஆறுதல் வார்த்தைகள்   ………..
என்னத்தைச் சொல்லி , என்னத்தைச் செஞ்சு….!வரும் ஆனா வராதுதான்!)
********************************************************
என் இமாலய முயற்சிகளுக்குப் பின் இன்று  மாலை ஐந்து மணியளவில் சரியாகி விட்டது.

சென்ற வாரம் மூன்று நாட்கள்!

இந்த வாரம் நான்கு நாட்கள்!!

அடுத்த வாரம் என்னாகுமோ?!



45 கருத்துகள்:

  1. எல்லோரையும் பாடாய் படுத்தும் BSNL நிறுவனத்தை என்ன செய்ய?

    பதிலளிநீக்கு
  2. பித்தரே!
    நானும் இந்த தொல்லையை அனுபவிக்
    கிறேன் அடிக்கடி கட்டாகிறது பல வலைகள் திறப்பதே இல்லை! எதுவும் சொன்னாலும் உடன் கவனி்பதில்லை உங்களைப் போலவே நானும் யோசிக்கிறேன்

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  3. அய்யா..நான் எதோ ஹேக்கர்கள் கொடுமைதான் என நினைத்து உள்ளே வந்தேன்..

    ஆனால் இந்த bsnl காரர்கள் அதை விட மேலானவர்கள் தான் போல..

    அவர்களிடம் அனுபவித்து (!) விட்டுதான் ரிலையன்ஸ்க்கு மாறினேன்.இப்போ பரவாயில்லை.கடந்த 5 மாதமாக அவ்வப்போது ஸ்லோவாக இருந்தாலும் கனெக்‌ஷன் கட் ஆகவில்லை

    நன்றி அய்யா

    பதிலளிநீக்கு
  4. தலைப்பை பார்த்தவுடன் நான் என்னமோ ஏதோ என்று பயந்து போய் வந்தேன் :)

    முதன்மையான இடத்தில் இருந்தாலே சோதனை மேல் சோதனைதான் அல்லவே ஐயா :)

    பதிலளிநீக்கு
  5. சென்னை தடா ஆறுவழி பாதை நடப்பதால் ஆறுமாதமாக பி.எஸ்.என்.எல் நெட் எங்கள் பக்கமும் வேலை செய்யவில்லை! மூன்று மாதம் முட்டி மோதி பார்த்துவிட்டு ரிலையன்ஸ் நெட் கனெக்ட் வாங்கி விட்டேன்! இதுதான் நமது அரசாங்கம் உருப்படாமல் போனதற்கு காரணம்!

    பதிலளிநீக்கு
  6. அய்யா உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் இதே நிலைமைதான். இதனால் பலருடைய பதிவுகளை பார்வையிடவே முடியவில்லை. கருத்துரைகளையும் நேரத்திற்கு தர இயலவில்லை. சில சமயம் இரண்டிரண்டு கருத்துரைகள் பதிவாகி விடுகின்றன. பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  7. மற்ற service providers use பண்ணிப்பார்த்தால் BSNL பரவாயில்லை என்று தோணும்.

    பதிலளிநீக்கு
  8. ஒரு வேளை இதில் பாகிஸ்தான் சம்மந்தப்பட்டிருக்குமோ...

    பதிலளிநீக்கு
  9. இது திட்டமிட்ட சதி... :))

    சீக்கிரமே சரியாகட்டும். அப்பத்தானே எங்களுக்கும் சுவையான பதிவுகள் கிடைக்கும் உங்க பக்கத்திலே....

    பதிலளிநீக்கு
  10. //ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
    ஆதவன் மறைவதில்லை
    ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
    அலைகடல் ஓய்வதில்லை.//

    என்ற ‘அரச கட்டளை’ திரைப்படத்தில் வந்த பாடல் நினைவுக்கு வருகிறது.கவலை வேண்டாம்.சீப்பை ஒளிய வைத்தால் கல்யாணம் நின்றுவிடுமா என்ன? தொடருங்கள் உங்கள் பணியை.

    பதிலளிநீக்கு
  11. ஐயா! அவங்களுக்கு உங்க மேல பொறாமை!

    பதிலளிநீக்கு
  12. mts வாங்குங்கள் அன்பரே சீரான வேகம் எத்தடையும் இல்லை

    பதிலளிநீக்கு
  13. நான் என்னமோ ஏதோ என்னு ஓடி வந்தேன்...:(

    ஆனா இது மிகப் பெரிய சதித்திட்டம் ஐயா விட்டு விடாதீர்கள்...தொடர்ந்தும் எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
  14. அடிக்கடி இந்தத் தொல்லை நிலவுகிறது ஐயா..
    என்ன செய்ய
    அனுபவித்துத் தான் ஆகவேண்டியிருக்கிறது...

    பதிலளிநீக்கு
  15. ஹலோ BSNL CUSTOMER CARE ??? உங்க கம்பெனி இன்டர்நெட் சரியே இல்லீங்க\ இது சமந்தமா நான் உங்க ஓனர்ட பேசணும் / ச யாருக்குமே பொறுப்பில்ல

    பதிலளிநீக்கு
  16. இப்படியும் ஒரு கொல்லையா?? எனக்கு என் தளமே திறக்க கஸ்டப்படுகிறது..

    என்னய்யா செய்வது...

    பதிலளிநீக்கு
  17. கோவி சொன்னது…

    // எல்லோரையும் பாடாய் படுத்தும் BSNL நிறுவனத்தை என்ன செய்ய?//
    சகித்துக் கொள்ள வேண்டியதுதான்!
    நன்றி

    பதிலளிநீக்கு
  18. புலவர் சா இராமாநுசம் சொன்னது…

    // பித்தரே!
    நானும் இந்த தொல்லையை அனுபவிக்
    கிறேன் அடிக்கடி கட்டாகிறது பல வலைகள் திறப்பதே இல்லை! எதுவும் சொன்னாலும் உடன் கவனி்பதில்லை உங்களைப் போலவே நானும் யோசிக்கிறேன்//

    சா இராமாநுசம்


    நொந்துபோனவர்கள் அணி!
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  19. சம்பத்குமார் சொன்னது…

    //அய்யா..நான் எதோ ஹேக்கர்கள் கொடுமைதான் என நினைத்து உள்ளே வந்தேன்..

    ஆனால் இந்த bsnl காரர்கள் அதை விட மேலானவர்கள் தான் போல..

    அவர்களிடம் அனுபவித்து (!) விட்டுதான் ரிலையன்ஸ்க்கு மாறினேன்.இப்போ பரவாயில்லை.கடந்த 5 மாதமாக அவ்வப்போது ஸ்லோவாக இருந்தாலும் கனெக்‌ஷன் கட் ஆகவில்லை

    நன்றி அய்யா//

    பிரச்சினை வராதவரை BSNL நன்றாகவே உள்ளது!
    நன்றி சம்பத்குமார்.

    பதிலளிநீக்கு
  20. வரலாற்று சுவடுகள் சொன்னது…

    // தலைப்பை பார்த்தவுடன் நான் என்னமோ ஏதோ என்று பயந்து போய் வந்தேன் :)//
    அதுதானே நோக்கமே!

    முதன்மையான இடத்தில் இருந்தாலே சோதனை மேல் சோதனைதான் அல்லவே ஐயா :)
    நன்றி,

    பதிலளிநீக்கு
  21. s suresh சொன்னது…

    // சென்னை தடா ஆறுவழி பாதை நடப்பதால் ஆறுமாதமாக பி.எஸ்.என்.எல் நெட் எங்கள் பக்கமும் வேலை செய்யவில்லை! மூன்று மாதம் முட்டி மோதி பார்த்துவிட்டு ரிலையன்ஸ் நெட் கனெக்ட் வாங்கி விட்டேன்! இதுதான் நமது அரசாங்கம் உருப்படாமல் போனதற்கு காரணம்!//
    இண்டெர்னெட் வேகம் என்று பார்த்தால் இவர்கள் பரவாயில்லை.
    சேவைதான்...........?
    நன்றி

    பதிலளிநீக்கு
  22. தி.தமிழ் இளங்கோ சொன்னது…

    // அய்யா உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் இதே நிலைமைதான். இதனால் பலருடைய பதிவுகளை பார்வையிடவே முடியவில்லை. கருத்துரைகளையும் நேரத்திற்கு தர இயலவில்லை. சில சமயம் இரண்டிரண்டு கருத்துரைகள் பதிவாகி விடுகின்றன. பார்ப்போம்.//

    பார்ப்போம்
    நன்றி

    பதிலளிநீக்கு
  23. T.N.MURALIDHARAN சொன்னது…

    // மற்ற service providers use பண்ணிப்பார்த்தால் BSNL பரவாயில்லை என்று தோணும்.//
    BSNL உண்மையில் அவ்வளவு மோசமில்லைதான்
    நன்றி.

    பதிலளிநீக்கு
  24. கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

    //ஒரு வேளை இதில் பாகிஸ்தான் சம்மந்தப்பட்டிருக்குமோ...//
    இருக்கலாம்
    நன்றி.

    பதிலளிநீக்கு
  25. வெங்கட் நாகராஜ் சொன்னது…

    இது திட்டமிட்ட சதி... :))

    // சீக்கிரமே சரியாகட்டும். அப்பத்தானே எங்களுக்கும் சுவையான பதிவுகள் கிடைக்கும் உங்க பக்கத்திலே....//
    நன்றி வெங்கட்

    பதிலளிநீக்கு
  26. வே.நடனசபாபதி சொன்னது…

    //ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
    ஆதவன் மறைவதில்லை
    ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
    அலைகடல் ஓய்வதில்லை.//

    //என்ற ‘அரச கட்டளை’ திரைப்படத்தில் வந்த பாடல் நினைவுக்கு வருகிறது.கவலை வேண்டாம்.சீப்பை ஒளிய வைத்தால் கல்யாணம் நின்றுவிடுமா என்ன? தொடருங்கள் உங்கள் பணியை.//
    உங்கள் ஆதரவுடன் தொடர்வேன்
    நன்றி

    பதிலளிநீக்கு
  27. வீடு சுரேஸ்குமார் சொன்னது…

    // ஐயா! அவங்களுக்கு உங்க மேல பொறாமை!//
    :)) நன்றி சுரேஸ்

    பதிலளிநீக்கு
  28. PREM.S சொன்னது…

    //mts வாங்குங்கள் அன்பரே சீரான வேகம் எத்தடையும் இல்லை//
    BSNL இல் பிரச்சினை எப்போதாவது வருகிறது.மற்றப்படி ஓகே.இப்போதுதான் இப்படி இரண்டு வாரம்!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  29. Seeni சொன்னது…

    // ithu verayaa...?//

    ஆமாம்!
    நன்றி

    பதிலளிநீக்கு
  30. சிட்டுக்குருவி சொன்னது…

    // நான் என்னமோ ஏதோ என்னு ஓடி வந்தேன்...:(

    ஆனா இது மிகப் பெரிய சதித்திட்டம் ஐயா விட்டு விடாதீர்கள்...தொடர்ந்தும் எழுதுங்கள்//
    அப்படியெல்லாம் விட்டு விட முடியுமா?!
    நன்றி

    பதிலளிநீக்கு
  31. மகேந்திரன் சொன்னது…

    //அடிக்கடி இந்தத் தொல்லை நிலவுகிறது ஐயா..
    என்ன செய்ய
    அனுபவித்துத் தான் ஆகவேண்டியிருக்கிறது...//
    உண்மை
    நன்றி

    பதிலளிநீக்கு
  32. கவிதை நாடன் சொன்னது…

    // ஹலோ BSNL CUSTOMER CARE ??? உங்க கம்பெனி இன்டர்நெட் சரியே இல்லீங்க\ இது சமந்தமா நான் உங்க ஓனர்ட பேசணும் / ச யாருக்குமே பொறுப்பில்ல//
    “ஹலோ! கவிதை நாடன் சார்.உடனே பார்க்கச் சொல்கிறோம்!”இதுதான் பதில்!
    நன்றி

    பதிலளிநீக்கு
  33. FOOD NELLAI சொன்னது…

    // எனக்கும் இதே அனுபவம். க்டந்த பதினைந்து நாட்களில் இருமுறை கட். முதல்முறை பத்துநாட்களில் மறுபடியும் இணைப்பு கிடைத்தது. இந்த்முறை ஒயர் அறுந்து விழுந்ததால், இரண்டு நாளில் சரியானது. ஆக, அனுபவம் அனைவருக்கும்தானா!//
    ஹப்பா! துணைக்கு ஆள் இருக்கா?
    நன்றி.

    பதிலளிநீக்கு
  34. எஸ்தர் சபி சொன்னது…

    // இப்படியும் ஒரு கொல்லையா?? எனக்கு என் தளமே திறக்க கஸ்டப்படுகிறது..//
    ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரி கஷ்டம்!
    நன்றி

    பதிலளிநீக்கு
  35. Sasi Kala சொன்னது…

    //எனக்கும் இதே தொல்லை ஐயா .//
    வாங்க நம்ம கூட்டத்துக்கு!
    நன்றி

    பதிலளிநீக்கு
  36. திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

    // எல்லா இடத்திலும் இந்த தொல்லை தான் ? Reliance எப்படி ?//
    வாங்க திண்டுக்கல்காரரே!
    பொதுவில் BSNL மோசமில்லை!
    நன்றி

    பதிலளிநீக்கு
  37. இப்படி ஏதாவது சதி செய்து
    உங்களை முந்தினால்தான் உண்டு என்கிற உண்மை
    பதிவர் எவருக்கேனும் புரிந்திருக்குமோ ?
    சுவாரஸ்யமான பதிவு

    பதிலளிநீக்கு
  38. நான் பதிவு எழுதுவதைத் தடுக்க முயற்சி!!//?????

    பதிலளிநீக்கு
  39. Ramani சொன்னது…

    // இப்படி ஏதாவது சதி செய்து
    உங்களை முந்தினால்தான் உண்டு என்கிற உண்மை
    பதிவர் எவருக்கேனும் புரிந்திருக்குமோ ?//
    நல்ல நகைச்சுவை!!:))
    சுவாரஸ்யமான பதிவு
    நன்றி

    பதிலளிநீக்கு
  40. நல்ல வேளை ...அயல் நாட்டு சதி என்றோ CIA சதி என்றோ கைபர் கணவாய் கடந்து வந்த கயவர்கள் சதி என்றோ கூற வில்லை .. நிற்க BSNL சேவை அது என்னோவோ எனக்கும் பல நேரம் சனி அன்றே பாதிக்கப்பட்டு உள்ளது .. இந்த பிரச்சினையில் இருந்து மீள வெள்ளி அன்றே இரண்டு பதிவுகள் பதியுங்கள் ...வாசுதேவன்

    பதிலளிநீக்கு