இக்கால முகம் பார்க்கும் கண்ணாடிகள்
மிக்கத் தரம் குறைந்தவை!
என்
முகத்தைப் பார்க்கிறேன் கண்ணாடியில்
எதிரில்
தெரிவது நிச்சயமாய் நானில்லை!
முதுமை
அடைந்து சுருக்கம் விழுந்து
பொலிவிழந்த முகம்
பொலிவிழந்த முகம்
அது
என் முகம் இல்லை சத்தியமாய்!
நான் இதை விட இளமையானவன்.
என்ன
கண்ணாடி இது?
நல்ல
கண்ணாடியெல்லாம்
நாற்பது
ஆண்டுக்கு முன்!
அப்படியே
இளமையாய், அழகாய்ப்
பிரதிபலிக்கும்
என் முகத்தை.
ஆடியில்
தெரியும் முகம்
வாடிச்
சுருங்கியிருந்தால்
வருத்தம்
அடையாதீர்.
கண்ணாடியில்தான்
குற்றம்
முகத்தில் இல்லை!
கண்ணாடி மாற்றினும் பயனில்லை
ஏனெனில்
இக்காலக்
கண்ணாடிகள்
அக்கால
ஆடிகள் போல்
மிக்கத்
தரமானவை அல்ல!
நான் இப்படிதாங்க ஏமார்ந்து போய்விடுகிறேன்....
பதிலளிநீக்குஅய்யாவுக்கு வணக்கம்....
பதிலளிநீக்குகவிதையை போலவே நீங்களும் நலமாக இருப்பீர்கள் என நம்புகின்றேன்...
ஆஹா... என்ன அருமையான, மனதிற்கு இதமான கருத்து. உண்மையில் இக்காலக் கண்ணாடிகள் அக்காலக் கண்ணாடிகள் போல் இல்லைதான் நண்பரே... என் முகத்தைக் கூட இப்படித்தான் தப்பாகவே காட்டுகின்றன.
பதிலளிநீக்குஇதைத்தான் என்றும் இளமை என்பதோ ? அருமை ஐயா கணேஷும் , மதுமதியும் சொன்னாங்க ஐயா கம்பீரமாக இருப்பதாக .
பதிலளிநீக்குஇக்காலக் கண்ணாடிகள்
பதிலளிநீக்குஅக்கால ஆடிகள் போல்
மிக்கத் தரமானவை அல்ல!//
அருமையாகச் சொன்னீர்கள்
இது தெரியாமல்தான் நானும்
சங்கடப்பட்டுக்கொண்டிருந்தேன்
இனி நம் மனக் கண்ணாடியே போதும்
என முடிவெடுத்துவிட்டேன்
மன்ம் கொள்ளை கொண்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Tha.ma 8
பதிலளிநீக்குமுதுமையை மறக்க இப்படியும் யோசிக்கலாம் போல. நல்ல ஆராய்ச்சி!!
பதிலளிநீக்குஒரு வாழ்வியல் தத்துவத்தை கண்ணாடியை கொண்டு சொல்லியிருக்கிறீங்க சூப்பர் பாஸ்
பதிலளிநீக்குஆஹா! இப்போது உங்களின் இந்தப்பதிவின் மூலம்தான் ஐயா, உண்மையை உணர முடிந்துள்ளது.
பதிலளிநீக்குநாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட அந்தக்காலக் கண்ணாடியில் என் உருவம், அழகாக மிக அழகாக, அடர்த்தியான முடிகளுடன்,
”பாலும் பழமும்” சிவாஜி போல கும்மென்ற ஹேர் ஸ்டைலுடன் அல்லவா தெரிந்தது.
இப்போது வரும் முகம் பார்க்கும் கண்ணாடிகள் தயாரிப்பே சரியில்லை தான்.
மிகச்சரியாகவே சொல்லிவிட்டீர்க்ள். இப்போது தான் என் மனம் ச்மாதானம் அடைகிறது. ;)))))
மிக்க நன்றி.
தல, இளமை ஊஞ்சலாடுது உங்ககிட்டே, அது எழுத்திலும் நல்லாவே வெளிப்படுகிறது...!!!
பதிலளிநீக்குilamai oonjal aadattum...
பதிலளிநீக்குகவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…
பதிலளிநீக்கு// நான் இப்படிதாங்க ஏமார்ந்து போய்விடுகிறேன்....//
இனி ஏமாறாதீங்க!
நன்றி.
NKS.ஹாஜா மைதீன் சொன்னது…
பதிலளிநீக்கு//அய்யாவுக்கு வணக்கம்....
கவிதையை போலவே நீங்களும் நலமாக இருப்பீர்கள் என நம்புகின்றேன்...//
நலம்,நலமறிய அவா!
நன்றி ஹாஜா.
பா.கணேஷ் சொன்னது…
பதிலளிநீக்கு//ஆஹா... என்ன அருமையான, மனதிற்கு இதமான கருத்து. உண்மையில் இக்காலக் கண்ணாடிகள் அக்காலக் கண்ணாடிகள் போல் இல்லைதான் நண்பரே... என் முகத்தைக் கூட இப்படித்தான் தப்பாகவே காட்டுகின்றன.//
புரிந்துகொண்டீர்கள் அல்லவா!
நன்றி.
Sasi Kala சொன்னது…
பதிலளிநீக்கு// இதைத்தான் என்றும் இளமை என்பதோ ? அருமை ஐயா கணேஷும் , மதுமதியும் சொன்னாங்க ஐயா கம்பீரமாக இருப்பதாக .//
இளமை மனம் சம்பந்தப்பட்ட துதானே!
நன்றி சசிகலா
Ramani சொன்னது…
பதிலளிநீக்குஇக்காலக் கண்ணாடிகள்
அக்கால ஆடிகள் போல்
மிக்கத் தரமானவை அல்ல!//
//அருமையாகச் சொன்னீர்கள்
இது தெரியாமல்தான் நானும்
சங்கடப்பட்டுக்கொண்டிருந்தேன்
இனி நம் மனக் கண்ணாடியே போதும்
என முடிவெடுத்துவிட்டேன்
மன்ம் கொள்ளை கொண்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்//
மனக்கண்ணாடி நம்மை என்றும் இளமையாகத்தான் காட்டும்!
நன்றி
வே.நடனசபாபதி சொன்னது…
பதிலளிநீக்கு//முதுமையை மறக்க இப்படியும் யோசிக்கலாம் போல. நல்ல ஆராய்ச்சி!!//
இல்லாததை மறப்பதா?!
நன்றி ஐயா
K.s.s.Rajh சொன்னது…
பதிலளிநீக்கு// ஒரு வாழ்வியல் தத்துவத்தை கண்ணாடியை கொண்டு சொல்லியிருக்கிறீங்க சூப்பர் பாஸ்//
நன்றி
வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…
பதிலளிநீக்கு//ஆஹா! இப்போது உங்களின் இந்தப்பதிவின் மூலம்தான் ஐயா, உண்மையை உணர முடிந்துள்ளது.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட அந்தக்காலக் கண்ணாடியில் என் உருவம், அழகாக மிக அழகாக, அடர்த்தியான முடிகளுடன்,
”பாலும் பழமும்” சிவாஜி போல கும்மென்ற ஹேர் ஸ்டைலுடன் அல்லவா தெரிந்தது.
இப்போது வரும் முகம் பார்க்கும் கண்ணாடிகள் தயாரிப்பே சரியில்லை தான்.
மிகச்சரியாகவே சொல்லிவிட்டீர்க்ள். இப்போது தான் என் மனம் ச்மாதானம் அடைகிறது. ;)))))
மிக்க நன்றி.//
உங்கள் மனச் சமாதானத்துக்கு நான் உதவியது பற்றி மகிழ்ச்சி!!
நன்றி
MANO நாஞ்சில் மனோ சொன்னது…
பதிலளிநீக்கு// தல, இளமை ஊஞ்சலாடுது உங்ககிட்டே, அது எழுத்திலும் நல்லாவே வெளிப்படுகிறது...!!!//
:))
நன்றி மனோ
Seeni சொன்னது…
பதிலளிநீக்கு// ilamai oonjal aadattum...//
நன்றி சீனி
//ஆடியில் தெரியும் முகம்
பதிலளிநீக்குவாடிச் சுருங்கியிருந்தால்
வருத்தம் அடையாதீர்.
கண்ணாடியில்தான் குற்றம்
முகத்தில் இல்லை! //
அதானே... வர வர கண்ணாடி சரியாவே செய்யத் தெரியல! :))
நினைப்பு நன்றாக இருந்தால் போதுமே!
தாங்கள் பார்த்தது முகம் பார்க்கும் கண்ணாடியா அகம் பார்க்கும் கண்ணாடியா?
பதிலளிநீக்குசா இராமாநுசம்
வாழ்வியல் தத்துவத்தை கண்ணாடியை கொண்டு சொல்லியிருக்கிறீங்க...வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஹா ஹா நகைச்சுவைக் கலந்த சிரிபூட்டும் கவிதை அய்யா, ஆனால் அதில் ஒரு ஏக்கமும் கலந்து இன்ருந்தலும் அதைக் கூட நகைச்சுவையுடன் கூறியது அற்புதம்
பதிலளிநீக்குபடித்துப் பாருங்கள்
சென்னையில் ஓர் ஆன்மீக உலா
Entha Muthumaiyaum Rasikalame?
பதிலளிநீக்குஎன்னை என் கண்ணாடி அழகாய் காட்டுகிறது என்றால் நான் உபயோகிப்பது அக்கால கண்ணாடி தானே ஐயா :)
பதிலளிநீக்குஅருமை ஐயா.!
பதிலளிநீக்குநான் சொல்ல எண்ணியதை எல்லாரும் போட்டு உடச்சுட்டாங்க நான் என்ன சொல்லுறது...???
பதிலளிநீக்குஅருமையான கவி....
நன்றி வெங்கட் ஐயா
பதிலளிநீக்குநன்றி சீனு
பதிலளிநீக்குபெயரில்லா சொன்னது…
பதிலளிநீக்கு//Entha Muthumaiyaum Rasikalame?//
சந்தேகமின்றி.என் வெள்ளை முடி தரும் கம்பீரம் கருப்படித்தால் வருமா?
நன்றி எஸ்தர் சபி
பதிலளிநீக்குநன்றி சங்கரலிங்கம்
பதிலளிநீக்குஐயா கவிதை சூப்பர்
பதிலளிநீக்கு...முகம் பார்க்கும் கண்ணாடியைத்தானே சொன்னீர்கள் நான் பார்வைக்குறையால் அணியும் கண்ணாடி என்று நினைத்துவிட்டேன்...:)
This is called eternal optimism . One is as young as one believes . Mirror just reflects our thoughts. vasudevan
பதிலளிநீக்கு