சனிக்கிழமை காலையில் தொலைபேசி உயிரை விட்டது.துணையாக இணைய இணைப்பும் போய்விட்டது.அன்றே புகார் கொடுத்தேன்.இன்று காலை தொலைபேசி உயர் அதிகாரிகளுடனும் தொலை பேசினேன்.எங்கோ கம்பிவடத்தில் பிரச்சினை என அறிந்தேன்.இப்போது மணி இரவு 9.00.தொலைபேசியும்,இணைய இணைப்பும் உயிர்பெற்று விட்டன.உடனே அமர்ந்து தட்ட ஆரம்பித்து விட்டேன்.இம்மாதிரி இணைப்பற்றுப் போகும்போதுதான் எந்த அளவுக்கு இதற்கு அடிமையாகியிருக்கிறேன் என உணர முடிகிறது.இந்த மூன்று நாட்களில் என் கவனத்தை வலிய வேறு விஷயங்களில் செலுத்திச் சமாளித்தேன்.
மூன்று நாட்கள் நண்பர்களின் பதிவுகளைப் படிக்க முடியவில்லை.என் பதிவில் ஏதும் கிறுக்க முடியவில்லை.இணையத்தில் உலா வர இயலவில்லை.எல்லாம் நாளை முதல்
தொடரும்.
**************************
கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்துகொண்டிருக்கிறது இப்போதெல்லாம் கல்லூரி மாணவர்களும் மாணவிகளும் கலகலப்பாக காஃபிடேயிலும் மோகாவிலும் மணிக்கணக்காகப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது எனது கல்லூரி நாட்களை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
பட்டப் படிப்பை விடுங்கள்.அது ஒரு கிராமப்புற ஆண்கள் கல்லூரி.ஆனால் சென்னைமா நகரில் பட்ட மேற்படிப்பு ப் படிக்கும்போது என்ன நடந்தது.?
நான் படித்தது சாமியார் கல்லூரி என அழைக்கப்படும் விவேகானந்தா கல்லூரி.ஆனால் கல்லூரிகளுக்கிடைப்பட்ட வகுப்புக்கு ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி மாணவிகள் வருவார்கள் என்ற செய்தி மகிழ்ச்சியளித்தது.ஏமாற்றம்!அந்த வகுப்புக்கு அவர்கள் வந்ததும் எங்கள் பேராசிரியர் அவர்களை ஒரு தனியறையில் அமரச் செய்து ,அவர் வகுப்புக்குள் வந்தபின்தான் அவர்கள் வகுப்புக்குள் வருமாறு ஏற்பாடு செய்து விட்டார். நாங்கள் யாரும் அவர்களுடன் ஒரு வார்த்தை கூடப் பேசியதில்லை.(அதனால் பெரிய இழப்பேதும் இல்லை என்பது வேறு விஷயம்!!)
***************************
“நான் பஸ்ஸில் வந்துகொண்டிருக்கிறேன்.இன்னும் அரை மணி நேரத்தில் வந்து விடுவேன்” பேருந்தில் ஒரு பேண் கைபேசியில்.
மறுபக்கம் இருந்தவர் நம்பவில்லை போலும்.”உண்மையாத்தான்.இதோ டிராஃபிக் சப்தம் கேள்”கைபேசியை சன்னல் வெளியே நீட்டுகிறாள்.
அப்போதும் மறுமுனை நம்பவில்லை.என்ன சொன்னாலும் நம்பவில்லை.
கடைசியில் ஓட்டுநரிடம் சென்று செய்தியைச் சொல்லி உதவி கேட்க அவர் ஒலியெழுப்ப அதைக் கைபேசியில் கேட்கச் செய்து பின் ”இப்ப நம்புறயா”எனக் கேட்டாள் அந்தப் பெண். (செய்தி உதவி “இந்தியாவின் நேரங்கள்” 4-6-2012)
நம்பிக்கை இல்லாத நட்பா?
என்ன கொடுமைடா இது?!
அப்புடியா!?
பதிலளிநீக்குஉங்க பின்னூட்டம் இல்லாமல்-
எனது எழுத்துக்கள்-
பித்து பிடித்து விட்டது அய்யா!
அடடா.. இணையத்திற்கு அடிமையாகி விட்டோம் என்பது உண்மை.....
பதிலளிநீக்குமூன்று நாட்களாக கஷ்டமா... சரி... இப்ப சரியாகிவிட்டதல்லவா... தட்ட ஆரம்பியுங்கள்.
பதிலளிநீக்குநம்பிக்கையில்ல நட்பு எதற்கு என்று அந்தப் பெண் விட்டுட்டுப் போக வேண்டியதுதானே..
ம்ம்ம்... இரண்டு மூன்று நாட்கள் பயன்படுத்தாமல் இருந்தால்தான் இதன் தாக்கம் புரிகிறது. எனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட என் கல்லூரிப் பருவ அனுபவம் போன்றே உங்களுக்கும் அமைந்திருப்பது கண்டு வியப்பு!
பதிலளிநீக்குஇப்போது உள்ள நட்பு எல்லாம் நம்பிக்கை இல்லாத நட்புதான். காலத்தின் கோலம் இது!
பதிலளிநீக்குசரி ஏதோ 03 நாட்களாக தொடர்ந்த வலிகள் சரியாகி விட்டதா அங்கிள்???
பதிலளிநீக்குசரியாகி விட்டால் தொடருங்கள்....
அணையத்திற்கு நாமெல்லாம் அடிமை என்பது உண்மையே....
ஆமாம் ஐயா எனக்கும் இந்த அனுபவம் நேர்ந்தது புரிகிறது .
பதிலளிநீக்குநாமெல்லாம் அடிமை என்பது உண்மையே
காலம் மாறிப் போச்சு! நம்மைப் போன்றவர்கள் இணையத்திற்கு மாறி விட்டோம். இளசுகள் செல்லுக்கு மாறி விட்டனர்.
பதிலளிநீக்குதுணுக்குச் செய்திகள்! அருமை!
பதிலளிநீக்குஇரண்டுநாளாக பதிவும் இல்லை மறுமொழியும் இல்லையே காரணம் தெரியாமல்
கவலைப்பட்டேன்!
சா இராமாநுசம்
//
பதிலளிநீக்குமூன்று நாட்கள் நண்பர்களின் பதிவுகளைப் படிக்க முடியவில்லை.//
உங்களுக்கு ஆண்டவன் அனுக்ரகம் ஜாஸ்தி.
நன்றி சீனி
பதிலளிநீக்குநன்றி குமார்
பதிலளிநீக்குநன்றி கணேஷ்
பதிலளிநீக்குநன்றி எஸ்தர்சபி
பதிலளிநீக்குநன்றி சசிகலா
பதிலளிநீக்குதி.தமிழ் இளங்கோ சொன்னது…
பதிலளிநீக்கு// காலம் மாறிப் போச்சு! நம்மைப் போன்றவர்கள் இணையத்திற்கு மாறி விட்டோம். இளசுகள் செல்லுக்கு மாறி விட்டனர்.//
என்னோடு உங்களையும் சேர்க்கிறீர்கள்?!
நன்றி தமிழ் இளங்கோ
நன்றி புலவர் ஐயா
பதிலளிநீக்கு! சிவகுமார் ! சொன்னது…
பதிலளிநீக்கு//
மூன்று நாட்கள் நண்பர்களின் பதிவுகளைப் படிக்க முடியவில்லை.//
//உங்களுக்கு ஆண்டவன் அனுக்ரகம் ஜாஸ்தி.//
:)))
நன்றி சிவா