தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஜூன் 15, 2012

வீசு காற்றே வீசு!


நமஸ்தே வாயோ!த்வேம ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி! த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம வதிஷ்யாமி!
(தைத்திரீய உபநிடதத்தின் சாந்தி மந்திரத்தின் பகுதி)

வாயு தேவனே வணங்குகிறேன்!நீயே கண்கண்ட தெய்வமாக இருக்கிறாய்! நீயே கண்கண்ட தெய்வம் என்று கூறுகிறேன்!

இன்று உலக காற்று தினம்.

அந்தக் காற்றைப் போற்றுவோமா?
**********
காற்றே!உன்னைக் கண்டு நான் வியக்கிறேன்.
நீ பல முகம் கொண்டவன்.
எங்கள் மூச்சுக்காற்று நின்று போனால்  
எங்கள் பெயரும் இன்றிப் போகிறது.

பிராண வாயு ,கரியமில வாயு எனப்
பல வடிவம் கொண்ட நீ
அபான வாயுவுமாகி எங்களை
மூக்குப் பொத்த வைக்கிறாய்!

காற்றே  நீ ஒரு குறும்புக்காரன்!
கடற்கரையில் அவள் கூந்தல் கலைப்பாய்
கூந்தல் திருத்தும் போது  
முந்தானை பறக்கச் செய்வாய்
என் மனமும் சேர்ந்து பறக்கவே!
குளி காற்றாய் நீ வீசி அவள்
ஆடை கலைக்கையில்
என் உடல் மட்டும் சூடாவதேன்?!

காற்றே! நீ ஒரு அதிர்ஷ்டக் காரன்!
அவளது பட்டுமேனித் தழுவலுக்காய்
நான் காத்திருக்க
அவள் மேனி முழுவதும்
 அனுமதியின்றித் தழுவிச்செல்லும்
அதிர்ஷ்டக் காரன்!

காற்றே! நீ வலிமை வாய்ந்தவன்!
காற்றாலை பல இயக்கி எங்கள்
மின்சாரத் தேவை  தீர்ப்பாய்.
சில நேரம் அடங்காத கோபத்தில்
புயலாய் மாறி எங்கள்
வாழ்க்கையைச் சிதைப்பாய்!
   
காற்றே நீ  எதையும் செய்பவன்!
தென்றலாய் மகிழ்விக்கிறாய்
புயலாய் அழ வைக்கிறாய்
வாடையாய் நடுங்க வைக்கிறாய்
வீசாமல் வேகவும் வைக்கிறாய்!

காற்றே! நீ உயிர்களின் உயிர்!
ஆக்கவும் அழிக்கவும் தெரிந்தவன்!

உனக்கு என் வணக்கங்கள்.
*******************
முடிக்கும் முன்-

 மகாகவி  பாரதியின் வசன கவிதையின் ஒரு பகுதி------

காற்றுக்குக் காது நிலை.
சிவனுடைய காதிலே காற்று நிற்கிறான்.
காற்றில்லா விட்டால் சிவனுக்குக் காது கேட்காது.
காற்றுக்குக் காதில்லை.
அவன் செவிடன்.
காதுடையவன் இப்படி இரைச்சலிடுவானா?
காதுடையவன் மேகங்களை ஒன்றோடொன்று மோதவிட்டு,இடியிடிக்கச் சொல்லி வேடிக்கை பார்ப்பானா?
காதுடையவன் கடலைக் கலக்கி விளையாடுவானா?
காற்றை,ஒலியை,வலிமையை வணங்குகின்றோம்.”




12 கருத்துகள்:

  1. மீசைக்காரன் வார்த்தைகள் அருமை. காற்றை, ஒலியை, வலிமையை நாம் வணங்கிடுவோம். அருமையான பகிர்வு. (only chennaiiththan spl!)

    பதிலளிநீக்கு
  2. உலக் காற்று தினத்திற்கான கவிதை அற்புதம்
    பாரதியின் அருமையான கவிதையையும் நினைவூட்டியமைக்கு
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. பித்தரே!இளமை ஊஞ்சலாடுது காற்றில்!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  4. உலக காற்று தினத்தை இதைவிட சிறப்பாக கொண்டாட முடியாது. கவிதைக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. //எங்கள் மூச்சுக்காற்று நின்று போனால்
    எங்கள் பெயரும் இன்றிப் போகிறது.
    //

    இதுவும் கூந்தல் கலைவது பற்றி தாங்கள் எழுதிய வரிகளும் அற்புதம். வாயுவைப் போற்றுவோம்


    படித்துப் பாருங்கள்



    தமிழ்நாடு டூரிசமும் மேனரிசமும்

    பதிலளிநீக்கு
  6. காற்று மட்டுமா,கிட்டத்தட்ட இயற்கையாக கிடைக்கிற எல்லாமே வணங்கப்படவேண்டியதே/

    பதிலளிநீக்கு