தொடரும் தோழர்கள்

சனி, ஜூன் 09, 2012

ஒரு வரலாறு-(தொடர்)--ராஜியும் முதுமையும்.

ராஜிக்கு இந்த ஜூலையில் 92 வயது முடிந்துவிட்டது.(2010)திடீரென்று உடல் தளர்ந்து விட்டது.முன்பே தளர்ந்து விட்ட உடல்தான்.ஆனால் அவளது அசாத்திய மன உறுதி, தளர்ச்சியை வென்று முன் நின்றது.ஆனால் அந்த மன வலிமை ஒரே நாளில் அகன்று விட்டது.எனவே உடல் வென்று விட்டது.அவள் முன்பெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பாள்எங்காத்திலேயே என் சித்திதான் 92 வயது வாழ்ந்தாள்.நானும் அதே மாதிரி இருப்பேன் போலிருக்கு என்று.எனவே அந்த 92 வயது என்பது மனோதத்துவ ரீதியாகவும் அவளைப் பாதித்திருக்கிறது.

இதுவரை,மெல்ல நடந்தாலும்,துணையின்றி நடந்த அவள்,இப்போது கம்பூன்றி நடக்கிறாள்.இரவில் பாத்ரூம் செல்லும்போது அவளது பிள்ளையின் அறிவுரைப்படி வாக்கர் உபயோக்கிறாள்.காது மந்தமாகி விட்டது.ஏதாவது படிக்க நினத்தாலும் நீண்ட நேரம் படிக்க முடிவதில்லை.ஆனாலும் காலையில் வழக்கம் போல் சீக்கிரம் குளித்து(நாற்காலியில் அமர்ந்துதான்), ஸ்லோகங்கள் சொல்கிறாள்.ராம ஜபம் செய்கிறாள்.அவளது பொழுது போக்கு கச்சேரி கேட்பது, ஓரிரண்டு தொலக்காட்சித்தொடர்கள் பார்ப்பது,பிடித்த திரைப்படம் ஒளிபரப்பப் பட்டால் பார்ப்பது-(அதுவும் பார்க்கும்போதே உறக்கம் வந்து விடுகிறது.)அடிக்கடி சோர்ந்து படுக்க வேண்டி நேர்கிறது.இப்போதெல்லாம் அவள் இறைவனிடம் வேண்டுவது ஒன்றுதான்ஆண்டவா,நானும் கஷ்டப் படாமல்,மத்தவாளையும் கஷ்டப் படுத்தாமல் என்னைக் கொண்டு போயிடு

இத்தகைய முதியவர்களின் உபாதைகளை நம்மால் புரிந்து கொள்ள முடியுமா? அவர்களின் ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் எத்தகைய சோதனை என்பதை உணர்கிறோமா?இந்த வயதில் அவர்களுக்குத் தேவை வெறும் மூன்று வேளை சோறில்லை. அன்பு;சுற்றத்தின் அன்பு;சூழலின் அன்பு.ஆதரவான பேச்சு. இதெல்லாம் எத்தனை வசதிகள் நிறைந்த முதியோர் இல்லமாக இருந்தாலும் அங்கு கிடைக்குமா?

இப்போதெல்லாம் ராஜி அடிக்கடி பழைய நினைவுகளில் ஆழ்ந்து விடுகிறாள்.

வாருங்கள்!நாமும் அவற்றில் பங்கு கொள்வோம்.

20 கருத்துகள்:

  1. முதுமையின் தளர்ச்சியையும், கஷ்டத்தையும் வார்த்தைகளால் உணர்த்தி விட்டீர்கள். இறைவனிடம் ராஜி அவர்கள் வேண்டுவதையே அவர்களுக்காய் நானும் இனி வேண்டிக் கொள்கிறேன். நினைவுகளில் தொடர்ந்து பங்கு கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. என்ன தான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் முதுமையில் துணையாய் இருப்பது என்னவோ வேதனையும் , தனிமையும் தான் என்பதை பதிவின் மூலம் உணர்கிறோம் ஐயா அவ்வாறு தவிக்க விடாமல் முதுமையும் தாலட்டுவோம்.

    பதிலளிநீக்கு
  3. ஆமா ஐயா இப்படிப்பட்ட முதியவர்கள் தினம் தினம் அன்புக்காக ஏங்குகிறார்கள் இவர்களின் இந்த ஏக்கத்தை புரியாத பிள்ளைகள் இந்தப் பாரினில் இருக்கத்தான் செய்கின்றனர்...:(

    பதிலளிநீக்கு
  4. ஆமா ஐயா இப்படிப்பட்ட முதியவர்கள் தினம் தினம் அன்புக்காக ஏங்குகிறார்கள் இவர்களின் இந்த ஏக்கத்தை புரியாத பிள்ளைகள் இந்தப் பாரினில் இருக்கத்தான் செய்கின்றனர்...:(

    பதிலளிநீக்கு
  5. முதியவர்களின் தேவை என்ன என்பதை "நறுக்" அழகாய் உணர்த்திணீர்கள்.!

    பதிலளிநீக்கு
  6. மேன்மைக்கு முதுமையே வழிகாட்டி.

    பதிலளிநீக்கு
  7. முதியவர்களின் பார்வையில் அவர்களது வேதனைகளை படம் பிடித்துக் காட்டிடும் பகிர்வு. தொடர்ந்து வருவேன்...

    பதிலளிநீக்கு
  8. நாமும் அவற்றில் பங்கு கொள்வோம்.

    பதிலளிநீக்கு
  9. இன்றைய (09.06.2012)வலைசரத்தில் தங்கள் பழைய பதிவொன்றை குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது
    நேரம் இருப்பின் வருகை தரவும்
    .http://blogintamil.blogspot.in/2012/06/6.html.

    பதிலளிநீக்கு
  10. துவக்கம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திப் போகிறது
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. //இந்த வயதில் அவர்களுக்குத் தேவை வெறும் மூன்று வேளை சோறில்லை. அன்பு;சுற்றத்தின் அன்பு;சூழலின் அன்பு.ஆதரவான பேச்சு. இதெல்லாம் எத்தனை வசதிகள் நிறைந்த முதியோர் இல்லமாக இருந்தாலும் அங்கு கிடைக்குமா?//

    உண்மைதான்.ஆனால் இந்த காலத்து பிள்ளைகளில் எத்தனை பேர் இதைப்பற்றி நினைக்கிறார்கள். தாங்களும் ஒரு நாள் அந்த வயதை அடைவோம் என்பதை மறந்துவிடுகிறார்கள்.

    திருமதி இராஜி அவர்கள் பற்றி மேலும் அறிய தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. //இந்த வயதில் அவர்களுக்குத் தேவை வெறும் மூன்று வேளை சோறில்லை. அன்பு;சுற்றத்தின் அன்பு;சூழலின் அன்பு.ஆதரவான பேச்சு. இதெல்லாம் எத்தனை வசதிகள் நிறைந்த முதியோர் இல்லமாக இருந்தாலும் அங்கு கிடைக்குமா?//

    உண்மைதான்.

    திருமதி ராஜி அவர்களின் மனவலிமைக்கு ஒரு ‘சல்யூட்’!

    பதிலளிநீக்கு