தொடரும் தோழர்கள்

திங்கள், ஏப்ரல் 23, 2012

வலைப்பூ தந்த வருமானம்!


சார்!நான் தினம் உங்க ரூம் ஜன்னலைக் கடந்துபோகும் போது பார்க்கிறேன்,  கணினி முன்னால உட்கார்ந்து ஏதோ தட்டிட்டே இருக்கிங்களே?என்ன செய்றீங்க?”  பக்கத்து ஃப்ளாட்காரரின் கேள்வி.

வலைப்பதிவில் எழுதிட்டிருப்பேன்என் பதில்.

எப்பவும் அதே வேலையா இருக்கீங்களே?நிறைய வருமானம் வருமோ? நிறைய சம்பாதிச்சிருப்பீங்களே?” அவர்.

எதிலுமே பணத்தைத்  தேடும்  சராசரி மனிதர்.

அவருக்குத் தெரியாது நான் என்ன சம்பாதித்திருக்கிறேன் என்று.

ஆம் .விலை மதிப்பில்லாத ஒன்றைச் சம்பாதித்திருக்கிறேன்.ஒன்று அல்ல;பல.

என்ன அது?

நட்பு.

எதையும் எதிர்பார்க்காத நட்பு.


இந்தியா மட்டுமன்றி உலகம் முழுதும் விரிந்து கிடக்கும் நட்பு.


வயது வேறுபாட்டைக் கடந்த நட்பு.


அகத்தியனின் பார்க்காமலே காதல் போல்,இது எழுத்து மூலமாக மட்டுமே பார்த்துப் பழகிய நட்பு.


முன்பெல்லாம் பேனா நண்பர்கள் என்று கடிதத்தொடர்பின் மூலம் நண்பர்களாவார்கள்.


இப்போது கடிதம் எழுதுவது என்பது ஒரு அரிய கலையாகி விட்டது.



நான் வலைப்பதிவு தொடங்கும்போது,இப்படி நண்பர்கள் பலர் கிடைப்பார்கள் என நினைக்கவேயில்லை.


இல்லத் திருமண நிகழ்ச்சிக்குத் தொலைபேசியில் அழைத்துப் பின் அழைப்பிதழும் அனுப்பிய இதுவரை சந்திக்காத நண்பர்.


என்னில் பாதி வயதுக்கும் குறைவாக இருப்பினும் என்னையும் ஒரு யூத் பதிவராக ஏற்றுக் கொண்டு,கடற்கரைச் சந்திப்புக்கும்,நாடகங்களுக்கும் அழைக்கும் ஒரு நண்பர்.


வெளியூரிலிருந்து சென்னை வந்த நாளில்,நண்பருடன் என்னை வந்து சந்திக்கும்  நண்பர்.


சந்தித்துச் சென்றபின்  என்னைப் பற்றி ஒரு பதிவே எழுதி என்னைப்  பெருமைப்படுத்திய நண்பர்.


பிரபல எழுத்தாள நண்பர்களைச் சந்திக்க வரும்போது என்னையும் சந்தித்து உரையாடிச் சென்ற ஒரு நண்பர்


தொலைபேசியில் அடிக்கடி தொடர்பு கொண்டு உற்சாகம் தரும் கவி நண்பர்.


வெளிநாட்டிலிருந்து ஒரு வேலையாகச்  சில நாட்களே வந்திருக்கும்போது, குறைந்த நேரமே கிடைத்தாலும் அதில் என்னை வந்து(நண்பருடன்) சந்தித்து கலகலப்பாக உரையாடிய நண்பர்.



இப்படி இன்னும் எத்தனையோ முகம் தெரியாத இனிய நட்புகள்.சந்தித்தவை சில;சந்திக்காதவை பல.


ஒருவரை ஒருவர் பார்க்காமலே நட்புக் கொள்ளலாம் என்பதற்கு சிறந்த உதாரணம்-கோப்பெருஞ்சோழன்,பிசிராந்தையார் நட்பு. அன்று, புரவலரும், புலவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளவில்லை, பேசிக் கொள்ள வில்லை என்றாலும்  இன்றும் பேசப்படும் ஒரு அரிய நட்புக்கு இலக்கணம் வகுத்துச் சென்று விட்டார்கள்.


இன்று இந்தப் பிசிராந்தைக்குப் பல கோப்பெருஞ்சோழர்கள் கிடைத்திருக் கிறார்கள்.


இந்த நட்பை நினைக்கும்போதே மனம் நெகிழ்ந்து போகிறேன்.


இத்தகைய நட்புகள் கிடைக்க வழி வகுத்த இப் பதிவுலகை வாழ்த்துகிறேன்.


வாழ்க நட்பு.


59 கருத்துகள்:

  1. அண்ணே கலங்கிட்டேன்...உங்க சேவைய பார்த்து!

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான்

    வாழ்த்துக்கள் சார் !!

    த.ம 2

    பதிலளிநீக்கு
  3. இன்று இந்தப் பிசிராந்தைக்குப் பல கோப்பெருஞ்சோழர்கள் கிடைத்திருக் கிறார்கள்.

    இந்த நட்பை நினைக்கும்போதே மனம் நெகிழ்ந்து போகிறேன்.

    இத்தகைய நட்புகள் கிடைக்க வழி வகுத்த இப் பதிவுலகை வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. உண்மைதான் ஐய்யா! இந்த நட்பு என்றும் தொடரட்டும்......

    பதிலளிநீக்கு
  5. //புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
    நட்பாங் கிழமை தரும்.//

    நட்பு துளிர்ப்பதற்கு. நேரடித் தொடர்பும்,பழக்கமும் தேவையில்லை.இருவருடைய எண்ண அலைகள் ஒன்றாக இருந்தாலே போதும் என்கிறார் தெய்வப்புலவர்.உங்களுயுடைய எண்ண அலைகள் எல்லோருடைய எண்ண அலைகளோடு ஒத்திருப்பதால் தான் நிறைய நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர்.இன்னும் பல நண்பர்களைப் பெற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. விலை மதிக்க முடியாத பொருள் நட்பு ...நம்மை இணைத்த கூகுள் ஓணருக்கு நன்றி சொல்வோம் !

    பதிலளிநீக்கு
  7. நட்புக்கும் உண்டோ அடைக்கும்தாழ்?
    இந்த உலகம் மிகவும் சிறியது.
    இதில் பொதுவாக அனைவரும் எதையோ எதிர்பார்த்துக்கொண்டே வாழ்ந்து வருகின்றனர்.
    வெகு சிலரே தன்னிடம் உள்ளதை மற்றவர்களுக்கு கொடுத்துக்கொண்டே வாழ்பவர்கள்!
    நீங்கள் இரண்டாவது ரகம்.

    பதிலளிநீக்கு
  8. உண்மைதான் பித்தரே! என் உள்ளத்தில் உள்ளதும் இதுவே! சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  9. முகமறியா நண்பர்கள்.., நாமும் இருக்கிறோம் என்ற அங்கீகாரம்.., இவையே பதிவர்களுக்கு கிட்டும் பொற்கிழி ..!

    பதிலளிநீக்கு
  10. //ஒருவரை ஒருவர் பார்க்காமலே நட்புக் கொள்ளலாம் என்பதற்கு சிறந்த உதாரணம்-கோப்பெருஞ்சோழன்,பிசிராந்தையார் நட்பு. அன்று, புரவலரும், புலவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளவில்லை, பேசிக் கொள்ள வில்லை என்றாலும் இன்றும் பேசப்படும் ஒரு அரிய நட்புக்கு இலக்கணம் வகுத்துச் சென்று விட்டார்கள்.//

    நீங்கள் பகிர்ந்துகொண்டுள்ள யாவும் நூற்றுக்கு நூறு உண்மை. இதை நான் என் பதிவுகளிலும் அடிக்கடி குறிப்பிட்டுள்ளேன்.

    இன்று ஏராளமான மின்னஞ்சல்கள், தொலைபேசி உரையாடல்கள், சுட்டிகள் என நட்பு வட்டம் பெருகி விட்டதை நினைக்க சந்தோஷமாகவே உள்ளது.

    அதுவும் ஒருசிலர் காட்டிடும் பாசம் மெய்சிலிரிக்க வைக்கிறது, ஐயா.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    oooooooooooooooooooooooooooooooooooooooo

    //”எப்பவும் அதே வேலையா இருக்கீங்களே?நிறைய வருமானம் வருமோ? நிறைய சம்பாதிச்சிருப்பீங்களே?” அவர்.

    எதிலுமே பணத்தைத் தேடும் சராசரி மனிதர்.//

    இதுபோல பலரையும் நானும் இங்கு நேரில் சந்தித்து வருகிறேன். ;(

    என்ன செய்வது?

    oooooooooooooooooooooooooooooooooooooooo

    பதிலளிநீக்கு
  11. "சென்னை காதலருக்கு" எனது இனிய வாழ்த்துக்கள்.
    நானும் தான் இருக்கிறேன் இல்லையா?? அந்த பெருமைதான்.

    பதிலளிநீக்கு
  12. நட்புகள் தொடரவேண்டும் என்றும்....வாழ்த்துகள்

    மேலும் நிறைய சம்பாதிக்க வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
  13. உண்மைதான் அன்பரே
    பக்கத்து மாநிலத்துக்குக் கூட செல்லாத ஒருவரால் பல்வேறு நாடுகளிலும் உள்ளவர்களோடு கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளமுடிகிறது..

    இந்த நட்புக்கு விலையேது..???

    பதிலளிநீக்கு
  14. மிகமிக உண்மை நண்பரே. நானும் நிறையவே சம்பாதித்திருக்கிறேன் என்பதில் பெருமிதம் எனக்கு.

    பதிலளிநீக்கு
  15. "வலைப்பூ தந்த வருமானம்" வலிமையானது என்று அறியத் தந்தற்கு நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  16. மிகச் சரியாக கூறினீர்கள் ஐயா .

    பதிலளிநீக்கு
  17. நட்பை பற்றிய விளக்கங்கள் மிக அருமை. உண்மை.

    பதிலளிநீக்கு
  18. மிகச்சரியாக சொன்னீர்கள் சார்
    யாருன்னே தெரியாது ஆனா நல்ல நண்பர்கள் பதிவர்கள்
    அந்த நட்பு வட்டாரதிட்குள் நானும் இருப்பதில் பெருமை எனக்கு

    பதிலளிநீக்கு
  19. உடுக்கை இழந்தவன் கை போல......

    இதற்கு மிக சிறந்த உதாரணம் ...நம்ம நெட் friends....

    முற்றிலும் உண்மை....அனுபவம்....

    பதிலளிநீக்கு
  20. உண்மை ஐயா!
    நட்பு என்றும் தொடரட்டும்...

    பதிலளிநீக்கு
  21. எதையும் எதிர்பார்க்காத நட்பு.

    வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  22. இத்தகைய நட்புகள் கிடைக்க வழி வகுத்த இப் பதிவுலகை வாழ்த்துகிறேன்
    >>
    நானும் வாழ்த்திக்குறேன். எனக்கும் உங்களோடு சேர்த்து பல நலம் விரும்பிகள் கிடைத்துள்ளார்கள்.

    பதிலளிநீக்கு
  23. @KOMATHI JOBS
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  24. அதையே நானும் விரும்புகிறேன் சுரேஸ்குமார்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  25. நெகிழ வைக்கிறீர்கள் அஜீஸ்!நன்றி.

    பதிலளிநீக்கு
  26. உண்மைதான்.நன்றி வரலாற்றுச் சுவடுகள்.நன்றி.

    பதிலளிநீக்கு
  27. மிக அருமையாகச் சொல்லிவிட்டீர்கள் வைகோ ஐயா.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  28. கக்கு!வாங்க.!எனக்கு உற்சாகம் கொடுத்து நான் மேலும் எழுதக் காரணமானவர்களில்(அது நல்லதா கெட்டதா,மற்றவர்க்கு!) நீங்களும் ஒருவர் அல்லவா?
    வருகைக்கு மகிழ்ச்சி;நன்றி.

    பதிலளிநீக்கு
  29. நியாயமான பெருமிதம்!
    நன்றி கணேஷ்.

    பதிலளிநீக்கு
  30. @manazeer masoon
    நாம் அனைவருமே பெருமைப்பட வேண்டியவர்கள்தான்
    நன்றி.

    பதிலளிநீக்கு
  31. உண்மைதான் பித்தரே...வலுக்கட்டும் இந்த பிணைப்பு...

    பதிலளிநீக்கு
  32. உண்மை தான்.... எத்தனை எத்தனை நபர்களுடைய நட்பு கிடைத்திருக்கிறது... இதை விட வேறு என்ன சம்பாதித்து விட முடியும்...

    நல்ல பகிர்வுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  33. உண்மை தான் முகம் தெரியாத நட்புகள் எனக்கும் கிடைத்திருக்கிறது

    பதிலளிநீக்கு
  34. //NAAI-NAKKS சொன்னது…
    உடுக்கை இழந்தவன் கை போல......//

    உங்க ஏரியால 'நல்ல காலம் பொறக்குது'ன்னு கோட் போட்டுட்டு சுத்துற ஆளு நீங்கதானா?

    பதிலளிநீக்கு
  35. @! சிவகுமார் !
    அடப் பாவமே! :-)
    நன்றி சிவா.

    பதிலளிநீக்கு
  36. @சி.பி.செந்தில்குமார்
    உண்மையில் உங்கள் சம்பாத்திய மிக,மிக, மிக...........அதிகம் சிபி!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  37. நீங்க சொல்வது உண்மை தான் சார். எத்தனை எத்தனை நட்புகள். உண்மையிலேயே இது நல்ல விஷயம் தான்.

    பதிலளிநீக்கு
  38. நெகிழ்ந்தேன்.
    உங்கள் தளத்தில் உறுப்பினர் ஆனேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு