பெண்:என் கணவர் என்னை எப்போதும்
நாட்டுப்புறப்பாணியில் சேலை கட்டிக் கொண்டு, அதே மாதிரிப் பேச வேண்டும்
என்கிறார்.எனவே எனக்கு விவாக ரத்து வேண்டும்!
ஆண்:எனக்குக் கருவாடு பிடிக்காது
என்று தெரிந்தும் என் மனைவி தினம் கருவாடே
சமைக்கிறாள்.எனவே.....................................................
ஆண்:என் மனைவி அடிக்கடி டி.வி
மொபைலை ஒளித்து வைத்து விடுகிறாள்;அல்லது,டி.வி.யில் ஏதாவது கோளாறுசெய்து வைத்து
விடுகிறாள்!எனவே................................................
பெண்:என் கணவர் என்னுடன் பத்து
ஆண்டுகளாகப் பேசுவதே இல்லை.எல்லாமே எழுத்து
மூலமாகத்தான்!எனவே...........................
(அது மாதிரியென்றால் என்
தாத்தா,பாட்டி-அம்மாவின் பெற்றோர்- எப்போதோ டிவோர்ஸ் செய்திருக்க வேண்டும்!அவர்கள் வாழ்நாள்
முழுதும் பேசிக் கொண்டதே கிடையாது;ஆனால் ஆறேழு குழந்தைகள் பெற்றார்கள்!)
ஆண்:என் மனைவி எல்லா ஆண்களையும்
தொட்டுத்தொட்டுப் பேசுகிறாள். தன்னால் அதைத் தவிர்க்க இயலவில்லை என்று சொல்கிறாள்.
எனவே................
பெண்:அவர் வளர்க்கும் தேரையை ஒரு
பெட்டியில் வைத்து எங்கள் படுக்கையிலேயே வைத்துக் கொண்டு படுக்க வேண்டும் எனச் சொல்கிறார். எனவே...................
பெண்:தொலைகாட்சி பார்க்கும்போது என்
கணவர் சேனல்களை மாற்றிக் கொண்டே இருக்கிறார்!எனவே...............
பெண்:’என் கணவரின் உடல் நாற்றம்
தாங்கவில்லை.எனவே........
பெண்/ஆண்: என் கணவன்/மனைவி தினம்
அது வேண்டுமென்று கட்டாயப் படுத்துகிறார்/ள்!எனவே.................
இவையெல்லாம் இங்கிலாந்து நீதி
மன்றங்களில் தொடரப்படும் மணவிலக்கு வழக்குகளில் சில காரணங்கள்!(கொஞ்சம்
மாற்றங்களுடன்)
இந்தியா பரவாயில்லை!இது இங்கு இன்னும் பரவவில்லை!!
நன்றி: இந்தியாவின் நேரங்கள்-11-04-12
விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை எங்கெல்லாம் இல்லையோ அங்கெல்லாம் மணவிலக்கு பிரச்சனை தொடரும் .
பதிலளிநீக்குஇந்தியா பரவாயில்லை!இது இங்கு இன்னும் பரவவில்லை!! என்று சந்தோஷப்படாதீர்கள். இங்கொன்றும் அங்கொன்றுமாய் இது போல் காரணங்களைக் காட்டி மணவிலக்கு கேட்போர் எண்ணிக்கைக் கூடி வருகிறது என்பது வருந்தக்கூடிய செய்தி.
பதிலளிநீக்குசெய்தி தொகுப்புக்கு நன்றி.
எப்போதும் பித்தர் அய்யா பதிவுலகே கதியென்று இருக்கார்..எனவே....-:)
பதிலளிநீக்குரெவெரி கமெண்ட்... ஹா... ஹா... அருமை. (சென்னைப் பித்தனின் பதிவு அருமையென்று சொல்லி அலுத்துவிட்டது. எனவேதான்...)
பதிலளிநீக்கும்ம்ம்.... இங்கேயும் வந்து விடும் காலம் வெகு தொலைவில் இல்லை!
பதிலளிநீக்குநியுசிலந்து நாட்டில் எப்போதும் மனைவியிடம், கணவர்கள் தான் அடி வாங்குவதாக கேள்விப்பட்டேன் உண்மையா?
பதிலளிநீக்குபலருக்கு நிறைய காரணங்களை எடுத்து கொடுத்துள்ளீர்கள். வாழ்க உங்கள் தொண்டு!
பதிலளிநீக்குஇப்படிக்கு
அனைத்திலும் பாசிடிவ் பார்ப்போர் சங்கம், எய்ட்ஸ் உட்பட!
தலைப்பு பார்த்து கொஞ்சம் நடுங்கித்தான் போனேன்...
பதிலளிநீக்குமேலை நாடுகளில் இருக்கும் இந்த எண்ணங்கள்
நம் நாடுகளுக்கும் வருவதற்கு நீண்ட நாட்கள் ஆகாது..
புரிந்துகொள்ளும் தன்மையையும்
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும்
வர்லத்து இவையெல்லாம் புறந்தள்ள வேண்டும்...
நம் நாட்டு பெண்கள் இந்த இலக்குகளை நோக்கி விரைவாய் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் எட்டிப் பிடித்து விடுவார்கள். அப்புறம் பாருங்கள் போட்டியை!
பதிலளிநீக்குநல்ல சொன்னீங்க!
பதிலளிநீக்குஆனால்-
நம்ம நாட்ல-
எழுபத்தைந்து சதவிகிதம்-
விவகாரத்து -
காதல் திருமணங்கள்-
என்கிறது-
ஒரு ஆய்வு!