ஐயா பாரதி!நீ இல்லையே இன்று?
இருந்தால்
என்ன பாடியிருப்பாய்?
“நெஞ்சு
பொறுக்குதில்லையே?”
”ஜகத்தினை
அழித்திடுவோம்?”
உன்
ரௌத்திரம் எப்படி வெளிப்பட்டிருக்கும்?
ஆடினோம்,பள்ளுப்பாடினோம்
ஆனந்த
சுதந்திரம் அடைந்து விட்டோம் என 1947 இல்.
65
ஆண்டுகளில் என்ன சாதித்திருக்கிறோம்?
மார்
தட்டும் சாதனைகள்தாம்-
அக்னி
ஏவுகணையும்,சந்திராயனும்!
ஆனால்
நம் மக்களில் ஒரு பிரிவினர்,இன்னும் கற்காலத்திலேயே வாழ்கின்றனரே,அதை ஏன் எந்த
அரசும் கண்டு கொள்ளவில்லை?
யாரும்
செல்ல முடியாத தொலைதூரத்தில் உள்ள அடர்ந்த கானகத்தில் வாழ்கிறார்களா?
இல்லையே!
ஒவ்வொரு
தேர்தலிலும்,அவர்களுக்கும் குவார்ட்டரும் ,பிரியாணியும் தந்து வாக்குக்களைச்
சேகரிக்கும் பணியை அரசியல் கட்சிகள் செய்து கொண்டுதானே இருக்கின்றன?
தொழில்
நுட்ப மையமான பெங்களூருவிலிருந்து 250 கி.மி.தொலைவில் உள்ள, சோமவார் பேட்டை
தாலுகாவில் உள்ள பனவாரா என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜேனு குருபா என்ற இனத்தைச்
சேர்ந்த மக்கள் இன்றும் மரங்களின் மேல்,50-60 அடி உயரத்தில் வீடு கட்டிக் குடும்பமாக
வசிக்கிறார்கள்! அவர்களுக்கு அதில் ஒரே ஆறுதல்!யானைகளின் தொந்தரவு இல்லையென்பதே!
அவர்கள்
குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை!
இந்தச்
செய்தியை இப்போதுதான் கேள்விப்பட்ட(!) அந்தப் பகுதி சட்டமன்ற உறுப்பினர் தாம்
விரைவில் இங்கு சென்று பார்த்து அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த(!) முயற்சி
செய்வதாகக் கூறினாராம்!
ஒரு
வேளை 50-60 அடி உயரத்தில் இல்லாமல் 100 அடி உயரத்தில் வசிக்க வகை செய்வாரோ!
நடக்கலாம்
நடக்கலாம். எதுவும் நடக்கலாம்.
ஏனெனில்
“மேரா பாரத் மகான்!”இந்தியா ஒளிர்கிறது!
(இன்றைய
டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த செய்தியே ஆதாரம்)
அரசியல்வாதி: அடடா.....அங்க 50 ஒட்டு இருக்குன்னு தெரியாம போச்சே..சரி.. வளர்ச்சி?! நிவாரணம் வேணும்ம்னு சொல்லி.....
பதிலளிநீக்கு////ஒரு வேளை 50-60 அடி உயரத்தில் இல்லாமல் 100 அடி உயரத்தில் வசிக்க வகை செய்வாரோ!/////
பதிலளிநீக்குநல்ல நக்கல் ...,
பீகார் பக்கம் இதைகாட்டிலும் மோசம் என்று பீகாரிய நண்பர்களுடன் கலந்துரையாடுகையில் அறிந்திருக்கிறேன்..
நாம் எல்லோரும் நினைத்து பெருமைப்படும் வகையில் இந்தியா ஒளிரவில்லை என்பதே உண்மை ... :(
தங்கள் பகுதியில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் என்னவென்று அறியாத நிலையில்தான் இன்று அரசியல்வாதிகள்! வேதனை! வாழ்க்கைத் தரத்தை ‘உயர்த்துவது’ பற்றிய உங்களி்ன் வேதனை + வெறுப்பில் விளைந்த கருத்து அருமை. எங்களுடையதும் அதுவே.
பதிலளிநீக்குஇந்த செய்தி மிகவும் ஆச்சர்யமாகவே உள்ளது.
பதிலளிநீக்கு//அவர்களுக்கு அதில் ஒரே ஆறுதல்!யானைகளின் தொந்தரவு இல்லையென்பதே!
அவர்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை!//
பாவம், அவர்கள் பாடு.
அனைவருக்கும் இதைத் தெரிவித்துள்ளது நல்லது, ஐயா!
சீக்கரமாக ஏதாவது விடிமோட்சம் கிடைக்கட்டும் அவர்களுக்கும்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள பனவாரா கிராம ஜேனு குருபா இன மக்கள் பரவாயில்லை இருக்க குடிசையாவது (உயரத்தில்) இருக்கிறதே. ஆனால் பல இலட்சம் மக்கள் சென்னை போன்ற பெரு நகரங்களில் தங்க இடமின்றி, நடைமேடையில்
பதிலளிநீக்குவசி(?)க்கிறார்கள். இவர்கள் அனைவரையும் பற்றி எந்த அரசாவது கவலைப்பட்டிருக்கிறதா? கடவுள் தான் இந்த நாட்டைக் காப்பாற்றவேண்டும்.
அவர்கள் தற்போதைக்கு கண்ணுக்கு தெரியாது...
பதிலளிநீக்குஅவர்கள் வாக்கு மட்டுக்கும் பயன்படுத்தப்படுவார்கள்..
என்ன அவலம்
அதிர்ச்சியான செய்தி
பதிலளிநீக்குபதிவர்களுக்கு தெரியப்படுத்தியமைக்கு நன்றி
அரசியல் வாதிகளும் பாவம் சார்
அவர்களும் வெவ்வேறு நாடுகளின் விதவிதமான பைல்களை புரட்டவே நேரம் சரியாக இருக்கிறது
50 அடியில் இருப்பவர்களை எங்கே அன்னார்ந்து பார்ப்பது
இதுவரை நமக்கு இந்தத் தகவல் தெரியாதது தவறில்லை
பதிலளிநீக்குஅந்த தொகுதி பிரமுகருக்கும் தெரியாமல் இருந்ததுதான் ஆச்சரியம்
அரிய தகவலுடன் கூடிய பதிவு அருமை
Tha.ma 9
பதிலளிநீக்குபடித்தபோது எனக்கும் இதே உணர்வுகள்.... :(
பதிலளிநீக்குஓட்டு வங்கியாக மட்டுமே மனிதர்களைப் பார்க்கும் அரசியல்வாதிகள். வட மாநிலங்களில் உள்ள கிராமங்களில் இன்னும் நிலமை மோசம்.....
உங்கள் ஆதங்கம்தான் என் ஆதங்கமும். இந்நிலை மாறவேண்டும்.
பதிலளிநீக்குமரத்தில் வசிப்பவர் அமெரிகாவிலும் இருக்கிறார்கள்..அதற்காக அதுதான் அமெரிக்கா என்பதா? :)
பதிலளிநீக்குஏன் இதையெல்லாம் மட்டும் 'அவர்களுக்கு ஆண்டவன் அருளியது இவ்வளவு தான்' என்று பார்க்க மறுக்கிறோம்? இதை அரசியல்வாதிகள் தலையில் கட்டுகிறோமே?
பாரதி ஒரு எளிமையான கவிஞர். "டமில்" சுமாராகத் தெரிந்தாலும் புரிந்து கொள்ளலாம். மற்றபடி பாரதி பாட்டில் உண்மை இல்லை--இது என் கருத்து; மேலும் கருத்துக்கள் மாறுபடலாம் என்பதும் என் கருத்து.
பதிலளிநீக்குஐயா பாரதி! நீ இல்லையே இன்று? என்ன செய்திருப்பார்? ஜகத்தினை அழித்திருப்பாரா?
தனி மனிதனுக்கு உணவில்லை என்றால், உலகத்தை அழித்தால் எல்லாம் சரியாகப் போய்விடுமா?
புலவர்கள், கவிஞர்கள் எப்பவும் "over hyped" ஆக எழுதுவார்கள்; அப்பத்தான் மக்களை வசப்படுத்த முடியும்.
பெங்களூரு மட்டும் அல்ல..தமிழகத்தில் பல இடங்களில் மலைவாழ்மக்கள் படிப்பறிவு இல்லாமல் இருக்கிறார்கள்....அரசு கண்டுகொள்வதில்லை
பதிலளிநீக்குஆங்கில தினத்தந்தியும் பல விஷயங்களை சொல்லுதுன்னே!
பதிலளிநீக்குநன்றி மனசாட்சி
பதிலளிநீக்குநன்றி வரலாற்றுச் சுவடுகள்
பதிலளிநீக்குநன்றி கணேஷ்
பதிலளிநீக்குநன்றி வைகோ சார்
பதிலளிநீக்குநன்றி சபாபதி அவர்களே
பதிலளிநீக்குநன்றி சௌந்தர்
பதிலளிநீக்கு@manazeer masoon
பதிலளிநீக்குநன்றி.
நன்றி ரமணி
பதிலளிநீக்குநன்றி வெங்கட்
பதிலளிநீக்குநன்றி துரைடேனியல்
பதிலளிநீக்கு@அப்பாதுரை
பதிலளிநீக்குநீங்கள் கட்டாயமாகக் கருத்துச் சொல்வீர்கள்;அதுவும் இந்த மாதிரித்தான் சொல்வீர்கள் என எதிர்பார்த்தேன்.நீங்கள் ஏமாற்றவில்லை!இந்தியாவில் இப்படித்தான்!
@நம்பள்கி
பதிலளிநீக்குபாரதி என்ன செய்திருப்பார் என்பதல்ல கேள்வி.அவனது கோபத்தின் வெளிப்பாடு எப்படி இருந்திருக்கும் என்பதுதான்.ஜகத்தினை அழித்தால் சரியாகப் போகும் என்பதல்ல:அப்படிப்பட்ட ஒரு உலகமே இல்லாமல் போக வேண்டும் என்பதுதான்.
நன்றி
நன்றி அப்பாதுரை
பதிலளிநீக்குநன்றி சுரேஸ்குமார்.
பதிலளிநீக்குவிக்கி!
பதிலளிநீக்குநலமா?நன்றி.
பயனுள்ள அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய பதிவு .
பதிலளிநீக்குவெட்கக் கேடு இதுதான் நாடு! சா இராமாநுசம்
பதிலளிநீக்குஇந்தியாவில் ஒரு 10 கோடி மக்களைத் தவிர மீதி எல்லோரும் இதே மாதிர் தான் புலம்புகிறார். பாரதி பாட்டில் புலம்பினார். மற்றபடி ஒன்னும் செய்யவில்லை.
பதிலளிநீக்குபேசறவன் செய்ய மாட்டான்--உதாரணம், பாரதி. செய்யறவன் பேசமாட்டான்--உதாரணம், சிதம்பரம், போஸ், பகத்சிங்க், குமரன்...