தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஏப்ரல் 03, 2012

இது அரசியல் பதிவு அல்ல!

இது உண்மையா,பொய்யா தெரியாது.

என் நண்பர் ஒருவர் சொன்னது.

நாடாளுமன்றத்தில் பேசும் போது காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் ஒரு கதை சொன்னாராம்.

“ஒரு மனிதன் இருந்தான்.

அவன் தன் மூன்று மகன்களிடம்  ஒவ்வொருவருக்கும் ரூ.100 கொடுத்து ஒரு அறை முழுதும் நிறைக்குமாறு பொருள் வாங்கச் சொன்னானாம்.

ஒரு மகன் வைக்கோல் வாங்கி அறையில் வைத்தான்.;அறை நிறையவில்லை.

அடுத்தவன் பஞ்சு வாங்கி வைத்தான் ;அறை நிறையவில்லை

மூன்றாமவன் ஒரு ரூபாய்க்கு மெழுகுவர்த்தி வாங்கி அறையில் ஏற்றி வைத்தான்.

அறை முழுவதும் ஒளி நிறைந்தது”

அந்த உறுப்பினர் பின் சொன்னாராம்”அந்த மூன்றாமவன் போலத்தான் நம் பிரதமர்.அவர் பொறுப்பேற்றதும்  நாட்டில்  இருந்த இருள் நீங்கி ஒளி பரவி விட்டது”

பின் வரிசையிலிருந்து ஒரு குரல் எழுந்தது” மீதம் 99 ரூபாய் என்ன ஆச்சு?!”

50 கருத்துகள்:

  1. நகைச்சுவை ததும்ப நாட்டு நடப்பு, அருமை.

    பதிலளிநீக்கு
  2. //மீதம் 99 ரூபாய் என்ன ஆச்சு?!”//

    பிரதமரின் வாயை திறக்க விடாமல் செய்ய கொழுக்கட்டை வாங்கிய செலவுதான் அது!!

    பதிலளிநீக்கு
  3. ஹா ஹா....ஆனாலும் பிரதமர் பாவம்தான்....அதற்கு நம்ம கருணாநிதி,ஜெயலலிதா போன்றோர் இதற்கு ரொம்ப பொருத்தமானவர்கள்...

    பதிலளிநீக்கு
  4. ஹி.. ஹி.. ஹி..

    //இது அரசியல் பதிவு அல்ல!//

    நாங்க நம்பிட்டோம்!.

    பதிலளிநீக்கு
  5. ஏன்னே அரசியல பிழிஞ்சிட்டு..தலைப்பு இப்படி வச்சிட்டீங்களே!

    பதிலளிநீக்கு
  6. சிவக்குமார் சொன்னது சரி
    அது கொழக்கட்டை வாங்கியதில் செலவாகி இருக்கும்

    பதிலளிநீக்கு
  7. பின்னாடி இருந்த குரல்....சபாஷ்...உண்மையோ பொய்யோ நாட்டு நடப்பு அதுதானுங்களே

    பதிலளிநீக்கு
  8. இது அரசியல் பதிவு அல்ல என்று தலைப்பைப் பார்த்தபோதே தெரிந்துகொண்டேன் இது அதுதான் என்று!

    பதிலளிநீக்கு
  9. சார் இப்போ மெழுகு வர்த்தி விலை ஏறி போச்சு. ஒண்ணு ஐந்து அல்லது பத்து ரூபாய் !!

    பதிலளிநீக்கு
  10. 1---லே மேட்டர முடிசுட்டார

    பதிலளிநீக்கு
  11. மகாபாரத கதையை அப்படியே இன்றைய மகாபாவபாரத கதையாக்கி கலக்கியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  12. ஹா ஹா கலக்கல் அன்பரே 99 ரூபாய் ஏப்பமா

    பதிலளிநீக்கு
  13. 99 ரூபாய்ல யார் யாருக்கு பங்கு போச்சுன்னு யார்கிட்டயாவது கேட்டு சொல்லுங்க ஐயா

    பதிலளிநீக்கு
  14. நல்ல நகைச்சுவை....

    மோகன் சொல்ற மாதிரி மெழுகுவர்த்தி விலை ஏறிப்போச்சு!

    பதிலளிநீக்கு
  15. நல்ல காமெடி கலந்த நாட்டு நடப்பு

    பதிலளிநீக்கு
  16. உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக ஐயா,

    ஹா ஹா ஹா...செம...

    உண்மையிலேயே இது அரசியல் பதிவு அல்ல...

    :)

    பதிலளிநீக்கு
  17. இந்தக் கதையில் இப்படியும் கேள்வி கேட்கலாம்
    என்று இப்போதுதான் தெரிகிறது...

    பதிலளிநீக்கு
  18. எத்தனை கொழுக்கட்டை?!
    நன்றி சிவா!

    பதிலளிநீக்கு
  19. எம் வலைப்பூவிற்கு வந்தமைக்கும், வாக்களித்தமைக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  20. புத்திமான் பலவானாவான்!

    நடப்புக்கும் நாட்டுக்கும் ஏற்ற
    கதை!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  21. //இது அரசியல் பதிவு அல்ல!//

    நம்பிட்டோம்...

    பதிலளிநீக்கு