தொடரும் தோழர்கள்

திங்கள், ஏப்ரல் 09, 2012

பகலில் ஒரு பயங்கரம்


தெரு நீ...........ண்டு கிடக்கிறது.

ஒழுங்கான நேர்கோடு போன்ற தெரு.

ஒரு கோடியிலிருந்து மறு கோடி வரை அரை கிலோ மீட்டர்  இருக்கும் போல் தோன்றுகிறது.

ஒரு கோடியில் நான் தனியாக நின்று கொண்டிருக்கிறேன்

பகல் நேரம் ;வெயில் காய்ந்து கொண்டிருக்கிறது.

தெருவில் யாருமே இல்லை.

மனிதர்கள் மட்டுமல்ல;எந்த உயிரினமும் காணப்படவில்லை.

நான் மெல்ல நடக்க ஆரம்பிக்கிறேன்.இரு புறமும் இருக்கும் வீடுகளைப் பார்த்தபடி நடக்கிறேன்.

எல்லா வீட்டுக் கதவுகளும் அடைத்திருக்கின்றன.

வாசல் கதவுகள் மட்டுமல்ல;சன்னல்களும் மூடித்தான் கிடக்கின்றன.

யாருமே குடியிருப்பது போல் தெரியவில்லை.

அந்தப் பகல் நேரத்தில் அப்படி ஒரு மயான அமைதி.

சிறிது பயம் வருகிறது.

இப்போது மறு கோடி தெரிகிறது.

அங்கே…….

ஒரு பெண் தலையை விரித்துப் போட்டு ஆடிக் கொண்டிருக்கிறாள்.

பயம் அதிகமாகிறது.

மேலே போகலாமா என்ற யோசனை எழுகிறது.

அதற்காக இங்கேயே நின்று விட முடியாது.

தொடர்ந்து நடக்கிறேன்.

அவள் ஆடிக்கொண்டே இருக்கிறாள்.

இடைவெளி குறைகிறது

இப்போது பத்து அடி தூரத்தில் அவள்.

முகம் நன்றாகத் தெரிகிறது

இரண்டு கோரைப் பற்கள் நீட்டிகொண்டிருக்கின்றன.

”வாடா வா!பொம்பளைப் பொறுக்கி!” என்னைப் பார்த்துக் கத்துகிறாள்.

அவள் மார்பகம் இரண்டும் நீண்டு,கைகளாக மாறி என் கழுத்தைப் பிடிக்க வருகின்றன.

அவள் முகத்தைப் பார்க்கிறேன்.

சரசு மாதிரி இருக்கிறது!
.....
“சார் வேண்டாம் சார்!விட்டுடுங்க!”

“இதோ பார்!இதிலெ ஒரு தப்பும் இல்லை.எவ்வளவு அழகான உடம்பு உனக்கு.என் பொண்டாட்டியும் இருக்காளே,கொத்தவரைக்காய் மாதிரி.”

பேசிக்கொண்டே என் கைகள் அவள் மார்பகங்களின் மீது படர்கின்றன

”நாளைக்கு ஃபீஸ் கட்டக் கடைசி நாள் இல்லையா.போகும்போது வாங்கிட்டுப் போ”

அவளை அணைத்து இறுக்குகிறேன்.

இப்படி எத்தனை நாள்?

.....

“சரசு”

அவள் ஒரு வெறிச்சிரிப்புச் சிரிக்கிறாள்.கண்கள் சிவந்து கிடக்கின்றன.

பார்த்துக் கொண்டிருக்கும்போதே முகம் மாறுகிறது.

மாதுரி!
...........

(தொடரும்)


13 கருத்துகள்:

  1. தொடரட்டும். பதிவு கொஞ்சம் சிறிசா இருக்கே??? ஆனாலும் த்ரில்லிங்கா வரி வரியா சொல்லியிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  2. என்ன ?
    கொடுமை சார்!

    எழுத்தாள தர தரன்னு -
    இழுத்து வந்து இப்படி விட்டுடீங்களே!

    பதிலளிநீக்கு
  3. இதென்ன... திடீரென்று ஒரு பயங்கரத் தொடர். பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் செய்த சேட்டைகளுக்கான பழிவாங்கல் போலத் தெரிகிறதே..! தொடரட்டும் பரபரப்பு... தொடர்கிறோம் நாங்கள்!

    பதிலளிநீக்கு
  4. கதையின் ஆரம்பமே பயங்கரமாய் இருக்கிறதே? ஆரம்பமே இப்படியென்றால் அடுத்தது எப்படியோ???

    பதிலளிநீக்கு
  5. பயங்கரமான ஆரம்பமா இருக்கே! .... பார்க்கலாம் இன்னும் எப்படி போகுதுன்னு :)

    பதிலளிநீக்கு
  6. பயங்கரத் தொடர் த்ரில்லிங்...தொடரட்டும்...

    பதிலளிநீக்கு
  7. கதையா ! ? நிஜமா புரியவில்லை

    பதிலளிநீக்கு
  8. அப்பாடா எவ்வளவு வேகம் அருமை ஐயா

    பதிலளிநீக்கு
  9. திக் திக்... தொடர்...
    தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  10. என்ன சார் ஒரு மார்க்கமா இருக்கு

    பதிலளிநீக்கு
  11. கொஞ்சம் பயமாத்தான் இருக்கு . ம்ம் .

    பதிலளிநீக்கு