தொடரும் தோழர்கள்

வியாழன், ஏப்ரல் 12, 2012

ஐந்தெழுத்து மந்திரம்!ஐந்தவிக்கும் மந்திரம்!

இன்று கொஞ்சம்  ஆன்மீகம் பேசுவோமா?!


"அஞ்சு உள ஆனை அடவியுள் வாழ்வன;
அஞ்சுக்கும் அஞ்செழுத்து அங்குசம் ஆவன;
அஞ்சையும் கூடத்துஅடக்கவல்லார்கட்கே
அஞ்சு ஆதி ஆதி அகம்புகலாமே."--(திருமூலர்)


உடல் என்ற காட்டுள் ஐம்பொறிகளாகிய ஐந்து யானைகள்வாழ்கின்றன.எவர்க்கும் கட்டுப் படாமல் அவை அலைந்து திரிகின்றன.அவற்றை அடக்குவதற்கு ஐந்து அங்குசங்கள் இருக்கின்றன.அவை 'நமசிவாய' என்ற ஐந்து எழுத்துக்களாகும்.அந்த ஐந்து யானைகளையும் ஐந்தெழுத்து மந்திரத்தைக் கொண்டு அடக்க வல்லவரே அந்தப் பரமாத்மாவை அடைய முடியும்.


இங்கு ஐம்பொறிகளும் ஐந்து காட்டு யானைகளாக உருவகப் படுத்தப் பட்டுள்ளன. அவை இந்த உடல் என்னும் காட்டில் வசிக்கின்றன.விருப்பம் போல் அலைந்து திரிகின்றன.காடென்பது புதர்கள் மண்டி,இருள் சுழ்ந்து காணப்படும் .அது போல இந்த உடல் அழுக்காறு,அவா,வெகுளி போன்ற புதர்கள் மண்டி,அறியாமையாகிய இருள் சூழ்ந்திருக்கிறது .நமசிவாய என்ற ஐந்தெழுத்தை ஓதுவதன் மூலம் ஐம்பொறிகளை அடக்குவதோடல்லாமல் இந்த உடலில்(மனதில்) மண்டியுள்ள புதர்களை,இருளை நீக்கி இறையருளைப் பெறவும் முடியும்.


இங்கு 'அஞ்சாதி ஆதி' என்றது ஐம்பூதங்களுக்கும் முதல்வனான சிவனை.
திருவாசகத்தின் ஆரம்பமே"நமச்சிவாய வாஅழ்க" என்பதுதான்.யஜுர் வேதத்தின் மையமாக விளங்குவது ஸ்ரீ ருத்திரம்.இந்த ஸ்ரீ ருத்திரத்தின் நடுவிலே அமைந்தது நமச்சிவாய மந்திரம்.ஸ்ரீருத்திரத்தைக் கற்று ஓதுவது என்பது எல்லோர்க்கும் சாத்தியமன்று.ஆனால் 'நமச்சிவாய"என்று சொல்வது எளிது.இதற்கு குருமுகமாக உபதேசம் எதுவும் தேவையில்லை.எனவேதான் திருமூலரும் இந்த எளிய மந்திரமே புலன்களை அடக்கி இறையருள் பெறும் வழியாகும் என்று சொல்கிறார்.


(நன்றி:மதுரைசொக்கன். )

23 கருத்துகள்:

  1. செ.பி. அவர்கள் தொலைபேசியை எடுத்தால் ’நமச்சிவாயம்’ என்பதன் காரணம் இப்போதல்லவா புரிகிறது. இனி நானும் ’நமச்சிவாயம்’தான். ஐந்து யானைகளை நானும் அடக்க வேண்டாமோ..?

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு பகிர்வு சார்.

    ஓம் நமச்சிவாய....

    பதிலளிநீக்கு
  3. திருமூலரின் திருமந்திரத்தை எளிமையாய் புரியும்படி சொன்ன அந்த ‘மதுரை சொக்கனுக்கும்’ தங்களுக்கும் நன்றிகள்.

    கொஞ்சம் ஆன்மீகம் பேசுவோமா?!என்று கேட்டு இருக்கிறீர்கள். கொஞ்சம் என்ன நிறையவே பேசலாம். கேட்க நாங்கள் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  4. ஐந்தும் அடங்கும் வரை நாம் அடங்க மாட்டோம் - பிடிவாதம் . நல்ல பதிவு ஐயா.

    பதிலளிநீக்கு
  5. திடீரென்று ஆன்மீகம்...மனக்கஷ்டமோ பித்தர் அய்யாவுக்கு...?

    பதிலளிநீக்கு
  6. அஞ்சு ஆதி ஆதி அகம் புகலாமே.

    அக நிறைவான அருமையான பகிர்வு..

    இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  7. இல்லாக விளக்கது இருள் கெடுப்பது
    சொல்லாக விளக்கது சோதியுள்ளது
    பல்லக விளக்கது பலருங் காண்பது
    நல்லக விளக்கது நமசிவாயவே...

    பதிலளிநீக்கு
  8. எப்போதுமே என் மந்திரம் நமசிவாயவே!நன்றி ரெவெரி

    பதிலளிநீக்கு
  9. ஓம் நமசிவாய! இனிய நந்தன வாழ்த்துகள்.நன்றி இராஜராஜேஸ்வரி

    பதிலளிநீக்கு
  10. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல்,என்ற குறளுக்கும் இது பொருந்தும் பித்தரே!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  11. ஓம் நமசிவாய.இனிய நந்தன ஆண்டு வாழ்த்துகள்.நன்றி வைகோ சார்.

    பதிலளிநீக்கு
  12. அருமையான மேற்கோள்.ஓம் நமசிவாய.நன்றி கூடல் பாலா

    பதிலளிநீக்கு
  13. குறள் மேற்கோளுக்கு நன்றி புலவர் ஐயா.ஓம் நமசிவாய.நன்றி.

    பதிலளிநீக்கு
  14. இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் அய்யா!

    பதிலளிநீக்கு