தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஏப்ரல் 13, 2012

கர ஆண்டும் நந்தன ஆண்டும்.!


கர ஆண்டை வரவேற்று மார்ச் 2011 இல் ஒரு கவிதை எழுதியிருந்தேன்”கர ஆண்டுக்கு ஒரு கவிதை என்ற தலைப்பில்.இன்று நந்தன ஆண்டு பிறந்தபின் அந்தக் கவிதையைமீண்டும் படித்துப் பார்க்கும்போது, ’கர ’ஒரு விளயாட்டுக் காட்த்தான் போகிறது என்று அன்றே சொன்னது வியப்பாக இருக்கிறது. இதோ அக்கவிதை

வருக,வருக,கர ஆண்டே;தருக நன்மைகள் பல

இதுவல்ல புத்தாண்டு இனிமேலென்றுரைத்தார்

கரும்பான தைப் பொங்கல் புதிய புத்தாண்டென்றார்

சிரித்தது ஏப்ரல் 14 எதிர்காலம் தெரியக் கண்டு

வருகின்ற கர ஆண்டு பிறப்பதற்கு முதல் நாளில்

மாற்றியவர் தலையெழுத்தே மாறலாம் என்பதனால்.

அருமையான பெயர் ஆண்டுக்குக் கரஎன்று

அதனால்தான் இப்போது கரத்தால்பிரச்சினையோ?

எருமை வாகனமேறும் இவ்வாண்டு தேவதையால்

எவர்க்கெல்லாம் என்னென்ன பிரச்சனையோ யாரறிவார்?

இருக்கிறது எத்தனை எத்தனையோ மனக்கவலை

எனக்கேன் வேண்டாத அரசியல் விசாரமெல்லாம்

.................................................................

நந்தன ஆண்டை வரவேற்போம்
நல்லதே நடக்க வேண்டி நிற்போம்!

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!


Top of Form


Bottom of Form

18 கருத்துகள்:

  1. நல்ல அழகான வரிகள்

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்


    இன்றைய பதிவு50 தேடுஇயந்திரங்களில் உங்கள் பதிவுகளை இனைக்கலாம்

    பதிலளிநீக்கு
  2. இதுவல்ல புத்தாண்டு இனிமேலென்றுரைத்தார்

    //கரும்பான தைப் பொங்கல் புதிய புத்தாண்டென்றார்
    சிரித்தது ஏப்ரல் 14 எதிர்காலம் தெரியக் கண்டு
    வருகின்ற கர ஆண்டு பிறப்பதற்கு முதல் நாளில்
    மாற்றியவர் தலையெழுத்தே மாறலாம் என்பதனால்//
    தேவையற்ற மாற்றம் என்பதை அன்றே உணர்த்தி யுள்ளீர்கள். நல்ல பதிவு
    .

    பதிலளிநீக்கு
  3. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்!
    எனது உளங் கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. கவிஞர் வாக்கு என்றால் சும்மாவா
    மனம் கவர்ந்த கவிதை
    தங்களுக்கும் தங்க்ள் குடும்பத்தாருக்கும் இனிய
    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. //நந்தன ஆண்டை வரவேற்போம்
    நல்லதே நடக்க வேண்டி நிற்போம்!

    அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!//

    பதிலளிநீக்கு
  7. // எனக்கேன் வேண்டாத அரசியல் விசாரமெல்லாம்?//
    சரியான முடிவு.

    உங்களுக்கு புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  9. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    எனது இனிய தமிழ் புதுவருட நல் வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  10. கர ஆண்டு சரி! இனி வர ஆண்டு எப்படி இருக்கும் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  11. தீர்க்கதரிசி போல சொல்லியிருக்கீங்களே!

    பதிலளிநீக்கு
  12. உங்களுக்கும் அம்மாவுக்கும் என் இதயம் கனிந்த நந்தன தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்து்க்கள்!

    பதிலளிநீக்கு
  13. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
    அத்துடன் தங்கள் வலையை ஆனந்த விகடனில் கண்டேன் வாழ்த்துகள் சகோதரா.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  14. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஐயா.....

    பதிலளிநீக்கு
  15. இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு