இன்று காலை மணி 8.30 இருக்கலாம்!
கைபேசி, குறுஞ்செய்தி வந்திருப்பதாக அறிவித்தது.
எடுத்துப் பார்த்தேன்.
’மெட்ராஸ் பவன்’ சிவகுமாரிடமிருந்து குறுஞ்செய்தி.
“பிலாசபி பிரபாகரனுக்கு நாமெல்லாம் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிப்போம்”--இதுதான் செய்தி.
உடனே பிரபாகரனைத் தொடர்பு கொண்டேன்.
தூக்கக் கலக்கத்துடன் தொலைபேசியை எடுத்தார்.
வாழ்த்துச் சொன்னேன்.
திகைத்தார்.
பின் இன்று பிறந்தநாள் எனக் கேள்விப்பட்டேன் என்று சொன்னதும் ஒப்புக் கொண்டார்.
பின் 9 மணி அளவில் சிவகுமார் கைபேசியில் அழைத்தார்
“சார்,பிரபாகரனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னீர்களா?”
“ஆம்”
“இன்று தேதி ஏப்ரல் 1. பதினைந்து பேருக்குக் குறுஞ்செய்தி அனுப்பினேன்.வாழ்த்துச் சொன்ன முதல் ஆள் நீங்கள்தான்!”
எவ்வளவு எளிதாக ஏமாந்து விட்டேன்?!
நீதி: நல்ல உள்ளம் கொண்டவர்கள் எப்போதும் எளிதாக ஏமாற்றப் படுகிறார்கள்/ ஏமாறுகிறார்கள்.
பெருகட்டும் அப்படிப்பட்டவர் எண்ணிக்கை!
ஹிஹி எனக்கும் அதே மெசேஜ் அனுப்பினார் சிவா. போன் செய்து என்ன ஓய் ஏப்ரல் பூல் ஆக்க பாக்குறீரா என சிவாவை கேட்டேன். கொஞ்ச நேரம் நடிச்சிட்டு அப்புறம் உண்மையை கக்கிட்டார். நீங்க தான் பாவம். ஏமாந்துட்டீங்க
பதிலளிநீக்குஉங்களுக்கும் Philosophy-க்கும் ஏதோ முன் ஜென்ம தொடர்பு போல.. கொஞ்ச நாளா விடாது தொடருது !!
சிவா-வுக்கு என்னவொரு வில்லத்தனம்..
பதிலளிநீக்குமெட்ராஸ் பவன்’ சிவகுமார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.. ( நாங்களும் சொல்வோமில்ல..)
பதிலளிநீக்குநீதியை நிலைநாட்டிவிட்டீர்கள்..
பதிலளிநீக்குசார்... உண்மையில் முட்டாளானது நானும்தான்... நீங்கள் வாழ்த்து சொன்னதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை... முட்டாள்கள் தினம் என்பதால் என்னை கலாய்க்கிறீர்கள் என்று நினைத்துக்கொண்டு சிரித்தேன்...
பதிலளிநீக்குசில நேரம் கழித்து சிவாவிடம் பேசியபோது தான் விஷயம் புரிந்தது...
//நீதி: நல்ல உள்ளம் கொண்டவர்கள் எப்போதும் எளிதாக ஏமாற்றப் படுகிறார்கள்/ ஏமாறுகிறார்கள். //
பதிலளிநீக்குஉள்ளத்தில் நல்ல உள்ளம் [உங்களுக்கு] உறங்காதென்பது வல்லவன் வகுத்தது.
வாழ்த்துகள்.
உள்ளத்தில் நல்ல உள்ளம் ...
பதிலளிநீக்குஹா. ஹா. வருத்தப்படாதீர்கள்.
பதிலளிநீக்குஉங்க நல்ல உள்ளம் அப்படியேதான் இருக்குன்னு கண்டு பிடிச்ச ஆசிட் டெஸ்ட் நடந்திருக்கு!
இப்போதைக்கு வலையில் சிக்கியது நீங்கள் மட்டும்தான் சார். :)))
பதிலளிநீக்குஉள்ளத்தில் நல்ல உள்ளம் காலை உறக்கத்தில் இருந்து எழுந்ததற்கு நன்றி :)
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
பதிலளிநீக்குhttp://www.dunkindonutscoupons.com
//நல்ல உள்ளம் கொண்டவர்கள் எப்போதும் எளிதாக ஏமாற்றப் படுகிறார்கள்/ ஏமாறுகிறார்கள்.//
பதிலளிநீக்குஇதுல இப்புடி வேற இருக்கா? ஹி.. ஹி.. ஹி, நானும் முன்னாடி நிறைய பேரால ஏமாற்றப்பட்டிருக்கேன், அதுனால, இப்போ கொஞ்சம் உசார்..
பல்பு நல்லா எரியுதா?
பதிலளிநீக்குஏமாற்றம் கொள்வதிலும் ஓர் இன்பம்
பதிலளிநீக்குஇருக்கு பித்தரே!
இன்று என்பேரனே, என்னை ஏமாற்றி விட்டான்!
புலவர் சா இராமாநுசம்
நீதி ;
பதிலளிநீக்குசொன்னீங்க பாருங்க!
அங்கதான் நீங்க நிக்கிறீங்க!
வயது குடுத்தால்-
பெரியவங்களா?
இல்ல !
அறிவின் முதிர்ச்சி கூடியவர்களே-
பெரியவங்க!
நீங்க-
அறிவாளி அனுபவசாலி!
எனக்கு மிக
பிடித்தி இருந்தது!
வாழ்த்துச் சொல்ல முன் வந்ததே முதல் நல்ல விடயம் ஐயா!
பதிலளிநீக்குநானும் வாழ்த்துச் சொன்னேன் பிரபாவுக்கு- என் விகடனி்ல அவர் தளம் வந்ததற்கு மட்டும். சிவா என்னை ஃபூல் ஆக்க முடியாது. ஏன்னா நான் ஆல்ரெடி... ஹி... ஹி...
பதிலளிநீக்குஎனக்கும் அனுப்பினார் நான் நம்பவில்லை....நீங்க இப்படி ஏமாந்துட்டிங்களே..!
பதிலளிநீக்குஏப்ரல் 1 அன்று தான் நீங்கள் ஏமாந்தீர்கள்.ஆனால் பொதுமக்கள் எல்லோரும் ஒவ்வொரு நாளும் ஏப்ரல் 1 தான்!
பதிலளிநீக்குஏமாற்றங்கள் வேடிக்கையாக இருக்கும் வரை
பதிலளிநீக்குசுவையானதே ஐயா...
அந்த மெசேஜை எனக்கும் அனுப்பியிருந்தார் சிவா...ஆனால், நாங்கள் விவ்ரமுங்கோ...
பதிலளிநீக்குநம்மை ஏமாற்றுவதில் அவர்களுக்கு சந்தோசம் என்றால் அதுவும் நல்ல விசயமே .
பதிலளிநீக்குவிடுங்கன்னே ஒரு போஸ்டுக்காவது ஆச்சே!
பதிலளிநீக்குஹா...ஹா...ஹா....
பதிலளிநீக்குவருத்தப்படாதீர்கள் சார்.....