தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஏப்ரல் 10, 2012

பகலில் ஒரு பயங்கரம் தொடர்கிறது!


என்ன ராமன்?என்ன லன்ச் இன்னைக்கு?”

சாப்பிட்டுக் கொண்டிருந்த ராமன் எழுந்திருக்கிறார்.

தேங்காய் சாதம்தான் சார்

அப்படியா,எனக்குத் தேங்காய் சாதம் மிகவும் பிடிக்கும்.”

என் தூண்டில்!

அவர் லன்ச் பெட்டியை நீட்டுகிறார்.
ஒரு கையில் கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுக்கொள்கிறேன்.

வாவ்!பிரமாதம்.!இதுவரை நான் சாப்பிட்ட தேங்காய் சாதத்தில் இதுதான் பெஸ்ட்.உங்க மனைவி பிரமாதமா சமைப்பாங்க போலிருக்கே!நீங்கள் அதிர்ஷ்டசாலி.என்னை ஒரு நாள் லன்சுக்குக் கூப்பிட மாட்டீர்களா?”

என்ன சார் அப்படிக் கேட்டுட்டீங்க?இந்த ஞாயிறு மதிய உணவு உங்களுக்கு  என் வீட்டில்தான்”.

மீன் தூண்டிலில்  மாட்டிக் கொண்டது!

ஞாயிறு!ராமனின் மனைவி மாதுரியைப் பார்த்துப்  பிரமித்துப் போகிறேன். அவள் அழகென்று கேள்விப்பட்டிருந்தேன்;ஆனால் இவ்வளவு அழகா?

சாயம் பூசாமலே சிவந்த அந்தப் பவள இதழ்கள்!

இவளை அடைய நான் எதையும் இழக்கத்தயார்!

பின் லன்ச்,மாலை டீ,இப்படி, ராமன் இருக்கும்போதும் ,இல்லாதபோதும் என் போய்ப் பார்த்தல் தொடர்கிறது

அந்தத் தங்க மீனும் தூண்டிலில் மாட்டி விட்டது!

ராமன் வெளியூர் சென்றிருந்த ஒரு நல்ல (!) நாளில் !.......

அது பின்னும் தொடர்ந்தது பிரச்சினையாகி விடுகிறதுஒரு கட்டத்தில் அவள் தற்கொலை வரை சென்று விடுகிறது.
..................
அவள் பயங்கரமாகச் சிரிக்கிறாள்.

”வாடா!வந்து என்னை அணைத்துக் கொள்.இதோ உனக்குப் பிடித்த என் அதரங்கள்”

ரத்தமாய்ச் சிவந்திருக்கும் உதடுகள் விரிகின்றன.

என்னை விழுங்கி விடுவாளோ?

பயம் அதிகமாகிறது.

பின் அந்த முகமும் மாறி வேறு சில முகங்கள்!

எனக்குப் பணியாததால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட ரீமா!
............
..............
நான் பயத்தின் விளிம்பில்!

இதோ சாகப்போகிறேன்!

இப்போது  ஒரு முகம்!

பயங்கரம் இல்லை!

சாந்தமான முகம் !

பயம் போக்கும் முகம்!

சாவித்திரி!

என் மனைவி.
..............
”என்னடி அலங்காரம் பண்ணிட்டு வாசலில் நிக்கிறே..?எவனாவது பார்க்கட்டும் என்றா?உன் மொகரைக்கு ஒரு பய பார்க்க மாட்டான்.போடி உள்ள.”

“காபியாடி இது.கழுநீர் மாதிரி இருக்கு.”டம்ளரைத்தூக்கியெறிந்து அவள் கையில் பட்டுக் காயம் ஏற்படுத்தி ரத்தம் வருகிறது

அந்த உடம்பும் இந்த  சாடிஸ்ட்டுக்குப் பல நாள் தேவையாகவே இருந்தது.

அவள் ஒருநாளும் என்னை வெறுத்ததில்லை.என்னிடம் மரியாதை இன்றி நடந்ததில்லை

சாந்தமே உன் பெயர் சாவித்திரியா!
...........
அவள் வந்து விட்டாள்

இனி எனக்குப் பயமில்லை.
பயமில்லை.பயமில்லை!
...............
”லப்,டப்-லப்,டப்-லப்,டப்”

“கண் இமை அசையற  மாதிரி இருக்கு,பாரு.”

”என்னங்க”சாவித்திரியின் குரல்

லப்,டப்,லப்,டப்

பின் என் காதருகில் கிசு கிசுப்பாய் அக்குரல்

“ஏண்டா,பாவி! உயிரோடு இருக்கும்போதுதான் என்னைப் படாத பாடு படுத்தினாய்.இப்போ மூணு நாளா இப்படி உயிர்போகாமக் கிடந்து ஏன் இன்னும்  கொடுமைப்படுத்தறே”
  
லப்...டப்,லப்...டப்

”சீக்கிரம் செத்துத்தொலையேன்”

லப்.....டப்

”இன்னைக்கு நீ சாகலேன்னா தலகாணியை முகத்தில் வைத்து அமுக்கி நானே கொன்னுடுவேன்,கிராதகா!”

லப்..............................

பேரமைதி! எங்கும் இருள்!

END

16 கருத்துகள்:

  1. ஆஹா... மரணத் தருவாயில் ஒரு பாவியின் ஓடும் நினைவலைகளா..! திகில் தொடரத்தான் செய்கிறது. தொடருங்கள்...!

    பதிலளிநீக்கு
  2. அருமை!ஆனால் பயங்கரம்! சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  3. அடடா... மரணத்தின் வாசலில் இருப்பவரின் நினைவுகளா....

    பதிலளிநீக்கு
  4. அதுக்குள்ளே முடிச்சாச்சா?

    பதிலளிநீக்கு
  5. லப்டப் லப்டப்
    எல்லாம் இப்போதான் நின்னுச்சு...

    பதிலளிநீக்கு
  6. அண்ணே வாழுர வரைக்கும் எல்லா கொடுமயும் பண்ணிபுட்டு...சாவுர நேரத்துல சங்கரா சங்கரான்னு சொல்லுரது போல...அந்த பெண்ணை அடிச்சி நொறுக்கிட்டு இப்போ அவள் அன்பு காட்டுவாள் என்று என்னும் மனம்(!)...

    பதிலளிநீக்கு
  7. பயங்கரமாக கதையை ஆரம்பித்திருந்தாலும் கதையை அழகாக நகர்த்தி முடித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு