தொடரும் தோழர்கள்

வெள்ளி, செப்டம்பர் 30, 2011

விஜய் டி.வி. செய்த போஸ்ட் மார்ட்டம்!

நேற்று இரவு விஜய் டி.வி. யில் சூப்பர் சிங்கர் முடிவுகளின் போஸ்ட் மார்ட்டம் நடை பெற்றது.வழக்கமான மூன்று நீதிபதிகளுடன், மேலும் 26 பேர் சேர்ந்து,மொத்தம் 29 நீதிபதிகள் இறுதிப் போட்டியில் மதிப்பெண் போட்டார்களாம்.அந்த மதிப்பெண்கள் வெளியிடப்பட்டதோடு,பல நீதிபதிகள் ஒவ்வொரு போட்டி யாளரின் அன்றைய திறமை வெளிப்பாடு பற்றியும் கருத்துக் கூறினார்கள்.நேற்று,சாய் சரண் மற்றும் சத்தியப் பிரகாஷ் இருவரது பாட்டுக்களுக்கும் கருத்து வெளியிடப் பட்டது.அனைவரும் சத்தியப்பிரகாஷை மிகவும் புகழ்ந்து,அவருக்கே அதிக மதிப் பெண்கள் கொடுத்து மகேசன் தீர்ப்பைக் கேலிக்கூத்தாகி ,வெற்றி பெற்றவர் முகத்தில் கரி பூசினர்!சுமார் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்(வாக்கு வித்தியாசம்) முட்டாள்களாக்கப் பட்டனர்.இதில் அதீத உணர்ச்சி வெளிப்பாடுகள் வேறு.சத்யா தோற்றதில் அவர்கள் அனைவருக்கும் வருத்தம்,விஜய் டி.வி. உட்பட என ஒருவர் சொல்ல ,ஒருவர் கண்ணீர் சிந்த,ஒரே நாடகம்!மக்களின் வாக்குகளே முடிவைத்தீர்மானிக்கும் என முடிவு செய்த பின் இத்தனை நீதிபதிகளும் மதிப்பிடுதலும் எதற்காக?.இன்றும் இது தொடரும்.பூஜாவுக்காகக் கண்ணீர் சிந்துவார்கள். சந்தோஷைப் பின் தள்ளுவார்கள்.சத்யா மிகச்சிறந்தபாடகர் என்பதில் இரண்டாவது கருத்தில்லை. பரிசுக்குத் தகுதியானவரே!ஆனால் ஏற்கனவே போட்டி முடிந்து,பரிசுகள் கொடுக்கப்பட்டு விட்ட நிலையிலே,இப்படி ஒரு போஸ்ட் மார்ட்டம் தேவையா என்பதே என் கேள்வி. எஸ்.எம்.எஸ்ஸிலும் ஃபோன் காலிலும் வரும் வருமானம் வேண்டும்,அதற்காக மக்கள் தீர்ப்பு;ஆனால் அது பற்றி ஒப்பாரியும் வைப்போம் என்றால் எப்படி?பேசாமல் அடுத்த முறை 50 நீதிபதிகளை வேண்டுமானால் வைத்து முடிவைத் தீர்மானிக்கட்டும்.மகேசன் தீர்ப்பு வேண்டாம்!

62 கருத்துகள்:

 1. அண்ணே நீங்க பாத்தா நாங்க பாத்தாப்போல தானே...இங்க இந்த டீவியெல்லாம் வர்றதில்லீங்கன்னே!

  பதிலளிநீக்கு
 2. அண்ணே நீங்க பாத்தா நாங்க பாத்தாப்போல தானே...இங்க இந்த டீவியெல்லாம் வர்றதில்லீங்கன்னே!

  பதிலளிநீக்கு
 3. விஜய் டிவி நடத்தும் sms vote என்பது மக்களை ஏமாற்றும் செயலே.நிகழ்ச்சியை பிரபலபடுத்த இது போன்ற நாடகம் கண்ணீர் காட்சிகளோடு T R P rating உயர்த்திக்கொள்ள நடத்தபடுகிறது .போஸ்ட் மார்ட்டம் என்பதெல்லாம் மேலும் முடிந்துபோன ஒரு நிகழ்ச்சியை வைத்து சில வாரங்களுக்கு காசு பார்க்கவே .

  பதிலளிநீக்கு
 4. சத்தியப் பிரகாஷ் வருவார் என்ற எதிர்பார்ப்பை குழி தோண்டிப் புதைத்தார்கள்.
  என்னத்தைதான் சாதிக்கப் போகிறார்களோ தெரியவில்லை...

  பதிலளிநீக்கு
 5. எனக்கு ஒன்னும் புரியலை தல, நான் டிவி பார்ப்பதில்லை...

  பதிலளிநீக்கு
 6. இப்போல்லாம் மகேசன் தீர்ப்பை யாரு எதிர் பார்க்குறா...???

  பதிலளிநீக்கு
 7. காசு குடுத்து ஓட்டு போடுவீங்களா... சொல்லவே இல்ல

  பதிலளிநீக்கு
 8. நீங்கள் சொல்வது மிகச் சரி
  ஜெயித்தவனை நோக அடிக்கவேண்டும் என்பதற்காகவே
  செய்யப்பட்ட நிகழ்ச்சியா அல்லது தோற்றவனுக்கு
  ஆறுதல் சொல்வதற்காக இப்படிச் செய்கிறார்களா
  ஒன்றுமே விளங்கவில்லை
  எங்கள் எண்ணங்களை பிரதிபலித்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 9. எனக்கு இந்த நிகழ்சியில் நடுவர்களை பார்க்க கோபம்தான் வரும் அவர்களின் கமண்டும் அவர்களும்..இதனாலே நான் இந்த நிகழ்ச்சியை பார்ப்பது இல்லை.

  பதிலளிநீக்கு
 10. நான் தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம் இல்லாததால் கருத்துச் சொல்ல முடியவில்லை. ஆனால் எஸ்எம்எஸ் அனுப்பச் சொல்வது கண்துடைப்புத்தான் என்று என் நண்பர்கள் அனுபவத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 11. நாங்க விஜய் டீவி எல்லாம் பார்க்கிறது இல்லிங்கோ

  பதிலளிநீக்கு
 12. அடடா!! எப்புடி எப்பிடியெல்லாம் கண்டுபிடிக்கானுங்க!

  பதிலளிநீக்கு
 13. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ கேலிக்கூத்தாக்கிவிட்டது.நேற்றைக்கு, வெற்றிபெற்ற சாயி சரணைக்கூப்பிட்டு எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்தவேண்டிய அவசியம் என்ன?
  ஆரம்பத்தில் இருந்தே எனக்கு இந்த இ(ம்)சை நீதிபதிகள் மேல் நம்பிக்கை இருந்ததில்லை. எப்போது திருமதி சுஜாதா மோகன் ‘நான் பூஜாவின் விசிறி’ என்று சொன்னாரோ அப்போதே இவர்கள் நடத்துவது நாடகம் எனத்தெரிந்துவிட்டது. இந்த மாதிரி நாடகம் நடத்துவது விஜய் தொலைக்காட்சிக்கு ஒன்றும் புதிது அல்ல. எனவே உங்கள் கருத்துக்கு நானும் உடன்படுகிறேன்.

  பதிலளிநீக்கு
 14. சத்யப்ரகாஷ் வென்றிருக்க வேண்டியது. ம்ம் ஆனால் இது போர் தான்.

  பதிலளிநீக்கு
 15. இது கலை வித்தகர்களுக்கு ...
  படைப்பாளிகளுக்கு உள்ள கெட்ட பழக்கம்...
  தன் கருத்தை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற பிடிவாதம்...
  கழற்றி வைக்க வேண்டிய தலைக்கனம்...

  பதிலளிநீக்கு
 16. ஓ இந்தக் கூத்தெல்லாம் வேற நடக்குதா? க்ரேண்ட் ஃபினாலே அன்றே நான் பார்க்கவில்லை... முடிவுகள் பற்றி பதிவுகளில் படித்தேன். இப்ப எஸ்.எம்.எஸ்... வேட்டை நடத்திய பின் இந்த வேலை வேறா? :(

  பதிலளிநீக்கு
 17. விக்கியுலகம் கூறியது...

  //அண்ணே நீங்க பாத்தா நாங்க பாத்தாப்போல தானே...இங்க இந்த டீவியெல்லாம் வர்றதில்லீங்கன்னே!//
  நல்லதுதான் விக்கி!
  நன்றி!

  பதிலளிநீக்கு
 18. கோகுல் கூறியது...

  //என்னமோ நடக்குது மர்மமா இருக்குது!//

  GOK! நன்றி கோகுல்!

  பதிலளிநீக்கு
 19. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  //ச்சே , ஒரு நல்ல நிகழ்ச்சி கேவலா மாத்திட்டாங்க..//
  உன்மை! நன்றி கருன்.

  பதிலளிநீக்கு
 20. manoharan கூறியது...

  //விஜய் டிவி நடத்தும் sms vote என்பது மக்களை ஏமாற்றும் செயலே.நிகழ்ச்சியை பிரபலபடுத்த இது போன்ற நாடகம் கண்ணீர் காட்சிகளோடு T R P rating உயர்த்திக்கொள்ள நடத்தபடுகிறது .போஸ்ட் மார்ட்டம் என்பதெல்லாம் மேலும் முடிந்துபோன ஒரு நிகழ்ச்சியை வைத்து சில வாரங்களுக்கு காசு பார்க்கவே .//
  சரியே மனோகரன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 21. மகேந்திரன் கூறியது...

  //சத்தியப் பிரகாஷ் வருவார் என்ற எதிர்பார்ப்பை குழி தோண்டிப் புதைத்தார்கள்.
  என்னத்தைதான் சாதிக்கப் போகிறார்களோ தெரியவில்லை...//
  உண்மை!
  நன்றி மகேந்திரன்.

  பதிலளிநீக்கு
 22. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //எனக்கு ஒன்னும் புரியலை தல, நான் டிவி பார்ப்பதில்லை...//
  நிம்மதி!

  பதிலளிநீக்கு
 23. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //இப்போல்லாம் மகேசன் தீர்ப்பை யாரு எதிர் பார்க்குறா...???//
  சொல்றாங்களே!
  நன்றி மனோ!

  பதிலளிநீக்கு
 24. suryajeeva கூறியது...

  //காசு குடுத்து ஓட்டு போடுவீங்களா... சொல்லவே இல்ல//
  சூப்பர் சிங்கரில் லட்சக்கணக்கான பேர் இதைத்தான் செய்தார்கள்!
  நன்றி சூர்யஜீவா.

  பதிலளிநீக்கு
 25. Ramani கூறியது...

  //நீங்கள் சொல்வது மிகச் சரி
  ஜெயித்தவனை நோக அடிக்கவேண்டும் என்பதற்காகவே
  செய்யப்பட்ட நிகழ்ச்சியா அல்லது தோற்றவனுக்கு
  ஆறுதல் சொல்வதற்காக இப்படிச் செய்கிறார்களா
  ஒன்றுமே விளங்கவில்லை
  எங்கள் எண்ணங்களை பிரதிபலித்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்//
  உங்கள் எண்ணமே பெரும் பான்மையினரின் எண்ணம்!
  நன்றி ரமணி.

  பதிலளிநீக்கு
 26. K.s.s.Rajh கூறியது...

  //எனக்கு இந்த நிகழ்சியில் நடுவர்களை பார்க்க கோபம்தான் வரும் அவர்களின் கமண்டும் அவர்களும்..இதனாலே நான் இந்த நிகழ்ச்சியை பார்ப்பது இல்லை.//
  நல்ல வேலை செய்தீர்கள்!
  நன்றி ராஜ்!

  பதிலளிநீக்கு
 27. கணேஷ் கூறியது...

  // நான் தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம் இல்லாததால் கருத்துச் சொல்ல முடியவில்லை. ஆனால் எஸ்எம்எஸ் அனுப்பச் சொல்வது கண்துடைப்புத்தான் என்று என் நண்பர்கள் அனுபவத்தில் சொல்லியிருக்கிறார்கள்.//
  அனுபவம் சரிதான்.
  நன்றி கணேஷ்.

  பதிலளிநீக்கு
 28. கந்தசாமி. கூறியது...

  //நாங்க விஜய் டீவி எல்லாம் பார்க்கிறது இல்லிங்கோ//
  நல்லா சந்தோசமா இருங்க!ரொம்ப நல்லது!
  நன்றி கந்தசாமி.

  பதிலளிநீக்கு
 29. ஜீ... கூறியது...

  அடடா!! எப்புடி எப்பிடியெல்லாம் கண்டுபிடிக்கானுங்க!
  பாருங்க!
  நன்றி ஜீ!

  பதிலளிநீக்கு
 30. வே.நடனசபாபதி கூறியது...

  // மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ கேலிக்கூத்தாக்கிவிட்டது.நேற்றைக்கு, வெற்றிபெற்ற சாயி சரணைக்கூப்பிட்டு எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்தவேண்டிய அவசியம் என்ன?
  ஆரம்பத்தில் இருந்தே எனக்கு இந்த இ(ம்)சை நீதிபதிகள் மேல் நம்பிக்கை இருந்ததில்லை. எப்போது திருமதி சுஜாதா மோகன் ‘நான் பூஜாவின் விசிறி’ என்று சொன்னாரோ அப்போதே இவர்கள் நடத்துவது நாடகம் எனத்தெரிந்துவிட்டது. இந்த மாதிரி நாடகம் நடத்துவது விஜய் தொலைக்காட்சிக்கு ஒன்றும் புதிது அல்ல. எனவே உங்கள் கருத்துக்கு நானும் உடன்படுகிறேன்.//
  நடுநிலை இல்லாத இவர்களை நடுவர்கள் என எப்படி அழைப்பது?
  நன்றி சபாபதி அவர்களே!

  பதிலளிநீக்கு
 31. கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...

  // இதுவும் ஒரு வகையில் சூதாட்டம்தான்...//
  சரி.
  நன்றி சௌந்தர்.

  பதிலளிநீக்கு
 32. Prabu Krishna கூறியது...

  //சத்யப்ரகாஷ் வென்றிருக்க வேண்டியது. ம்ம் ஆனால் இது போர் தான்.//
  நன்றி பிரபு.

  பதிலளிநீக்கு
 33. ரெவெரி கூறியது...

  //இது கலை வித்தகர்களுக்கு ...
  படைப்பாளிகளுக்கு உள்ள கெட்ட பழக்கம்...
  தன் கருத்தை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற பிடிவாதம்...
  கழற்றி வைக்க வேண்டிய தலைக்கனம்.//
  சரிதான்.
  நன்ரி ரெவெரி.

  பதிலளிநீக்கு
 34. வெங்கட் நாகராஜ் கூறியது...

  //ஓ இந்தக் கூத்தெல்லாம் வேற நடக்குதா? க்ரேண்ட் ஃபினாலே அன்றே நான் பார்க்கவில்லை... முடிவுகள் பற்றி பதிவுகளில் படித்தேன். இப்ப எஸ்.எம்.எஸ்... வேட்டை நடத்திய பின் இந்த வேலை வேறா? :(//
  ஆம் வெங்கட்.எரிச்சலா வருது!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 35. உங்களைப்போலத்தான் நானும் துவக்கத்தில் நினைத்தேன். இருந்தாலும் திரு புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் என நினைக்கிறேன்,
  அவர் சொன்னதில் பெரும் பொருள் இருக்கிறது.

  ஒருவர் இலக்கண சுத்தத்துடன் பாடுவது ஒன்று. ஆயினும் அத்தகைய பாடல் மக்களைச் சென்று அடைய இயலுமா என்றால் அது
  ஒரு பெரிய கேள்விக்குறியாகவே இருக்கும். சிந்து பைரவி படத்தின் துவக்கமும் இது தானே.

  மக்கள் ரசிகர்கள். ஆனால் சங்கீத விற்பன்னர்கள் அல்ல. அவர்களுக்கு சங்கீதத்தின் இலக்கணம் தெரியாது. இருப்பினும்
  இலக்கண இசையின் கர்னாடக சங்கீத அடிப்படையில் இளைய ராஜா போடும் அத்தனை பாடல்களையும் ரசித்தனர். ஏன் !!
  அந்த ராகங்கள் மக்களைச் சென்றடையும் வண்ணம் அவர் ஸ்வரங்களை அமைத்தார்.
  ஆகவே தான் இசை ஞானி என புகழ் பெற்றார். யாரிடம் !! பாமர மக்களும் புகழும் வண்ணம் இசை அமைத்தவர் அவர்.

  அதுவே தான் இந்த போட்டியின் முடிவில் நாம் பெறும் உண்மையும் ஆகும். ரசிகர்களுக்கு இவர் வேண்டும் அவர் வேண்டாம்
  என்றெல்லாம் இல்லை. அவர்களுக்குத் தெரிந்த பாடலை, உணர்ந்த், அனுபவித்து, ரசித்து, மீண்டும் மீண்டும் கேட்ட பாடலை
  சாயி பாடினார். அதனாலே அவர் பெரும் வாக்குகள் பெற்றார்.

  மக்கள் தீர்ப்பு தான் சரி என்று விற்பன்னர்கள் சொல்வதிலே தயக்கம் காட்டுவதும் புரிந்துகொள்ள முடிகிறது.

  ஒன்று செய்யலாம். மொத்த மார்க்குகள் 100 என்றால், நான்கு நீதிபதிகளுக்கு 20 மார்க்குகள் வீதம் 80 மதிப்பீடு செய்து
  பொதுமக்கள் ரசிகர்கள் கருத்துக்கு 20 மார்க்குகள் அளித்தால், நன்றாக இருந்திருக்கும்.

  சுப்பு ரத்தினம்.
  http://movieraghas.blogspot.com

  பதிலளிநீக்கு
 36. sury கூறியது...

  //உங்களைப்போலத்தான் நானும் துவக்கத்தில் நினைத்தேன். இருந்தாலும் திரு புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் என நினைக்கிறேன்,
  அவர் சொன்னதில் பெரும் பொருள் இருக்கிறது.

  ஒருவர் இலக்கண சுத்தத்துடன் பாடுவது ஒன்று. ஆயினும் அத்தகைய பாடல் மக்களைச் சென்று அடைய இயலுமா என்றால் அது
  ஒரு பெரிய கேள்விக்குறியாகவே இருக்கும். சிந்து பைரவி படத்தின் துவக்கமும் இது தானே.

  மக்கள் ரசிகர்கள். ஆனால் சங்கீத விற்பன்னர்கள் அல்ல. அவர்களுக்கு சங்கீதத்தின் இலக்கணம் தெரியாது. இருப்பினும்
  இலக்கண இசையின் கர்னாடக சங்கீத அடிப்படையில் இளைய ராஜா போடும் அத்தனை பாடல்களையும் ரசித்தனர். ஏன் !!
  அந்த ராகங்கள் மக்களைச் சென்றடையும் வண்ணம் அவர் ஸ்வரங்களை அமைத்தார்.
  ஆகவே தான் இசை ஞானி என புகழ் பெற்றார். யாரிடம் !! பாமர மக்களும் புகழும் வண்ணம் இசை அமைத்தவர் அவர்.

  அதுவே தான் இந்த போட்டியின் முடிவில் நாம் பெறும் உண்மையும் ஆகும். ரசிகர்களுக்கு இவர் வேண்டும் அவர் வேண்டாம்
  என்றெல்லாம் இல்லை. அவர்களுக்குத் தெரிந்த பாடலை, உணர்ந்த், அனுபவித்து, ரசித்து, மீண்டும் மீண்டும் கேட்ட பாடலை
  சாயி பாடினார். அதனாலே அவர் பெரும் வாக்குகள் பெற்றார்.

  மக்கள் தீர்ப்பு தான் சரி என்று விற்பன்னர்கள் சொல்வதிலே தயக்கம் காட்டுவதும் புரிந்துகொள்ள முடிகிறது.

  ஒன்று செய்யலாம். மொத்த மார்க்குகள் 100 என்றால், நான்கு நீதிபதிகளுக்கு 20 மார்க்குகள் வீதம் 80 மதிப்பீடு செய்து
  பொதுமக்கள் ரசிகர்கள் கருத்துக்கு 20 மார்க்குகள் அளித்தால், நன்றாக இருந்திருக்கும்.//
  புஷ்பவனம் ஒருவர்தான் ஏற்கக்கூடிய நல்ல கருத்தைச் சொன்னார்.
  உங்கள் கருத்தும் ஆழ்ந்த பொருள் பொதிந்ததே.இனி வரும் நிகழ்ச்சிகளில் மாற்றம் தேவையே.
  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 37. நானும் டி.வி யெல்லாம் பார்ப்பதில்லை.

  பதிலளிநீக்கு
 38. முடிந்துபோன் நிகழ்ச்சியைத் தோண்டி ஆராய்ந்து தேவையற்ற வேலை!

  பதிலளிநீக்கு
 39. பகிர்வுக்கு நன்றி ஐயா

  தமிழ் மணம் 16

  பதிலளிநீக்கு
 40. நீங்கள் இன்னமும் இந்த டி.வி. கூத்துகளை எப்படித்தான் உட்கார்ந்து பார்கின்றீர்களோ சாமீ.
  எனக்கு என்றால் மூலமே வந்துவிடும். ஆளை விடுங்கள்.

  பதிலளிநீக்கு
 41. ஆமாம், மகேசன் மகேசன்னு சொல்றீங்களே... யார் பாஸ் அவரு... உங்களுக்கு எதவும் சொந்தக்காரரா...???

  பதிலளிநீக்கு
 42. விளம்பரம் தேடும் வியூகம் விஜய் டீவிக்கு அதை சீரியஸா பார்த்தால் நாம் தான் சீரோ

  பதிலளிநீக்கு
 43. cheating the people is an extremely easy method for anybody in any fields.. peoples also ready to get cheated from everything else... idiot boxes can,t make a people brilliant at any moment.. it makes more idiots only..

  பதிலளிநீக்கு
 44. சிறுவர்களின் உணர்வுகளோடும் அதிகார வர்க்கங்கள் விளையாடுகின்றதா?

  வேதனையான விடயம் ஐயா.

  பதிலளிநீக்கு
 45. shanmugavel கூறியது...

  // நானும் டி.வி யெல்லாம் பார்ப்பதில்லை.//
  நல்லதாப்போச்சு!

  பதிலளிநீக்கு
 46. இராஜராஜேஸ்வரி கூறியது...

  //முடிந்துபோன் நிகழ்ச்சியைத் தோண்டி ஆராய்ந்து தேவையற்ற வேலை!//
  சரிதான்!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 47. M.R கூறியது...

  //பகிர்வுக்கு நன்றி ஐயா

  தமிழ் மணம் 16//
  நன்றி ரமேஷ்!

  பதிலளிநீக்கு
 48. கக்கு - மாணிக்கம் கூறியது...

  //நீங்கள் இன்னமும் இந்த டி.வி. கூத்துகளை எப்படித்தான் உட்கார்ந்து பார்கின்றீர்களோ சாமீ.
  எனக்கு என்றால் மூலமே வந்துவிடும். ஆளை விடுங்கள்.//
  நானும் தொடர்கள் எல்லாம் பார்ப்பதில்லை.இசை சம்பந்தமான நிகழ்ச்சி என்பதால் இதைப் பார்க்கிறேன்.இதிலும் இந்தக்கூட்து. ஆதிமூலமே!
  நன்றி கக்கு.

  பதிலளிநீக்கு
 49. Philosophy Prabhakaran கூறியது...

  //ஆமாம், மகேசன் மகேசன்னு சொல்றீங்களே... யார் பாஸ் அவரு... உங்களுக்கு எதவும் சொந்தக்காரரா...???//
  நீங்கதான் அவரு!
  நன்றி பிரபா!

  பதிலளிநீக்கு
 50. மாய உலகம் கூறியது...

  //விளம்பரம் தேடும் வியூகம் விஜய் டீவிக்கு அதை சீரியஸா பார்த்தால் நாம் தான் சீரோ//

  ஆமாம்,ஆமாம்!
  நன்றி ராஜேஷ்.

  பதிலளிநீக்கு
 51. sundaravadivelu கூறியது...

  //cheating the people is an extremely easy method for anybody in any fields.. peoples also ready to get cheated from everything else... idiot boxes can,t make a people brilliant at any moment.. it makes more idiots only..//
  well said!
  thanks for your visit and comments!

  பதிலளிநீக்கு
 52. நிரூபன் கூறியது...

  //சிறுவர்களின் உணர்வுகளோடும் அதிகார வர்க்கங்கள் விளையாடுகின்றதா?

  வேதனையான விடயம் ஐயா.//
  உண்மை நிரூ!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 53. நடுவர்கள் போட்ட எண்கள், இறுதி போட்டியின் போது போடப்பட்டது என எண்ணுகிறேன் . நீங்கள் குறிப்பிட்ட நிகழ்ச்சி , அனைவரும் பெற்ற எண்களை மக்களுக்கு தெரியபடுத்த என எண்ணுகிறேன் . மற்ற படி நீங்கள் கூறுவது சரியே .. சாய்சரண் மிகவும் தர்மசங்கடமான நிலைமைக்கு தள்ளப்பட்டது தெளிவாக தெரிந்தது . சத்ய பிரகாஷ் நல்ல பாடகர் தான் ... சாய் சரண் அவர்களை யாரும் அவ்வளவாக கண்டு கொண்டதாக தெரியவில்லை ...மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை ஏன் எல்லா நடுவர்களும் மறந்து விட்டார்கள் என தெரியவில்லை . நிகழ்ச்சி நடத்துபவர்கள் இறுதியில் பண நோக்கம் கொண்டவர்கள் என்பதை மறந்து விட வேண்டாம் . நடுவர்களும் மனிதர்கள் தானே ..விருப்பு வெறுப்புக்கு உட்பட்வர்கள் தானே !
  நிகழ்ச்சியை sponsor செய்பவர்கள் வெறும் இசையின் மீது உள்ள காதலால் பரிசினை வழங்குகிறார்கள் என்று நினைக்க இயலாது . There are no free
  lunches ! வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 54. ரியாஸ் அஹமது கூறியது...

  // aiyaa
  hw r u ....
  long time no c ...
  good post ...
  here no vijay tv aiyaa but ur thoughts r right//
  வாங்க ரியாஸ்.எங்க ரொம்ப நாளா காணொமேன்னு யோசிச்சிட்டே இருந்தேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு