இன்று நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புக்களின் வருகையால்,அக்கால வீடுகள் எவ்வாறு கட்டப்பட்டன என்பதையே மறந்து விட்டோம்.அந்த வீடுகளின் கட்டிட அமைப்பில் ஒரு சீர்மை இருக்கும்.அவை வாழ்க்கையின் தத்துவங்களை உணர்த்துவதாக அமைந்தன.
முதலில் படி.படியேறித்தான் வீட்டுக்குள் செல்ல வேண்டும்.படி என்றால் மற்றொரு பொருள் படிப்பது.ஆக வாசல் படி நமக்கு உணர்த்துவது ’கற்க’.எதைப்படிக்க வேண்டும்? கற்பவை கற்க. பயனுள்ள வற்றைக் கற்க.அவற்றைக் கசடறக்கற்க.
நன்கு படித்ததால் எல்லாம் தெரியும் என்ற நினைப்பு வந்தால்,தலை கனத்து விடும்; அகந்தை வந்து விடும்.அது இருக்கக்கூடாது என்பதற்காகவே,பெருக்கத்து வேண்டும் பணிவு என்பதை உணர்த்து வதற்காகவே ,வீடு பெரிதாக இருப்பினும்,நிலையை உயரம் குறைவாகவே வைத்தனர். அனைவரும் குனிந்துதான் செல்ல முடியும்.
அடுத்து வருவது நடை என்னும் பகுதி.அதைத்தாண்டியே வீட்டின் முக்கியப் பகுதிக்குப் போக முடியும்.இது எதை உணர்த்துகிறது?படித்த பின் படித்ததைக் கடைப்பிடித்து நடக்க வேண்டும்—நிற்க அதற்குத் தக.படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்றில்லாமல்!
பின் வருவது கூடம்.ஹால்.இது எதைக் குறிக்கிறது?கூடுதல் என்றால் சேர்தல்—கூட்டம் கூடுதல் என்று சொல்கிறோம் அல்லவா?கற்றுத்தெளிந்த பின் நல்ல அறிஞர்களின் சேர்க்கை வேண்டும்.”சத்சங்கம்” என்று வடமொழியில் குறிக்கப்படுவது இதுவே.
அதன் பின் சமையல் அறை.சமை என்றால் சமைப்பது மட்டுமன்று.முதிர்வடைவதையும் குறிக்கும்-கல்வியால்,கற்றோர் தொடர்பால்,அனுபவத்தால் அடையும் முதிர்வு.
அதோடு தொடர்புடைய மற்றோர் இடம் முற்றம்.அநேகமாகத் திறந்த பகுதியாக இருக்கும். வாழ்க்கையில் எல்லாம் முடிந்து, வாழ்வாங்கு வாழ்ந்தபின் முற்றும் என்று சொல்ல வேண்டியதை உணர்த்துகிறது.
வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட அக்கால வீடுகள் எப்படி?
வாழ்க்கை நெறிகளை வட மொழியில் தர்மம்,அர்த்தம்,காமம், மோட்சம் எனப் பகுத்தார்கள்.தமிழில் அதுவே அறம்,பொருள்,இன்பம்,வீடு எனச் சொல்லப் படுகிறது .வீடு பேறு என்பது மோட்சத்தைக் குறிக்கிறது.நாம் வசிக்கும் இடத்தையே மோட்சமாக்குவது நம் கையில்தானே இருக்கிறது?
வணக்கம் சார்! கும்புடுறேனுங்க!இருங்க படிச்சுட்டு வர்ரேன்!
பதிலளிநீக்குசார், நிஜமாவே ஆச்சரியமா இருக்கு! வீட்டுக்கு இவ்வளவு அர்த்தமா? இப்பதிவுக்கு நன்றி சார்!
பதிலளிநீக்குநல்ல பகிரிவு நன்றி
பதிலளிநீக்குதமிழ் மணம் ஏற்க மறுக்கிறது!
பதிலளிநீக்குபல தெரியாத தகவல்கள்..
பதிலளிநீக்குநன்றி..
மிக அருமை அன்பரே.
பதிலளிநீக்குமிக அழகான ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளவேண்டிய சிந்தனைகள்.
அந்தக் காலத்துல “திண்ணை“ என்ற ஒன்று இருந்தது..
இன்று!!!!!!!
மிக அருமை அன்பரே.
பதிலளிநீக்குமிக அழகான ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளவேண்டிய சிந்தனைகள்.
அந்தக் காலத்துல “திண்ணை“ என்ற ஒன்று இருந்தது..
இன்று!!!!!!!
தன்னைச் சுற்றி வளைத்து,
பதிலளிநீக்குதன்னைத் தானே பூட்டிக்கொண்டு
மனித விலங்குகள் வாழும் கட்டிடங்களுக்கு என்ன பெயர் வைப்பது????
தமிழ் மணம் ஐந்து
பதிலளிநீக்குஅந்தகால வீட்டை பற்றி அழகாக சொல்லி இருக்கீங்க
படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்றில்லாமல்!//
பதிலளிநீக்குஏ யப்பா வார்த்தை விளையாட்டுக்கு உங்களை மிஞ்சமுடியாது சாமியோ....!!!!
சூப்பரா வித்தியாசமான சிந்தனை அருமை தல.....!!!
பதிலளிநீக்குவீடு நல்ல படிப்பகமாக இருக்க நல்ல பதிவை வழங்கி இருக்கிறீர்கள் முறையான பொருளுடன் சிறந்த பதிவு பாராட்டுகள் நன்றி
பதிலளிநீக்குநல்ல பதிவு.
பதிலளிநீக்குநல்ல விபரங்கள்.
நன்றி ஐயா.
பழைய கால வீட்டிற்குள்,இத்தனை வாழ்வியல் தத்துவங்கள் உண்டு என்பதை அறியும்போது நாம் முன்னோர்கள் எவ்வளவு தீர்க்கசாலிகள் என்பதை அறிய பெருமையாய் இருக்கிறது.
பதிலளிநீக்குஇப்போது ஏன் அவ்வாறு கட்டுவதில்லை என்பதற்கான காரணத்தை நீங்களே சொல்லிவிட்டீர்கள். ‘படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்.’என்று இருக்கக்கூடாது அல்லவா?அதனால்தான். அருமையான பதிவு.வாழ்த்துக்கள்!
பழைய கால வீட்டிற்குள்,இத்தனை வாழ்வியல் தத்துவங்கள் உண்டு என்பதை அறியும்போது நாம் முன்னோர்கள் எவ்வளவு தீர்க்கசாலிகள் என்பதை அறிய பெருமையாய் இருக்கிறது.
பதிலளிநீக்குஇப்போது ஏன் அவ்வாறு கட்டுவதில்லை என்பதற்கான காரணத்தை நீங்களே சொல்லிவிட்டீர்கள். ‘படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்.’என்று இருக்கக்கூடாது அல்லவா?அதனால்தான். அருமையான பதிவு.வாழ்த்துக்கள்!
//
பதிலளிநீக்குவசிக்கும் இடத்தையே மோட்சமாக்குவது நம் கையில்தானே இருக்கிறது
//
நல்ல அருமையான வரிகள்
சார் அருமையான கருத்துக்கள். இந்த மாதிரி சொல்வதற்கு ஆட்கள் குறைந்து விட்டார்கள் என்பதே உண்மை.
பதிலளிநீக்குஇல்லம் பற்றிய இனிமையான விளக்கம்.
பதிலளிநீக்குஅப்போது செய்த எல்லா விஷயங்களுக்கும் எதாவது காரணம் இருந்திருக்கும் என்பது புரிகிறது. பெரும்பாலான பெரியவர்களிடம் கேட்டால் “அதெல்லாம் அப்படித்தான்” என்று சொல்லிச் சென்றதாலேயே நிறைய விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளாமல் போய்விட்டோமோ என்று அவ்வப்போது நான் நினைத்ததுண்டு.
பதிலளிநீக்குநல்ல பகிர்வு ஐயா.
வழக்கம் போல் ஓட்டு போட்ட
பதிலளிநீக்குவீட்டுக்குள் நுழைந்தேன்.
தெருப்படி தொடங்கி
தோட்டத்து முற்றம் வரை
திருக்குறள் அடிகொண்டு
அளந்தீர் இதனால் ஒருபடி மேலும்
உயர்ந்தீர்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
பதிலளிநீக்கு//
வணக்கம் சார்! கும்புடுறேனுங்க!இருங்க படிச்சுட்டு வர்ரேன்!//
வாங்க, வாங்க.
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
பதிலளிநீக்கு//சார், நிஜமாவே ஆச்சரியமா இருக்கு! வீட்டுக்கு இவ்வளவு அர்த்தமா? இப்பதிவுக்கு நன்றி சார்!//
நன்றி ஐடியா மணி.
Raazi கூறியது...
பதிலளிநீக்கு//நல்ல பகிரிவு நன்றி//
நன்றி raazi!
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
பதிலளிநீக்கு// பல தெரியாத தகவல்கள்..
நன்றி..//
நன்றி கருன்.
முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
பதிலளிநீக்கு// மிக அருமை அன்பரே.
மிக அழகான ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளவேண்டிய சிந்தனைகள்.
அந்தக் காலத்துல “திண்ணை“ என்ற ஒன்று இருந்தது..
இன்று!!!!!!!//
இளைப்பாறுவதற்கான திண்ணை! படியில் ஏறாமல் திண்ணையில் திண் என்று தங்கி விட்டால்,மற்றதெல்லாம் இல்லாமல் போகும்!
நன்றி ஐயா!
முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
பதிலளிநீக்கு//தன்னைச் சுற்றி வளைத்து,
தன்னைத் தானே பூட்டிக்கொண்டு
மனித விலங்குகள் வாழும் கட்டிடங்களுக்கு என்ன பெயர் வைப்பது????//
காட்சி சாலைகள்?!
M.R கூறியது...
பதிலளிநீக்கு//தமிழ் மணம் ஐந்து
அந்தகால வீட்டை பற்றி அழகாக சொல்லி இருக்கீங்க//
நன்றி ரமேஷ்!
MANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்குபடிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்றில்லாமல்!//
//ஏ யப்பா வார்த்தை விளையாட்டுக்கு உங்களை மிஞ்சமுடியாது சாமியோ....!!!!//
:))
MANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்கு// சூப்பரா வித்தியாசமான சிந்தனை அருமை தல.....!!!//
நன்றி மனோ!
மாலதி கூறியது...
பதிலளிநீக்கு//வீடு நல்ல படிப்பகமாக இருக்க நல்ல பதிவை வழங்கி இருக்கிறீர்கள் முறையான பொருளுடன் சிறந்த பதிவு பாராட்டுகள் நன்றி//
நன்றி மாலதி!
Rathnavel கூறியது...
பதிலளிநீக்கு// நல்ல பதிவு.
நல்ல விபரங்கள்.
நன்றி ஐயா.//
மிக்க நன்றி ஐயா.
வே.நடனசபாபதி கூறியது...
பதிலளிநீக்கு// பழைய கால வீட்டிற்குள்,இத்தனை வாழ்வியல் தத்துவங்கள் உண்டு என்பதை அறியும்போது நாம் முன்னோர்கள் எவ்வளவு தீர்க்கசாலிகள் என்பதை அறிய பெருமையாய் இருக்கிறது.
இப்போது ஏன் அவ்வாறு கட்டுவதில்லை என்பதற்கான காரணத்தை நீங்களே சொல்லிவிட்டீர்கள். ‘படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்.’என்று இருக்கக்கூடாது அல்லவா?அதனால்தான். அருமையான பதிவு.வாழ்த்துக்கள்!//
சரியாகச் சொன்னீர்கள்.
நன்றி ஐயா!
"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
பதிலளிநீக்கு//
வசிக்கும் இடத்தையே மோட்சமாக்குவது நம் கையில்தானே இருக்கிறது
//
//நல்ல அருமையான வரிகள்//
நன்றி ராஜா.
பாலா கூறியது...
பதிலளிநீக்கு//சார் அருமையான கருத்துக்கள். இந்த மாதிரி சொல்வதற்கு ஆட்கள் குறைந்து விட்டார்கள் என்பதே உண்மை.//
நன்றி பாலா.
செங்கோவி கூறியது...
பதிலளிநீக்கு//இல்லம் பற்றிய இனிமையான விளக்கம்.//
நன்றி செங்கோவி.
வெங்கட் நாகராஜ் கூறியது...
பதிலளிநீக்கு//அப்போது செய்த எல்லா விஷயங்களுக்கும் எதாவது காரணம் இருந்திருக்கும் என்பது புரிகிறது. பெரும்பாலான பெரியவர்களிடம் கேட்டால் “அதெல்லாம் அப்படித்தான்” என்று சொல்லிச் சென்றதாலேயே நிறைய விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளாமல் போய்விட்டோமோ என்று அவ்வப்போது நான் நினைத்ததுண்டு.
நல்ல பகிர்வு ஐயா.//
நன்றி வெங்கட்.
புலவர் சா இராமாநுசம் கூறியது...
பதிலளிநீக்கு//வழக்கம் போல் ஓட்டு போட்ட
வீட்டுக்குள் நுழைந்தேன்.
தெருப்படி தொடங்கி
தோட்டத்து முற்றம் வரை
திருக்குறள் அடிகொண்டு
அளந்தீர் இதனால் ஒருபடி மேலும்
உயர்ந்தீர்
நன்றி!//
ஓட்டுப் போட்டு நுழைந்தீர்களா?!
நன்றி ஐயா.
அருமை .
பதிலளிநீக்குநண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...
பதிலளிநீக்கு//அருமை .//
நன்றி நண்டு @நொரண்டு.
வீட்டில் இவ்வளவு விஷயமா / மேலும் பல விவரங்களை கூறி இருக்கலாம் ... ஒவ்வொரு வீட்டின் முன் திண்ணை ஒன்று இருக்கும் ... யார் வேண்டுமானாலும் அதில் அமர்ந்து ஒய்வு எடுக்க தடை கிடையாது . ஒவ்வொரு வீட்டிலும் கிணறு தான் நீருக்கு ஒரே ஆதாரம் .. நீர் இறைப்பது நல்ல உடற் பயிற்சியாக அமைந்தது .. ஆ ஊஞ்சலை மறந்து விட்டேன் .. வாசுதேவன்
பதிலளிநீக்குமிக அழகாக ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளவேண்டிய வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டியவை. நன்றி.
பதிலளிநீக்குமனை சாத்திரம் கற்றது போல. மிக அருமையாகச் சொல்லி உள்ளீர்கள் சென்னைப் பித்தன். நம் முன்னோர்கள் எல்லாம் தெரிந்தவ்ர்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இதுவும் சான்று. நன்றி.
பதிலளிநீக்குவீட்டை பற்றிய
பதிலளிநீக்குஅழகிய பதிவு ஐயா
மனத்தைக் கவர்ந்தது.
வாழ்க்கையையும் வீட்டையும்
சரியாகப் பிணைந்துள்ளீர்கள்
all voted
பதிலளிநீக்குநாகரிகம் என்பது காலத்திற்கு காலம் மாறுவதுதானே சார்...
பதிலளிநீக்குஇன்றைய வலைச்சரத்தில் தங்களை
பதிலளிநீக்குஅறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்
இன்றைய வலைச்சரத்தில் தங்களை
பதிலளிநீக்குஅறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்
பழங்கால வீட்டு கட்டிட அமைப்பு குறித்து
பதிலளிநீக்குஇதுவரை கேள்விப் படாத அரிய புதிய விளக்கம்
மிக மிக அருமை.தரமான பதிவு வாழ்த்துக்கள்
ஆதிரா கூறியது...
பதிலளிநீக்கு//மிக அழகாக ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளவேண்டிய வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டியவை. நன்றி.//
நன்றி ஆதிரா.
ஆதிரா கூறியது...
பதிலளிநீக்கு//மனை சாத்திரம் கற்றது போல. மிக அருமையாகச் சொல்லி உள்ளீர்கள் சென்னைப் பித்தன். நம் முன்னோர்கள் எல்லாம் தெரிந்தவ்ர்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இதுவும் சான்று. நன்றி.//
மீண்டும் நன்றி!
Vasu கூறியது...
பதிலளிநீக்கு//வீட்டில் இவ்வளவு விஷயமா / மேலும் பல விவரங்களை கூறி இருக்கலாம் ... ஒவ்வொரு வீட்டின் முன் திண்ணை ஒன்று இருக்கும் ... யார் வேண்டுமானாலும் அதில் அமர்ந்து ஒய்வு எடுக்க தடை கிடையாது . ஒவ்வொரு வீட்டிலும் கிணறு தான் நீருக்கு ஒரே ஆதாரம் .. நீர் இறைப்பது நல்ல உடற் பயிற்சியாக அமைந்தது .. ஆ ஊஞ்சலை மறந்து விட்டேன் .. //
முனைவர் குணசீலனின் கருத்துக்கான பதிலில் திண்ணை பற்றிச் சொல்லியிருக்கிறேன் பாருங்கள்!
நன்றி வாசு!
மகேந்திரன் கூறியது...
பதிலளிநீக்கு//வீட்டை பற்றிய
அழகிய பதிவு ஐயா
மனத்தைக் கவர்ந்தது.
வாழ்க்கையையும் வீட்டையும்
சரியாகப் பிணைந்துள்ளீர்கள்//
நன்றி மகேந்திரன்.
மாய உலகம் கூறியது...
பதிலளிநீக்கு// all voted//
நன்றி ராஜேஷ்!
Philosophy Prabhakaran கூறியது...
பதிலளிநீக்கு//நாகரிகம் என்பது காலத்திற்கு காலம் மாறுவதுதானே சார்...//
மாறினாலும் பழையவை பற்ரிப் பேசாமல் இருக்க முடியுமா?இன்னும் மொஹஞ்சதாரோ,ஹரப்பா பற்றிப் பேசிக் கொண்டுதானே இருக்கிறோம்!
நன்றி பிரபா!
மாய உலகம் கூறியது...
பதிலளிநீக்கு//இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்//
நன்றி ராஜேஷ்;அங்கும் நன்றி சொல்லி விட்டேன்.
Ramani கூறியது...
பதிலளிநீக்கு//பழங்கால வீட்டு கட்டிட அமைப்பு குறித்து
இதுவரை கேள்விப் படாத அரிய புதிய விளக்கம்
மிக மிக அருமை.தரமான பதிவு வாழ்த்துக்கள்//
நன்றி ரமணி.
இன்றய அரசியல்வாதியில்
பதிலளிநீக்குஎமெர்ஜென்சி, எம்.ஜி.ஆர்.மரணம், ராஜீவ்கொலை, இமானுவேல் சேகரன்(அரசியல் கேள்வி பதில்கள் பாகம்-2)
ஒரு முறை வந்துதான் பாருங்க...உங்களுக்கும் பிடிக்கும்
பயனுள்ள தகவல்களை அள்ளி வழங்கியிருக்கிறீர்கள்.! முன்பின் அறியா அறிய நல்தகவல்களை தங்கள் இடுகையில் காணமுடிகிறது.. எங்களைப் போன்ற இளைய சமுதாயத்திற்கு இன்னும் தங்கள் பங்களிப்பை ஆற்றுவீர்களாக! பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள் ஐயா..!
பதிலளிநீக்குவீடு என்பது வாழ்க்கைத் தத்துவமாகவே இருப்பதை காரணங்களோடு விளக்கிய விதம் அருமை.
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் ஐயா,
பதிலளிநீக்குவீட்டிற்குரிய அர்த்தங்களை அழகுறச் சொல்லியிருக்கிறீங்க.
வீடும் நமக்கு மற்றொரு கோயில் தான். ஆனால் அதற்க்கு நீங்கள் தந்த அர்த்தம் மிகவும் அருமை. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்கம்பழனி கூறியது...
பதிலளிநீக்கு//பயனுள்ள தகவல்களை அள்ளி வழங்கியிருக்கிறீர்கள்.! முன்பின் அறியா அறிய நல்தகவல்களை தங்கள் இடுகையில் காணமுடிகிறது.. எங்களைப் போன்ற இளைய சமுதாயத்திற்கு இன்னும் தங்கள் பங்களிப்பை ஆற்றுவீர்களாக! பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள் ஐயா..!//
நன்றி தங்கம்பழனி.
ரிஷபன் கூறியது...
பதிலளிநீக்கு//வீடு என்பது வாழ்க்கைத் தத்துவமாகவே இருப்பதை காரணங்களோடு விளக்கிய விதம் அருமை.//
நன்றி ரிஷபன்.
நிரூபன் கூறியது...
பதிலளிநீக்கு//இனிய காலை வணக்கம் ஐயா,
வீட்டிற்குரிய அர்த்தங்களை அழகுறச் சொல்லியிருக்கிறீங்க.//
நன்றி நிரூபன்.
N.H.பிரசாத் கூறியது...
பதிலளிநீக்கு//வீடும் நமக்கு மற்றொரு கோயில் தான். ஆனால் அதற்க்கு நீங்கள் தந்த அர்த்தம் மிகவும் அருமை. பகிர்வுக்கு நன்றி.//
நன்றி பிரசாத்.
அருமையான வாழ்வியல் தத்துவ சிந்தனைப் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு