தொடரும் தோழர்கள்

வெள்ளி, செப்டம்பர் 23, 2011

தென்னை மரத்திலிருந்து சப்பான் வரை!

ஞாயிறன்று எங்கள் குடியிருப்பில் உள்ள தென்னை மரங்களில் தேங்காய்

பறிக்கப்பட்டது(தென்னை மரத்தில் தேங்காய் பறிக்காமல் மாங்காயா பறிப்பார்கள்?!)

அப்போது சில மட்டைகளும் வெட்டி வீழ்த்தப்பட்டன.

கிட்டத்தட்ட 300 காய்கள் தேறின.வெட்டிய மட்டைகளிலிருந்து ஒருபெண்மணி

துடைப்பம் செய்து எடுத்துக் கொண்டாள்.மரங்களுக்குச் சரியான

பராமரிப்பே கிடையாது.தண்ணீர் விடுவது கூட இல்லை.ஆயினும் மரங்கள்

தொடர்ந்து காய்கள் தந்து கொண்டே இருக்கின்றன.எனக்கு அவ்வையாரின்

பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

’’நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் என வேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.’’

உண்மைதான்.


அவ்வையார் என்பவர் ஒருவர் அல்ல,அதற்கும் மேற்பட்டவர்கள் என்று ஒரு

கருத்து நிலவுகிறது.இதற்கு ஆதாரமாகக் கூறப்படும் ஒரு பாடல்

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்து, தானும்தன்
பொல்லாச் சிறகைவிரித்து ஆடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி.


வான் கோழி என்பது ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்தபின் தான்,இங்கு வந்தது.

எனவே பழைய அவ்வையார் இந்தப் பாடலைப் பாடியிருக்க முடியாது.இந்த

அடிப்படையில்தான் ஒருவருக்கு மேற்பட்ட அவ்வையார்கள் இருக்க வேண்டும்

எனச் சொல்கிறர்கள்.


வான்கோழி நன்றி நவிலும் தின விருந்தில் கட்டாயம் இருக்க வேண்டிய உணவு.

நன்றி நவிலும் தினம் என்பது கடவுளுக்கும்,உறவுகளுக்கும்,நண்பர்களுக்கும்

நன்றி தெரிவிக்கும் தினமாகும்.இது மிக முக்கியமாக யு.எஸ்.ஸிலும்,

கனடாவிலும் கொண்டாடப்படுகிறது.அன்றைய விருந்தில் வறுத்த வான்கோழி

முக்கிய உணவாகும்.


தமிழ்நாட்டிலும் நன்றி நவிலும் தினம் நன்கு கொண்டாடப் படுகிறது.ஆம் .நமது

பொங்கல் பண்டிகையைத்தான்குறிப்பிடுகிறேன்.நல்லவிளைச்சலைக்கொடுத்த,

இயற்கைக்கு, சூரியனுக்கு,நமக்காக உழைக்கும் மாடுகளுக்கு(மாட்டுப் பொங்கல்)

நன்றி தெரிவுக்கும் தினம்.எனவேதான் திறந்த வெளியில் அடுப்பு வைத்துப் பொங்கல்

செய்து படைத்து வழிபடுகிறோம்.சூரியனின் வடக்கு நோக்கிப் பயணம்

அன்றுதான் ஆரம்பமாகிறது.


ஆதி மனிதன் முதலில் வணங்கத்தொடங்கியது சூரியனைத்தான்.அவனுக்குத்

தெரிந்த மிகப் பெரிய சக்தி பரிதிதான்.ரிக்வேத காலத்துக்கு முன்பிருந்தே

சூரிய வழிபாடு இருந்ததாகச் சொல்லப் படுகிறது.எனவே ஆதிசங்கரரின்

ஷண்மதங்களில் ’சௌரம்’ என்பதும் ஒன்றாகச் சொல்லப்பட்டது.


சூரியன் உதிக்கும் நாடு என்று அழைக்கப்படுகிறது ஜப்பான்.உலகின் கிழக்குக்

கோடியில் இருக்கும் நாடாதலால் சூரிய உதயம் முதலில் அங்குதான் நிகழ்கிறது.

ஜப்பானுக்கு நிப்பான் எறுதான் பெயர்.அதன் பொருளே சூரியன் உதிக்கும் இடம்

என்பதுதான்.


நான் பள்ளியில் படிக்கும்போது ”சப்பான் நாடு” என்ற ஒரு கட்டுரை பாடப்

புத்தகத்தில் இருந்தது.சப்பான் பற்றிப் பல செய்திகளைச் சொல்லிக் கடைசியில்

”இவைதாம் சப்பான்” என்று கட்டுரை முடியும்.

தேர்வில் ஒரு கேள்வி”இவைதாம் சப்பான் ,எவைதாம்?” என்பது.

என்வகுப்புத்தோழன் ஒருவன் அழகாகப் பதில் எழுதினான் ஒரே சொல்லில்!

“அவைதாம்!”


டிஸ்கி: பள்ளிக்கூடத்தில் கட்டுரைக்குச் சில தலைப்புகளைக் கொடுத்த ஆசிரியர்

அவற்றுள் ஏதாவது ஒன்று தேர்வில் கேட்கப்படும் எனக்கூறினாராம்.மாணவன்

பசுமாடு பற்றி நன்கு தயார் செய்துகொண்டு போனான்.ஆனால் கேள்வியோ,

தென்னை மரம் பற்றி.மாணவன் யோசித்தான்.பின் எழுதினான்”எங்கள்

ஊரிலெல்லாம் தென்னை மரத்தில் பசுவைக் கட்டி வைப்பார்கள்.பசு நமக்குப்

பால் கொடுக்கிறது” என்று தொடங்கிப் பசுவைப் பற்றி அவன் படித்ததெல்லாம்

எழுதி விட்டு வந்தானாம்!

60 கருத்துகள்:

  1. உங்கள் அந்தாதி பாணியிலான இந்தக் கட்டுரை பிரமாதம். ஒட்டும் போட்டுட்டேன்.

    பதிலளிநீக்கு
  2. இனிய காலை வணக்கம் ஐயா.

    தென்னை மரத்தை வைச்சே காலையில் தேகம் சிலிர்க்க சிரிக்க வைச்சிட்டீங்க.

    பதிலளிநீக்கு
  3. தங்களை இலக்கியம் வீசும் தமிழ்க்காற்றில் இணைத்துள்ளேன்...


    நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. (தென்னை மரத்தில் தேங்காய் பறிக்காமல் மாங்காயா பறிப்பார்கள்?!)//////

    ஆஹா! என்ன ஒரு அமையான கேள்வி ஐயா!

    பதிலளிநீக்கு
  5. டிஸ்கியில் சொன்ன கதையும் கலக்கல்!

    பதிலளிநீக்கு
  6. விக்கியுலகம் கூறியது...

    //அண்ணே கலக்கல்!//
    நன்றி விக்கி.

    பதிலளிநீக்கு
  7. கணேஷ் கூறியது...

    //உங்கள் அந்தாதி பாணியிலான இந்தக் கட்டுரை பிரமாதம். ஒட்டும் போட்டுட்டேன்.//
    நன்றி கணேஷ்.

    பதிலளிநீக்கு
  8. நிரூபன் கூறியது...

    //இனிய காலை வணக்கம் ஐயா.

    தென்னை மரத்தை வைச்சே காலையில் தேகம் சிலிர்க்க சிரிக்க வைச்சிட்டீங்க.//
    நன்றி நிரூ.

    பதிலளிநீக்கு
  9. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

    //சிந்தனை கலந்த நகைச்சுவை அருமை அன்பரே..//
    நன்றி குணசீலன்.

    பதிலளிநீக்கு
  10. தமிழ்க்காற்று கூறியது...

    //தங்களை இலக்கியம் வீசும் தமிழ்க்காற்றில் இணைத்துள்ளேன்...


    நன்றிகள்.//
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  11. Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...

    (தென்னை மரத்தில் தேங்காய் பறிக்காமல் மாங்காயா பறிப்பார்கள்?!)//////

    //ஆஹா! என்ன ஒரு அமையான கேள்வி ஐயா!//
    ஹா,ஹா.(முதலில் தப்பா பவர்ஸ்டார் என்று படித்துவிட்டேன்!)

    பதிலளிநீக்கு
  12. Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...

    //டிஸ்கியில் சொன்ன கதையும் கலக்கல்!//
    நன்றி பவுடர் ஸ்டார்!

    பதிலளிநீக்கு
  13. // என்வகுப்புத்தோழன் ஒருவன் அழகாகப் பதில் எழுதினான் ஒரே சொல்லில்! “அவைதாம்!”//

    நல்ல பதில். ஆசிரியர் அந்த பதிலை எதிர்பார்த்திருக்கமாட்டார்
    .
    சுவையான பதிவு. ஒரே கல்லில் பல மாங்காய்கள் அல்ல அல்ல தேங்காய்கள் அடித்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  14. அருமை, அவ்வையார் குறித்து புது தகவல் குடுத்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  15. ஜப்பானுக்கு நிப்பான் எறுதான் பெயர்.அதன் பொருளே சூரியன் உதிக்கும் இடம்

    என்பதுதான்.//


    இது எனக்கு புதிய தகவல் நன்றி தல....

    பதிலளிநீக்கு
  16. தென்னைமரத்தில் இப்போ தேங்காய் பறிக்கா ஆள் இல்லாததால், தானா கீழே விழுந்தாதான் உண்டு எங்கள் ஊரில்!!!

    பதிலளிநீக்கு
  17. வே.நடனசபாபதி கூறியது...

    // என்வகுப்புத்தோழன் ஒருவன் அழகாகப் பதில் எழுதினான் ஒரே சொல்லில்! “அவைதாம்!”//

    // நல்ல பதில். ஆசிரியர் அந்த பதிலை எதிர்பார்த்திருக்கமாட்டார்
    .
    சுவையான பதிவு. ஒரே கல்லில் பல மாங்காய்கள் அல்ல அல்ல தேங்காய்கள் அடித்துவிட்டீர்கள்.//

    நன்றி சபாபதி அவர்களே.

    பதிலளிநீக்கு
  18. suryajeeva கூறியது...

    //அருமை, அவ்வையார் குறித்து புது தகவல் குடுத்தமைக்கு நன்றி//
    நன்றி சூர்யஜீவா.

    பதிலளிநீக்கு
  19. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    ஜப்பானுக்கு நிப்பான் எறுதான் பெயர்.அதன் பொருளே சூரியன் உதிக்கும் இடம்

    என்பதுதான்.//


    // இது எனக்கு புதிய தகவல் நன்றி தல....//
    நன்றி மனோ.

    பதிலளிநீக்கு
  20. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //தென்னைமரத்தில் இப்போ தேங்காய் பறிக்கா ஆள் இல்லாததால், தானா கீழே விழுந்தாதான் உண்டு எங்கள் ஊரில்!!!//
    நாஞ்சில் நாட்டுக்கு வந்த சோதனை!

    பதிலளிநீக்கு
  21. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    // tamilmanam 7, tamil 10 7....//
    நன்றி.

    பதிலளிநீக்கு
  22. தென்னைமரத்தில் தொடங்கி சின்னது சின்னதாகப் பலவிடயங்களையும் கூறியவிதம் அருமை

    பதிலளிநீக்கு
  23. தென்னை மரத்தில் மாங்காய் பறித்தால் எப்படி இருக்கும் என்று யோசிக்க வைத்தீர்கள். சிறுகதைக்கான கரு.

    வான்கோழி யுகாந்திரமா பாரதத்தில் உண்டு சார். turkey எனும் இன்னாளைய பறவையிலிருந்து சற்றே மாறுபட்டது. மகாபாரதம், மற்றும் நிறைய சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எத்தனை சொல்லியும் தலைவனின் குறைகளைப் பொருட்படுத்தாமல் அவனையே சேர எண்ணும் தலைவியைப் பற்றிக் குறுந்தொகையிலும் சொல்லியிருக்கிறார்கள். உண்மையை அறிய முயலாமல் சடங்குகளில் வாழும் கண்மூடிகளுக்கு வான்கோழி என்று உபநிஷதில் வருகிறது. இவை எல்லாமே இணையத்தில் கிடைக்கிறது சார்.

    ஆங்கிலேயர் வந்தபின் வந்தது என்பவரின் அட்ரெஸ் சொல்றீங்களா? ஒண்ணுமில்லே, விளக்கிச் சொல்லிட்டு வந்துடலாம்னு தான்.

    பதிலளிநீக்கு
  24. அம்பலத்தார் கூறியது...

    // தென்னைமரத்தில் தொடங்கி சின்னது சின்னதாகப் பலவிடயங்களையும் கூறியவிதம் அருமை//
    நன்றி அம்பலத்தார்.

    பதிலளிநீக்கு
  25. அப்பாதுரை கூறியது...

    // தென்னை மரத்தில் மாங்காய் பறித்தால் எப்படி இருக்கும் என்று யோசிக்க வைத்தீர்கள். சிறுகதைக்கான கரு.//
    கலக்குங்க!

    //வான்கோழி யுகாந்திரமா பாரதத்தில் உண்டு சார். turkey எனும் இன்னாளைய பறவையிலிருந்து சற்றே மாறுபட்டது. மகாபாரதம், மற்றும் நிறைய சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எத்தனை சொல்லியும் தலைவனின் குறைகளைப் பொருட்படுத்தாமல் அவனையே சேர எண்ணும் தலைவியைப் பற்றிக் குறுந்தொகையிலும் சொல்லியிருக்கிறார்கள். உண்மையை அறிய முயலாமல் சடங்குகளில் வாழும் கண்மூடிகளுக்கு வான்கோழி என்று உபநிஷதில் வருகிறது. இவை எல்லாமே இணையத்தில் கிடைக்கிறது சார்.

    ஆங்கிலேயர் வந்தபின் வந்தது என்பவரின் அட்ரெஸ் சொல்றீங்களா? ஒண்ணுமில்லே, விளக்கிச் சொல்லிட்டு வந்துடலாம்னு தான்.//

    அட்ரஸ் அநேகமாக மேலுலகமாக இருக்கலாம்.நான் பள்ளியில் படிக்கையில் என் ஆசிரியர் சொன்ன செய்தி இது.அவர் மேலும் கூறியது இந்த வான்கோழி அவ்வையார் ஒரு ஆசிரியராக இருந்தவர் என்பது.என் மனதில் பதிந்த தகவல்.

    இப்போது நீங்கள் சொல்கிறீர்கள் இது தவறு என்று. ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் என் குரு தவறான தகவல் தந்தாரா என்று மனம் தவிக்கிறது (என்னே என் குரு பக்தி!)
    உபநிடத்தில் வான்கோழி என்று சொல்லியிருக்க முடியாது. அப்படியானால் உபநிடதம் குறிப்பிடும் பறவை வான் கோழி என்று எப்படி உறுதி செய்வது?
    சங்க இலக்கியங்களில் வான்கோழி என்ற சொல்லே வருகிறதா?தயவு செய்து ரெஃபெரன்ஸ் தர இயலுமா?

    தகவலுக்கு நன்றி.சிரமம் தருவதற்கு மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  26. சென்னை டூ ஜப்பான் ன்னு தலைப்பை வாசிச்சேன்....சென்னைல தான் இப்பம் மரமே கிடையாதுன்னு யோசிச்சுட்டே...

    அவ்வையார் தகவல்
    கேட்காதது...நன்றி

    பதிலளிநீக்கு
  27. பதிவை படிக்கையில் புன்னகை தோன்றினாலும்
    சிந்திக்கவும் தூண்டுகிறது.
    அருமைப் பதிவு ஐயா

    பதிலளிநீக்கு
  28. சிந்திக்க தூண்டும்
    அருமைப் பதிவு தென்னை மரத்திலிருந்து சப்பான் வரை!"

    பதிலளிநீக்கு
  29. நானும் வான்கோழி பற்றி மேலும் அறிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  30. கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
    தானும் அதுவாகப் பாவித்து, தானும்தன்
    பொல்லாச் சிறகைவிரித்து ஆடினாற் போலுமே
    கல்லாதான் கற்ற கவி.
    ///

    :)

    பதிலளிநீக்கு
  31. உண்மைதான் ஐயா அனைத்து பாகமும் உபயோகப் படும் மரங்களில் தென்னையும் ஒன்று .

    நல்ல விஷயம் பகிர்ந்துள்ளீர்கள் நன்றி ஐயா

    தமிழ் மணம் ,இன்ட்லி வாக்களித்தேன்

    பதிலளிநீக்கு
  32. நீண்ட நாட்களின் பின் இணைவதில் மகிழ்ச்சி ஐயா.நலமா?
    வந்ததும் சிரிக்கவைத்திட்டிங்க தென்னை கதை சொல்லி.
    மற்றும் ஜப்பான் நாட்டை பற்றியதான தகவல் அருமை..
    பகிர்வுக்கு நன்றி.

    my said..
    http://sempakam.blogspot.com/2011/09/blog-post.html

    பதிலளிநீக்கு
  33. தென்னையில் தொடங்கி
    அவ்வையாரின் வழி நடந்து
    சப்பான் வரை முடித்த பயணம்
    மிகவும் நன்றே!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  34. ரெவெரி கூறியது...

    //சென்னை டூ ஜப்பான் ன்னு தலைப்பை வாசிச்சேன்....சென்னைல தான் இப்பம் மரமே கிடையாதுன்னு யோசிச்சுட்டே...

    அவ்வையார் தகவல்
    கேட்காதது...நன்றி//
    எங்க பகுதியில இன்னும் கொஞ்சம் மரம் இருக்குங்க!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  35. வெங்கட் நாகராஜ் கூறியது...

    //கலக்கல்....//
    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  36. மகேந்திரன் கூறியது...

    //பதிவை படிக்கையில் புன்னகை தோன்றினாலும்
    சிந்திக்கவும் தூண்டுகிறது.
    அருமைப் பதிவு ஐயா//
    நன்றி மகேந்திரன்.

    பதிலளிநீக்கு
  37. மைந்தன் சிவா கூறியது...

    //ஓட்டிட்டேன்//
    நன்றி சிவா.

    பதிலளிநீக்கு
  38. இராஜராஜேஸ்வரி கூறியது...

    //சிந்திக்க தூண்டும்
    அருமைப் பதிவு தென்னை மரத்திலிருந்து சப்பான் வரை!"//
    நன்றி இராஜ ராஜேஸ்வரி!

    பதிலளிநீக்கு
  39. செங்கோவி கூறியது...

    // நானும் வான்கோழி பற்றி மேலும் அறிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன்.//
    நன்றி செங்கோவி.

    பதிலளிநீக்கு
  40. கோகுல் கூறியது...

    // ஐயா!கலக்கிட்டிங்க போங்க!//
    நன்றி கோகுல்!

    பதிலளிநீக்கு
  41. பிரியமுடன் பிரபு கூறியது...

    கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
    தானும் அதுவாகப் பாவித்து, தானும்தன்
    பொல்லாச் சிறகைவிரித்து ஆடினாற் போலுமே
    கல்லாதான் கற்ற கவி.
    ///

    :)
    ???

    பதிலளிநீக்கு
  42. M.R கூறியது...

    // உண்மைதான் ஐயா அனைத்து பாகமும் உபயோகப் படும் மரங்களில் தென்னையும் ஒன்று .

    நல்ல விஷயம் பகிர்ந்துள்ளீர்கள் நன்றி ஐயா

    தமிழ் மணம் ,இன்ட்லி வாக்களித்தேன்//
    நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  43. FOOD கூறியது...

    //ஆஹா, மரத்தில் ஆரம்பித்து மனிதன் கற்றுக்கொள்ள ஆயிரம் அருமையான விஷயங்கள் உள்ளன என்று சொல்லியது உங்கள் படைப்பு.//
    நன்றி சங்கரலிங்கம்.

    பதிலளிநீக்கு
  44. vidivelli கூறியது...

    //நீண்ட நாட்களின் பின் இணைவதில் மகிழ்ச்சி ஐயா.நலமா?
    வந்ததும் சிரிக்கவைத்திட்டிங்க தென்னை கதை சொல்லி.
    மற்றும் ஜப்பான் நாட்டை பற்றியதான தகவல் அருமை..
    பகிர்வுக்கு நன்றி.

    my said..
    http://sempakam.blogspot.com/2011/09/blog-post.html//
    இரட்டிப்பு மகிழ்ச்சி.
    நன்றி விடிவெள்ளி.

    பதிலளிநீக்கு
  45. புலவர் சா இராமாநுசம் கூறியது...

    //தென்னையில் தொடங்கி
    அவ்வையாரின் வழி நடந்து
    சப்பான் வரை முடித்த பயணம்
    மிகவும் நன்றே!//
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  46. சுவாரசியங்கள் நிறைந்த பதிவு.

    பதிலளிநீக்கு
  47. ரிஷபன் கூறியது...

    // சுவாரசியங்கள் நிறைந்த பதிவு//
    நன்றி ரிஷபன்.

    பதிலளிநீக்கு
  48. சிரிக்க வைத்த கதைக்கு நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  49. ஃஃஃஃவான் கோழி என்பது ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்தபின் தான்,இங்கு வந்தது.ஃஃஃஃ

    மிகவும் ஆணித்தரமான விடயம்... பகுந்த பார்த்தால் பல ஓட்டை இருக்குமுங்க..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    7 ம் அறிவு பாடலில் ஹரிஷ் ஜெயராஜ் அரைத்தமாவும், சுட்ட வடையும்

    பதிலளிநீக்கு
  50. சூரியன் உதிக்கும் நாடு என்று அழைக்கப்படுகிறது ஜப்பான்.உலகின் கிழக்குக்

    கோடியில் இருக்கும் நாடாதலால் சூரிய உதயம் முதலில் அங்குதான் நிகழ்கிறது.

    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  51. மாய உலகம் கூறியது...

    // சிரிக்க வைத்த கதைக்கு நன்றி நண்பரே//
    நன்றி ராஜேஷ்.

    பதிலளிநீக்கு
  52. ♔ம.தி.சுதா♔ கூறியது...

    // ஃஃஃஃவான் கோழி என்பது ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்தபின் தான்,இங்கு வந்தது.ஃஃஃஃ

    மிகவும் ஆணித்தரமான விடயம்... பகுந்த பார்த்தால் பல ஓட்டை இருக்குமுங்க..//

    நன்றி ♔ம.தி.சுதா♔

    பதிலளிநீக்கு
  53. இராஜராஜேஸ்வரி கூறியது...

    சூரியன் உதிக்கும் நாடு என்று அழைக்கப்படுகிறது ஜப்பான்.உலகின் கிழக்குக்

    கோடியில் இருக்கும் நாடாதலால் சூரிய உதயம் முதலில் அங்குதான் நிகழ்கிறது.

    //நல்ல பகிர்வு.//
    நன்றி இராஜராஜேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  54. ஆகா.... எதிலோ ஆரம்பித்து எங்கெங்கோ பயணித்து இறுதியில் ஜப்பானுக்கு வந்துவிட்டீர்கள். தாங்கள் பயணித்தோதடன்றி எங்களையும் அழைத்துச் சென்றுள்ளீர்கள்! அற்புதம்!

    பதிலளிநீக்கு
  55. நெல்லி. மூர்த்தி கூறியது...

    //ஆகா.... எதிலோ ஆரம்பித்து எங்கெங்கோ பயணித்து இறுதியில் ஜப்பானுக்கு வந்துவிட்டீர்கள். தாங்கள் பயணித்தோதடன்றி எங்களையும் அழைத்துச் சென்றுள்ளீர்கள்! அற்புதம்!//
    நன்றி நெல்லி.மூர்த்தி.

    பதிலளிநீக்கு