சிறிது தூரம் சென்றதும் ஒரு பூங்காவைக் கண்டான்.அதன் உள்ளே சென்றபோது அங்கு ஒரு வயதான பெண்மணியைக் கண்டான்.ஒரு இருக்கையில் அமர்ந்து அங்கு சுற்றித் திரிந்த புறாக்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.சிறுவன் அவள் அருகில் சென்று அமர்ந்தான். அவன் தன் பையிலிருந்து போத்தலை எடுத்துத் தண்ணீர் குடிக்க எண்ணினான்.அந்தப் பெண்ணைப் பார்த்தால் பசியுடன் இருப்பது போல் தோன்றியது.ஒரு பாக்கட் பிஸ்கட்டை எடுத்து இரு பிஸ்கட்டுகளை அவளுக்குக் கொடுத்தான்.அவள் அதை நன்றியுடன் வாங்கிக் கொண்டு அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
அவள் சிரிப்பது அழகாக இருந்தது.அதை மீண்டும் பார்க்க வேண்டும் என அவனுக்குத் தோன்றியது.அவளுக்குக் குடிக்கத்தண்ணீர் கொடுத்தான்.அதை வாங்கிக்கொண்டு அவள் மீண்டும் சிரித்தாள்.சிறுவன் மிக மகிழ்ச்சியடைந்தான். மாலை வரை இருவரும் அங்கேயே அமர்ந்திருந்தனர்—பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டும், தண்ணீர் அருந்திக்கொண்டும்.
இருட்டத் தொடங்கியது.சிறுவன் வீடு திரும்ப எண்ணினான்.புறப்படும் முன் அந்தப் பெண்ணைக் கட்டிப் பிடித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.அந்தப் பெண்மணியும் தன் சிரிப்பின் மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.
வீட்டின் கதவைத் திறந்த சிறுவனின் தாய் அவன் முகத்தில் தெரியும் எல்லையற்ற மகிழ்ச்சியைக் கண்டாள்.அவள் கேட்டாள்”இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாயே,என்ன செய்தாய்?”
சிறுவன் சொன்னான்”இறு நானும் கடவுளும் சேர்ந்து பிஸ்கட் சாப்பிட்டோம்;நீர் அருந்தினோம்.இது வரை அப்படி ஒரு அழகான சிரிப்பை நான் பார்த்ததில்லை”
அதேபோல் அந்த வயதான பெண்ணும் எல்லையற்ற மகிழ்வுடன் வீடு திரும்பினாள். அவள் மகன் அவள் முகத்தில் தெரியும் அமைதியையும், ஒளியையும் பார்த்துக் கேட்டான் ”இவ்வளவு மகிழ்ச்சியடைய இன்று என்ன செய்தீர்கள்?”
அவள் சொன்னாள்” இன்று கடவுள் எனக்குப் பிஸ்கட்டும் ,தண்ணீரும் அளித்தார். இருவரும் சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டோம்.தெரியுமா!அவர் நான் நினைத்ததை விட மிக இளமையாய் இருக்கிறார்!”
நாம் பல நேரங்களில் ஒரு தொடுகை,ஒரு புன்னகை,ஒரு இனிய சொல்,ஒரு கவனம், ஒரு கேட்டல்,ஆகிய சிறு விஷயங்களை மறந்து விடுகிறோம் !நினைவு கொள்ளுங்கள்; அவை சக்தி வாய்ந்தவை;நம் வாழ்க்கையை,மற்றவர் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக ஆக்கக்கூடியவை.
உள்ளத்தில் அன்பிருந்தால் உருவத்தில் அழகு வரும்!
அருமை ஐயா அருமை
பதிலளிநீக்குஅன்பு பற்றி படிக்கும் பொழுது இந்த அன்பு உலகத்திற்கு உவகை ஏற்பட்டது
பகிர்வுக்கு நன்றி
தமிழ் மணம் இணையவில்லை பிறகு வருகிறேன் ஐயா
பதிலளிநீக்குM.R கூறியது...
பதிலளிநீக்கு//அருமை ஐயா அருமை
அன்பு பற்றி படிக்கும் பொழுது இந்த அன்பு உலகத்திற்கு உவகை ஏற்பட்டது
பகிர்வுக்கு நன்றி//
நன்றி ரமேஷ்.
மிக அருமை பாஸ்! நீங்கள் சொல்லும் குட்டிக்கதைகள் எல்லாமே!
பதிலளிநீக்குகுட்டிக் கதையில் கருத்து அதிகம்!!!காரணம் முதிர்ச்சி??
பதிலளிநீக்குஉள்ளத்தில் அன்பிருந்தால் உருவத்தில் அழகு வரும்!
பதிலளிநீக்குஅழகாகச் சொன்னீர்கள்.
அட்டகாசம் ஐயா..எளிமையாக அன்பின் மகத்துவத்தைச் சொல்லி விட்டீர்கள்.
பதிலளிநீக்குகதை வாயிலாக அன்பே கடவுளின் வடிவம் என்பதை நன்றாக விளக்கியுள்ளீர்கள் அன்பரே.
பதிலளிநீக்கு“படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
பதிலளிநீக்குநடமாடும் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே.”
கோவில் இருக்கும் இறைவனுக்கு ஆடம்பரமாகச் செலவு செய்து வழிபாடு செய்தால் அடியவர்களுக்குப் (வறியவர்களுக்கு) போய்ச் சேராது. அதே நேரம் வறியவர்களுக்கு செய்யும் உதவியானது நேரடியாக இறைவனுக்கு சென்று சேரும்..
தமிழ் மணம் 6
பதிலளிநீக்குஅன்பிற்கோர் அழகிய இலக்கணம் தந்துள்ளீர்கள் ஐயா...
இன்று கடவுள் அன்பே சிவம் என்கிற பதிவை இட்டிருந்தார்... நல்ல அன்பான விசயம் சொன்னவரும் அன்பால் கடவுள் தானே.... அன்பே சிவம் உண்மையான அன்பிற்கே என் இதயம் தவம்.....பகிர்வுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா....
பதிலளிநீக்குகடவுள் உங்களின் பதிவிலும் இருக்கிரார் அய்யா. அருமையான பதிவு
பதிலளிநீக்குநல்ல கரு ஐயா ...
பதிலளிநீக்குசொற்களின் வலிமையினையும்,
பதிலளிநீக்குஅன்பின் மூலம் மனமானது முழு நிறைவு பெற்று மகிழ்ச்சியடைவதையும் அழகாகச் சொல்லியிருக்கிறீங்க.
தமிழ் மணம் 12
பதிலளிநீக்கு>>ஒரு தொடுகை,ஒரு புன்னகை,ஒரு இனிய சொல்,ஒரு கவனம், ஒரு கேட்டல்,ஆகிய சிறு விஷயங்களை மறந்து விடுகிறோம் !நினைவு கொள்ளுங்கள்; அவை சக்தி வாய்ந்தவை;நம் வாழ்க்கையை,மற்றவர் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக ஆக்கக்கூடியவை.
பதிலளிநீக்குஆஹா அபாரம்...
//
பதிலளிநீக்குஉள்ளத்தில் அன்பிருந்தால் உருவத்தில் அழகு வரும்!
//
கண்டிப்பா
நல்ல பதிவு
பதிலளிநீக்குஎன்று என் வலையில்
பதிலளிநீக்குவிஜய் vs அஜித் யார் புத்திசாலி?
ஜீ... கூறியது...
பதிலளிநீக்கு//மிக அருமை பாஸ்! நீங்கள் சொல்லும் குட்டிக்கதைகள் எல்லாமே!//
நன்றி ஜீ!
மைந்தன் சிவா கூறியது...
பதிலளிநீக்கு//குட்டிக் கதையில் கருத்து அதிகம்!!!காரணம் முதிர்ச்சி??//
நன்றி சிவா!
முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
பதிலளிநீக்கு// உள்ளத்தில் அன்பிருந்தால் உருவத்தில் அழகு வரும்!
அழகாகச் சொன்னீர்கள்.//
நன்றி குணசீலன் அவர்களே.
செங்கோவி கூறியது...
பதிலளிநீக்கு//அட்டகாசம் ஐயா..எளிமையாக அன்பின் மகத்துவத்தைச் சொல்லி விட்டீர்கள்.//
நன்றி செங்கோவி.
முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
பதிலளிநீக்கு//கதை வாயிலாக அன்பே கடவுளின் வடிவம் என்பதை நன்றாக விளக்கியுள்ளீர்கள் அன்பரே.//
நன்றி.
முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
பதிலளிநீக்கு// “படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடும் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே.”
கோவில் இருக்கும் இறைவனுக்கு ஆடம்பரமாகச் செலவு செய்து வழிபாடு செய்தால் அடியவர்களுக்குப் (வறியவர்களுக்கு) போய்ச் சேராது. அதே நேரம் வறியவர்களுக்கு செய்யும் உதவியானது நேரடியாக இறைவனுக்கு சென்று சேரும்..//
அருமையான பாடல் மேற்கோளுடன் விளக்கியுள்ளீர்களையா!
மகேந்திரன் கூறியது...
பதிலளிநீக்கு//தமிழ் மணம் 6
அன்பிற்கோர் அழகிய இலக்கணம் தந்துள்ளீர்கள் ஐயா...//
நன்றி மகேந்திரன்.
மாய உலகம் கூறியது...
பதிலளிநீக்கு//இன்று கடவுள் அன்பே சிவம் என்கிற பதிவை இட்டிருந்தார்... நல்ல அன்பான விசயம் சொன்னவரும் அன்பால் கடவுள் தானே.... அன்பே சிவம் உண்மையான அன்பிற்கே என் இதயம் தவம்.....பகிர்வுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா....//
மிக்க நன்றி ராஜேஷ்!
மாய உலகம் கூறியது...
பதிலளிநீக்கு//தமிழ் மணம் 7//
magic 7!நன்றி!
A.R.ராஜகோபாலன் கூறியது...
பதிலளிநீக்கு//கடவுள் உங்களின் பதிவிலும் இருக்கிரார் அய்யா. அருமையான பதிவு//
சௌக்கியமா ராஜகோபாலன்?
நன்றி!
கந்தசாமி. கூறியது...
பதிலளிநீக்கு//நல்ல கரு ஐயா ...//
நன்றி கந்தசாமி!
நிரூபன் கூறியது...
பதிலளிநீக்கு// சொற்களின் வலிமையினையும்,
அன்பின் மூலம் மனமானது முழு நிறைவு பெற்று மகிழ்ச்சியடைவதையும் அழகாகச் சொல்லியிருக்கிறீங்க.//
நன்றி நிரூ!
FOOD கூறியது...
பதிலளிநீக்கு//இறைவனைத்தேடி எங்கெங்கோ ஓடுவதில் அர்த்தமில்லை என்பதை சொல்லும் பகிர்வு. நன்றி.//
நன்றி சார்!
M.R கூறியது...
பதிலளிநீக்கு//தமிழ் மணம் 12//
நன்றி ரமேஷ்!
சி.பி.செந்தில்குமார் கூறியது...
பதிலளிநீக்கு>>ஒரு தொடுகை,ஒரு புன்னகை,ஒரு இனிய சொல்,ஒரு கவனம், ஒரு கேட்டல்,ஆகிய சிறு விஷயங்களை மறந்து விடுகிறோம் !நினைவு கொள்ளுங்கள்; அவை சக்தி வாய்ந்தவை;நம் வாழ்க்கையை,மற்றவர் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக ஆக்கக்கூடியவை.
// ஆஹா அபாரம்...//
நன்றி சிபி!
"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
பதிலளிநீக்கு//
உள்ளத்தில் அன்பிருந்தால் உருவத்தில் அழகு வரும்!
//
//கண்டிப்பா//
நிச்சயமாக.
"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
பதிலளிநீக்கு//நல்ல பதிவு//
நன்றி.
"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
பதிலளிநீக்கு//என்று என் வலையில்
விஜய் vs அஜித் யார் புத்திசாலி?//
பார்க்கிறேன்.
Mano Saminathan கூறியது...
பதிலளிநீக்கு//வலைச்சரத்தில் ‘ சிறுகதை முத்துக்கள்’ என்ற பிரிவில் உங்களை இன்று அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
http://blogintamil.blogspot.com///
இங்கு ஒரு நன்றி.அங்கும் சொல்வேன் பல நன்றிகள்.
உப்பில்லாத பண்டம் குப்பையிலே...
பதிலளிநீக்குஅன்பில்லாதோர் மனமும்
அவ்விடமே...
அன்புக்கு நீங்கள் கொடுத்த இந்த விடயம்
என் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவளைத்துவிட்டதையா!!!.......
அவள் சிரிப்பது அழகாக இருந்தது.அதை மீண்டும் பார்க்க வேண்டும் என அவனுக்குத் தோன்றியது.அவளுக்குக் குடிக்கத்தண்ணீர் கொடுத்தான்.அதை வாங்கிக்கொண்டு அவள் மீண்டும் சிரித்தாள்.சிறுவன் மிக மகிழ்ச்சியடைந்தான். மாலை வரை இருவரும் அங்கேயே அமர்ந்திருந்தனர்—பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டும், தண்ணீர் அருந்திக்கொண்டும்.
இருட்டத் தொடங்கியது.சிறுவன் வீடு திரும்ப எண்ணினான்.புறப்படும் முன் அந்தப் பெண்ணைக் கட்டிப் பிடித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.அந்தப் பெண்மணியும் தன் சிரிப்பின் மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.
வீட்டின் கதவைத் திறந்த சிறுவனின் தாய் அவன் முகத்தில் தெரியும் எல்லையற்ற மகிழ்ச்சியைக் கண்டாள்.அவள் கேட்டாள்”இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாயே,என்ன செய்தாய்?”
சிறுவன் சொன்னான்”இறு நானும் கடவுளும் சேர்ந்து பிஸ்கட் சாப்பிட்டோம்;நீர் அருந்தினோம்.இது வரை அப்படி ஒரு அழகான சிரிப்பை நான் பார்த்ததில்லை”
மிக்க நன்றி ஐயா உணர்வு பூர்வமான இந்தப் பகிர்வுக்கு .வாழ்த்துக்கள் .
அம்பாளடியாள் கூறியது...
பதிலளிநீக்கு//உப்பில்லாத பண்டம் குப்பையிலே...
அன்பில்லாதோர் மனமும்
அவ்விடமே...
அன்புக்கு நீங்கள் கொடுத்த இந்த விடயம்
என் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவளைத்துவிட்டதையா!!!.......//
//மிக்க நன்றி ஐயா உணர்வு பூர்வமான இந்தப் பகிர்வுக்கு .வாழ்த்துக்கள் .//
நன்றி அம்பாளடியாள்!
மிக மிக அருமை... அன்பே சிவம்.. என்பது நிச்சயம் உண்மையான ஒன்று...
பதிலளிநீக்குவெங்கட் நாகராஜ் கூறியது...
பதிலளிநீக்கு//மிக மிக அருமை... அன்பே சிவம்.. என்பது நிச்சயம் உண்மையான ஒன்று...//
நன்றி வெங்கட்!
//உள்ளத்தில் அன்பிருந்தால் உருவத்தில் அழகு வரும்!//
பதிலளிநீக்குநன்றாக சொன்னீர்கள்.
இதைப்படித்தவுடன்‘இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறார் ஞானத்தங்கமே! அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே!’ என்ற பாடல் தான் நினைவுக்கு வந்தது. நல்ல கதையைத் தந்தமைக்கு நன்றி.
//உள்ளத்தில் அன்பிருந்தால் உருவத்தில் அழகு வரும்! //
பதிலளிநீக்குஅன்பின் பித்தன் அவர்களே !
என்னதொரு சொற்றொடர். அன்பினால் அழகு வரும் . அன்பே சிவ்ம் !
இடுகை நன்று - சிறுவனும் முதிய பெண்மணியும் சந்தித்து மாலை வரை உரையாடி - மகிழ்வுடன் - இருவரும் கடவுளைச் சந்தித்த உணர்வுடன் வீடு திரும்பியது - அருமை அருமை
நட்புடன் சீனா
வே.நடனசபாபதி சொன்னது…
பதிலளிநீக்கு//உள்ளத்தில் அன்பிருந்தால் உருவத்தில் அழகு வரும்!//
//நன்றாக சொன்னீர்கள்.
இதைப்படித்தவுடன்‘இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறார் ஞானத்தங்கமே! அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே!’ என்ற பாடல் தான் நினைவுக்கு வந்தது. நல்ல கதையைத் தந்தமைக்கு நன்றி.//
நன்றி ஐயா!
cheena (சீனா) கூறியது...
பதிலளிநீக்கு//உள்ளத்தில் அன்பிருந்தால் உருவத்தில் அழகு வரும்! //
// அன்பின் பித்தன் அவர்களே !
என்னதொரு சொற்றொடர். அன்பினால் அழகு வரும் . அன்பே சிவ்ம் !
இடுகை நன்று - சிறுவனும் முதிய பெண்மணியும் சந்தித்து மாலை வரை உரையாடி - மகிழ்வுடன் - இருவரும் கடவுளைச் சந்தித்த உணர்வுடன் வீடு திரும்பியது - அருமை அருமை//
நன்றி சீனா அவர்களே!