தொடரும் தோழர்கள்

திங்கள், செப்டம்பர் 26, 2011

பரல்கள்

ஒரு முறை அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் இங்கிலாந்து பிரதமர் சர்ச்சிலைச் சந்திக்கப் போனாராம் .அவர் சென்றபோது சர்ச்சில் குளியலறையில் இருந்தாராம்.அவர் குளித்துவிட்டு வருவதற்காக ரூஸ்வெல்ட் காத்துக் கொண்டிருந்தாராம். அவர் வெளியே இருப்பது தெரியாத சர்ச்சில்,குளித்துவிட்டு ஆடை ஏதுமின்றி வெளியே வந்தாராம்.ரூஸ்வெல்ட்டைப் பார்த்து ஒரு நொடி திடுக்கிட்ட சர்ச்சில் சொன்னாராம்--”இங்கிலாந்து பிரதமருக்கு,அமெரிக்க ஜனாதிபதியிடம் மறைப்பதற்கு ஏதுமில்லை!”
....................................

அமெரிக்க ஜெனரல் ஒருவரிடம் பேட்டியில் கேட்டார்களாம்9/11 தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளை மன்னிப்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என்று.
அவர் சொன்னாராம்”மன்னிப்பது கடவுளின் வேலை.அதற்காகக் கடவுளிடம் அவர்களை அனுப்புவது மட்டுமே நம் வேலை!”
......................................


வாழ்க்கையென்பது சுகமாக ,பிரச்சினை இன்றி இருக்கும்,அதற்குத் தொலைதூர இயக்கி போல் சில பொத்தான்கள் இருந்தால்--கோபத்துக்கு மௌனமாக்கும் பொத்தானும்,தவறுக்குப் பின்னே போகும் பொத்தானும், கஷ்டத்துக்கு விரைந்து முன் செல்லும் பொத்தானும்,மகிழ்ச்சியான நேரங்களுக்கு,இடைநிறுத்தும் பொத்தானும் இருந்தால்!

.......................................
திருமணம் என்பது
ஒரு புல்லாங்குழல்!
பல ஓட்டைகள்,
உள்ளே வெற்றிடம்!
ஆனால்
அதே ஓட்டைகளும்
அதே வெற்றிடமும்
இனிய நாதம் எழுப்பும்
நன்கு வாசிக்கத்தெரிந்தால்!

...................................................

58 கருத்துகள்:

  1. //அதே ஓட்டைகளும்
    அதே வெற்றிடமும்
    இனிய நாதம் எழுப்பும்
    நன்கு வாசிக்கத்தெரிந்தால்!//

    கவிதை மிக மிக அருமை. வாழ்த்துக்கள்!

    முதல் இரண்டு தகவல்கலையும் படித்தேன் இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  2. திருமணம், புல்லாங்குழல் ஒப்பீடு அருமை..

    பதிலளிநீக்கு
  3. அமெரிக்க ஜெனரல் ஒருவரிடம் பேட்டியில் கேட்டார்களாம் “9/11 தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளை மன்னிப்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என்று.
    அவர் சொன்னாராம்”மன்னிப்பது கடவுளின் வேலை.அதற்காகக் கடவுளிடம் அவர்களை அனுப்புவது மட்டுமே நம் வேலை!”

    ரொம்ப பிடித்திருந்தது...

    பதிலளிநீக்கு
  4. ”மன்னிப்பது கடவுளின் வேலை.அதற்காகக் கடவுளிடம் அவர்களை அனுப்புவது மட்டுமே நம் வேலை!”

    http://www.imdb.com/title/tt0328107/

    man on fire படத்தில் வரும் dialog அது... படத்தின் review படிக்க மேல் உள்ள இணைப்பை பார்க்கவும்

    பதிலளிநீக்கு
  5. -”இங்கிலாந்து பிரதமருக்கு,அமெரிக்க ஜனாதிபதியிடம் மறைப்பதற்கு ஏதுமில்லை!”/// ஹிஹி குப்புற விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டவில்லை )))

    பதிலளிநீக்கு
  6. ஹா ஹா ஹா ஹா முதல் இரண்டு தகவல்களும் மனசுவிட்டு சிரிச்சேன் ஹே ஹே ஹே ஹே...

    பதிலளிநீக்கு
  7. .......................................
    திருமணம் என்பது
    ஒரு புல்லாங்குழல்!
    பல ஓட்டைகள்,
    உள்ளே வெற்றிடம்!
    ஆனால்
    அதே ஓட்டைகளும்
    அதே வெற்றிடமும்
    இனிய நாதம் எழுப்பும்
    நன்கு வாசிக்கத்தெரிந்தால்!//

    சரியா சொன்னீங்க தல....

    பதிலளிநீக்கு
  8. திருமணம் என்பது
    ஒரு புல்லாங்குழல்!
    பல ஓட்டைகள்,
    உள்ளே வெற்றிடம்!
    ஆனால்
    அதே ஓட்டைகளும்
    அதே வெற்றிடமும்
    இனிய நாதம் எழுப்பும்
    நன்கு வாசிக்கத்தெரிந்தால்!//

    அழகா சொன்னீங்க அன்பரே!

    பதிலளிநீக்கு
  9. //இனிய நாதம் எழுப்பும்
    நன்கு வாசிக்கத்தெரிந்தால்!//

    ஆம் அய்யா! அனைத்து உறவுகளுக்கும் பொருந்தும்

    பதிலளிநீக்கு
  10. பரல்கள் ஒவ்வொன்றும் அருமை. அதிலும் அந்த கடைசி பரல்.... மிக அருமை. நன்கு வாசிக்கத்தெரிந்தால் வாழ்க்கையே இனிக்கும்.....

    பதிலளிநீக்கு
  11. முதல் இரண்டை மிகவும் ரசித்தேன்... இரண்டாவது சரிவர புரியவில்லை... நான்காவது புரிந்துக்கொள்ளும் வயதில்லை...

    பதிலளிநீக்கு
  12. திருமணம் குறித்த பதிவை மிகவும் இரசித்தேன் ஐயா..

    பதிலளிநீக்கு
  13. அருமையான தகவகள்/
    அதிலும் அந்த பஞ்ச் மன்னிப்பது கடவுளின் வேலை சூப்பர்.ஒருவேளை அந்த அதிகாரி டாகுத்தரு படங்கள் பாக்குறாரோ

    பதிலளிநீக்கு
  14. திருமணம் என்பது
    ஒரு புல்லாங்குழல்!
    பல ஓட்டைகள்,
    உள்ளே வெற்றிடம்!
    ஆனால்
    அதே ஓட்டைகளும்
    அதே வெற்றிடமும்
    இனிய நாதம் எழுப்பும்
    நன்கு வாசிக்கத்தெரிந்தால்!//


    அழகான விஷயம் ஐயா
    த்.ம.15

    பதிலளிநீக்கு
  15. வெறும் பரல்ல தங்கத்தில்
    பொதிந்த பரல்கள்
    அருமை!





    புலவர் சா இராமாநுசம்





    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  16. வே.நடனசபாபதி கூறியது...

    //அதே ஓட்டைகளும்
    அதே வெற்றிடமும்
    இனிய நாதம் எழுப்பும்
    நன்கு வாசிக்கத்தெரிந்தால்!//

    //கவிதை மிக மிக அருமை. வாழ்த்துக்கள்!

    முதல் இரண்டு தகவல்கலையும் படித்தேன் இரசித்தேன்!//
    நன்றி சபாபதி அவர்களே.

    பதிலளிநீக்கு
  17. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    //முதல் பரல்..//
    :)

    பதிலளிநீக்கு
  18. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    // திருமணம், புல்லாங்குழல் ஒப்பீடு அருமை..//
    நன்றி கருன்.

    பதிலளிநீக்கு
  19. ராக்கெட் ராஜா கூறியது...

    // திருமணம் கவிதை அருமை//
    நன்றி ராஜா.

    பதிலளிநீக்கு
  20. ரெவெரி கூறியது...

    அமெரிக்க ஜெனரல் ஒருவரிடம் பேட்டியில் கேட்டார்களாம் “9/11 தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளை மன்னிப்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என்று.
    அவர் சொன்னாராம்”மன்னிப்பது கடவுளின் வேலை.அதற்காகக் கடவுளிடம் அவர்களை அனுப்புவது மட்டுமே நம் வேலை!”

    // ரொம்ப பிடித்திருந்தது...//
    நன்றி ரெவெரி.

    பதிலளிநீக்கு
  21. suryajeeva கூறியது...

    ”மன்னிப்பது கடவுளின் வேலை.அதற்காகக் கடவுளிடம் அவர்களை அனுப்புவது மட்டுமே நம் வேலை!”

    //http://www.imdb.com/title/tt0328107/

    man on fire படத்தில் வரும் dialog அது... படத்தின் review படிக்க மேல் உள்ள இணைப்பை பார்க்கவும்//
    பார்த்தேன்.நன்றி சூர்ய ஜீவா.
    இதை ஜெனரல் நார்மன் ஷ்வார்ஸ்காஃப் சொன்னதாக நான் எங்கோ படித்தேன்.

    பதிலளிநீக்கு
  22. கந்தசாமி. கூறியது...

    -”இங்கிலாந்து பிரதமருக்கு,அமெரிக்க ஜனாதிபதியிடம் மறைப்பதற்கு ஏதுமில்லை!”/// //ஹிஹி குப்புற விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டவில்லை )))//
    நன்றி கந்தசாமி.

    பதிலளிநீக்கு
  23. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //ஹா ஹா ஹா ஹா முதல் இரண்டு தகவல்களும் மனசுவிட்டு சிரிச்சேன் ஹே ஹே ஹே ஹே...//
    சிரிப்பு,உடல்,மன ஆரோக்கியத்துக்கு நல்லது!

    பதிலளிநீக்கு
  24. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    .......................................
    திருமணம் என்பது
    ஒரு புல்லாங்குழல்!
    பல ஓட்டைகள்,
    உள்ளே வெற்றிடம்!
    ஆனால்
    அதே ஓட்டைகளும்
    அதே வெற்றிடமும்
    இனிய நாதம் எழுப்பும்
    நன்கு வாசிக்கத்தெரிந்தால்!//

    //சரியா சொன்னீங்க தல....//

    நன்றி மனோ!

    பதிலளிநீக்கு
  25. மாய உலகம் கூறியது...

    திருமணம் என்பது
    ஒரு புல்லாங்குழல்!
    பல ஓட்டைகள்,
    உள்ளே வெற்றிடம்!
    ஆனால்
    அதே ஓட்டைகளும்
    அதே வெற்றிடமும்
    இனிய நாதம் எழுப்பும்
    நன்கு வாசிக்கத்தெரிந்தால்!//

    //அழகா சொன்னீங்க அன்பரே!//
    நன்றி ராஜேஷ்.

    பதிலளிநீக்கு
  26. shanmugavel கூறியது...

    //இனிய நாதம் எழுப்பும்
    நன்கு வாசிக்கத்தெரிந்தால்!//

    //ஆம் அய்யா! அனைத்து உறவுகளுக்கும் பொருந்தும்//
    உண்மை.நன்றி சண்முகவேல்.

    பதிலளிநீக்கு
  27. வெங்கட் நாகராஜ் கூறியது...

    // பரல்கள் ஒவ்வொன்றும் அருமை. அதிலும் அந்த கடைசி பரல்.... மிக அருமை. நன்கு வாசிக்கத்தெரிந்தால் வாழ்க்கையே இனிக்கும்.....//
    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  28. Philosophy Prabhakaran கூறியது...

    //முதல் இரண்டை மிகவும் ரசித்தேன்... இரண்டாவது சரிவர புரியவில்லை... நான்காவது புரிந்துக்கொள்ளும் வயதில்லை...//
    இன்னும் வயசுக்கு வரல்லையோ?!
    நன்றி பிரபா.

    பதிலளிநீக்கு
  29. FOOD கூறியது...

    //அதே ஓட்டைகளும்
    அதே வெற்றிடமும்
    இனிய நாதம் எழுப்பும்
    நன்கு வாசிக்கத்தெரிந்தால்!//
    // சும்மா நச்சுன்னு.//
    நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  30. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

    //திருமணம் குறித்த பதிவை மிகவும் இரசித்தேன் ஐயா..//
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  31. K.s.s.Rajh கூறியது...

    //அருமையான தகவகள்/
    அதிலும் அந்த பஞ்ச் மன்னிப்பது கடவுளின் வேலை சூப்பர்.ஒருவேளை அந்த அதிகாரி டாகுத்தரு படங்கள் பாக்குறாரோ//
    இருக்குமோ?!
    நன்றி ராஜ்.

    பதிலளிநீக்கு
  32. M.R கூறியது...

    திருமணம் என்பது
    ஒரு புல்லாங்குழல்!
    பல ஓட்டைகள்,
    உள்ளே வெற்றிடம்!
    ஆனால்
    அதே ஓட்டைகளும்
    அதே வெற்றிடமும்
    இனிய நாதம் எழுப்பும்
    நன்கு வாசிக்கத்தெரிந்தால்!//


    //அழகான விஷயம் ஐயா
    த்.ம.15//
    நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  33. புலவர் சா இராமாநுசம் கூறியது...

    //வெறும் பரல்ல தங்கத்தில்
    பொதிந்த பரல்கள்
    அருமை!//
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  34. விக்கியுலகம் கூறியது...

    //அண்ணே கலக்கல் விஷயங்கள்!//
    நன்றி விக்கி.

    பதிலளிநீக்கு
  35. அமெரிக்க ஜெனரல் பேட்டி அமோகம்.

    பதிலளிநீக்கு
  36. //Philosophy Prabhakaran கூறியது...
    நான்காவது புரிந்துக்கொள்ளும் வயதில்லை...//

    உங்களால புரிஞ்சிக்க முடியலையா??? நம்பிட்டோம் தம்பி..

    பதிலளிநீக்கு
  37. வாழ்க்கையென்பது சுகமாக ,பிரச்சினை இன்றி இருக்கும்,அதற்குத் தொலைதூர இயக்கி போல் சில பொத்தான்கள் இருந்தால்--கோபத்துக்கு மௌனமாக்கும் பொத்தானும்,தவறுக்குப் பின்னே போகும் பொத்தானும், கஷ்டத்துக்கு விரைந்து முன் செல்லும் பொத்தானும்,மகிழ்ச்சியான நேரங்களுக்கு,இடைநிறுத்தும் பொத்தானும் இருந்தால்!

    மிகச்சிறந்த சிந்தனை!

    பதிலளிநீக்கு
  38. திருமணம் என்பது
    ஒரு புல்லாங்குழல்!
    பல ஓட்டைகள்,
    உள்ளே வெற்றிடம்!
    ஆனால்
    அதே ஓட்டைகளும்
    அதே வெற்றிடமும்
    இனிய நாதம் எழுப்பும்
    நன்கு வாசிக்கத்தெரிந்தால்!//
    பாராட்டுகள் ஒரு சிறந்த சிந்தனை மறைப்பதற்கில்லை இப்படியா ? நல்ல நறுக்கு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  39. இல்வாழ்க்கைத் தத்துவத்தை இலகுவாக
    உணரவைத்த கவிதை வரிகள் அருமை!.....
    மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  40. நகைச்சுவை துணுக்குகளும்
    கவிதைகளும் மிக மிக அருமை

    பதிலளிநீக்கு
  41. ! சிவகுமார் ! கூறியது...

    //அமெரிக்க ஜெனரல் பேட்டி அமோகம்.//
    நன்றி சிவகுமார்.

    பதிலளிநீக்கு
  42. ! சிவகுமார் ! கூறியது...

    //Philosophy Prabhakaran கூறியது...
    நான்காவது புரிந்துக்கொள்ளும் வயதில்லை...//

    // உங்களால புரிஞ்சிக்க முடியலையா??? நம்பிட்டோம் தம்பி..//

    ஹா,ஹா.

    பதிலளிநீக்கு
  43. எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் கூறியது...

    வாழ்க்கையென்பது சுகமாக ,பிரச்சினை இன்றி இருக்கும்,அதற்குத் தொலைதூர இயக்கி போல் சில பொத்தான்கள் இருந்தால்--கோபத்துக்கு மௌனமாக்கும் பொத்தானும்,தவறுக்குப் பின்னே போகும் பொத்தானும், கஷ்டத்துக்கு விரைந்து முன் செல்லும் பொத்தானும்,மகிழ்ச்சியான நேரங்களுக்கு,இடைநிறுத்தும் பொத்தானும் இருந்தால்!

    //மிகச்சிறந்த சிந்தனை!//

    நன்றி ரஜினி பிரதாப் சிங்.

    பதிலளிநீக்கு
  44. மாலதி கூறியது...

    திருமணம் என்பது
    ஒரு புல்லாங்குழல்!
    பல ஓட்டைகள்,
    உள்ளே வெற்றிடம்!
    ஆனால்
    அதே ஓட்டைகளும்
    அதே வெற்றிடமும்
    இனிய நாதம் எழுப்பும்
    நன்கு வாசிக்கத்தெரிந்தால்!//
    // பாராட்டுகள் ஒரு சிறந்த சிந்தனை மறைப்பதற்கில்லை இப்படியா ? நல்ல நறுக்கு பாராட்டுகள்//

    ? நன்றி மாலதி.

    பதிலளிநீக்கு
  45. அம்பாளடியாள் கூறியது...

    இல்வாழ்க்கைத் தத்துவத்தை இலகுவாக
    உணரவைத்த கவிதை வரிகள் அருமை!.....
    மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .
    அம்பாளடியாள் கூறியது...

    தமிழ்மணம் 19

    நன்றி அம்பாளடியாள்.

    பதிலளிநீக்கு
  46. Ramani கூறியது...

    //நகைச்சுவை துணுக்குகளும்
    கவிதைகளும் மிக மிக அருமை//
    நன்றி ரமணி.

    பதிலளிநீக்கு
  47. வணக்கம் ஐயா, நலமா

    விவாத மேடையில் ஆணி கொஞ்சம் அதிகமாகியதால் பிசியாகிட்டேன்.

    மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  48. டைம்மிங் காமெடி ஜோக்குகளோடு, தத்துவம் கலந்த திருமணம் பற்றிய கவிதையினையும் தந்திருக்கிறீங்க.

    பரல்கள் அருமை ஐயா.

    பதிலளிநீக்கு
  49. நிரூபன் சொன்னது…

    // வணக்கம் ஐயா, நலமா

    விவாத மேடையில் ஆணி கொஞ்சம் அதிகமாகியதால் பிசியாகிட்டேன்.

    மன்னிக்கவும்.//
    நேரம் கிடைக்கும்போது வாருங்கள் நிரூ!இதில் மன்னிப்பெதற்கு?!

    பதிலளிநீக்கு
  50. நிரூபன் கூறியது...

    //டைம்மிங் காமெடி ஜோக்குகளோடு, தத்துவம் கலந்த திருமணம் பற்றிய கவிதையினையும் தந்திருக்கிறீங்க.

    பரல்கள் அருமை ஐயா.//

    நன்றி நிரூ.

    பதிலளிநீக்கு
  51. நகைச்சுவை துணுக்குகளும்...
    கவிதைகளும் மிக அருமை

    பதிலளிநீக்கு
  52. மகேந்திரன் சொன்னது…

    //நகைச்சுவை துணுக்குகளும்...
    கவிதைகளும் மிக அருமை//
    நன்றி மகேந்திரன்.

    பதிலளிநீக்கு
  53. ஓட்டைக் குழல் எல்லாவற்றுக்குமே பொருந்துமோ?

    பதிலளிநீக்கு
  54. அப்பாதுரை கூறியது...

    //ஓட்டைக் குழல் எல்லாவற்றுக்குமே பொருந்துமோ?//
    ஓ!
    நன்றி.

    பதிலளிநீக்கு