தொடரும் தோழர்கள்

வெள்ளி, செப்டம்பர் 09, 2011

ஒரு பதிவர் மனம் திறக்கிறார்!

நான் ஆகஸ்டு 2008 இல் இப்பதிவை ஆரம்பித்தேன்.என் எண்ண ஓட்டங்களுக்கு ஒரு வடிகால் வேண்டும் என்ற நோக்கில்,ஆரம்பித்தேன்.அப்போதெல்லாம் ஆத்ம திருப்தி ஒன்றே என் நோக்கமாக இருந்தது.தமிழ் மணத்தில் மட்டும் இணைத் திருந்தேன்.பின்னூட்டங்களைப் பற்றிக் கவலைப் பட்டதில்லை.ஓட்டுப் போடும் முறை அப்போது இருந்ததா எனத் தெரியாது.இருந்திருந்தாலும் நான் கவலைப் பட்டிருக்க மாட்டேன்.எழுதுவது ஒன்றே என் நோக்கமாக இருந்தது.

எப்போதெல்லாம் எழுத வேண்டும் என்ற உந்துதல் என் மனதில் எழுந்ததோ அப்போதெல்லாம் எழுதினேன்.எதையாவது எழுதித் தீர வேண்டும் என்ற வெறி இருந்ததில்லை.வாசகர் வருகை பற்றிக் கவலை அடைந்ததில்லை.2008 இல் 26 பதிவுகள்,2009 இல் 22 பதிவுகள், 2010 செப்டெம்பர் வரை 6 பதிவுகள்-அவ்வளவே.

2010 நவம்பரில் தீவிரமாக எழுதத் தொடங்கினேன்.வருகைகளைப் பார்க்கத் தொடங்கினேன்.பின்னூட்டங்களை எதிர் நோக்கத் தொடங்கினேன்.அதிக அளவு பின்னூட்டங்கள்- வராத போது,நவம்பர் 18 இல்" உங்கள் பதிவில் அதிகப் பின்னூட்டங்கள் வர என்ன செய்ய வேண்டும் "என்ற நகைச்சுவைப் பதிவு எழுதினேன் .சில பதிவர்கள் விளக்கம் அளித்தார்கள்.அதில் முதல் பின்னூட்டம் அளித்தவர் LK அவர்கள்.அதன் பின் பல பதிவுகளுக்கும் சென்று படித்து என்ன நடக்கிறது எனக் கவனித்தேன். அதன் விளைவே நவ.21 தேதியிட்ட என் பதிவு " உங்கள் பதிவில் அதிகப் பின்னூட்டங்கள் வர என்ன செய்ய வேண்டும்?(பாகம்-2).

அப்போது முடிவு செய்தேன்,சில இலக்குகளை எட்ட வேண்டும் என.அன்றைய நிலையில் வருகை எண்ணிக்கை சுமார் 4500 ஆக இருந்தது.தமிழ் மணம் ரேங்க் தெரியாது-எங்கோ தொலை தூரத்தில் இருந்திருக்கும்.

பதிவை இண்ட்லி,தமிழ் 10,உலவு,திரட்டி,தமிழ்வெளி ஆகியவற்றில் இணத்தேன். ஓட்டுப் பட்டைகள் சேர்த்தேன். எழுதத் தொடங்கினேன். உண்மையாகச் சொல்வ தென்றால் பந்தயத்தில் ஓடத் துவங்கினேன்!

இன்று வருகை எண்ணிக்கை 41400 த்தைத் தாண்டி விட்டது.தமிழ் மணம் டிராஃபிக் ரேங்க் 50.(அதுதான் என் லிமிட் போலிருக்கிறது!).இந்த வாரம் தமிழ்மணம் டாப் 20 யில் நான்காம் இடத்தில் இருக்கிறேன்.இந்த ஆண்டு இது வரை 125 இடுகைகள்!


I have proved a point to myself.

இனிப் பந்தயத்தில் ஓட வேண்டாம்.

இதற்குப் பொருள் எழுதுவதை நிறுத்தப் போகிறேன் என்பதல்ல.அப்படி நினைத்து யாரும் மகிழ வேண்டாம்!

எழுதுவேன்;தொடர்ந்து எழுதுவேன்.

உள்ளத்தில் எண்ணம் பீறிட்டுக் கிளம்பும்போது எழுதுவேன்.

எழுத வேண்டும் என்ற அரிப்பு ஏற்படும்போது எழுதுவேன்.

ஆத்ம திருப்திக்காக எழுதுவேன்.

எனக்காக எழுதுவேன்;உங்களுக்காக எழுதுவேன்.

ஆனால் ஹிட்டுக்காக எழுத மாட்டேன்.

ஓட்டுக்காக எழுத மாட்டேன்.

இந்த ஓட்டத்தில் என் மற்றப் பதிவை அலட்சியம் செய்து விட்டேன்.இனி அங்கும் எழுத வேண்டும்.

ஒரு தாய்க்குத் தன் குழந்தைகள் எல்லோரும் ஒன்றுதான்!ஆயினும் அதிலும் கொஞ்சம் அதிகப் பிரியம் ஒருவரிடம் இருக்கும்.

எனக்கு என் பதிவுகள் அனைத்தும் பிடிக்கும்.(எனக்கே பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது?!)

இது வரை எழுதியவற்றில் எனக்குப் பிடித்த சில பழைய பதிவுகளை தேர்ந்தெடுத்து அவற்றை மீள் பதிவாக அளிக்கப் போகிறேன்.

படித்துப்பாருங்கள் நேரம் இருந்தால்!

53 கருத்துகள்:

  1. எழுத வேண்டும் என்ற அரிப்பு ஏற்படும்போது எழுதுவேன்.//


    அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்....

    பதிலளிநீக்கு
  2. அய்யய்யோ தல'க்கு கொலைவெறி தலைக்கு மேலே வந்துட்டுதுங்கோ, ஓடுங்கலேய் ஓடுங்கலேய் மக்கா...

    பதிலளிநீக்கு
  3. அதோ சிபி தலையில துண்டைப் போட்டுட்டு ஓடுறான் ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
  4. ஆத்ம திருப்தியுடன் எழுதும் எல்லோரும் அடையும் அதே முடிவை நீங்களும் அடைந்ததில் எனக்கு ஆச்சரியம் இல்லை.

    Welcome to Elite group!

    பதிலளிநீக்கு
  5. எழுங்க தல...

    எல்லாம் நம்முடையதுதான்...

    எல்லாவற்றுக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. தொடருங்கள் தங்கள் ஆத்ம திருப்தியை தொடர்கிறேன் வாசிக்க

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சார்! கும்புடுறேனுங்க!

    வலையுலகில் 3 வருஷங்களை நிறைவு செய்து, 4 வது ஆண்டில் வெற்றி நடை போடும் உங்களை வாழ்த்த வயதில்லை! ஆனால் வணங்குகிறேன்!

    இந்தப் பதிவை மிக அருமையாக எழுதியிருக்கீங்க! தெளிவான நடை! மெல்லிய நீரோட்டம் போல இருக்கி்ற்து!

    இப்படி, குழப்பமில்லாத நடையில் எழுத வேண்டுமென முயற்சி செய்கிறேன்! முடியவில்லை!

    ஐயா, உங்கள் பணி தொடர வேண்டும்! தொடர்ந்து எழுதுங்கள்! உங்கள் எழுத்துக்கள் உங்களுக்கு ஆத்ம திருப்தியைத் தரட்டும்!

    நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  8. ஒட்டப்பந்தயத்தில் வெற்றி பெற ஓடிக்கொண்டுதான் இருக்கவேண்டும். நிறுத்தக்கூடாது. ஓடுங்கள் ஓடுங்கள் முதல் இடத்தை பிடிக்கும் வரை. இது உங்கள் பேரில் உள்ள அன்பால், மனம் திறக்கும் ஒரு சக பதிவரின் வேண்டுகோள்!

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துக்கள் ஐயா ..தொடர்ந்து எழுதுங்கள் ...

    பதிலளிநீக்கு
  10. மீள் பதிவை ஆவலோடு
    எதிர் பார்கிறேன்
    பழைய பித்தரை
    பார்க வேண்டும்
    வருக !விரைவில் தருக!

    த.ஓ10

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  11. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    எழுத வேண்டும் என்ற அரிப்பு ஏற்படும்போது எழுதுவேன்.//


    //அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்....//

    :)

    பதிலளிநீக்கு
  12. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //அய்யய்யோ தல'க்கு கொலைவெறி தலைக்கு மேலே வந்துட்டுதுங்கோ, ஓடுங்கலேய் ஓடுங்கலேய் மக்கா...//
    நில்லுங்க!

    பதிலளிநீக்கு
  13. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //அதோ சிபி தலையில துண்டைப் போட்டுட்டு ஓடுறான் ஹா ஹா ஹா...//
    அவரையேன் இழுக்கறீங்க!

    பதிலளிநீக்கு
  14. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    //போடுங்க .. படிக்கிறோம்..//

    நன்றி கருன்!

    பதிலளிநீக்கு
  15. செங்கோவி கூறியது...

    //ஆத்ம திருப்தியுடன் எழுதும் எல்லோரும் அடையும் அதே முடிவை நீங்களும் அடைந்ததில் எனக்கு ஆச்சரியம் இல்லை.

    Welcome to Elite group!//

    நன்றி செங்கோவி!

    பதிலளிநீக்கு
  16. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    //எழுங்க தல...

    எல்லாம் நம்முடையதுதான்...

    எல்லாவற்றுக்கும் வாழ்த்துக்கள்..//
    நன்றி சௌந்தர்.

    பதிலளிநீக்கு
  17. M.R கூறியது...

    // தொடருங்கள் தங்கள் ஆத்ம திருப்தியை தொடர்கிறேன் வாசிக்க//
    நன்றி ரமேஷ்!

    பதிலளிநீக்கு
  18. ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...

    //வணக்கம் சார்! கும்புடுறேனுங்க!

    வலையுலகில் 3 வருஷங்களை நிறைவு செய்து, 4 வது ஆண்டில் வெற்றி நடை போடும் உங்களை வாழ்த்த வயதில்லை! ஆனால் வணங்குகிறேன்!

    இந்தப் பதிவை மிக அருமையாக எழுதியிருக்கீங்க! தெளிவான நடை! மெல்லிய நீரோட்டம் போல இருக்கி்ற்து!

    இப்படி, குழப்பமில்லாத நடையில் எழுத வேண்டுமென முயற்சி செய்கிறேன்! முடியவில்லை!

    ஐயா, உங்கள் பணி தொடர வேண்டும்! தொடர்ந்து எழுதுங்கள்! உங்கள் எழுத்துக்கள் உங்களுக்கு ஆத்ம திருப்தியைத் தரட்டும்!

    நன்றி ஐயா!//

    மிக்க நன்றி மணி!

    பதிலளிநீக்கு
  19. அப்பாதுரை கூறியது...

    //புரிகிறது.//

    நன்றி அப்பாதுரை!

    பதிலளிநீக்கு
  20. வே.நடனசபாபதி கூறியது...

    //ஒட்டப்பந்தயத்தில் வெற்றி பெற ஓடிக்கொண்டுதான் இருக்கவேண்டும். நிறுத்தக்கூடாது. ஓடுங்கள் ஓடுங்கள் முதல் இடத்தை பிடிக்கும் வரை. இது உங்கள் பேரில் உள்ள அன்பால், மனம் திறக்கும் ஒரு சக பதிவரின் வேண்டுகோள்!//
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  21. கந்தசாமி. கூறியது...

    //வாழ்த்துக்கள் ஐயா ..தொடர்ந்து எழுதுங்கள் ...//
    நன்றி கந்தசாமி.

    பதிலளிநீக்கு
  22. புலவர் சா இராமாநுசம் கூறியது...

    //மீள் பதிவை ஆவலோடு
    எதிர் பார்கிறேன்
    பழைய பித்தரை
    பார்க வேண்டும்
    வருக !விரைவில் தருக!

    த.ஓ10//
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  23. விக்கியுலகம் கூறியது...

    //ரைட்டு அண்ணே!//
    நன்றி விக்கி!

    பதிலளிநீக்கு
  24. ஆத்ம திருப்தி ஒன்றுதான் முக்கியம்... .. ஓட்டு, கருத்துரை எல்லாம் அதற்கடுத்து தான்....

    தங்களது முந்தைய பதிவுகளைப் படிக்க ஆவலுடன் இருக்கிறேன்...

    தொடர்ந்து பதிவிடுங்கள்.....

    பதிலளிநீக்கு
  25. மீள்பதிவுகளை எதிர்பார்க்கிறோம் ஐயா

    பதிலளிநீக்கு
  26. பாலைவனம் கடந்துவிட்டேன்.. பாதங்களை ஆறவிடு.... அருமை ஐயா

    பதிலளிநீக்கு
  27. முன்னவர்கள் சொன்னது போல நிற்காமல் ஓடுங்கள்...

    பதிலளிநீக்கு
  28. மெல்லென பாயும் தண்ணீர் கல்லை உருவப்பையும் எண்டு சொல்லுவாங்க

    பதிலளிநீக்கு
  29. ஹிட்சுக்காக எழுத வேண்டாம். எழுதுற எல்லாமே ஹிட் ஆவனும். வாழ்த்துகள் சார்!

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் ஐயா,
    உங்களைப் போன்ற பெரியவர்களின் உள்ள உறுதியினைப் பார்க்கும் போது,
    நாம் இன்னும் எழுத வேண்டும் எனும் ஆவல் எழுகின்றது,

    தொடர்ந்தும் எழுதுங்கள் ஐயா.

    நாமிருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  31. உங்கள் பழைய பதிவுகளை நேரமிருக்கும் போது கண்டிப்பாகப் படித்துப் பார்க்கிறேன் ஐயா.

    பதிலளிநீக்கு
  32. இன்னும் இலக்கை முழுமையாக அடையவில்லையே ... முயன்றால் நிச்சயம் இறுதியாக முதல் இடத்தை பிடிப்பீர்கள் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது . இன்னும் 49 படிகள் தானே . வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  33. ஆத்ம திருப்திக்காக எழுதுவேன்.

    எனக்காக எழுதுவேன்;உங்களுக்காக எழுதுவேன்.


    எழுதுங்க.. உங்களுக்காகவும்.. எங்களுக்காகவும்.. எழுத்திற்காகவும்.

    பதிலளிநீக்கு
  34. பதிவுகளின் எண்ணிக்கையை விட தரத்திற்க்கும், மன நிறைவிற்க்கும் முக்கியத்துவம் தருவதனை நாங்கள் வரவேற்கின்றோம்!

    பதிலளிநீக்கு
  35. Vasu சொன்னது…

    //இன்னும் இலக்கை முழுமையாக அடையவில்லையே ... முயன்றால் நிச்சயம் இறுதியாக முதல் இடத்தை பிடிப்பீர்கள் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது . இன்னும் 49 படிகள் தானே//
    நன்றி வாசு.

    பதிலளிநீக்கு
  36. ரிஷபன் கூறியது...

    ஆத்ம திருப்திக்காக எழுதுவேன்.

    எனக்காக எழுதுவேன்;உங்களுக்காக எழுதுவேன்.


    //எழுதுங்க.. உங்களுக்காகவும்.. எங்களுக்காகவும்.. எழுத்திற்காகவும்.//
    நன்றி ரிஷபன்.

    பதிலளிநீக்கு
  37. நெல்லி. மூர்த்தி கூறியது...

    // பதிவுகளின் எண்ணிக்கையை விட தரத்திற்க்கும், மன நிறைவிற்க்கும் முக்கியத்துவம் தருவதனை நாங்கள் வரவேற்கின்றோம்!//

    நன்றி மூர்த்தி!

    பதிலளிநீக்கு