நட்சத்திர வாரத்தின் கடைசி நாள் இன்று!
ஒரு சில முணு முணுப்புகள் என் காதில் விழுகின்றன!
“என்ன இந்த ஆளு ஆறு நாட்களாக சீரியஸ் ஆக ஏதேதோ நீதி போதனை யெல்லாம் பண்ணிடிருக்காரு ‘ என்று.
எனவே இன்று காலை ஜாலியாக ஒரு பதிவு!
.........................................
பஞ்சாப்பைச் சேர்ந்த ஒரு அறைகலன்(furniture) வணிகனான ஒரு சர்தார்ஜி,தன் வியாபாரத்தைப் பெருக்க வேண்டி,பாரீஸ் சென்று புதிய அறை கலன்கள் வாங்கத் தீர்மானித்தார்.
பாரீசுக்குச் சென்று,பல கடைகளைப் பார்வையிட்டு,ஒரு இடத்தில் கிடைத்த அறை கலன்கள் தன் ஊரில் நன்கு விற்பனையாகும் என்று தீர்மானித்து அனுப்பாணை கொடுத்து விட்டுப் பின் அன்றைய தினத்தைக் கொண்டாடத் தீர்மானித்தார்.
ஒரு மதுக்கூடம் சென்று மது வரவழைத்து அருந்த ஆரம்பித்தார்.சிறிது நேரத்தில் ஒரு அழகிய இளம் பெண் வந்து அருகில் நிற்கவும் அவளை அமருமாறு சைகை செய்தார். அவளிடம் அவர் இந்தி,ஆங்கிலம், பஞ்சாபி என்று பல மொழியில் பேசியும் அவளுக்குப் புரியவில்லை.கடைசியில் அவர் ஒரு குறுந்துணி எடுத்து அதில் ஒரு மதுக்கோப்பையின் படம் வரைந்து அவளிடம் காட்ட,அவள் தலையசைத்தாள்.உடனே அவளுக்கும் மது வரவழைத்தார்.
குடித்து முடித்த பின் மீண்டும் ஒரு தட்டில் உணவு இருப்பது போல் வரைந்து காட்ட அவள் தலையசைத்தாள்.
அங்கிருந்து புறப்பட்டு ஒரு உனவு விடுதிக்குச் சென்றனர்.அங்கு பலர் நடனம் ஆடிக்கொண்டிருந்தனர்.இருவரும் சாப்பிட்டு முடித்த பின் சர்தார்,ஒரு குறுந் துணியில் இருவர் ஆடுவது போல் படம் வரைந்து காட்ட அவள் தலையசைத்தாள். இருவரும் நடனமாடினர்.
ஆடி முடித்து இருக்கைக்குத் திரும்பியதும் அப்பெண் ஒரு கட்டிலின் படம் வரைந்து சர்தாரிடம் காட்டினாள்.
சர்தார்ஜி இன்று வரை யோசித்துக் கொண்டிருக்கிறார்,தான் ஒரு அறைகலன் (furniture) வியாபாரி என்பது அவளுக்கு எப்படித் தெரிந்தது என்று!!
இது எப்படி இருக்கு?!
.........................................
........... கடைசிநாள்.எனவே மாலையும் ஒரு முக்கியமான பதிவு உண்டு!அதை வலையேற்றி விட்டுத்தான்’ யூத் ’பதிவர் சந்திப்புக்குக்குப் போக வேண்டும்!
நானும் யூத் தானுங்கோ!
ஒத்திக்கிரம் பாஸ்..நீங்களும் ஜூத் தான்!!
பதிலளிநீக்குஇந்த Joke ஐ திரு குஷ்வந்த் சிங் அவர்கள் சொன்னதாக கேள்விப்பட்டிருக்கிறேன். சர்தார்ஜிகளைப்பற்றி எவ்வளவு கிண்டல் செய்தாலும் அவர்கள் அதை வேடிக்கையாகவே எடுத்துக்கொள்வார்கள்.அந்த மனப் பக்குவம் இந்தியாவில் வேறு யாருக்கும் இல்லை என நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஒரு வாரம் நட்சத்திர பதிவராக எங்களை மகிழ்வித்தமைக்கு நன்றி.
அ (ட)ப்பாவி சர்தார் !
பதிலளிநீக்குஅறைகலன்(furniture) /
பதிலளிநீக்குஅழகான சொல். அறிய வைத்தமைக்கு நன்றி.
பேதமை காரணமாகத் தோன்றிய நகை நன்றாக இருந்தது ஐயா.
பதிலளிநீக்குஇன்று என் வலையிலும் நகைதான்!
பதிலளிநீக்கு“இலக்கிய நகை“ காலம் அனுமதிக்கும் போது வாருங்கள் அன்பரே.
இனிய காலை வணக்கம் ஐயா...
பதிலளிநீக்குசர்தாஜிக்கு இது கூடப் புரியாமலா...
அவ்.......
உங்களின் பதிவர் சந்திப்பு இனிமையாக அமைய என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிலளிநீக்கு”நானும் யூத் தான்!” உண்மை...
பதிலளிநீக்குநகைச்சுவை பகிர்வு நன்றாகவே இருக்கிறது. சர்தார்ஜிகளை வைத்து எத்தனை ஜோக்குகள் சொன்னாலும் அவர்கள் கோவித்துக் கொள்வதில்லை.. :)
மாலை வரும் முக்கிய பதிவு என்னவோ? ஆர்வம் மேலிடுகிறது..
Ha . . Ha . . Super joke. . .
பதிலளிநீக்குI am also youth
பதிலளிநீக்குதமிழ்மணம் 9
பதிலளிநீக்குநட்சத்திர வாரத்தின் கடைசி பதிவு
புதிரான நகைச்சுவைப் பதிவு.
அழகு.
நீங்க எப்பவுமே யூத் பதிவர் தான். அதனால இன்னைக்கு நடக்கப் போற யூத் பதிவர் சந்திப்புக்கு உன்களை அன்போடு அழைக்கிறேன் ...
பதிலளிநீக்குநட்சத்திர வாரத்தை சந்தோசமாக முடித்தற்க்கு மிக்க நன்றி....
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
தமிழ்மணத்தி்ல 4-ம் இடம் பிடித்ததற்க்கு...
மைந்தன் சிவா கூறியது...
பதிலளிநீக்கு//ஒத்திக்கிரம் பாஸ்..நீங்களும் ஜூத் தான்!!//
:) நன்றி சிவா!
வே.நடனசபாபதி கூறியது...
பதிலளிநீக்கு//இந்த Joke ஐ திரு குஷ்வந்த் சிங் அவர்கள் சொன்னதாக கேள்விப்பட்டிருக்கிறேன். சர்தார்ஜிகளைப்பற்றி எவ்வளவு கிண்டல் செய்தாலும் அவர்கள் அதை வேடிக்கையாகவே எடுத்துக்கொள்வார்கள்.அந்த மனப் பக்குவம் இந்தியாவில் வேறு யாருக்கும் இல்லை என நினைக்கிறேன்.
ஒரு வாரம் நட்சத்திர பதிவராக எங்களை மகிழ்வித்தமைக்கு நன்றி.//
நன்றி சார்!
koodal bala கூறியது...
பதிலளிநீக்கு// அ (ட)ப்பாவி சர்தார் !//
ஹா,ஹா!
நன்றி பாலா!
இராஜராஜேஸ்வரி கூறியது...
பதிலளிநீக்கு//அறைகலன்(furniture) /
அழகான சொல். அறிய வைத்தமைக்கு நன்றி.//
நன்றி இராஜராஜேஸ்வரி!
முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
பதிலளிநீக்கு//பேதமை காரணமாகத் தோன்றிய நகை நன்றாக இருந்தது ஐயா.//
நன்றி ஐயா!
முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
பதிலளிநீக்கு//இன்று என் வலையிலும் நகைதான்!
“இலக்கிய நகை“ காலம் அனுமதிக்கும் போது வாருங்கள் அன்பரே.//
கரும்பு தின்னக் கூலியா?! பார்க்கிறேன்.
// சர்தார்ஜி இன்று வரை யோசித்துக் கொண்டிருக்கிறார்,தான் ஒரு அறைகலன் (furniture) வியாபாரி என்பது அவளுக்கு எப்படித் தெரிந்தது என்று!! //
பதிலளிநீக்கும்..ஜோக் பரவாயில்லை.
// ’ யூத் ’பதிவர் சந்திப்புக்குக்குப் போக வேண்டும்! ...நானும் யூத் தானுங்கோ! //
ஹா..ஹா..அய்யோ...அம்மா...ஹா..ஹா..முடியலை..செம ஜோக் சார்!
நிரூபன் கூறியது...
பதிலளிநீக்கு//இனிய காலை வணக்கம் ஐயா...
சர்தாஜிக்கு இது கூடப் புரியாமலா...
அவ்.......//
one track mind!
நன்றி நிரூ!
நிரூபன் கூறியது...
பதிலளிநீக்கு//உங்களின் பதிவர் சந்திப்பு இனிமையாக அமைய என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.//
நன்றி நிரூபன்!
வெங்கட் நாகராஜ் கூறியது...
பதிலளிநீக்கு//”நானும் யூத் தான்!” உண்மை...
நகைச்சுவை பகிர்வு நன்றாகவே இருக்கிறது. சர்தார்ஜிகளை வைத்து எத்தனை ஜோக்குகள் சொன்னாலும் அவர்கள் கோவித்துக் கொள்வதில்லை.. :)//
நன்றி வெங்கட்.
//மாலை வரும் முக்கிய பதிவு என்னவோ? ஆர்வம் மேலிடுகிறது..//
:)
"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
பதிலளிநீக்கு// Ha . . Ha . . Super joke. . .//
நன்றி ராஜா!
"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
பதிலளிநீக்கு//I am also youth//
of course!
மகேந்திரன் கூறியது...
பதிலளிநீக்கு// தமிழ்மணம் 9
நட்சத்திர வாரத்தின் கடைசி பதிவு
புதிரான நகைச்சுவைப் பதிவு.
அழகு.//
நன்றி மகேந்திரன்!
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
பதிலளிநீக்கு//நீங்க எப்பவுமே யூத் பதிவர் தான். அதனால இன்னைக்கு நடக்கப் போற யூத் பதிவர் சந்திப்புக்கு உன்களை அன்போடு அழைக்கிறேன் ...//
ஏற்கனவே தீர்மானித்து விட்டேன்.......வருவதாக!
சிவப்புக் கம்பளம் விரித்து வையுங்கள்!
நன்றி கருன்!
# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
பதிலளிநீக்கு//நட்சத்திர வாரத்தை சந்தோசமாக முடித்தற்க்கு மிக்க நன்றி....//
நன்றி சௌந்தர்.
// வாழ்த்துக்கள்...
தமிழ்மணத்தி்ல 4-ம் இடம் பிடித்ததற்க்கு...//
நீங்கள் சொன்னபின்தான் நான் பார்த்தேன்.
மிக்க நன்றி சௌந்தர்.
செங்கோவி கூறியது...
பதிலளிநீக்கு// சர்தார்ஜி இன்று வரை யோசித்துக் கொண்டிருக்கிறார்,தான் ஒரு அறைகலன் (furniture) வியாபாரி என்பது அவளுக்கு எப்படித் தெரிந்தது என்று!! //
ம்..ஜோக் பரவாயில்லை.
// ’ யூத் ’பதிவர் சந்திப்புக்குக்குப் போக வேண்டும்! ...நானும் யூத் தானுங்கோ! //
//ஹா..ஹா..அய்யோ...அம்மா...ஹா..ஹா..முடியலை..செம ஜோக்
சார்!//
நான் யூத் என்பது உங்களுக்கு ஜோக்கா இருக்கா?
என்றாவது நேரில் சந்திக்காமலா இருக்கப்போகிறோம்?கவனித்துக் கொள்கிறேன்!
நன்றி செங்கோவி.
அறைகலன்(furniture) //
பதிலளிநீக்குஆஹா நான் அறிந்திராத தமிழ் இது [[தமிழனா தேன்தான் இல்லையா]]...!!!
சென்னையில் பதிவர் சந்திப்பா.......வாழ்த்துக்கள் தல....
பதிலளிநீக்குவணக்கம் ஸார்! கும்புடுறேனுங்க! ஸார் நீங்க போட்ட ஜோக் நல்லாத்தான் இருந்திச்சு! அதுல ஒண்ணும் பிரச்சனை இல்ல! ஆனா இதுல ஒரு மேட்டர் உதைக்குது ஸார்து என்னான்னு நான் ஒரு பதிவு போட்டு சொல்றேன் ஸார்!
பதிலளிநீக்குஇதுக்காக தனியாக உள்குத்துப் பதிவு போடப் போறியா? அப்டீன்னு கேக்காதீங்க! அப்படி இல்ல ஸார்! நான் வேறொரு பதிவு எழுதும் போது, இந்த ஜோக்குக்கு ஒரு சாடல் இருக்கும் ஸார்!
ஸார், அத அப்புறம் பார்த்துக்கலாம்!
ஆமா, நீங்களும் யூத்தா? ரொம்ப நல்லதாப் போச்சு ஸார்! உங்கள மாதிரி யூத்துக்காகவே ஒரு பதிவு போட்டிருக்கேன் ஸார்!
டைம் கெடைச்சா எட்டிப்பாருங்க ஸார்!
புதிரான நகைச்சுவைப் பதிவு.
பதிலளிநீக்குஅழகு.
தொடர்ந்து வேர்களைத்தேடி வந்து இலக்கியத் தேன் பருகியமைக்காக உங்களுக்கு “இலக்கியத் தேனீ“ என்னும் விருது வழங்கி மகிழ்கிறேன்..
பதிலளிநீக்குhttp://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_04.html
நன்றி.
///நானும் யூத் தானுங்கோ! // யார் இல்லே'ன்ன இப்ப ஹிஹி
பதிலளிநீக்குநானும் யூத் தானுங்கோ!
பதிலளிநீக்குஎன்ன ஒரு வெறி தனம்
சர்தார்ஜி ஜோக் சூப்பர் .. உழைப்பில் சிறந்தவர்கள் வீரத்திற்கு பேர் போனவர்கள் ...ஆனாலும் அவர்களை பற்றி இவ்வாறு பல ஜோக்ஸ் ..சரியான மடையர்கள் போல் சித்தரித்து .. பதில் ஜோக் ...
பதிலளிநீக்குலண்டன் நகரில் ஒரு சர்தார்ஜி ஒரு முறை கடை ஒன்று சென்று நாய்கள் தின்னும் பிஸ்கட் வேண்டும் என்று கேட்டார் .. கடைக்காரன் அவரை கடுமையாக சாடி " சர்தார்ஜியான உன்னை நம்ப முடியாது .. நாய் தின்னும் பிஸ்கட்டை நீயே தின்று விடுவாய் .. உன்னிடம் நாய் உள்ளது என்று நான் நம்புவது " என்று கேட்டான் . சர்தார்ஜியும் வீடு சென்று தன் நாயை அழைத்து சென்று காட்டி பிஸ்கட் வாங்கி வந்தார். அடுத்த நாள் இதே போல் பூனை தின்னும் பிஸ்கட் கேட்க அதே போல் சாடல் ... தன்னிடம் இருந்த பூனையை காட்டியபின்னர் தான் பூனைக்கு பிஸ்கட் பிஸ்கட் கிடைத்தது .. சர்தார்ஜி யோசிக்க துடங்கினார் .. என்ன இது எதை கேட்டாலும் கடைக்காரன் இவ்வாறு செய்கிறானே ..
மூன்றாம் நாள் ..
சர்தார்ஜி ஒரு பொட்டலத்துடன் கடைக்கு சென்றார் .. நாற்றம் குடலை பிடுங்க கடைக்காரன் தான் மூக்கை மறைத்து கொண்டு " என்ன வேண்டும் " என்று கேட்டான் .
பொட்டலத்தை திறந்து காட்டிய சர்தார்ஜி " டிஷ்யு பேப்பர் " என்று நிதானமாக கூறினார் .
எப்படி !!!!!!
தமிழ் மணம் 17
பதிலளிநீக்குசர்தார்ஜி பதிவ படிக்கும்போதே தெரியுது நீங்களும் யூத்து தான்னு...கலக்குறீங்க நண்பரே
பதிலளிநீக்குஅன்பின் பித்தன் அவர்களே !
பதிலளிநீக்குநகைச்சுவை - கலக்கறீங்க போங்க - சூப்பர் ஜோக் - நட்புடன் சீனா
MANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்குஅறைகலன்(furniture) //
//ஆஹா நான் அறிந்திராத தமிழ் இது [[தமிழனா தேன்தான் இல்லையா]]...!!!//
சந்தேகமா?
MANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்கு//சென்னையில் பதிவர் சந்திப்பா.......வாழ்த்துக்கள் தல....//
நன்றி மனோ!
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
பதிலளிநீக்கு//வணக்கம் ஸார்! கும்புடுறேனுங்க! ஸார் நீங்க போட்ட ஜோக் நல்லாத்தான் இருந்திச்சு! அதுல ஒண்ணும் பிரச்சனை இல்ல! ஆனா இதுல ஒரு மேட்டர் உதைக்குது ஸார்து என்னான்னு நான் ஒரு பதிவு போட்டு சொல்றேன் ஸார்!
இதுக்காக தனியாக உள்குத்துப் பதிவு போடப் போறியா? அப்டீன்னு கேக்காதீங்க! அப்படி இல்ல ஸார்! நான் வேறொரு பதிவு எழுதும் போது, இந்த ஜோக்குக்கு ஒரு சாடல் இருக்கும் ஸார்!//
அது வேறா?
//ஸார், அத அப்புறம் பார்த்துக்கலாம்!//
பயமுறுத்தாதீங்க!
//ஆமா, நீங்களும் யூத்தா? ரொம்ப நல்லதாப் போச்சு ஸார்! உங்கள மாதிரி யூத்துக்காகவே ஒரு பதிவு போட்டிருக்கேன் ஸார்!
டைம் கெடைச்சா எட்டிப்பாருங்க ஸார்!//
பார்க்கிறேன்!
நன்றி மணி.
மாலதி கூறியது...
பதிலளிநீக்கு//புதிரான நகைச்சுவைப் பதிவு.
அழகு.//
நன்றி மாலதி!
முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
பதிலளிநீக்கு// தொடர்ந்து வேர்களைத்தேடி வந்து இலக்கியத் தேன் பருகியமைக்காக உங்களுக்கு “இலக்கியத் தேனீ“ என்னும் விருது வழங்கி மகிழ்கிறேன்..
http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_04.html//
விருதுக்கு நன்றி!
நன்றி.
கந்தசாமி. கூறியது...
பதிலளிநீக்கு///நானும் யூத் தானுங்கோ! // //யார் இல்லே'ன்ன இப்ப ஹிஹி//
சொல்லிட முடியுமா?ஹா,ஹா!
நன்றி கந்தசாமி!
கவி அழகன் கூறியது...
பதிலளிநீக்குநானும் யூத் தானுங்கோ!
// என்ன ஒரு வெறி தனம்/
:-D நன்றி கவி அழகன்.
Vasu கூறியது...
பதிலளிநீக்கு//சர்தார்ஜி ஜோக் சூப்பர் .. உழைப்பில் சிறந்தவர்கள் வீரத்திற்கு பேர் போனவர்கள் ...ஆனாலும் அவர்களை பற்றி இவ்வாறு பல ஜோக்ஸ் ..சரியான மடையர்கள் போல் சித்தரித்து .. பதில் ஜோக் ...
லண்டன் நகரில் ஒரு சர்தார்ஜி ஒரு முறை கடை ஒன்று சென்று நாய்கள் தின்னும் பிஸ்கட் வேண்டும் என்று கேட்டார் .. கடைக்காரன் அவரை கடுமையாக சாடி " சர்தார்ஜியான உன்னை நம்ப முடியாது .. நாய் தின்னும் பிஸ்கட்டை நீயே தின்று விடுவாய் .. உன்னிடம் நாய் உள்ளது என்று நான் நம்புவது " என்று கேட்டான் . சர்தார்ஜியும் வீடு சென்று தன் நாயை அழைத்து சென்று காட்டி பிஸ்கட் வாங்கி வந்தார். அடுத்த நாள் இதே போல் பூனை தின்னும் பிஸ்கட் கேட்க அதே போல் சாடல் ... தன்னிடம் இருந்த பூனையை காட்டியபின்னர் தான் பூனைக்கு பிஸ்கட் பிஸ்கட் கிடைத்தது .. சர்தார்ஜி யோசிக்க துடங்கினார் .. என்ன இது எதை கேட்டாலும் கடைக்காரன் இவ்வாறு செய்கிறானே ..
மூன்றாம் நாள் ..
சர்தார்ஜி ஒரு பொட்டலத்துடன் கடைக்கு சென்றார் .. நாற்றம் குடலை பிடுங்க கடைக்காரன் தான் மூக்கை மறைத்து கொண்டு " என்ன வேண்டும் " என்று கேட்டான் .
பொட்டலத்தை திறந்து காட்டிய சர்தார்ஜி " டிஷ்யு பேப்பர் " என்று நிதானமாக கூறினார் .
எப்படி !!!!!!//
சர்தார்ஜி செய்தது சரிதான்!சூப்பர் வாசு.
நன்றி!
மாய உலகம் கூறியது...
பதிலளிநீக்கு//தமிழ் மணம் 17//
நன்றி ராஜேஷ்.
மாய உலகம் கூறியது...
பதிலளிநீக்கு//சர்தார்ஜி பதிவ படிக்கும்போதே தெரியுது நீங்களும் யூத்து தான்னு...கலக்குறீங்க நண்பரே//
:) நன்ரி.
cheena (சீனா) கூறியது...
பதிலளிநீக்கு// அன்பின் பித்தன் அவர்களே !
நகைச்சுவை - கலக்கறீங்க போங்க - சூப்பர் ஜோக் - நட்புடன் சீனா//
நன்றி சீனா ஐயா!