அழகிய இயற்கைக் காட்சிகளை ரசித்தபடியே சென்று கொண்டிருந்தான்.
திடீரென அவன் உணர்ந்தான்,தான் இறந்துவிட்டோம் என்பதை!
தன் இறப்பும்,அதற்கு முன்பே நிகழ்ந்த அவன் நாயின் இறப்பும் அவனுக்கு நினைவு வந்தது.
அந்தச் சாலை எங்கு போகிறதோ எனச் சிந்தித்தான்.
கொஞ்ச தூரம் சென்றதும் சாலையின் ஒரு பக்கத்தில் உயரமான சலவைகல்லாலான மதிற்சுவரைக் கண்டான்.
சிறிது தூரத்தில் மலை மேல் அந்த மதிற்சுவரில் அழகிய நுழைவாயில் ஒன்றைக் கண்டான்.
அருகில் சென்று பார்த்தபோது, அந்த வாயிலின் கதவில் ரத்தினக் கற்கள் பதிக்கப் பட்டிருப்பதையும்,,அந்த வாயிலை நோக்கிச் செல்லும் பாதை தங்கத்தால் போடப் பட்டிருப்பதையும் கண்டான்.
அந்த வாயிலை நோக்கித் தன் நாயுடன் நடக்க ஆரம்பித்தான்.அருகில் செல்லும்போது அந்த வாயிலின் உள்ளே ஒரு மனிதன் தங்க மேசையின் முன் அமர்ந்திருப்பதைக் கண்டான்.
அருகில் சென்ற அவன் அந்த மனிதனிடம் கேட்டான்” இந்த இடத்தின் பெயர் என்ன?”
அந்த மனிதன் சொன்னான்”சொர்க்கம்”
அவன் கேட்டான்”குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?”
”நிச்சயமாக!உள்ளே வாருங்கள் குளிர்ந்த நீர் வரவழைக்கிறேன்”சொல்லியவாறே அவன் கதவைத் திறக்கலானான்!
வழிப்போக்கன் தன் நாயைக் காட்டிக் கேட்டான்”என் நண்பனும் என்னோடு வரலாம் அல்லவா?”
”மன்னிக்கவும்!நாய்களுக்கு இங்கு அனுமதி இல்லை”
வழிப் போக்கன் யோசித்தான்.பின் தன் வந்த பாதையில் சாலையை நோக்கி நாயுடன் நடக்க ஆரம்பித்தான்.
நீண்ட தூரம் நடந்தபின் மற்றொரு வாயிலைக் கண்டான்.துருப்பிடித்த கதவு.அதை நோக்கி ஒரு மண்பாதை சென்று கொண்டிருந்தது.
அந்த வாயிலை அவன் நெருங்கியதும் ஒரு மனிதன் ஒரு மரத்தடியில் அமர்ந்து ஏதோ படித்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.
அவனிடம் கேட்டான்”குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?”
”உள்ளே ஒரு குழாய் இருக்கிறது,வாருங்கள் ”
“நாயைக் காட்டிக் கேட்டான் “என் தோழனுக்கும் நீர் வேண்டும்”
அந்த மனிதன் சொன்னான்”குழாயடியில் ஒரு குவளை இருக்கிறது.எடுத்துக் கொள்ளலாம்”
அவன் உள்ளே சென்றான்.குழாயையும் குவளையையும் கண்டான்.தண்ணீர் எடுத்து நாய்க்கும் கொடுத்துத் தானும் அருந்தினான்.
தாகம் தீர்ந்தது.
மரத்தடி மனிதனை அணுகிக் கேட்டான்”இந்த இடத்தின் பெயர் என்ன?”
அவன் சொன்னான் “சொர்க்கம் என்றழைக்கப் படுகிறது”
வழிப் போக்கன் திகைத்தான்,
“குழப்பமாயிருக்கிறதே!நான் வரும் வழியில் ஒருவர் வேறு இடத்தையும் சொர்க்கம் என்று சொன்னாரே!”
ஓ!இந்த ரத்தினக்கல் பதித்த கதவுள்ள இடத்தைச் சொல்கிறீர்களா?
அது---நரகம்!!”
”அப்படியென்றால் சுவர்க்கம் என்று அவர்கள் சொல்லிக் கொள்வது உங்களுக்கு எரிச்சலாக இல்லையா?”
”இல்லை .மாறாக மகிழ்ச்சியடைகிறோம்-தங்கள் தாகம் தீர்க்கத் தங்கள் உயிர் நண்பர்களைத் தியாகம் செய்யும் மனிதர்களை இனம் கண்டு நிறுத்துவதற்காக!”
“நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும் வாய் ஊன்றும் நிலை”
சொர்க்கம் நரகம் என்ற புரிதலினை எளிமையாக விளங்கப்படுத்தி,
பதிலளிநீக்குஉயிர்களிடத்தில் அன்பு வேண்டும் எனும் உண்மையினையும் அழகாகச் சொல்லியிருக்கிறீங்க ஐயா.
சொர்க்கம்..எவ்வளவு தான் வசதியிருந்தும் பிறருக்கு உதவில்லையெனில் அது நரகமாகவே இருக்கும் என்பதனை அழகாகச் சொல்லியிருக்கிறீங்க.
நல்ல நாளில் அருமையான பதிவு. இவ்வுலகிலும் தங்கள் உயிர் நண்பர்களைத் தியாகம் செய்யும் மனிதர்களை இனம் கண்டு ஒதுக்குவதற்கு வழி ஏதும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
பதிலளிநீக்கு”இல்லை .மாறாக மகிழ்ச்சியடைகிறோம்-தங்கள் தாகம் தீர்க்கத் தங்கள் உயிர் நண்பர்களைத் தியாகம் செய்யும் மனிதர்களை இனம் கண்டு நிறுத்துவதற்காக!”
பதிலளிநீக்குஇரத்தின சுருக்கமா கதை ஒன்று படித்தேன் மகிழ்ந்தேன்
மிக அழகாகச் சொன்னீங்க ஐயா.
பதிலளிநீக்குசொர்க்கம் எதுவென எனைக் கேட்டால்..
பதிலளிநீக்குநாமும் நம் சுற்றமும் மகிழ்ச்சியாக எவ்விடத்தில் எந்த நேரத்தில் இருக்கிறோமோ அதுதான் சொர்க்கம் என்பேன்.
சொர்க்கமும் நரகமும் கண்ணுக்குத் தெரியாத இறந்தபின் செல்லு்ம் இடம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை ஐயா..
சிரிப்பு - சொர்க்கம்!
கோபம் - நரகம்!
நம்மால் அடுத்தவர் அழுவது நரகம்!
நமக்காக அடுத்தவர் அழுவது சொர்க்கம்!
இவ்விடுகையோடு தொடர்புடைய அன்பகத்தில்லா உயிர்வாழ்க்கை உயிர் வாழ்க்கை என்னும் எனது இடுகையை வாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன் ஐயா.
பதிலளிநீக்குhttp://gunathamizh.blogspot.com/2010/03/blog-post_09.html
நல்ல நட்பும்...மாறாத அன்பும் என்றும் உங்கள் வாழ்விலும்.. அனைவர் வாழ்விலும் நிலைத்திருக்க இன்றைய இனிய விநாயகர் சதுர்த்தி திருநாளில் இறைவனிடம் வேண்டுகிறேன்...
பதிலளிநீக்குவிநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
பதிலளிநீக்குநிரூபன் சொன்னது…
பதிலளிநீக்கு//சொர்க்கம் நரகம் என்ற புரிதலினை எளிமையாக விளங்கப்படுத்தி,
உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் எனும் உண்மையினையும் அழகாகச் சொல்லியிருக்கிறீங்க ஐயா.
சொர்க்கம்..எவ்வளவு தான் வசதியிருந்தும் பிறருக்கு உதவில்லையெனில் அது நரகமாகவே இருக்கும் என்பதனை அழகாகச் சொல்லியிருக்கிறீங்க.//
நன்றி நிரூபன்!
வே.நடனசபாபதி கூறியது...
பதிலளிநீக்கு// நல்ல நாளில் அருமையான பதிவு. இவ்வுலகிலும் தங்கள் உயிர் நண்பர்களைத் தியாகம் செய்யும் மனிதர்களை இனம் கண்டு ஒதுக்குவதற்கு வழி ஏதும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!//
நன்றி ஐயா!
கவி அழகன் கூறியது...
பதிலளிநீக்கு”இல்லை .மாறாக மகிழ்ச்சியடைகிறோம்-தங்கள் தாகம் தீர்க்கத் தங்கள் உயிர் நண்பர்களைத் தியாகம் செய்யும் மனிதர்களை இனம் கண்டு நிறுத்துவதற்காக!”
//இரத்தின சுருக்கமா கதை ஒன்று படித்தேன் மகிழ்ந்தேன்//
நன்றி கவி அழகன்!
முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
பதிலளிநீக்கு//மிக அழகாகச் சொன்னீங்க ஐயா.//
நன்றி குணசீலன் அவர்களே!
முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
பதிலளிநீக்கு// சொர்க்கம் எதுவென எனைக் கேட்டால்..
நாமும் நம் சுற்றமும் மகிழ்ச்சியாக எவ்விடத்தில் எந்த நேரத்தில் இருக்கிறோமோ அதுதான் சொர்க்கம் என்பேன்.
சொர்க்கமும் நரகமும் கண்ணுக்குத் தெரியாத இறந்தபின் செல்லு்ம் இடம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை ஐயா..
சிரிப்பு - சொர்க்கம்!
கோபம் - நரகம்!
நம்மால் அடுத்தவர் அழுவது நரகம்!
நமக்காக அடுத்தவர் அழுவது சொர்க்கம்!//
வாழும்போது சொர்க்கமும் நரகமும் நம் கையில்தான் இருக்கிறது.அருமியாகச் சொன்னீர்கள்!
முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
பதிலளிநீக்கு// இவ்விடுகையோடு தொடர்புடைய அன்பகத்தில்லா உயிர்வாழ்க்கை உயிர் வாழ்க்கை என்னும் எனது இடுகையை வாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன் ஐயா.
http://gunathamizh.blogspot.com/2010/03/blog-post_09.html//
கண்டிப்பாக வாசிக்கிறேன்.
நன்றி.
Thanjai Vasan (தஞ்சை.வாசன்) கூறியது...
பதிலளிநீக்கு// நல்ல நட்பும்...மாறாத அன்பும் என்றும் உங்கள் வாழ்விலும்.. அனைவர் வாழ்விலும் நிலைத்திருக்க இன்றைய இனிய விநாயகர் சதுர்த்தி திருநாளில் இறைவனிடம் வேண்டுகிறேன்...//
நன்றி வாசன்.உங்களுக்கும் வாழ்த்துகள்!
ஒரு உன்னத நட்பு எப்படி இருக்க வேண்டுமென்று அழகாக புரிய வைத்து விட்டீர்!பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குஎன்னைப் பொறுத்த வரை
பதிலளிநீக்குவாழும் வரை யாருக்கேனும் உதவி செய்து கொண்டிருந்தால் அதுவே சொர்க்கம்....
அருமை அய்யா.
சூப்பர் ட்ரிக் சார்..ஞாபகம் வச்சிக்கிறேன்..’பின்னாடி’ஏமாறாம இருக்க உதவும்.
பதிலளிநீக்கு"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
பதிலளிநீக்கு//விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்//
நன்றி ராஜா!
கோகுல் கூறியது...
பதிலளிநீக்கு// ஒரு உன்னத நட்பு எப்படி இருக்க வேண்டுமென்று அழகாக புரிய வைத்து விட்டீர்!பகிர்வுக்கு நன்றி!//
நன்றி கோகுல்.
Prabu Krishna (பலே பிரபு) கூறியது...
பதிலளிநீக்கு//என்னைப் பொறுத்த வரை
வாழும் வரை யாருக்கேனும் உதவி செய்து கொண்டிருந்தால் அதுவே சொர்க்கம்....
அருமை அய்யா.//
நன்றி பிரபு!
செங்கோவி கூறியது...
பதிலளிநீக்கு//சூப்பர் ட்ரிக் சார்..ஞாபகம் வச்சிக்கிறேன்..’பின்னாடி’ஏமாறாம இருக்க உதவும்.//
நன்றி செங்கோவி.
கருத்தாழமிக்க கதை ஐயா!வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபடிச்சேன் முடிச்சேன் உடனே
பதிலளிநீக்குஓட்டை போட்டுவிட்டே
கருத்துரை எழுதுகிறேன்
காரணம் மறதி
இது கதையில்லிங்க
பாடம்!
புலவர் சா இராமாநுசம்
நல்ல கருத்துள்ள கதை
பதிலளிநீக்குஅன்பில் இணைந்தவர்கள் யாரையும் எப்போதும் விட்டுக்கொடுக்கக்கூடாது
தமிழ் மணம் பத்து
பதிலளிநீக்குநல்ல கருத்துள்ள பதிவு ,பகிர்வுக்கு நன்றி
ஆஹா...அருமையான நீதிக்கதை...நட்பு மற்றும் சுயநலமில்லாத அன்பு பற்றிய அசத்தலான கதை வாழ்த்துக்கள் ஐயா
பதிலளிநீக்குதமிழ் மணம் 11
பதிலளிநீக்குஅனுபவம் பேசுகிறது
பதிலளிநீக்குஅற்புதமான செய்தி சொன்னீங்க!ஐயா,அருமை!
பதிலளிநீக்குகருத்தாழம் மிகுந்த கதை... வெளி தோற்றத்தினை வைத்து பல பொருட்களின் பின் அலைவதும் என் மனதில் தோன்றியது....
பதிலளிநீக்குஸ்ரீதர் சொன்னது…
பதிலளிநீக்கு//கருத்தாழமிக்க கதை ஐயா!வாழ்த்துக்கள்.//
நன்றி ஸ்ரீதர்!
புலவர் சா இராமாநுசம் கூறியது...
பதிலளிநீக்கு//படிச்சேன் முடிச்சேன் உடனே
ஓட்டை போட்டுவிட்டே
கருத்துரை எழுதுகிறேன்
காரணம் மறதி
இது கதையில்லிங்க
பாடம்!//
நன்றி ஐயா.முதுகு வலி குணமாகி விட்டதா?
VELU.G கூறியது...
பதிலளிநீக்கு// நல்ல கருத்துள்ள கதை
அன்பில் இணைந்தவர்கள் யாரையும் எப்போதும் விட்டுக்கொடுக்கக்கூடாது//
நன்றி வேலு!
M.R கூறியது...
பதிலளிநீக்கு//தமிழ் மணம் பத்து
நல்ல கருத்துள்ள பதிவு ,பகிர்வுக்கு நன்றி//
நன்றி ரமேஷ்!
மாய உலகம் கூறியது...
பதிலளிநீக்கு//ஆஹா...அருமையான நீதிக்கதை...நட்பு மற்றும் சுயநலமில்லாத அன்பு பற்றிய அசத்தலான கதை வாழ்த்துக்கள் ஐயா//
நன்றி ராஜேஷ்!
மாய உலகம் கூறியது...
பதிலளிநீக்கு//தமிழ் மணம் 11//
நன்றி !
சி.பி.செந்தில்குமார் கூறியது...
பதிலளிநீக்கு//அனுபவம் பேசுகிறது//
நன்றி சிபி!
என் மன வானில் கூறியது...
பதிலளிநீக்கு//அற்புதமான செய்தி சொன்னீங்க!ஐயா,அருமை!//
நன்றி!
வெங்கட் நாகராஜ் கூறியது...
பதிலளிநீக்கு//கருத்தாழம் மிகுந்த கதை... வெளி தோற்றத்தினை வைத்து பல பொருட்களின் பின் அலைவதும் என் மனதில் தோன்றியது....//
நன்றி வெங்கட்.
அன்பின் பித்தன் - உயிர்களிடத்து அன்பு வேண்டும் எனபதனை அழகாக் ஒரு சிறுகதையின் மூலம் விளக்கியது நன்று. பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்கு