தொடரும் தோழர்கள்

செவ்வாய், செப்டம்பர் 06, 2011

இரு பதிவர்கள் சந்திக்கிறார்கள்!

பதிவர் மதுரை சொக்கன் நேற்று மாலை பதிவர் சென்னை பித்தனைச் சந்தித்தார். அப்போது அவர்கள் பேசிக்கொண்டவை……….

செ.பி-வாங்க சொக்கன்.நல்லாருக்கீங்களா?

சொக்கன் -திருச்சிற்றம்பலம்.நலமே.நட்சத்திர வாரத்தைச் சிறப்பாக முடித்து விட்டீர்கள். வாழ்த்துகள்.

செ.பி-எல்லாம் உங்கள் வாழ்த்துகளின் பலம்தான்.

சொக்கன் – நான் ஏழு நாட்களின் பதிவுகளையும் படித்தேன்.ஆறு நாட்கள் சிறப்பாக இருந்தன. கடைசி நாள் அப்படி ஒரு பதிவு தேவையா?சர்தார்ஜி ஜோக்கைச் சொல்கிறேன்.ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம்!

செ.பி.-இதெல்லாம் சும்ம ஜாலிதான் சொக்கன்.

சொக்கன் – என்ன ஜாலி?எதை வேண்டுமானாலும் எழுதுவதா?படிப்பவர்களுக்கு நல்ல கருத்துக்களைச் சொல்ல வேண்டாமா?

செ.பி-.சொக்கன்!நான் ஒரு போதகன் அல்ல.ஒரு பல்சுவைப் பதிவன்.நீங்கள் சொல்கிறீர்கள் நல்ல கருத்துகள் மட்டுமே சொல்ல வேண்டும் என்று.பாருங்கள்-அன்பே சிவம் என்ற பதிவுக்குக் கிடைத்த தமிழ்மண வாக்குகள்-14;அன்னையைப் போலொரு பதிவுக்கு 15 ;ஆனால் இந்த புரியாத புதிர் என்ற சர்தார்ஜி ஜோக் பதிவுக்கு 17 வாக்குகள்.வாசகர்களின் விருப்பம் எப்படி இருக்கிறது என்பதைத் தானே இது காட்டுகிறது?அவர்கள் விருப்பத்தை நான் பூர்த்தி செய்கிறேன். அவ்வளவுதான்!

சொக்கன் –சினிமாக்காரர்கள் மாதிரிப் பேசுகிறீர்கள் பித்தன்.ரசிகர்கள் விரும்புகிறார்கள், நாங்கள் கொடுக்கிறோம் என்று அவர்கள்தான் சொல்வார்கள்.இப்படிச் சொல்கிறீர்களே,இந்த வாரத்திலேயே வந்த “எழுத்தறிவித்தவன் -சிறுகதை”க்கு 22 வாக்குகள் கிடைத்தனவே.அதை சௌகரியமாக ஒதுக்கி விட்டீர்கள்.நான் சொல்வது இதுதான் .இந்த மாதிரிப் பதிவெல்லாம்,பிரபா,சிவகுமார்,கோகுல் போன்ற இளைஞர்கள் எழுதலாம்.நீங்கள் எழுதலாமா?

செ.பி-ஐயா,நீங்கள் சொல்வது போல் நான் எழுத ஆரம்பித்தால் உங்களை மாதிரி ஈ ஓட்ட வேண்டியதுதான்.

சொக்கன் –ஈ ஓட்டினாலும் பரவாயில்லை.நான் நல்லதையே சொல்வேன்.அது தவிர மொய் வைத்து மொய் எடுக்கும் வழக்கம் எனக்கு வேண்டாம்.நான் சொல்லும் கருத்துக்களை விரும்புவோர் மட்டும் வரட்டும்;படிக்கட்டும்.உங்களுக்கு ஏற்கனவே சுமாரான எண்ணிக்கையில் தொடர்பவர்கள் இருக்காங்க!நல்லதே எழுதலாம்.

செ.பி- இதெல்லாம் ஒரு போதை மாதிரி சொக்கன்!பழக்கமாயிட்டா விட முடியாது.நீங்க ஏதோ திருமூலர்,ஆன்மீகம் என்று காலத்தை ஓட்டறீங்க. எல்லோராலும் அது முடியுமா?உங்க பாணியில் நீங்க போங்க;என் பாணியில் நான் போகிறேன்.நீங்க கிழக்கு;நான் மேற்கு.

“East is east and west is west and never the twain shall meet” .இதை இத்தோடு நிறுத்தி விட்டுக் காஃபி சாப்பிடுவோம் வாங்க!”

இருவரும் காஃபி சாப்பிட ஆரம்பித்தனர்.

38 கருத்துகள்:

  1. பெயரிலேயே தெரியலையா சொக்கன் அவர் ஒரு பித்தன் என்று
    பிறகு ஏன் வாயகுடுத்து .............

    பதிலளிநீக்கு
  2. நல்ல கலந்துரையாடல்

    தமிழ் மணம் நாலு

    பதிலளிநீக்கு
  3. பதிவுலக மாயைகளையெல்லாம் உள்ளது உள்ளபடியே சொல்லிவிட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  4. அண்ணே கிண்டிட்டீங்க ஓகே ஹிஹி!

    பதிலளிநீக்கு
  5. சந்திப்பில்
    விளம்பிய சாரங்கள்
    அருமை
    ஐயா.
    தமிழ்மணம் 7

    பதிலளிநீக்கு
  6. அடடடா.......எல்லாப் பக்கமும் இதே பிரச்சினை தானா?

    ஐயா நீங்களும் இளைஞர் தான்கிற ரகசியத்தை அவர்கிட்ட சொல்லலையா?

    பதிலளிநீக்கு
  7. பலபேர் கேட்க நினைத்து கேட்காமல் விட்டதை மதுரை சொக்கன் கேட்டிருக்கிறார்.
    நீங்கள் தந்த பதிலும் சரிதான். நீங்கள் ஒன்றும் இலக்கிய இதழ் நடத்தவில்லையே.அவ்வாறு இதழ் நடத்தியவர்கள் எல்லாம் பின்னால் தங்கள் கொள்கைகளை மாற்றிக்கொண்டார்கள்.
    நீங்கள் துணிச்சலுடன் உண்மையை ஒத்துக்கொண்டு உள்ளீர்கள். இடுகைகள் ஆபாசமில்லாதவரை உங்களை யாரும் குறை சொல்ல இயலாது.
    ‘உங்கள் வழி தனி வழி’ என்பதை மதுரை சொக்கன் மட்டுமல்ல நாங்களும் புரிந்துகொண்டோம்.
    விளக்கத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. சுவரஸ்யமான உரையாடல்தான். நிகழ்கால நடப்பை உணர்த்துவதாக இருந்தது.
    பதிவர் சந்திப்புக்கு பின் இதை படிக்க நேர்ந்ததால்...

    பதிலளிநீக்கு
  9. சென்னை பித்தன் vs சென்னை பித்தன்...

    சரிதானே....

    பதிலளிநீக்கு
  10. தல என்னாச்சு...? எல்லாமே ஒரு மார்க்கமா இருக்கு...!!!

    பதிலளிநீக்கு
  11. சொக்கன், பித்தன் என்னா வித்தியாசம் ஹே ஹே ஒன்னும் புரியலை....

    பதிலளிநீக்கு
  12. விக்கியுலகம் கூறியது...
    அண்ணே கிண்டிட்டீங்க ஓகே ஹிஹி!//

    எலேய் பிச்சிபுடுவேன்...

    பதிலளிநீக்கு
  13. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    // மனசாட்சி பேசற மாதிரி இருக்கு?//
    :) நன்றி கருன்!

    பதிலளிநீக்கு
  14. கவி அழகன் கூறியது...

    //பெயரிலேயே தெரியலையா சொக்கன் அவர் ஒரு பித்தன் என்று
    பிறகு ஏன் வாயகுடுத்து
    .............//
    அதானே!
    நன்றி கவி அழகன்.

    பதிலளிநீக்கு
  15. M.R கூறியது...

    //நல்ல கலந்துரையாடல்

    தமிழ் மணம் நாலு//
    நன்ரி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  16. அம்பலத்தார் கூறியது...

    //பதிவுலக மாயைகளையெல்லாம் உள்ளது உள்ளபடியே சொல்லிவிட்டீர்கள்//
    நன்றி அம்பலத்தார்.

    பதிலளிநீக்கு
  17. விக்கியுலகம் கூறியது...

    //அண்ணே கிண்டிட்டீங்க ஓகே ஹிஹி!//

    உப்புமாவா கிண்ட?
    நன்றி விக்கி!

    பதிலளிநீக்கு
  18. மகேந்திரன் கூறியது...

    //சந்திப்பில்
    விளம்பிய சாரங்கள்
    அருமை
    ஐயா.
    தமிழ்மணம் 7//
    நன்றி மகேந்திரன்.

    பதிலளிநீக்கு
  19. செங்கோவி கூறியது...

    //அடடடா.......எல்லாப் பக்கமும் இதே பிரச்சினை தானா?

    ஐயா நீங்களும் இளைஞர் தான்கிற ரகசியத்தை அவர்கிட்ட சொல்லலையா?//
    புரிஞ்சுக்க மறுக்கிறார்!
    நன்றி செங்கோவி.

    பதிலளிநீக்கு
  20. வே.நடனசபாபதி கூறியது...

    // பலபேர் கேட்க நினைத்து கேட்காமல் விட்டதை மதுரை சொக்கன் கேட்டிருக்கிறார்.
    நீங்கள் தந்த பதிலும் சரிதான். நீங்கள் ஒன்றும் இலக்கிய இதழ் நடத்தவில்லையே.அவ்வாறு இதழ் நடத்தியவர்கள் எல்லாம் பின்னால் தங்கள் கொள்கைகளை மாற்றிக்கொண்டார்கள்.
    நீங்கள் துணிச்சலுடன் உண்மையை ஒத்துக்கொண்டு உள்ளீர்கள். இடுகைகள் ஆபாசமில்லாதவரை உங்களை யாரும் குறை சொல்ல இயலாது.
    ‘உங்கள் வழி தனி வழி’ என்பதை மதுரை சொக்கன் மட்டுமல்ல நாங்களும் புரிந்துகொண்டோம்.//
    சரியாகச் சொன்னீர்கள்.
    நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  21. குடந்தை அன்புமணி கூறியது...

    //சுவரஸ்யமான உரையாடல்தான். நிகழ்கால நடப்பை உணர்த்துவதாக இருந்தது.
    பதிவர் சந்திப்புக்கு பின் இதை படிக்க நேர்ந்ததால்...//
    :) நன்றி அன்பு!

    பதிலளிநீக்கு
  22. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //தல என்னாச்சு...? எல்லாமே ஒரு மார்க்கமா இருக்கு...!!!//
    அது அப்படித்தான்!

    பதிலளிநீக்கு
  23. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    // சென்னை பித்தன் vs சென்னை பித்தன்...

    சரிதானே....//
    அப்படியா?
    நன்றி சௌந்தர்.

    பதிலளிநீக்கு
  24. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //சொக்கன், பித்தன் என்னா வித்தியாசம் ஹே ஹே ஒன்னும் புரியலை....//
    சொக்கன்,பித்தனின் alter egoவோ!

    பதிலளிநீக்கு
  25. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    // விக்கியுலகம் கூறியது...
    அண்ணே கிண்டிட்டீங்க ஓகே ஹிஹி!//

    எலேய் பிச்சிபுடுவேன்...//
    மனோவிருக்கப் பயமேன்!
    நன்றி மனோ!

    பதிலளிநீக்கு
  26. எல்லோருக்கும் ஒரு உள்குத்து.... என்ன பன்றது.

    பதிலளிநீக்கு
  27. சொக்கன் –ஈ ஓட்டினாலும் பரவாயில்லை.நான் நல்லதையே சொல்வேன்.அது தவிர மொய் வைத்து மொய் எடுக்கும் வழக்கம் எனக்கு வேண்டாம்.நான் சொல்லும் கருத்துக்களை விரும்புவோர் மட்டும் வரட்டும்;படிக்கட்டும்.உங்களுக்கு ஏற்கனவே சுமாரான எண்ணிக்கையில் தொடர்பவர்கள் இருக்காங்க!நல்லதே எழுதலாம்.
    ////

    :) அதே..:)

    பதிலளிநீக்கு
  28. பாலா கூறியது...

    //எல்லோருக்கும் ஒரு உள்குத்து.... என்ன பன்றது.//
    என்னைத்தான் குத்திட்டுப் போறாரு சொக்கன்!
    நன்றி பாலா!

    பதிலளிநீக்கு
  29. பிரியமுடன் பிரபு கூறியது...

    சொக்கன் –ஈ ஓட்டினாலும் பரவாயில்லை.நான் நல்லதையே சொல்வேன்.அது தவிர மொய் வைத்து மொய் எடுக்கும் வழக்கம் எனக்கு வேண்டாம்.நான் சொல்லும் கருத்துக்களை விரும்புவோர் மட்டும் வரட்டும்;படிக்கட்டும்.உங்களுக்கு ஏற்கனவே சுமாரான எண்ணிக்கையில் தொடர்பவர்கள் இருக்காங்க!நல்லதே எழுதலாம்.
    ////

    // :) அதே..:)//

    noted!
    நன்றி பிரபு!

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் ஐயா,
    படைப்புக்களின் ஸ்திரத் தன்மை எவ்வாறு அமைய வேண்டும் எனும் கருப் பொருளுக்கு முதன்மை கொடுத்து
    பயனுள்ள + சுவாரஸ்யமான சந்திப்பாக உங்களின் சந்திப்பு அமைந்திருக்கிறது.

    உண்மையில் படைப்பாளியின் நோக்கம் கருத்துத் திணிப்பாக அமையாது, வாசகரைப் புரிந்து கொண்டு தன் கருத்துக்களை வளப்படுத்த வேண்டும் எனும் தங்களின் கருத்தோடு நானும் உடன்படுகிறேன் ஐயா.

    பதிலளிநீக்கு
  31. கலந்துரையாடலா மனதில் உள்ளதை கலக்கிட்டீங்க...நான் உங்கள் தீவிர ரசிகராகிட்டேன்...தொடர்ந்து அசத்துங்கள்...அசராமல் படிக்கிறேன்

    பதிலளிநீக்கு
  32. அப்பறம் புது போட்டோ கலக்கலா இருக்குங்கோ..

    பதிலளிநீக்கு
  33. நிரூபன் கூறியது...

    // வணக்கம் ஐயா,
    படைப்புக்களின் ஸ்திரத் தன்மை எவ்வாறு அமைய வேண்டும் எனும் கருப் பொருளுக்கு முதன்மை கொடுத்து
    பயனுள்ள + சுவாரஸ்யமான சந்திப்பாக உங்களின் சந்திப்பு அமைந்திருக்கிறது.

    உண்மையில் படைப்பாளியின் நோக்கம் கருத்துத் திணிப்பாக அமையாது, வாசகரைப் புரிந்து கொண்டு தன் கருத்துக்களை வளப்படுத்த வேண்டும் எனும் தங்களின் கருத்தோடு நானும் உடன்படுகிறேன் ஐயா.//
    நன்றி நிரூ!

    பதிலளிநீக்கு
  34. மாய உலகம் கூறியது...

    // தமிழ் மணம் 13//
    நன்றி ராஜேஷ்.

    பதிலளிநீக்கு
  35. மாய உலகம் கூறியது...

    //கலந்துரையாடலா மனதில் உள்ளதை கலக்கிட்டீங்க...நான் உங்கள் தீவிர ரசிகராகிட்டேன்...தொடர்ந்து அசத்துங்கள்...அசராமல் படிக்கிறேன்//
    என் பாக்கியம்!

    பதிலளிநீக்கு
  36. மாய உலகம் கூறியது...

    //அப்பறம் புது போட்டோ கலக்கலா இருக்குங்கோ..//

    அப்பாதுரைக்குப் பின் இப்போதுதான் ஃபோட்டோ பற்றி ஒரு கருத்து!:)
    நன்றி ராஜேஷ்.

    பதிலளிநீக்கு