நட்சத்திர வாரத்தின் கடைசி நாள் இன்று!
ஒரு சில முணு முணுப்புகள் என் காதில் விழுகின்றன!
“என்ன இந்த ஆளு ஆறு நாட்களாக சீரியஸ் ஆக ஏதேதோ நீதி போதனை யெல்லாம் பண்ணிடிருக்காரு ‘ என்று.
எனவே இன்று காலை ஜாலியாக ஒரு பதிவு!
.........................................
பஞ்சாப்பைச் சேர்ந்த ஒரு அறைகலன்(furniture) வணிகனான ஒரு சர்தார்ஜி,தன் வியாபாரத்தைப் பெருக்க வேண்டி,பாரீஸ் சென்று புதிய அறை கலன்கள் வாங்கத் தீர்மானித்தார்.
பாரீசுக்குச் சென்று,பல கடைகளைப் பார்வையிட்டு,ஒரு இடத்தில் கிடைத்த அறை கலன்கள் தன் ஊரில் நன்கு விற்பனையாகும் என்று தீர்மானித்து அனுப்பாணை கொடுத்து விட்டுப் பின் அன்றைய தினத்தைக் கொண்டாடத் தீர்மானித்தார்.
ஒரு மதுக்கூடம் சென்று மது வரவழைத்து அருந்த ஆரம்பித்தார்.சிறிது நேரத்தில் ஒரு அழகிய இளம் பெண் வந்து அருகில் நிற்கவும் அவளை அமருமாறு சைகை செய்தார். அவளிடம் அவர் இந்தி,ஆங்கிலம், பஞ்சாபி என்று பல மொழியில் பேசியும் அவளுக்குப் புரியவில்லை.கடைசியில் அவர் ஒரு குறுந்துணி எடுத்து அதில் ஒரு மதுக்கோப்பையின் படம் வரைந்து அவளிடம் காட்ட,அவள் தலையசைத்தாள்.உடனே அவளுக்கும் மது வரவழைத்தார்.
குடித்து முடித்த பின் மீண்டும் ஒரு தட்டில் உணவு இருப்பது போல் வரைந்து காட்ட அவள் தலையசைத்தாள்.
அங்கிருந்து புறப்பட்டு ஒரு உனவு விடுதிக்குச் சென்றனர்.அங்கு பலர் நடனம் ஆடிக்கொண்டிருந்தனர்.இருவரும் சாப்பிட்டு முடித்த பின் சர்தார்,ஒரு குறுந் துணியில் இருவர் ஆடுவது போல் படம் வரைந்து காட்ட அவள் தலையசைத்தாள். இருவரும் நடனமாடினர்.
ஆடி முடித்து இருக்கைக்குத் திரும்பியதும் அப்பெண் ஒரு கட்டிலின் படம் வரைந்து சர்தாரிடம் காட்டினாள்.
சர்தார்ஜி இன்று வரை யோசித்துக் கொண்டிருக்கிறார்,தான் ஒரு அறைகலன் (furniture) வியாபாரி என்பது அவளுக்கு எப்படித் தெரிந்தது என்று!!
இது எப்படி இருக்கு?!
.........................................
........... கடைசிநாள்.எனவே மாலையும் ஒரு
முக்கியமான பதிவு உண்டு!அதை வலையேற்றி விட்டுத்தான்’ யூத் ’பதிவர் சந்திப்புக்குக்குப் போக வேண்டும்!
நானும் யூத் தானுங்கோ!