Whoever loved that loved not at first sight—(Shakespeare’s ‘As you like it)
முதல் பார்வையில் காதல் வசப்படாத காதலர் யார்?
----------------------------------------
இன்று உன் நினைவுகள் அலை அலையாய் வருகின்றன என்று சொன்னால்,இத்தனை நாள் உன் நினைவு இல்லையென்றாகி விடும்.
உன்னை மறக்க முடியாமல்தானே இன்று வரை தவிக்கிறேன்.
இன்று அத்தவிப்பு அதிகமாக இருக்கிறது.
நீ என்னை உதறிச் சென்றாலும் என் உள்ளத்தோடு ஒட்டிக் கொண்டிருக்கும் உன்னை என்னால் உதற முடியவில்லையே என் அன்பே!
முன்பொரு கவிதை எழுதினேன்
இன்னும் மறக்கவில்லை என்று
சொன்னது அதில் கடுகத்தனை
இன்னமும் உள்ளது எத்தனையோ!
சென்னையின் கடற்கரை சாட்சி
நின்று அருளும் கற்பகம் சாட்சி
இன்றில்லா ப்ளூ டயமண்ட் சாட்சி
இன்சுவை ஐஸ்க்ரீம் பார்லர் சாட்சி
மயிலை சாந்தி விஹார் சாட்சி
மணம் வீசும் மல்லிகைப் பூவும் சாட்சி
தேரோடும் வீதிகள் சாட்சி
மூர்மார்க்கெட் கடைகள் சாட்சி
இத்தனை சாட்சியும் இருந்தென்ன அன்பே
பித்தனைப் போல் புலம்ப விட்டுப் போனாயே!
சாந்தோம் சந்திப்புகளின் முடிவு பொறுக்காத
சாந்தோமும் இன்றில்லாமல் போனதே!
நீ என்னை சாந்தோமில் சந்தித்துப் பிரிந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் பம்பாயில் சந்தித்தபோது—உன் பார்வையில் நான் கண்டது, வியப்பா, பயமா, வருத்தமா, வெறுமையா? என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.அந்தக் கணத்தில் உன் கண்ணென்னும் கடலில் வீழ்ந்து மூழ்கித் தவித்தேன்.
இவள் என்னுடன் இருக்க வேண்டியவள்,இன்று வேறு யாருடனோ?நல்ல வேளையாக அச்சந்திப்பு நீடிக்கவில்லை;ஆனால் நெஞ்சத்தில் இருந்த தழும்பை மீண்டும் கீறி ரணமாகி விட்டது!
என்னால் மறக்க முடியாத மூன்று நாட்கள்---நாம் முதலில் சந்தித்த நாள்,நீ என்னைப் பிரிந்து சென்ற நாள்,மூன்றாவது இன்று!
Happy Birthday dear--------
எங்கிருந்தாலும் வாழ்க!
டிஸ்கி-இது முழுவதும் கற்பனையே
நன்றாகவுள்ளது ஐயா.
பதிலளிநீக்குநல்ல கவிதை
பதிலளிநீக்குவலிமிகுந்த கவிதை
பதிலளிநீக்கு///இன்றில்லா ப்ளூ டயமண்ட் சாட்சி
பதிலளிநீக்குஇன்சுவை ஐஸ்க்ரீம் பார்லர் சாட்சி// ஜில்லுன்னு ஒரு காதல்'னு சொல்லுங்க ...
நிறைவேறாத காதலின் நினைவுகளையும்,
பதிலளிநீக்குகாதல் பிரிவின் பின்னர் பழைய காதலர்கள் எதேச்சையாகச் சந்தித்துக் கொள்ளும் போது ஏற்படும் மன உணர்ச்சிகளையும் உங்கள் கவிதையில் வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
உங்களின் நினைவு மீட்டல் சோகத்தினை வர வைக்கிறது சகோ.
நல்ல கவிதை ஐயா
பதிலளிநீக்குகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த சென்னை பித்தன் .உங்கள் பதிவு அனைவருடைய காதல் உணர்வையும் தட்டி எழுப்புவதாக உள்ளது .......!
பதிலளிநீக்குஅசத்தல் கவிதை தோழா..
பதிலளிநீக்குஉங்களின்
பதிலளிநீக்குமனக் கதவைத்
திறத்து
தன்
மனக் கதவை
மூடியவரை
பற்றிய
கவிதை
மனதை சற்றே
கணமாக்கியது
நானும் உங்களைப்போன்று
அனுபவப்படிருக்கிறேன்
அதனால்
தாக்கம் சற்று அதிகம்
நல்ல பகிர்வு ஐயா
இத்தனை வருடத்தின் பின்னும் இவ்வளவு வலியா என்று அதிசயப்படுகிறேன் !
பதிலளிநீக்குமுனைவர்.இரா.குணசீலன் கூறியது...
பதிலளிநீக்கு//நன்றாகவுள்ளது ஐயா.//
நன்றி குணசீலன் அவர்களே!
"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
பதிலளிநீக்கு// நல்ல கவிதை//
நன்றி ராஜா!
"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
பதிலளிநீக்கு//வலிமிகுந்த கவிதை//
காதல் வலி!
"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
பதிலளிநீக்கு//இன்று எனது வலையில்
அவன்-இவன் திரைவிமர்சனம் //
போகிறேன்!
கந்தசாமி. கூறியது...
பதிலளிநீக்கு///இன்றில்லா ப்ளூ டயமண்ட் சாட்சி
இன்சுவை ஐஸ்க்ரீம் பார்லர் சாட்சி//
//ஜில்லுன்னு ஒரு காதல்'னு சொல்லுங்க ...//
காதலிக்கும்போது ஜில்;பிரியும்போது கொல்!
@கந்தசாமி
பதிலளிநீக்குநன்றி!
நிரூபன் கூறியது...
பதிலளிநீக்கு// நிறைவேறாத காதலின் நினைவுகளையும்,
காதல் பிரிவின் பின்னர் பழைய காதலர்கள் எதேச்சையாகச் சந்தித்துக் கொள்ளும் போது ஏற்படும் மன உணர்ச்சிகளையும் உங்கள் கவிதையில் வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
உங்களின் நினைவு மீட்டல் சோகத்தினை வர வைக்கிறது சகோ.//
இப்பதிவிலேயே பழைய இரு பதிவுகளின் சுட்டி உள்ளது.படித்துப் பாருங்கள்.வலி இன்னும் புரியும்!
நன்றி நிரூபன்!
ரியாஸ் அஹமது கூறியது...
பதிலளிநீக்கு// நல்ல கவிதை ஐயா//
நன்றி ரியாஸ்!
koodal bala கூறியது...
பதிலளிநீக்கு//காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த சென்னை பித்தன் .உங்கள் பதிவு அனைவருடைய காதல் உணர்வையும் தட்டி எழுப்புவதாக உள்ளது .......!//
நன்றி பாலா!
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
பதிலளிநீக்கு//அசத்தல் கவிதை தோழா..//
நன்றி கருன்!
A.R.ராஜகோபாலன் கூறியது...
பதிலளிநீக்கு//உங்களின்
மனக் கதவைத்
திறத்து
தன்
மனக் கதவை
மூடியவரை
பற்றிய
கவிதை
மனதை சற்றே
கணமாக்கியது
நானும் உங்களைப்போன்று
அனுபவப்படிருக்கிறேன்
அதனால்
தாக்கம் சற்று அதிகம்
நல்ல பகிர்வு ஐயா//
பதிவில் உள்ள சுட்டிகளின்
பழைய கவிதையும் படியுங்கள்
தாக்கம் அதிகமாகும்!
நன்றி ஏ.ஆர்.ஆர்.!
FOOD கூறியது...
பதிலளிநீக்கு//டிஸ்கி-இது முழுவதும் கற்பனையே//
// நான் நம்புறேங்க!//
நம்பினால் சரி!:-)
@FOOD
பதிலளிநீக்குநன்றி !
ஹேமா கூறியது...
பதிலளிநீக்கு//இத்தனை வருடத்தின் பின்னும் இவ்வளவு வலியா என்று அதிசயப்படுகிறேன் !//
உண்மைக் காதலின் இயல்பே அதுதானே!
நன்றி ஹேமா!
//இது முழுவதும் கற்பனையே// எனக்குத்தெரியும் இது கற்பனை என்று. கற்பனையே இவ்வாறு இருந்தால் உண்மை எவ்வாறு இருக்கும்?
பதிலளிநீக்குநல்ல கவிதை. பாராட்டுக்கள்.
வலியினூடேயும் வாழ்த்தும் இனிய இதயம்.
பதிலளிநீக்குவே.நடனசபாபதி கூறியது...
பதிலளிநீக்கு//இது முழுவதும் கற்பனையே// //எனக்குத்தெரியும் இது கற்பனை என்று. கற்பனையே இவ்வாறு இருந்தால் உண்மை எவ்வாறு இருக்கும்?
நல்ல கவிதை. பாராட்டுக்கள்.//
நன்றி சபாபதி அவர்களே!
மாதேவி கூறியது...
பதிலளிநீக்கு//வலியினூடேயும் வாழ்த்தும் இனிய இதயம்.//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,மாதேவி!
நல்ல கவிதை....
பதிலளிநீக்குவெங்கட் நாகராஜ் சொன்னது…
பதிலளிநீக்கு// நல்ல கவிதை....//
நன்றி வெங்கட்!
அந்த டிஸ்கி தேவையா? இருந்தாலும் அதை நான் நம்பிட்டேன். கவிதை உணர்வுப்பூர்வமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபாலா சொன்னது…
பதிலளிநீக்கு//அந்த டிஸ்கி தேவையா? இருந்தாலும் அதை நான் நம்பிட்டேன். கவிதை உணர்வுப்பூர்வமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.//
அதானே!உண்மையைக் கற்பனை யென்றால், உண்மை இல்லாமல் போகுமா? கற்பனையை உண்மை யென்றால்,உண்மையாகி விடுமா?
நன்றி பாலா!
இன்றில்லா ப்ளூ டயமண்ட் சாட்சி
பதிலளிநீக்குஇன்சுவை ஐஸ்க்ரீம் பார்லர் சாட்சி//
இதுதான் பின் நவீனத்துவ கவிதையோ...
நான் டிச்கியை நம்பவில்லை! இக்கவிதை மனசுக்குள் ஒரு வலியை தந்து செல்கிறது! பழைய காதலை யாரால்தான் மறக்க முடியும்!
பதிலளிநீக்குஇக்கவிதையில் இருந்து, அவர் தானாகப் பிரிந்து செல்லவில்லை! பிரிக்கப்பட்டுள்ளீர்கள் என்பது தெளிவாக புரிகிறது!
உங்கள் மனவேதனையை நான் அப்ப்படியே உணர்ந்து கொள்கிறேன்!
அவரைப் பற்றி நீங்கள் எண்ணீப் பார்க்கும் ஒவ்வொரு நொடியும், அது ஒரு வாழ்த்தாக, ஆசீர்வாதமாக அவரைச் சென்று சேரட்டும்!
எனக்கு தமிழ்னாடு பற்றி அவ்வளவு தெரியாது என்பதால் கீழ்வரும் கேள்விகளைக் கேட்கிறேன்!
பதிலளிநீக்குஇன்றில்லா ப்ளூ டயமண்ட் சாட்சி - இது எதனைக் குறிக்கிறது?
மயிலை சாந்தி விஹார் சாட்சி - இது ஒரு தியேட்டரா?
கர்த்தரின் ஆசீர்வாதங்கள் என்றைக்கும் உங்களுக்கு கிடைக்கட்டும் சகோ!
பதிலளிநீக்குஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
பதிலளிநீக்குஇன்றில்லா ப்ளூ டயமண்ட் சாட்சி
இன்சுவை ஐஸ்க்ரீம் பார்லர் சாட்சி//
//இதுதான் பின் நவீனத்துவ கவிதையோ...//
ஒரு புது அங்கீகாரம் கிடைத்திருக்கிறது!
நன்றி சதீஷ்!
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...
பதிலளிநீக்கு// நான் டிச்கியை நம்பவில்லை! இக்கவிதை மனசுக்குள் ஒரு வலியை தந்து செல்கிறது! பழைய காதலை யாரால்தான் மறக்க முடியும்!
இக்கவிதையில் இருந்து, அவர் தானாகப் பிரிந்து செல்லவில்லை! பிரிக்கப்பட்டுள்ளீர்கள் என்பது தெளிவாக புரிகிறது!
உங்கள் மனவேதனையை நான் அப்ப்படியே உணர்ந்து கொள்கிறேன்!
அவரைப் பற்றி நீங்கள் எண்ணீப் பார்க்கும் ஒவ்வொரு நொடியும், அது ஒரு வாழ்த்தாக, ஆசீர்வாதமாக அவரைச் சென்று சேரட்டும்!//
நன்றாகப் புரிந்து கொண்டி ருக்கிறீர்கள்.பதிவில் நான் சுட்டி கொடுத்துள்ள மற்றக் கவிதை களையும் படித்துப் பாருங்கள் சகோ!
நன்றி!
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...
பதிலளிநீக்கு// எனக்கு தமிழ்னாடு பற்றி அவ்வளவு தெரியாது என்பதால் கீழ்வரும் கேள்விகளைக் கேட்கிறேன்!
இன்றில்லா ப்ளூ டயமண்ட் சாட்சி - இது எதனைக் குறிக்கிறது?
மயிலை சாந்தி விஹார் சாட்சி - இது ஒரு தியேட்டரா?//
சென்னையில் முன்பு சஃபைர், எமரால்ட்.ப்ளூ டைமண்ட் என்று மூன்று தியேட்டர்கள் சேர்ந்து இருந்தன.ப்ளூ டைமண்டில் படம் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக் கும். எப்போது வேண்டுமானாலும் உள்ளே போகலாம்,எப்போது வேண்டுமானாலும் வெளியே வரலாம். காதலர்களின் சொர்க்கம்!(என் பழைய பதிவில் ஒரு வரி--”ப்ளூ டைமண்ட் குளிர் இருட்டின் உன் உஷ்ண ஸ்பரிசங்கள் இன்னும் மறக்கவில்லை”)
சாந்தி விஹார் என்பது மயிலை,லஸ்ஸில் இருந்த ஒரு ஓட்டல் .ஒரு காஃபி குடித்துக் கொண்டே நெடுநேரம் பேசிக் கொண்டிருக்கலாம்!
வேறு சந்தேகங்கள்?
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...
பதிலளிநீக்கு//கர்த்தரின் ஆசீர்வாதங்கள் என்றைக்கும் உங்களுக்கு கிடைக்கட்டும் சகோ!//
ஆமென்!
நன்றி சகோ!
வணக்கம் சகோதரரே பதிவர்களுக்கு இன்று எனது வலைத்தளத்தில் ஒரு விருந்து வைத்துள்ளேன்
பதிலளிநீக்குசென்று அனுபவியுங்கள் வாழ்த்துக்கள்...........
@அம்பாளடியாள்
பதிலளிநீக்குநல்வரவு!
-\\இது முழுவதும் கற்பனையே//
பதிலளிநீக்கு- நம்பிட்டோம்