தோட்டத்தில் நீர்பாய்ச்சி நிற்கின்ற வேளையில்
சட்டென்று கண்ணில் பட்டதந்த பச்சோந்தி!
கல்லெடுத்து வீசினேன் பச்சோந்தியை நோக்கி
சொல்லொணா வேகத்தில் மறைந்ததந்தப் பச்சோந்தி!
எங்கது மறைந்ததென்று தேடுகின்ற வேளையில்
அங்கொரு மரக்கிளையில் கிளையின் நிறமெடுத்துக்
கிளையோடு கிளையாய்க் கிடந்ததந்தப் பச்சோந்தி!
மற்றொமொரு கல் வீச்சில் மறைந்திட்ட பச்சோந்தி
பற்றி நின்றது மரத்தை ,இலைகளோடு இலையாய்ப்
புதிதாகப் பச்சை நிறமெடுத்து!எத்தனை வண்ணம்தான்
எடுக்குமந்தப் பச்சோந்தி தன்னுயிரைக் காப்பதற்கு!
எனக்குத் தெரியவில்லை, அதன் உண்மை வண்ணமென்ன?
உனக்காவது தெரியுமா உன் உண்மை நிறம் பச்சோந்தியே?!
(பழைய கவிதை,புதிய வடிவம்!)
முதல் ஓட்டு...
பதிலளிநீக்குநல்லாருக்குங்கய்யா
பதிலளிநீக்குஅதற்க்கென்று தனி நிறமில்லாது இருக்கும் இடத்திற்கு ஏற்றப மாறிக் கொள்வது அது...
பதிலளிநீக்குசில சுயநல மனிதர்கள் போல்...
ஐயா ...ஏன் இந்த உள்ள கூத்து ...காதுல சொல்லுங்க இது யாருக்கு
பதிலளிநீக்குதி மு க தொண்டர்களுக்கா
பதிலளிநீக்குஅ தி மு க தொண்டர்களுக்கா
பதிலளிநீக்குஎப்படி உங்கள் கவிதைக்கே அரசியல் வண்ணம் பூசிய நான் பச்சோந்தி அல்ல
பதிலளிநீக்குயாருக்கோ முதுகுல டின் கட்டுரீங்கன்னு மட்டும் புரியுது ஹி ஹி...
பதிலளிநீக்குசின்ன பிள்ளையில பச்சோந்தி பிடிச்சி கயித்துல கட்டி போட்டு விளையாடி இருக்கேன்...
பதிலளிநீக்குபிழைக்கத்தெரிந்த பச்சோந்திகள் ...)
பதிலளிநீக்குகவிதை நல்லா இருக்கு! மனிதர்களில் பச்சோந்தி கண்டுதான் பயமே....
பதிலளிநீக்கு!எத்தனை வண்ணம்தான்
பதிலளிநீக்குஎடுக்குமந்தப் பச்சோந்தி தன்னுயிரைக் காப்பதற்கு!//
உண்மை வண்ணம் அறிய முயல்வோம்.
kalakkal sinthanai..
பதிலளிநீக்குமனிதப் பச்சோந்திகளுக்கு உள் குத்து .......!
பதிலளிநீக்குஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
பதிலளிநீக்கு// முதல் ஓட்டு...//
சூப்பர் ஃபாஸ்ட் !
ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
பதிலளிநீக்கு//நல்லாருக்குங்கய்யா//
நன்றி சதீஷ்!
# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
பதிலளிநீக்கு//அதற்க்கென்று தனி நிறமில்லாது இருக்கும் இடத்திற்கு ஏற்றப மாறிக் கொள்வது அது...//
// சில சுயநல மனிதர்கள் போல்...//
அதான் மேட்டரே!
ரியாஸ் அஹமது கூறியது...
பதிலளிநீக்கு//ஐயா ...ஏன் இந்த உள்ள கூத்து ...காதுல சொல்லுங்க இது யாருக்கு//
அரசியல் பிழைத்தோர்க்கு அறம்
கூற்றாகும்!(சிலப்பதிகாரம்)
நன்றி ரியாஸ்!
ரியாஸ் அஹமது கூறியது...
பதிலளிநீக்கு// தி மு க தொண்டர்களுக்கா//
நிச்சயமா இல்லை!பாவம் தொண்டர்கள்!
ரியாஸ் அஹமது கூறியது...
பதிலளிநீக்கு//அ தி மு க தொண்டர்களுக்கா//
இல்லவே இல்லை!
@# கவிதை வீதி # சௌந்தர்
பதிலளிநீக்குநன்றி சௌந்தர்!
ரியாஸ் அஹமது கூறியது...
பதிலளிநீக்கு//எப்படி உங்கள் கவிதைக்கே அரசியல் வண்ணம் பூசிய நான் பச்சோந்தி அல்ல//
பூசினீர்கள்!பூசிக்கொள்ளவில்லையே!
MANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்கு// யாருக்கோ முதுகுல டின் கட்டுரீங்கன்னு மட்டும் புரியுது ஹி ஹி...//
இந்த நாட்டுல யாருக்குன்னு சொல்றது,மனோ!
நன்றி!
MANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்கு//சின்ன பிள்ளையில பச்சோந்தி பிடிச்சி கயித்துல கட்டி போட்டு விளையாடி இருக்கேன்...//
கி.இராஜநாராயணன் படித்திருக் கிறீர்களா?ஒரு கதையில் சிறுவர்கள் ’கரட்டாண்டி’ பிடித்து விளையா டுவதை மண்ணின் மணம் கமழச் சொல்லியிருப்பார்!
கந்தசாமி. கூறியது...
பதிலளிநீக்கு//பிழைக்கத்தெரிந்த பச்சோந்திகள்//
முற்றிலும் சரி!
நன்றி கந்தசாமி!
வெங்கட் நாகராஜ் கூறியது...
பதிலளிநீக்கு//கவிதை நல்லா இருக்கு! மனிதர்களில் பச்சோந்தி கண்டுதான் பயமே....//
பயந்தால் முடியுமா?பச்சோந்திகளை இனம் கண்டு கொள்ளுங்கள்!
நன்றி வெங்கட்!
இராஜராஜேஸ்வரி கூறியது...
பதிலளிநீக்கு!எத்தனை வண்ணம்தான்
எடுக்குமந்தப் பச்சோந்தி தன்னுயிரைக் காப்பதற்கு!//
//உண்மை வண்ணம் அறிய முயல்வோம்.//
அதுவே சரியான செயல்!
நன்றி இராஜராஜேஸ்வரி!
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
பதிலளிநீக்கு//kalakkal sinthanai..//
நன்றி கருன்!
koodal bala சொன்னது…
பதிலளிநீக்கு//மனிதப் பச்சோந்திகளுக்கு உள் குத்து .......!//
:-) நன்றி பாலா!
பச்சென்று இருந்தது .. பச்சை நிறத்தை பச்சோந்தி தான் எடுக்குமா ? தற்போது மிகவும் பிரபலமாக உள்ளது இந்த நிறம் தான் ! வாசுதேவன்
பதிலளிநீக்குFOOD சொன்னது…
பதிலளிநீக்கு// நல்லாருக்குங்க. சின்ன சின்ன விஷயங்களையும் ரசிச்சிருக்கீங்க.//
நன்றி சங்கரலிங்கம்!
வணக்கம் ஐயா,
பதிலளிநீக்குபச்சோந்தி பற்றி நச்சென்று ஒரு கவிதை. அருமையாக இருக்கு.
Vasu சொன்னது…
பதிலளிநீக்கு//பச்சென்று இருந்தது .. பச்சை நிறத்தை பச்சோந்தி தான் எடுக்குமா ? தற்போது மிகவும் பிரபலமாக உள்ளது இந்த நிறம் தான் ! //
பச்சை எப்போதும் பிரபலம்தான்!
நன்றி வாசு!
நிரூபன் கூறியது...
பதிலளிநீக்கு//வணக்கம் ஐயா,
பச்சோந்தி பற்றி நச்சென்று ஒரு கவிதை. அருமையாக இருக்கு.//
நன்றி நிரூபன்!
ஆட்சிகள் மாறலாம். காட்சிகள் மாறலாம்.ஆனால் இந்த பச்சோந்திகள் மட்டும் தங்களின் பிறவிக்குணத்தை மாற்றிக்கொள்ளாது.இவைகள் எவை என்பதை சொல்லாமல் சொன்னதற்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவணக்கம் ஐயா, வேலைப் பளு, மற்றும் நேரமின்மையால் தங்கள் கவிதைக்கு விரிவான பின்னூட்டமிட முடியவில்லை.. இப்போது வந்துள்ளேன்.
பதிலளிநீக்குதோட்டத்தில் நீர்பாய்ச்சி நிற்கின்ற வேளையில்
பதிலளிநீக்குசட்டென்று கண்ணில் பட்டதந்த பச்சோந்தி!
கல்லெடுத்து வீசினேன் பச்சோந்தியை நோக்கி
சொல்லொணா வேகத்தில் மறைந்ததந்தப் பச்சோந்தி!//
இங்கே பச்சோந்தியின் இயல்பான குணத்தினையும், பச்சோந்தியினை மனிதர்கள் அடையாளம் கண்டவுடன் கல்லெடுத்து எறிகையில் அது எவ்வாறு ஓடி மறைகிறது என்பதையும் அழகுறச் சொல்லியிருக்கிறீங்க.
//
எங்கது மறைந்ததென்று தேடுகின்ற வேளையில்
அங்கொரு மரக்கிளையில் கிளையின் நிறமெடுத்துக்
கிளையோடு கிளையாய்க் கிடந்ததந்தப் பச்சோந்தி!//
பச்சோந்தியின் இயல்பே இது தான், தான் வாழா விட்டாலும், தனக்கென இருக்கும் கூட்டத்தோடு ஒட்டி வாழுமாம்;-))
அதனை இங்கே நடை முறை வாழ்வியல் கள விடயங்களைச் சொல்ல வேண்டும் எனும் நோக்கில் பூடகமான குறியீட்டு மொழி வடிவில் பச்சோந்தியினைக் குறியீடாக்கிச் சொல்லியிருக்கிறீங்க.
மற்றொமொரு கல் வீச்சில் மறைந்திட்ட பச்சோந்தி
பற்றி நின்றது மரத்தை ,இலைகளோடு இலையாய்ப்
புதிதாகப் பச்சை நிறமெடுத்து!//
இவ் வரிகளில் கீ போர்ட்டில் எண்டர் கீயினைத் தட்டி கொஞ்சம் வார்த்தைகளைப் பிரித்திருந்தால் இன்னும் அழகாக் இருக்கும் ஐயா.
ம்...இப்போது இலைகளோடு சேர்ந்து விட்ட பச்சோந்தி...இங்கே பல விடயங்கள் வந்து போகின்றன. அருமையான மொழிக் கையாடல்.
//எத்தனை வண்ணம்தான்
எடுக்குமந்தப் பச்சோந்தி தன்னுயிரைக் காப்பதற்கு!
எனக்குத் தெரியவில்லை, அதன் உண்மை வண்ணமென்ன?
உனக்காவது தெரியுமா உன் உண்மை நிறம் பச்சோந்தியே?!//
தன் உயிரை மாத்திரம் காப்பதற்குப் பச்சோந்தி பல வடிவம் எடுக்குமாம், ஆனால் அவர்களை நம்பியுள்ள மக்கள் வாழ்வை காக்க எவ் வடிவம் எடுக்குமோ என்பது தான் இங்கே கேள்விக் குறி....
அருமையான குறியீட்டு வடிவக் கவிதை ஐயா.
@நிரூபன்
பதிலளிநீக்குகவிதை எழுதியபோது மகிழ்ந்ததை விட ,அதிகம் மகிழ்ந்தேன்,உங்கள் பின்னூட்டம் கண்டு.ஒவ்வோரு வரியாக எடுத்து கருத்துச் சொல்லியிருக்கும் பாங்கு வியக்க வைக்கிறது! என்னைத் திணறச் செய்து விட்டீர்கள்!
நன்றி! நன்றி!நன்றி நிரூபன்!
அதற்க்கென்று தனி நிறமில்லாது இருக்கும் இடத்திற்கு ஏற்றப மாறிக் கொள்வது அது...பிழைக்கத்தெரிந்த பச்சோந்திகள்
பதிலளிநீக்குவே.நடனசபாபதி கூறியது...
பதிலளிநீக்கு//ஆட்சிகள் மாறலாம். காட்சிகள் மாறலாம்.ஆனால் இந்த பச்சோந்திகள் மட்டும் தங்களின் பிறவிக்குணத்தை மாற்றிக்கொள்ளாது.இவைகள் எவை என்பதை சொல்லாமல் சொன்னதற்கு வாழ்த்துக்கள்!//
பச்சோந்திகளை நாம்தான் இனம் கண்டு கொள்ளவேண்டும்.
நன்றி நடன சபாபதி அவர்களே!
மாலதி கூறியது...
பதிலளிநீக்கு//அதற்க்கென்று தனி நிறமில்லாது இருக்கும் இடத்திற்கு ஏற்றப மாறிக் கொள்வது அது...பிழைக்கத்தெரிந்த பச்சோந்திகள்//
உண்மை!
நன்றி மாலதி!
காலத்திற்கேற்ற கவிதை.
பதிலளிநீக்குதன்னுயிரைக் காக்க நிறம் மாறும் பச்சோந்தி. ஆனால் பிற உயிரை எடுக்க மாறுகின்றன மனிதப் பச்சோந்திகள்.