தொடரும் தோழர்கள்

திங்கள், ஜூன் 13, 2011

பரல்கள்!(மன்னிப்பும்,மற்றவையும்!)

வெள்ளியன்று மாலை BSNL காலை வாரி விட்டு விட்டது!ஆம்!இண்டர் நெட் தொடர்பு அற்றுப் போய் விட்டது.சில நேரங்களில் தானாகவே திரும்ப வந்து விடும்.எனவே நான் இரவுக்குள் தொடர்பு திரும்ப வரும் என எண்ணியிருந்தேன். ஆனால் வரவில்லை.சனியன்று காலை எழுந்ததும் முயன்றேன்;தொடர்பு இல்லை.6 மணிக்குப் புகார் கொடுத்தேன்; பதிவாகியது.ஆனால் அன்று முழுவதும் சரி செய்யப்படவில்லை.மறு நாள் ஞாயிறு;விடுமுறை நாள்.ஒன்றும் நடக்காது என்பது தெரியும்.

இன்றுதான் தொடர்பு சரி செய்யப் பட்டது,காலை 8 மணி அளவில். தானாகவே பிரச்சினை சரியாகி விட்டது என எண்ணுகிறேன்!எனவே என் பதிவில் பின்னூட்டமிட்ட நண்பர்கள் சிலருக்கு உடன் பதில் அளிக்க இயலவில்லை.நண்பர்களின் பதிவுக்குச் சென்று படித்துப் பின்னூட்டம் இட முடியவில்லை.மன்னிக்கவும்! இன்று இயன்ற வரை செய்கிறேன்!
--------------------------------------------------

ஆங்கிலத்தில் லிமரிக் என்று ஒரு வகைக் கவிதையுண்டு.ஐந்து வரிகள் உடையது.முதல் இரண்டு வரிகளின் முடிவிலும் அடுத்த மூன்று வரிகளின் முடிவிலும் சந்தம் ஒத்து வரும்.சும்மா ஒரு நகைச்சுவை வகைதான்!அந்த வகை முயற்சி,தமிழில் கீழே!

“பக்கத்து வீட்டு வாசி ராமன்
பார்ப்பதற்கு அவன் காமன்
மணந்தான் அழகு மங்கை
இணைப்பாய் அவள் தங்கை
கேட்கிறார் தத்தம் பங்கை!”

இது எப்புடி இருக்கு!
-------------------------------------------------

இரண்டு ஜோக்ஸ்

குமாஸ்தா : போடா, நீ முட்டாள் !
டைப்பிஸ்ட்: போடா, நீ தான் முட்டாள் !
மேனேஜர்: என்ன அங்கே கூச்சல்?
நான் ஒருத்தன் இங்கே இருப்பது
உங்களுக்கு தெரியலையா ?
-----
காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.
காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?
காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை...
காதலி : !!!!
---------------------------------------------




போட்டியின்றி வாழ்க்கையில்லை!
போட்டியென்பது நாம் சிறுவர்களாய் இருக்கும்போதே ஆரம்பமாகி விடுகிறது.

மூத்தவனாய்(ளாய்) இருந்தால் தம்பி தங்கைகளுடன்,இளையவனாய் இருந்தால் மூத்தவர்களுடன் போட்டி.
இதற்குத்தான் என்றில்லை. ஒரு ஆசனத்தில் அமர்வது,டிவி. பார்ப்பது,ஒரு பொருளை முதலில் உபயோகிப்பது என்று எதிலும் போட்டி.

பள்ளியில் படிக்கும் போது நான் ஓட்டப் பந்தயம்,உயரம் தாண்டுதல்,நீளம் தாண்டுதல்,குண்டு எறிதல் என்று அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்டதே இல்லை!
ஒரே ஒரு முறை,எட்டோ ,ஒன்பதோ படிக்கும்போது சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டு எல்லைக் கோட்டை முதலாவதாகக் கடந்தேன்.ஆனால் பரிசு தரவில்லை!ஏனெனில் அது ”ஸ்லோ சைக்கிள் ரேஸ்”!!

33 கருத்துகள்:

  1. //அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்டதே இல்லை!// ரொம்பப் பெருமையான விஷயம் ஐயா..நானும் அப்படியே..எல்லோரும் விளையாடினால் வேடிக்கை யார் பார்ப்பது?

    பதிலளிநீக்கு
  2. செங்கோவி கூறியது...

    //அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்டதே இல்லை!// //ரொம்பப் பெருமையான விஷயம் ஐயா..நானும் அப்படியே..எல்லோரும் விளையாடினால் வேடிக்கை யார் பார்ப்பது?//
    அதானே!என்னைப்போல் ஒருவர்!

    பதிலளிநீக்கு
  3. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    //மேனேஜர் ஜோக் அசத்தல்..//
    நன்றி கருன்!

    பதிலளிநீக்கு
  4. ஜோக்ஸ் அருமை .BSNL கடந்த வாரம் என்னையும் பாடாய் படுத்தியது . 3 நாட்களாக யாரும் வரவில்லை .கடைசியில் நானே தொலை பேசி கம்பத்தில் ஏறி இணைப்பை சரி செய்தேன் .

    பதிலளிநீக்கு
  5. //மூத்தவனாய்(ளாய்) இருந்தால் தம்பி தங்கைகளுடன்,இளையவனாய் இருந்தால் மூதவர்களுடன் போட்டி.//

    ஐயா தப்பா நினைக்க வேண்டாம் இதில் எழுத்து பிழை உள்ளது சரி செய்யவும் ..நன்றி

    பதிலளிநீக்கு
  6. koodal bala சொன்னது…

    //ஜோக்ஸ் அருமை .BSNL கடந்த வாரம் என்னையும் பாடாய் படுத்தியது . 3 நாட்களாக யாரும் வரவில்லை .கடைசியில் நானே தொலை பேசி கம்பத்தில் ஏறி இணைப்பை சரி செய்தேன் .//
    நல்ல வேளையா அந்த நிலைமை எனக்கு வரவில்லை!
    நன்றி பாலா!

    பதிலளிநீக்கு
  7. ரியாஸ் அஹமது கூறியது...

    //மூத்தவனாய்(ளாய்) இருந்தால் தம்பி தங்கைகளுடன்,இளையவனாய் இருந்தால் மூதவர்களுடன் போட்டி.//

    //ஐயா தப்பா நினைக்க வேண்டாம் இதில் எழுத்து பிழை உள்ளது சரி செய்யவும் ..நன்றி//
    ’த்’?
    நன்றி ரியாஸ்!

    பதிலளிநீக்கு
  8. இணையத்தில் தொடர்பு கிடைக்காதபோது 53576 க்கு BSNL Mobile மூலம் BBF என தட்டச்சு செய்து உங்கள் தொலைபேசி எண்ணை அதற்கு பின்னால் கொடுத்து SMS செய்தால், உடனே உங்கள் புகார் பதிவு செய்யப்பட்டு விரைவில் சரி செய்கிறார்கள். இது எனது சொந்த அனுபவம். அப்படி இல்லாவிடில் நண்பர்கள் மூலம் இணையம் வழியாகவும் புகாரை பதிவு செய்யலாம்.

    கவிதையில் 'தூள்' கிளப்பியுள்ளீர்கள். ஜோக்குகளில் எனக்குப் பிடித்தது இரண்டாவதுதான்.

    பதிலளிநீக்கு
  9. ///பள்ளியில் படிக்கும் போது நான் ஓட்டப் பந்தயம்,உயரம் தாண்டுதல்,நீளம் தாண்டுதல்,குண்டு எறிதல் என்று அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்டதே இல்லை!// ஹிஹிஹி கலந்து கொண்டது சரி, பரிசில் வென்றது உண்டா ....!!!

    ஜோக் சூப்பர் ஐயா ...

    பதிலளிநீக்கு
  10. கவிதையும், ஜோக்ஸும் நன்றாக இருந்தது.

    பி.எஸ்.என்.எல்... - ஒன்றும் சொல்வதற்கில்லை.... சென்ற வாரத்தில் சென்னையில் நிறைய பேருக்கு இந்த பிரச்சனை போல....

    பதிலளிநீக்கு
  11. தமிழில் லிமரிக் கவிதை! அருமை! அருமை!!
    ஜோக்குகளும்தான்! ஹா ஹா ஹா ஹா!!

    பதிலளிநீக்கு
  12. வே.நடனசபாபதி கூறியது...

    //இணையத்தில் தொடர்பு கிடைக்காதபோது 53576 க்கு BSNL Mobile மூலம் BBF என தட்டச்சு செய்து உங்கள் தொலைபேசி எண்ணை அதற்கு பின்னால் கொடுத்து SMS செய்தால், உடனே உங்கள் புகார் பதிவு செய்யப்பட்டு விரைவில் சரி செய்கிறார்கள்.
    செய்தேனே பல முறை!
    இது எனது சொந்த அனுபவம். அப்படி இல்லாவிடில் நண்பர்கள் மூலம் இணையம் வழியாகவும் புகாரை பதிவு செய்யலாம்.

    கவிதையில் 'தூள்' கிளப்பியுள்ளீர்கள். ஜோக்குகளில் எனக்குப் பிடித்தது இரண்டாவதுதான்.
    நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  13. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

    //ஜோக் நல்ல இருக்கு//

    நன்றி ராஜா!

    பதிலளிநீக்கு
  14. கந்தசாமி. கூறியது...

    ///பள்ளியில் படிக்கும் போது நான் ஓட்டப் பந்தயம்,உயரம் தாண்டுதல்,நீளம் தாண்டுதல்,குண்டு எறிதல் என்று அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்டதே இல்லை!// ஹிஹிஹி கலந்து கொண்டது சரி, பரிசில் வென்றது உண்டா ....!!!

    //ஜோக் சூப்பர் ஐயா ...//
    ”கலந்துகொண்டதேஇல்லை!”
    நன்றி கந்தசாமி!

    பதிலளிநீக்கு
  15. வெங்கட் நாகராஜ் கூறியது...

    //கவிதையும், ஜோக்ஸும் நன்றாக இருந்தது.

    பி.எஸ்.என்.எல்... - ஒன்றும் சொல்வதற்கில்லை.... சென்ற வாரத்தில் சென்னையில் நிறைய பேருக்கு இந்த பிரச்சனை போல....//

    நன்றி வெங்கட்!

    பதிலளிநீக்கு
  16. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...

    //தமிழில் லிமரிக் கவிதை! அருமை! அருமை!!
    ஜோக்குகளும்தான்! ஹா ஹா ஹா ஹா!!//

    நன்றி ஓ.வ.நா.!

    பதிலளிநீக்கு
  17. குணசேகரன்... கூறியது...

    //குமாஸ்தா ஜோக்ஸ் super.//
    நன்றி குணசேகரன்!

    பதிலளிநீக்கு
  18. இன்ர நெட் தடை...வருத்ததிற்குரிய செய்தி..

    லிமரிக் கவிதை, சந்த நடையில் அற்புதமாக வந்திருக்கிறது.

    இதனைத் தமிழில் மரபுக் கவிதைக்குள் எழுதும் போது சிந்து கவி என்று அழைப்பார்கள்.

    ஆப்பிஸ் ஜோக் செம கலக்கல்...

    பதிலளிநீக்கு
  19. பரிசு தரவில்லை!ஏனெனில் அது ”ஸ்லோ சைக்கிள் ரேஸ்”!!//

    என்ன ஒரு டெரர் தனம்...
    ரசித்தேன் ஐயா.

    பதிலளிநீக்கு
  20. எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.முழு விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  21. நிரூபன் கூறியது...

    // இன்ர நெட் தடை...வருத்ததிற்குரிய செய்தி..

    லிமரிக் கவிதை, சந்த நடையில் அற்புதமாக வந்திருக்கிறது.

    இதனைத் தமிழில் மரபுக் கவிதைக்குள் எழுதும் போது சிந்து கவி என்று அழைப்பார்கள்.

    ஆப்பிஸ் ஜோக் செம கலக்கல்...//
    நன்றி நிரூபன்!

    பதிலளிநீக்கு
  22. நிரூபன் கூறியது...

    //பரிசு தரவில்லை!ஏனெனில் அது ”ஸ்லோ சைக்கிள் ரேஸ்”!!//

    என்ன ஒரு டெரர் தனம்...
    ரசித்தேன் ஐயா.//

    முதலா வந்தும் பரிசு இல்லைன்னா வருத்தம்தானே!!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  23. FOOD கூறியது...

    //உங்கள் அனுபவங்கள் தந்த பாடம்.//
    நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  24. Prabashkaran Welcomes கூறியது...

    //அருமை//

    நன்றி!

    பதிலளிநீக்கு
  25. பிரபாஷ்கரன் கூறியது...

    //அருமை//
    நன்றி!

    பதிலளிநீக்கு