ஏழு என்பது ஒரு முக்கியமான எண்!
எண் கணிதத்தில் இது கேதுவின் எண்.கேது ஞான காரகன்.இந்த எண்ணின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள் நிறைகுடம் போன்றவர்கள்.ஆழ்ந்த அறிவுக்கூர்மை உடையவர்கள். ஓரளவுக்கு நிலையான மனம் உள்ளவர்கள்(ஸ்திதப் பிரக்ஞர்கள்)இயற்கை ஞானம் உள்ளவர்கள்(என் பிறந்த தேதி 25--2+5=7!).
வானவில்லின் நிறங்கள் ஏழு!வானத்தில் வண்ணக்கலவையாக வானவில் தோன்றும் போது,அதன் அழகில் மயங்காதார் யார்!அடிப்படையான ஏழு நிறங்கள் இந்த விப்ஜியார்தான். மற்ற அனைத்து நிறங்களும் இவற்றின் சேர்க்கையே!
இசையின் சுரங்கள் ஏழு.ஸ,ரி,க,ம,ப,த,நி என்பவை அவை.நமது இசையில் மட்டுமல்ல.மேற்கத்திய இசையிலும் ஏழு சுரங்கள்தான். -டோ,ரே,மி,ஃபா.சோ,லா,டி (do,re,mi,fa,so,la,ti) என்பவை அவை.
சவுண்ட் ஆஃப் மியூசிக் படத்தில் ஒரு இனிமையான பாடல் கேட்டிருப்பீர்கள்-
இந்த சுரங்களை வைத்துப் புனையப்பட்ட பாடல்-” Do a deer a female deer”
எனத்தொடங்கும் பாடல்.
மனித உடலில் இயங்கும் சக்கரங்கள் ஏழு—மூலாதாரம்,ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம்,விசுத்தி,ஆக்ஞை,சகஸ்ராரம் என்பவை அவை.மூலாதார சக்தி என்பது முதிகெலும்பின் கடைசியில் அமைந்துள்ளது.இந்தச் சக்தியை மேலேற்றி சகஸ்ராரத்தை அடையச் செய்யவேண்டும். இந்தக் குண்டலினி யோகம் பற்றித் திருமூலர் நிறைய எழுதியுள்ளார்.அது பற்றி எனது மற்றப் பதிவில் இயலும்போது எழுதுகிறேன்.
எம்பெருமான் வெங்கடாசலபதியின் மலைகள் ஏழு.எனவேதான் அவன் ஏழுமலையான்.
சமுத்திரங்கள் ஏழு—ஆர்க்டிக்,அண்டார்டிக்(சதர்ன்),வடக்கு பசிஃபிக்,தெற்கு பசிஃபிக்,வடக்கு அடலாண்டிக்,தெற்கு அடலாண்டிக்,இந்துமகா என்பவை அவை.
உலக அதிசயங்கள் ஏழு.இப்போது புதிய அதிசயங்களாகத்தேர்வு செய்யப்பட்டவை--
சிச்சென் இட்சா-மெக்சிகோ;மீட்பர் கிறிஸ்து சிலை-பிரேசில்;கொலோசியம்-இத்தாலி;சீனப் பெருஞ்சுவர்-சீனா;மாச்சு பிச்சு-பெரு(இதென்ன அச்சுப் பிச்சு மாதிரி!)பெட்ரா-ஜோர்டான்;தாஜ்மஹால்-இந்தியா.
முன்பெல்லாம் வேலூரில் ஏழு அதிசயங்கள் சொல்வார்கள்!---கடவுள் இல்லாத கோவில்,ராஜா இல்லாத கோட்டை,தண்ணீர் இல்லா ஆறு,அதிகாரம் இல்லாத போலீஸ்(பயிற்சிக் கல்லூரியைக் குறிக்கிறது),மரமில்லாத மலை,வீரமில்லா ஆண்கள்,அழ்கில்லாத பெண்கள்!இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது எனக்குத் தெரியாது!
மனிதர்கள் தவிர்க்க வேண்டிய ஏழு பாவங்களைப் பற்றி காந்திஜி சொல்லியிருக்கிறார்.அவை--
உழைப்பற்ற செல்வம்
நேர்மையற்ற வியாபாரம்
ஒழுக்கமற்ற கல்வி
ஈடுபாடற்ற வழிபாடு
மனிதத் தன்மையற்ற அறிவியல்
மனச்சாட்சியற்ற இன்பம்
கொள்கையற்ற அரசியல்!
இந்தப்பாவங்கள் எல்லாம் இன்று வாழ்க்கை நெறியாகிப் போய் விட்டனவே!
கடைசியாக ஆனால் அனைத்திலும் முக்கியமாகப் பதிவர்கள் ஆவலுடன் எதிர்நோகிக் காத்திருக்கும் எண் இந்த ஏழு.தமிழ்மணத்தில் ஆறு ஓட்டு விழுந்த பின் இந்த ஏழாவது ஓட்டு,காக்க வைக்கும்,எதிர் நோக்க வைக்கும்,காத்து ஏங்க வைக்கும்! பின்னூட்டத்தில் சிலர் பெருமையாய்க் கூறுவர்”ஏழாவது ஓட்டுப் போட்டு விட்டேன்” என்று.பதிவர் நன்றிப் பெருக்கில் திக்கு முக்காடி விடுவார்!
ஏழு சுரங்களுக்குள் எத்தனை பாடல்!
ஏழு ஓட்டுக்களுக்கு எத்தனை தேடல்!
கட்டாயம் போடணும் ஓட்டு
ஆக்கணும் பதிவை ஹிட்டு
இல்லைன்னா விழும் திட்டு!
(இப்போ நான் போறேன் உங்களை விட்டு!)
வர்ட்டா?!
ஒரு ஏழுல இவ்ளோ விஷயம் இருக்கா..
பதிலளிநீக்குவடை
பதிலளிநீக்கு\\\கட்டாயம் போடணும் ஓட்டு
பதிலளிநீக்குஆக்கணும் பதிவை ஹிட்டு
இல்லைன்னா விழும் திட்டு!\\\
இப்பல்லாம் அரிவாள எடுத்தாத்தான் பயப்படுறாங்க !
இவ்ளோ மேட்டரா? ஓ! அதான் லக்கி செவன்னு சொல்றாங்களோ?
பதிலளிநீக்குபோனாலும் விடமாட்டோம் பித்த-நான்
பதிலளிநீக்குபெருமைக்குரிய ஏழுமலை பக்த
ஆனாலும் ஏழுவெனும் ஆய்வே-நல்
அறிவுக்கு என்றுமிலை ஓய்வே
தேனாக இனித்திடவே தந்தீர்-பொதிகை
தென்றலென சொல்லிடவே வந்தீர்
தானாக தேடிவரும் மருந்தே-நீர்
தருகின்றீர் நள்தோறும் விருந்தே
புலவர் சா இராமாநுசம்
ஏழு பற்றி ஏராளமான தகவல் தந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குதாங்கள் எழுதும் ‘லிமெரிக்’ கவிதையைப் படிக்கும்போது நாமும் எழுதினால் என்ன என நினைத்து எழுதிய கவிதை இதோ. ‘புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது போல” இருக்கலாம். தவறு இருப்பின் பொருத்தருளக.
தான் பேச நினைப்பதை தன் பதிவில் அழகாய் தினம் பேசுவார்
பின் ‘நினைப்பதை பேசமுடியுமா’ என கேள்விக்கணையையும் வீசுவார்
பலரும் போற்றும் அவர், நிச்சயமாய் பதிவுலகில் ஓர் ஜித்தன்
அவர்தான் அரிய பல தகவல்களை தரும் நம் சென்னைப்பித்தன்
இது‘உண்மை வெறும் புகழ்ச்சியில்லை’என்கிறான் இந்த தில்லைக்கூத்தன்.
777777777777777777777777777777
பதிலளிநீக்குஅட.. ஏழுக்கு பின்னால் எத்தனை விஷயங்களை எடுத்துக்காட்டிவிட்டீர்கள். அருமை நண்பா..
பதிலளிநீக்கு@!* வேடந்தாங்கல் - கருன் *!
பதிலளிநீக்குநன்றி கருன்!
@koodal bala
பதிலளிநீக்குபோச்சே!
@koodal bala
பதிலளிநீக்குஎடுத்துடுவோம்!
நன்றி பாலா!
ஜீ... கூறியது...
பதிலளிநீக்கு//இவ்ளோ மேட்டரா? ஓ! அதான் லக்கி செவன்னு சொல்றாங்களோ?//
அதேதான்!
நன்றி ஜீ!
@புலவர் சா இராமாநுசம்
பதிலளிநீக்குகவிதைப் பின்னூட்டம் அருமை! உங்கள் கவிதைகளைப் படிக்கும்போது நாமும் மரபுக் கவிதை எழுத முடியுமா என்ற ஏக்கம் பிறக்கிறது!
நன்றி ஐயா!
@வே.நடனசபாபதி
பதிலளிநீக்குஉங்களால் முடியாத விஷயமா? கலக்குங்க!
நன்றி சபாபதி அவர்களே!
@சி.பி.செந்தில்குமார்
பதிலளிநீக்கு????????????
நன்றி!
@கவிதை காதலன்
பதிலளிநீக்குநன்றி கவிதை காதலரே!
உண்மையிலே புதிய ஒரு சிந்தனை .. முதல் முறையாக அறிந்து கொள்கிறேன் நன்றி ஐயா ...
பதிலளிநீக்குஇல்லைன்னா விழும் திட்டு!// திட்டாதீங்கய்யா..நான் போட்டுடறேன்.....அப்புறம் ஏழு கடல் + ஏழு மலை தாண்டினா இளவரசி கிடைப்பான்னு சொல்வாங்களே..அதை விட்டுட்டீங்க..
பதிலளிநீக்குஏழை பத்தி
பதிலளிநீக்குஎழுதிய உங்களின் பதிவிற்கு
ஏழை நான்
ஏழாவது ஓட்டை போட்டது என பாக்கியம் - இது
என்
ஏழேழு பிறவிக்கும்
நிற்கும் கருத்துக் குவியல்
777.................7777......7777777ok!
பதிலளிநீக்குஉண்மையிலே புதிய ஒரு சிந்தனை .. முதல் முறையாக அறிந்து கொள்கிறேன் நன்றி
பதிலளிநீக்கு10 VATHU OTTU... AIYAA
பதிலளிநீக்குஐயா ..ரசித்து படித்தேன் உங்கள் பதிவை ....
பதிலளிநீக்குஇருந்தாலும் ஏனோ உங்களை வம்பிழுக்க ரொம்ப பிடிக்குது அதனால் உரிமையா ஒரு டவுட்டு
ஏழரையை(7 1/2) மறந்தது ஏன் ?? ஹி ஹி
என்னை ஏழரை ன்னு சொல்லக்கூடாது ஹி ஹி
ஏழு சுரங்களுக்குள் எத்தனை பாடல்!
பதிலளிநீக்குஏழு ஓட்டுக்களுக்கு எத்தனை தேடல்!
கட்டாயம் போடணும் ஓட்டு
ஆக்கணும் பதிவை ஹிட்டு
இல்லைன்னா விழும் திட்டு!///
ஹா ஹா ஹா ஹா தல கலக்கிட்டீங்க போங்க....!!!!
சிபி பயலும் ஏழு ஏழு'ன்னு போட்டு தாக்கிருக்கான் பாருங்க....
பதிலளிநீக்கு@கந்தசாமி.
பதிலளிநீக்குநன்றி கந்தசாமி!
செங்கோவி கூறியது...
பதிலளிநீக்குஇல்லைன்னா விழும் திட்டு!// //திட்டாதீங்கய்யா..நான் போட்டுடறேன்.....அப்புறம் ஏழு கடல் + ஏழு மலை தாண்டினா இளவரசி கிடைப்பான்னு சொல்வாங்களே..அதை விட்டுட்டீங்க..//
அதையும் நீங்க சேத்துக்குங்க!
நன்றி செங்கோவி!
A.R.ராஜகோபாலன் கூறியது...
பதிலளிநீக்கு// ஏழை பத்தி
எழுதிய உங்களின் பதிவிற்கு
ஏழை நான்
ஏழாவது ஓட்டை போட்டது என பாக்கியம் - இது
என்
ஏழேழு பிறவிக்கும்
நிற்கும் கருத்துக் குவியல்//
ஏழு முறை நன்றி கோப்லி!
விக்கியுலகம் கூறியது...
பதிலளிநீக்கு//777.................7777......7777777ok!//
77777777777!
நன்றி விக்கி!
மாலதி கூறியது...
பதிலளிநீக்கு//உண்மையிலே புதிய ஒரு சிந்தனை .. முதல் முறையாக அறிந்து கொள்கிறேன் நன்றி//
நன்றி மாலதி!
FOOD கூறியது...
பதிலளிநீக்கு// ஏழுல இவ்ளோ விஷயம் இருக்கா?//
இதுக்கு மேலேயும் இருக்கு!
நன்றி சங்கரலிங்கம்!
ரியாஸ் அஹமது கூறியது...
பதிலளிநீக்கு//10 VATHU OTTU... AIYAA//
நன்றி ரியாஸ்!
ரியாஸ் அஹமது கூறியது...
பதிலளிநீக்கு// ஐயா ..ரசித்து படித்தேன் உங்கள் பதிவை ....
இருந்தாலும் ஏனோ உங்களை வம்பிழுக்க ரொம்ப பிடிக்குது அதனால் உரிமையா ஒரு டவுட்டு
ஏழரையை(7 1/2) மறந்தது ஏன் ?? ஹி ஹி
என்னை ஏழரை ன்னு சொல்லக்கூடாது ஹி ஹி//
சனி இப்போ கன்னியில் இருக்கு!சிம்மம்,கன்னி,துலாம் ராசிகளுக்கு ஏழரை சனி!ஆனால் என் ராசிக்கு இல்லையே!
இதுக்கு மேல் ஏதாவது தெரிய ணும்னா நல்லநேரம் சதீஷைக் கேளுங்க!
MANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்குஏழு சுரங்களுக்குள் எத்தனை பாடல்!
ஏழு ஓட்டுக்களுக்கு எத்தனை தேடல்!
கட்டாயம் போடணும் ஓட்டு
ஆக்கணும் பதிவை ஹிட்டு
இல்லைன்னா விழும் திட்டு!///
//ஹா ஹா ஹா ஹா தல கலக்கிட்டீங்க போங்க....!!!!//
நன்றி மனோ!
ஜோசிக்க வைச்சிட்டான்கப்பா...
பதிலளிநீக்குMANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்கு// சிபி பயலும் ஏழு ஏழு'ன்னு போட்டு தாக்கிருக்கான் பாருங்க....//
என்னன்னு கேளுங்க மனோ!
magic seven wonderful sir
பதிலளிநீக்கு(இப்போ நான் போறேன் உங்களை விட்டு!)//
பதிலளிநீக்குஏன் இப்படி ?
மைந்தன் சிவா கூறியது...
பதிலளிநீக்கு//ஜோசிக்க வைச்சிட்டான்கப்பா...//
நல்லதுதானே!
நன்றி சிவா!
கே. ஆர்.விஜயன் கூறியது...
பதிலளிநீக்கு//magic seven wonderful sir//
நன்றி விஜயன்!
THOPPITHOPPI கூறியது...
பதிலளிநீக்கு(இப்போ நான் போறேன் உங்களை விட்டு!)//
//ஏன் இப்படி ?//
இப்போ என்றால் அடுத்த பதிவு வரை!
நன்றி THOPPITHOPPI!
அருமையான பதிவு சார்
பதிலளிநீக்குRiyas கூறியது...
பதிலளிநீக்கு//அருமையான பதிவு சார்//
நன்றி Riyaas!
7 பற்றிய நல்ல ஆய்வு.... இரண்டு 7-க்கு அருகில் வந்துவிட்டதே உங்கள் தமிழ்மண ஓட்டு.... :)
பதிலளிநீக்குவெங்கட் நாகராஜ் சொன்னது…
பதிலளிநீக்கு//7 பற்றிய நல்ல ஆய்வு.... இரண்டு 7-க்கு அருகில் வந்துவிட்டதே உங்கள் தமிழ்மண ஓட்டு.... :)//
எல்லாம் உங்களைப் போன்றோர் ஆதரவுதான்!
நன்றி வெங்கட்!
வணக்கம் ஐயா, ஒவ்வோர் சொல்லிலும், பல பொருள் புலப்படும் வண்ணம் வார்த்தைகளைக் கண்டறிந்து, வார்த்தை ஜாலம் காட்டுவதற்கு, உங்களுக்கு நிகர் நீங்களே தான்..
பதிலளிநீக்குஏழு பற்றி ஏராளமான தகவல்களைத் தந்திருக்கிறீங்க.
ஏழு பற்றி, உங்கள் பதிவின் வாயிலாக
அறியாத ஒரு சில விடயங்களையும் அறிந்து கொண்டேன்.
கூடவே தமிழ் மண ஏழாவது ஓட்டுப் பற்றிய கடியினையும் ரசித்தேன்..
@நிரூபன்
பதிலளிநீக்குமிக்க நன்றி நிரூபன்!