தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஜூன் 17, 2011

எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?

நமது படங்களிலும்,தொலைக்காட்சித் தொடர்களிலும் அடிக்கடி கேட்கும் ஒரு வசனம்---”எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?”

ஒரு பாத்திரத்துக்கு ஏதாவது மோசமானது நடக்கும் போது அந்த நபர் இவ்வாறு கூறுவார்.

இன்றைக்கு நான் அதுபோன்ற நிலையில்தான் இருக்கிறேன்!

பதிவர் சந்திப்புக்குச் செல்ல இயலாவிடினும்,நேரடி ஒளி பரப்பினைக் காணலாம் என ஒரு வாரத்துக்கும் மேலாகத் திட்டம் போட்டுக் காத்திருந்தேன்!

காலை 10 மணிக்குள் வேலைகளை முடித்துக் கொண்டு தயாரானேன்.

நேரம் 10.மணி!

மின்சாரம் போய் விட்டது!

சிறிது நேரத்தில் வந்து விடும் என எண்ணினேன்.ஏனென்றால்,டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் எந்த அறிவிப்பும் இல்லை!

பக்கத்து வீட்டு நண்பரிடம் கேட்டேன். பராமரிப்புப் பணிக்காகக் காலை 10 முதல் மாலை 5 வரை எங்கள் பகுதியில் மின்சாரம் இருக்காது என்ற தகவல் “ஹிந்து”வில் இருப்பதாகச் சொன்னார்.

மாலை 4.30 க்கு மின்சாரம் வந்தது.

அத்தளத்துக்கு சென்று பார்த்தேன்.

//சீரான இணைய வேகம் இல்லாத காரணத்தால் எமது நேரடி ஒளிபரப்பினைத் தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளோம், தடங்கலுக்கு வருந்துகிறோம்.//

இச்செய்தியே காணப்பட்டது.
என்ன ஆயிற்று? ஒளி பரப்பு இருந்ததா?பார்த்தவர் யாரும் உண்டா?

எந்தப் பதிவருடனும் நேரடித் தொடர்பில் நான் இல்லாததால்,எதுவும் தெரியவில்லை.

என்ன நடந்தது,யாராவது சொல்லுங்களேன்!

36 கருத்துகள்:

  1. ஒரு ஒளிபரப்பும் நடக்கல ..
    நீங்களாவது கரெண்ட் போய் சந்தோஷமா இருந்தீங்க.. நாங்க ரெபிரஷ் பன்னி..பன்னி கலைச்சுபோயட்டோம்.

    பதிலளிநீக்கு
  2. இன்னைக்கு வடை சுட சுட எனக்கே எனக்கு

    பதிலளிநீக்கு
  3. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
    ஒரு ஒளிபரப்பும் நடக்கல ..
    நீங்களாவது கரெண்ட் போய் சந்தோஷமா இருந்தீங்க.. நாங்க ரெபிரஷ் பன்னி..பன்னி கலைச்சுபோயட்டோம்.

    கவலையை விடுங்கா ஐயா ...

    பதிலளிநீக்கு
  4. ம்ம நெலமையும் அதேதான் தல .....டோன்ட் ஒரி

    பதிலளிநீக்கு
  5. கூகிள் ”பஸ்”ஸில் லிங்க் பார்த்து காலையில் திறந்து பார்த்தேன். ஒன்றும் வரவில்லை... 10 மணிக்கு மேல் அலுவலக வேலைகளில் மூழ்கி ஒன்றும் பார்க்க வில்லை.... அதனால் ....

    என்ன நடந்ததுன்னு உங்களுக்குத் தெரிஞ்சா எனக்கும் சொல்லுங்களேன்... :)

    பதிலளிநீக்கு
  6. ஐயா ரொம்ப தான் சீரியல் பார்ப்பிங்க போல ..))

    பதிலளிநீக்கு
  7. நானும் காத்திருந்தன் ஆனா இனைய வேகம் பிரச்சனை எண்டு தகவல் உலாவிச்சு .....

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் நண்பரே! தலைப்பை பார்த்ததும், ஒரு உளவியல் கட்டுரையாக இருக்குமோ எனும் எண்ணத்தில், ஓடோடி வந்தேன்! ஆனால் மின்சாரம் தடைப்பட்டமை பற்றியும், அதன்னால் நேரடி ஒளிபரப்பு தடைப்பட்டமை தொடர்பாகவும் எழுதியுள்ளீர்கள்!

    அந்த நேரடி ஒளிபரப்பு குறித்து எனக்கு சரியாக தெரியாவிட்டாலும், பதிவுலகோடு தொடர்புடையது என்று மட்டும் புரிகிறது.

    தங்களின் எழுத்துநடையும், சொல்லாட்சியும் அழகாக உள்ளது!

    வாழ்த்துக்கள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  9. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    //ஒரு ஒளிபரப்பும் நடக்கல ..
    நீங்களாவது கரெண்ட் போய் சந்தோஷமா இருந்தீங்க.. நாங்க ரெபிரஷ் பன்னி..பன்னி கலைச்சுபோயட்டோம்.//
    மின்சாரம் போனது ஒரு மறைமுக ஆசீர்வாதம் என்று சொல்லுங்கள்!
    நன்றி நன்பரே!

    பதிலளிநீக்கு
  10. ரியாஸ் அஹமது கூறியது...

    //அட வடை போச்சா நர நர//
    ஓட்ட வடை?
    நன்றி ரியாஸ்!

    பதிலளிநீக்கு
  11. பிளாகர் ரியாஸ் அஹமது கூறியது...

    //இன்னைக்கு வடை சுட சுட எனக்கே எனக்கு//

    :-(

    பதிலளிநீக்கு
  12. பிளாகர் ரியாஸ் அஹமது கூறியது...

    !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
    ஒரு ஒளிபரப்பும் நடக்கல ..
    நீங்களாவது கரெண்ட் போய் சந்தோஷமா இருந்தீங்க.. நாங்க ரெபிரஷ் பன்னி..பன்னி கலைச்சுபோயட்டோம்.

    //கவலையை விடுங்கா ஐயா ...//
    இனியென்ன மனக்கவலை!

    பதிலளிநீக்கு
  13. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    //சேம் பிளட்...///
    :-)

    பதிலளிநீக்கு
  14. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    //கவுத்துட்டாங்க தல...//
    என்ன செய்ய, நேரம் அப்படி!
    நன்றி சௌந்தர்!

    பதிலளிநீக்கு
  15. koodal bala கூறியது...

    // ம்ம நெலமையும் அதேதான் தல .....டோன்ட் ஒரி//
    இப்பத்தானே தெரியுது!
    நன்றி பாலா!

    பதிலளிநீக்கு
  16. வெங்கட் நாகராஜ் கூறியது...

    // கூகிள் ”பஸ்”ஸில் லிங்க் பார்த்து காலையில் திறந்து பார்த்தேன். ஒன்றும் வரவில்லை... 10 மணிக்கு மேல் அலுவலக வேலைகளில் மூழ்கி ஒன்றும் பார்க்க வில்லை.... அதனால் ....

    என்ன நடந்ததுன்னு உங்களுக்குத் தெரிஞ்சா எனக்கும் சொல்லுங்களேன்... :)//
    நிறையப் பேர் என்ன சொல்லியிருக்காங்க,பாருங்க!
    நன்றி வெங்கட்!

    பதிலளிநீக்கு
  17. கந்தசாமி. கூறியது...

    // ஐயா ரொம்ப தான் சீரியல் பார்ப்பிங்க போல ..))//
    இல்லை,கேப்பேன்!நம்ம பாக்காவிட்டாலும்,மற்றவங்க பார்க்கும்போது,காதில் விழுகிறதே!

    பதிலளிநீக்கு
  18. கந்தசாமி. கூறியது...

    //நானும் காத்திருந்தன் ஆனா இனைய வேகம் பிரச்சனை எண்டு தகவல் உலாவிச்சு .....//
    மின்சாரம் இல்லாமப்போய் என்னைக் காப்பாத்திடுச்சு!
    நன்றி கந்தசாமி!

    பதிலளிநீக்கு
  19. நெடுங்கேணியூர் குமரனார் கூறியது...

    //வணக்கம் நண்பரே! தலைப்பை பார்த்ததும், ஒரு உளவியல் கட்டுரையாக இருக்குமோ எனும் எண்ணத்தில், ஓடோடி வந்தேன்! ஆனால் மின்சாரம் தடைப்பட்டமை பற்றியும், அதன்னால் நேரடி ஒளிபரப்பு தடைப்பட்டமை தொடர்பாகவும் எழுதியுள்ளீர்கள்!

    அந்த நேரடி ஒளிபரப்பு குறித்து எனக்கு சரியாக தெரியாவிட்டாலும், பதிவுலகோடு தொடர்புடையது என்று மட்டும் புரிகிறது.

    தங்களின் எழுத்துநடையும், சொல்லாட்சியும் அழகாக உள்ளது!

    வாழ்த்துக்கள் நண்பரே!//
    நெல்லையில் நடைபெற்ற பதிவர் சந்திப்பு பற்றியது பதிவு!
    வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  20. நானும் முயற்சித்தேன் ஐயா , எனக்கும் ஒண்ணும் சரியாக வரவில்லை,
    அதனால இனிமே நாம இப்படி சொல்லலாம்
    "நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?"

    பதிலளிநீக்கு
  21. A.R.ராஜகோபாலன் கூறியது...

    // நானும் முயற்சித்தேன் ஐயா , எனக்கும் ஒண்ணும் சரியாக வரவில்லை,
    அதனால இனிமே நாம இப்படி சொல்லலாம்
    "நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?"//
    நாம் எல்லோரும் ஒரே கப்பல் பயணிகள்!
    நன்றி ராஜகோபால்!

    பதிலளிநீக்கு
  22. நானும் ரொம்ப ஆவலா இருந்து, காத்திருந்து ஏமாந்து போனேன் ஐயா!!!!

    பதிலளிநீக்கு
  23. ஐயா ஹை ஸ்பீட் இன்ரநெட் கனக்சன் சந்திப்பு இடம் பெற்ற மண்டபத்தினுள் கிடைக்கவில்லை, ஆதலால் தான் சந்திப்பினை நேரடி ஒளிபரப்பாகத் தர முடியவில்லை,

    உங்களின் ஆதங்கம் புரிகிறது. அடுத்த வருடம்/ அடுத்த பதிவர் சந்திப்பினை உங்களின் இல்லத் திரைகளில்/ கம்பியூட்டர் மானிட்டரில் நீங்கள் கண்டு மகிழலாம்.

    தடங்கலுக்கு வருந்துகிறோம்.

    பதிலளிநீக்கு
  24. நல்ல எழுத்து நகர்வுகள்

    நல்லாயிருக்குங்க...

    !!பெரியவரே உங்கள் கருத்தை எனது பக்கமும் எதிர்பார்க்கிறேன்..

    பதிலளிநீக்கு
  25. மைந்தன் சிவா கூறியது...

    // ஒண்ணுமே நடக்கிலியா??//

    நடக்க வேண்டியது நடக்காமப் போகாது, நடக்காமப் போக வேண்டியது நடக்காது!
    நன்றி சிவா!

    பதிலளிநீக்கு
  26. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...

    // நானும் ரொம்ப ஆவலா இருந்து, காத்திருந்து ஏமாந்து போனேன் ஐயா!!!!//
    பல பதிவுகள் வரும்;படித்து ஆறுதல் அடையுங்கள்!
    நன்றி ஓ.வ.நா.!

    பதிலளிநீக்கு
  27. நிரூபன் கூறியது...

    //ஐயா ஹை ஸ்பீட் இன்ரநெட் கனக்சன் சந்திப்பு இடம் பெற்ற மண்டபத்தினுள் கிடைக்கவில்லை, ஆதலால் தான் சந்திப்பினை நேரடி ஒளிபரப்பாகத் தர முடியவில்லை,

    உங்களின் ஆதங்கம் புரிகிறது. அடுத்த வருடம்/ அடுத்த பதிவர் சந்திப்பினை உங்களின் இல்லத் திரைகளில்/ கம்பியூட்டர் மானிட்டரில் நீங்கள் கண்டு மகிழலாம்.

    தடங்கலுக்கு வருந்துகிறோம்.//
    என்ன செய்வது?நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்?
    நன்றி நிரூபன்!

    பதிலளிநீக்கு
  28. vidivelli கூறியது...

    // நல்ல எழுத்து நகர்வுகள்

    நல்லாயிருக்குங்க...

    !!பெரியவரே உங்கள் கருத்தை எனது பக்கமும் எதிர்பார்க்கிறேன்..//
    நன்றி!
    வருகிறேன்!

    பதிலளிநீக்கு
  29. தல, வீடியோ பதிவு செய்து வச்சிருக்கோம் கவலை படாதீங்க, ஆபீசர் ஒன்னு ஒன்னா போட்டுவிடுவார் அவர் பதிவில் பார்த்து மகிழலாம்....

    பதிலளிநீக்கு
  30. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //தல, வீடியோ பதிவு செய்து வச்சிருக்கோம் கவலை படாதீங்க, ஆபீசர் ஒன்னு ஒன்னா போட்டுவிடுவார் அவர் பதிவில் பார்த்து மகிழலாம்....//

    மகிழ்ச்சியளிக்கிறது மனோ-உங்கள் செய்தி மட்டுமல்ல, உங்கள் வருகையும்தான்!ஊரில் மகிழ்ச்சியாகப் பொழுது போய்க் கொண்டிருக்கும்.வாழ்த்துகள்.
    நன்றி!

    பதிலளிநீக்கு
  31. எனக்கு எதுவும் தெரியாதுங்க

    பதிலளிநீக்கு