இப்போது கனி பற்றிய பேச்சாகவே இருக்கிறது எங்கும்.
ஊடகங்கள் எல்லாம் கனி பற்றியே எழுதியும் ,பேசியும் வருகின்றன.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் அல்லவா?
நானும் என் பங்குக்குக் கனி பற்றி எழுதிவிடுகிறேன்.
முக்கனிகள் என்று அழைக்கப் படுபவை—மா,பலா,வாழை என்பவை.
இப்போது மாங்கனி சீசன்.இந்த சீசனில் சாப்பிடவில்லையெனில் மீண்டும் ஓராண்டு காத்திருக்க வேண்டும்.
ஆனால் மாங்கனி பற்றி வரும் செய்திகள் பயமுறுத்துகின்றன.
“தானாகக் கனியாத பழத்தைத் தடியால் அடித்துக் கனிய வை”என்று சொல் வழக்கு உண்டு.
ஆனால் இப்போது மாங்கனியைக் கல்லால் அடித்துப் பழுக்க வைக்கிறார்களாம்.
கால்சியம் கார்பைடு கல்லை வைத்துச் செயற்கையாகப் பழுக்க வைக்கும் கனிகள்,அநேக உடல் உபாதைகளை எற்படுத்துகின்றனவாம்.
இது பற்றி நமது சங்கரலிங்கம் அவர்கள் ஒரு நல்ல விழிப்புணர்வுப் பதிவு எழுதியிருந்தார்கள்.
டன் கணக்கில் அத்தகைய கனிகள் பிடிபட்டாலும்,தொடர்ந்து செய்து கொண்டேதான் இருப்பார்கள் என எண்ணுகிறேன்.
ஆனால் அதற்காகச் சாப்பிடாமல் இருக்க முடியுமா?
இந்த மாங்கனி ஒரு குடும்பத்திலேயே பிளவை ஏற்படுத்தியதாம்.ஆனால் அது ஒரு ஞானக்கனி!அது கிடைக்காத முருகன் கோபத்துடன் மலைஏறியதால் நமக்குப் பழனி கிடைத்தது! கனிகளால் செய்யப் படும் பஞ்சாமிர்தமும் கிடைத்தது!
முக்கனிகளில் வாழை, மா இரண்டும் எளிதாக வாங்கிச் சாப்பிட முடிகிறது. ஆனால் பலா!நாம் வாங்கி அதைப் பிளந்து சுளையை எடுத்து, சாப்பிட்டு முழுக் கனியையும் காலி செய்வது என்பதெல்லாம் முடியாத செயல்.சாலயில் வாங்கும் பலாச் சுளைகளோ ஈ மொய்த்துக் கொண்டிருக்கும். எனவே பலா ஒரு எட்டாக்கனி-மரத்தில் எட்டும் உயரத்தில் இருப்பினும்!
பெண்கள் மொழி இனிமை என்பதை கருத்தில் கொண்டுதான் பெண்களுக்குக் கனிமொழி,தேன்மொழி என்றெல்லாம் பெயர் வைக்கிறார்கள்.
குரல் மட்டும் இனிமையாக இருந்தால் போதுமா?சொல்லும் சொற்களும் இனிமையானவையாக இருக்க வேண்டும்.
வள்ளுவர் சொல்கிறார்-
“இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று”
இனிய சொற்கள் இருக்கும்போதுஅவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும்போது காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது .
எல்லாக் காய்களுமே கனியாகுமா?
கிளி இலவங்காயைப் பார்த்துக் கனியானவுடன் சாப்பிடலாம் எனக் காத்திருக்குமாம்.ஆனால் அது கனியாகாமல் காய்ந்து வெடித்துச் சிதறி விடும்.அதைப் பார்த்துக் கிளி ஏமாந்து போகுமாம்.ஏதாவது ஒரு விளைவுக்காகக் காத்திருந்து அது நடக்காமல் போய் ஏமாற்றமடைவதை “இலவு காத்த கிளி போல்” என்று சொல்வார்கள்.இது உண்மையா என்பது எனக்குத் தெரியாது.
பெண்களின் பெயரில் கனி இருப்பது போல், ஆண்களின் பெயர்களிலும் உண்டு—சமுத்திரக்கனி,சண்முகக்கனி,அண்ணாமலைக்கனி என்றெல்லாம்.
நான் ஆறாம் வகுப்புப் படிக்கும்போது எனது வகுப்பு ஆசிரியர் அண்ணாமலைக்கனி என்பவர்.மாணவர்களுக்கு அவரைப் பார்த்தாலே நடுக்கம்.அவ்வளவு கண்டிப்பு.ஒருநாள் நான் ஒரு புத்தகத்தை எடுத்துச் செல்லவில்லை.அவர் என்னை வீட்டுக்கு அனுப்பிப் புத்தகத்தோடு வரச்சொல்லி விட்டார்.நான் வீட்டை அடைந்தபோது ஒரு உறவினர் வெளியூரிலிருந்து வந்திருக்கவே,நான் திரும்பிப் பள்ளி செல்லவில்லை.
மறுநாள் பள்ளி சென்றதும் நண்பர்கள் என் ’பைக்கட்டு’ தலைமை ஆசிரியர் அறையில் இருப்பதாகச் சொல்ல நான் போய் எடுத்துக்கொண்டேன்.
நடந்தது இதுதான்----
நான் திரும்பி வராததால்,ஆசிரியர் பையை எச்.எம்.அறைக்குக் கொண்டு சென்று விஷயத்தைச் சொல்லவும், அவர் “நீ ஏன் அவனை வீட்டுக்கு அனுப்பினாய்” என்று கேட்க அவர் வாயடைத்துப் போய்த் திரும்பி விட்டார். பின் அது பற்றி என்னிடம் எதுவும் கேட்கவும் இல்லை!
தலைமை ஆசிரியர்------என் தாத்தா !
’கனி’வோடு படித்தமைக்கு மனம் ’கனி’ந்த நன்றி!
கனிவான கனி செய்திகள்..கனின்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்..அப்படியே சாப்பிடுவேன்
பதிலளிநீக்குமுக்கனிகள் என்று அழைக்கப் படுபவை—மா,பலா,வாழை என்பவை.///
பதிலளிநீக்குஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......
ஒரு டைப்பாத்தான் இருக்கீறீர்...
பதிலளிநீக்குஅடுத்து ராசா-வைப்பற்றி போட்டு சேர சோழ பாண்டிய படங்களை போடும்...
கனியைப்பற்றிய பதிவு கனிந்த கனியின் சுவை போல் இருந்தது. பதிவை முடிக்கும்போது கொடுத்திருக்கிறீர்களே அந்த திருப்பம், அதுதான் தாங்கள் ஓர் 'கனிந்த' எழுத்தாளர் என்பதை நிரூபிக்கிறது.
பதிலளிநீக்குஉள்குத்து வெளிக்குத்து கேள்விபட்டுருக்கேன், தல இது எந்த குத்துன்னு சத்தியமா தெரியலை...
பதிலளிநீக்குகனி'ன்னு ஆரம்பிச்சதுமே நெனச்சேன், ஒரு மார்க்கமாத்தான் இருக்கும்னு ஹி ஹி ஹி ஹி...
பதிலளிநீக்குஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
பதிலளிநீக்கு//கனிவான கனி செய்திகள்..கனின்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்..அப்படியே சாப்பிடுவேன்//
பாத்துச் சாப்பிடுங்க!
கனிவுக்கு நன்றி!
MANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்குமுக்கனிகள் என்று அழைக்கப் படுபவை—மா,பலா,வாழை என்பவை.///
//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......//
கனியின் சுவை இப்படிச் சொல்ல வைக்கிறது!
# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
பதிலளிநீக்கு//ஒரு டைப்பாத்தான் இருக்கீறீர்...
அடுத்து ராசா-வைப்பற்றி போட்டு சேர சோழ பாண்டிய படங்களை போடும்...//
செய்து விடலாம்!
நன்றி சௌந்தர்!
வே.நடனசபாபதி கூறியது...
பதிலளிநீக்கு// கனியைப்பற்றிய பதிவு கனிந்த கனியின் சுவை போல் இருந்தது. பதிவை முடிக்கும்போது கொடுத்திருக்கிறீர்களே அந்த திருப்பம், அதுதான் தாங்கள் ஓர் 'கனிந்த' எழுத்தாளர் என்பதை நிரூபிக்கிறது.//
உங்கள் கருத்துக் கனி போல் இனிக்கிறது!கனிவுக்கு நன்றி!
MANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்கு//உள்குத்து வெளிக்குத்து கேள்விபட்டுருக்கேன், தல இது எந்த குத்துன்னு சத்தியமா தெரியலை...//
இதில் எந்தக் குத்தும் இல்லை.குத்து மதிப்பா எழுதினதுதான்!
MANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்கு//கனி'ன்னு ஆரம்பிச்சதுமே நெனச்சேன், ஒரு மார்க்கமாத்தான் இருக்கும்னு ஹி ஹி ஹி ஹி...//
இதுதான் இப்ப டிரெண்ட்!
கனிச்சுவை பிடித்ததல்லவா!
நன்றி மனோ!
ஐயா ..இதுதான் மாத்தி யோசி என்பது .இந்த சிந்தனை எனக்கும் வந்தது அதை நான் இந்த பதிவில் இப்படி பதிவு செய்தேன் . http://tamilyaz.blogspot.com/2011/05/blog-post_699.html
பதிலளிநீக்குஆனா நீங்க தான் ஐயா டாப் ...அருமையான தகவல்
குருவே.. எங்கேயே போய்ட்டீங்க.. செம
பதிலளிநீக்குரியாஸ் அஹமது சொன்னது…
பதிலளிநீக்கு//ஐயா ..இதுதான் மாத்தி யோசி என்பது .இந்த சிந்தனை எனக்கும் வந்தது அதை நான் இந்த பதிவில் இப்படி பதிவு செய்தேன் . http://tamilyaz.blogspot.com/2011/05/blog-post_699.html
கனியின் மறுபக்கம் பற்றி அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்!
// ஆனா நீங்க தான் ஐயா டாப் ...அருமையான தகவல்////
நன்றி ரியாஸ்!
சி.பி.செந்தில்குமார் கூறியது...
பதிலளிநீக்கு//குருவே.. எங்கேயே போய்ட்டீங்க.. செம//
’கனி’வான பாராட்டுக்கு நன்றி சிபி!
மாங் -கனி பற்றிய செய்திகளை படிக்கும் பொது சிறுது கலக்கமாகவே உள்ளது . தானாக பழுக்க விடாமல் அவசர பட்டு முதிர்ச்சி அடைய செய்யும் செயலே காரணம் . நான் மாங்கனியை பற்றி தான் கூறுகிறேன் ! பார்ப்பதற்கு கனி போல் இருந்தாலும் அது கனி அல்ல காய் தான் என்று அறியாமல் பலரும் அக்கனியை விரும்புகிறார்களே ! நடக்கும் செயல் எல்லாமே பிஞ்சில் பழுக்க முயல கூடாது என்பதையே உணர்த்துகின்றன . வள்ளுவர் பெருந்தகையின் கூற்றினை அப்படியே ஏற்கலாமா ? கனியிருப்பக் காய் கவர்ந்தற்று ..... பல முறை மாங்காய் மாங்கனியை காட்டிலும் விரும்ப படுவதை நான் கண்டுள்ளேன் ..
பதிலளிநீக்குஇப்பதிவிற்கு என் வாழ்த்தினை தெரிவிக்கும் வண்ணம் தங்களக்கு இரு கனிகளை( முக்கனிக்கு ஒன்று குறைவாக ) தர எண்ணியுள்ளேன் ... மா, வாழை அவை ! வாசுதேவன்
Vasu சொன்னது…
பதிலளிநீக்கு//மாங் -கனி பற்றிய செய்திகளை படிக்கும் பொது சிறுது கலக்கமாகவே உள்ளது . தானாக பழுக்க விடாமல் அவசர பட்டு முதிர்ச்சி அடைய செய்யும் செயலே காரணம் . நான் மாங்கனியை பற்றி தான் கூறுகிறேன் ! பார்ப்பதற்கு கனி போல் இருந்தாலும் அது கனி அல்ல காய் தான் என்று அறியாமல் பலரும் அக்கனியை விரும்புகிறார்களே ! நடக்கும் செயல் எல்லாமே பிஞ்சில் பழுக்க முயல கூடாது என்பதையே உணர்த்துகின்றன . வள்ளுவர் பெருந்தகையின் கூற்றினை அப்படியே ஏற்கலாமா ? கனியிருப்பக் காய் கவர்ந்தற்று ..... பல முறை மாங்காய் மாங்கனியை காட்டிலும் விரும்ப படுவதை நான் கண்டுள்ளேன் ..
இப்பதிவிற்கு என் வாழ்த்தினை தெரிவிக்கும் வண்ணம் தங்களக்கு இரு கனிகளை( முக்கனிக்கு ஒன்று குறைவாக ) தர எண்ணியுள்ளேன் ... மா, வாழை அவை ! //
ஆகா,பின்னூட்டமே ஒரு பதிவு மாதிரி இருக்கிறதே!கனி பற்றி நல்ல ஆராய்ச்சி செய்திருப்பீர்கள் போலிருக்கிறதே.கலக்கியிருக்கீங்க!
கனிகளுக்கு நன்றி!
இது கனி சீஸனா?நல்லா இருக்கு..
பதிலளிநீக்குவணக்கம் சார்! இன்றுதான் முதல் முறையாக உங்கள் தளம் வருகிறேன்! கனி பற்றி அருமையாக விளக்கியுள்ளீர்கள்! இனி அடிக்கடி வருவேன்! நன்றி
பதிலளிநீக்குஐயாவுக்கு நக்கலைப் பாத்தீகளா..
பதிலளிநீக்கு//கால்சியம் கார்பைடு கல்லை வைத்துச் செயற்கையாகப் பழுக்க வைக்கும் கனிகள்,அநேக உடல் உபாதைகளை எற்படுத்துகின்றனவாம்.//
பதிலளிநீக்குஇதற்கு மாற்றாக ஆபத்தில்லாத ரசாயனக்கலவை வந்து விட்டதாக இன்று செய்தி.
முன்பும் விளைச்சல் நன்றாகவே இருந்தது.பழமும் பழுத்தது.இப்பொழுது ஏன் புதிய பிரச்சினைகள் என அறிந்தவர்கள் பின்னூட்டமிடவும்.
kusumbuthaan ungalukku!!..:))
பதிலளிநீக்குகாற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் அல்லவா?
பதிலளிநீக்குநானும் என் பங்குக்குக் கனி பற்றி எழுதிவிடுகிறேன்.//
ஐயா...
ரொம்பத் தான் காமெடி பண்ணுறீங்க.
இந்த சீசனில் சாப்பிடவில்லையெனில் மீண்டும் ஓராண்டு காத்திருக்க வேண்டும்.//
பதிலளிநீக்குஐயோ, காளியம்மா! நீ தான் என்னையக் காப்பாற்ற வேண்டும்.
டன் கணக்கில் அத்தகைய கனிகள் பிடிபட்டாலும்,தொடர்ந்து செய்து கொண்டேதான் இருப்பார்கள் என எண்ணுகிறேன்.
பதிலளிநீக்குஆனால் அதற்காகச் சாப்பிடாமல் இருக்க முடியுமா?//
ஐயா...இது தகுமா...
என்னமா குத்துறீங்க போங்க.
இந்த மாங்கனி ஒரு குடும்பத்திலேயே பிளவை ஏற்படுத்தியதாம்.ஆனால் அது ஒரு ஞானக்கனி!//
பதிலளிநீக்குகனி பற்றி உள் குத்தோடு சேர்ந்த ஒரு கனிவான பதிவு!
நீண்ட நாளைக்குப் பிறகு இதனைப் படித்துத் தான் நினைத்து நினைத்துச் சிரித்தேன்.
தாத்தா ஹெட்மாஸ்டராக இருந்தால் எல்லா வகுப்பிலும் படிக்காமலே பாசாகலாம் என்பார்களே?
பதிலளிநீக்குகேல்சியம் கார்பைடு வைத்து மாம்பழத்தைப் பழுக்க வைக்கிறார்களா? அடப்பாவமே!
கனிமொழியைப் பத்தி யாரும் பதிவு போட மாட்றாங்களே?
ஞானக்கனி!அது கிடைக்காத முருகன் கோபத்துடன் மலைஏறியதால் நமக்குப் பழனி கிடைத்தது! கனிகளால் செய்யப் படும் பஞ்சாமிர்தமும் கிடைத்தது!//
பதிலளிநீக்குvery nice..
குணசேகரன்... கூறியது...
பதிலளிநீக்கு// இது கனி சீஸனா?நல்லா இருக்கு..//
சுவையாக இருந்ததல்லவா?
நன்றி குணசேகரன்!
FOOD கூறியது...
பதிலளிநீக்கு//என்ன இன்னைக்கு கனியைப் பற்றி ரொம்ப கனிவா சொல்லியிருக்கீங்க! கனிவுடன் படித்தேன். கற்கண்டு மொழி ரசித்தேன்.//
காலம் கனிந்திருந்தது!
இனிப்பான பின்னூட்டத்துக்கு நன்றி!
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...
பதிலளிநீக்கு//வணக்கம் சார்! இன்றுதான் முதல் முறையாக உங்கள் தளம் வருகிறேன்! கனி பற்றி அருமையாக விளக்கியுள்ளீர்கள்! இனி அடிக்கடி வருவேன்! நன்றி//
என்ன பொருத்தம்!இன்றுதான் ரியாஸ் அவர்கள் பின்னூட்டத்தில் மாத்தி யோசித்திருக்கிறேன் என்று குறிப்பிட்டார்கள்.உடனே ஓனர் ஆஃப் மாத்தி யோசியே முதல் முறை வருகை தந்து விட்டார்! நாராயணன், தொடர்ந்து வருக;ஆதரவு தருக;
நன்றி!
செங்கோவி கூறியது...
பதிலளிநீக்கு// ஐயாவுக்கு நக்கலைப் பாத்தீகளா..//
அப்படியா!
நன்றி செங்கோவி!
ராஜ நடராஜன் கூறியது...
பதிலளிநீக்கு//கால்சியம் கார்பைடு கல்லை வைத்துச் செயற்கையாகப் பழுக்க வைக்கும் கனிகள்,அநேக உடல் உபாதைகளை எற்படுத்துகின்றனவாம்.//
//இதற்கு மாற்றாக ஆபத்தில்லாத ரசாயனக்கலவை வந்து விட்டதாக இன்று செய்தி.
முன்பும் விளைச்சல் நன்றாகவே இருந்தது.பழமும் பழுத்தது.இப்பொழுது ஏன் புதிய பிரச்சினைகள் என அறிந்தவர்கள் பின்னூட்டமிடவும்.//
food அவர்களின் பின்னூட்டம் பாருங்கள்!
நன்றி ராஜ நடராஜன்!
தக்குடு கூறியது...
பதிலளிநீக்கு// kusumbuthaan ungalukku!!..:))//
என்னவோ சொல்றீங்க!
நன்றி தக்குடு!
நிரூபன் கூறியது...
பதிலளிநீக்கு//காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் அல்லவா?
நானும் என் பங்குக்குக் கனி பற்றி எழுதிவிடுகிறேன்.//
//ஐயா...
ரொம்பத் தான் காமெடி பண்ணுறீங்க.//
சீசன் இல்லையா?
பிளாகர் நிரூபன் கூறியது...
பதிலளிநீக்குஇந்த சீசனில் சாப்பிடவில்லையெனில் மீண்டும் ஓராண்டு காத்திருக்க வேண்டும்.//
//ஐயோ, காளியம்மா! நீ தான் என்னையக் காப்பாற்ற வேண்டும்.//
அப்படியென்ன சொல்லிவிட்டேன் நிரூபன்?!
நிரூபன் கூறியது...
பதிலளிநீக்குடன் கணக்கில் அத்தகைய கனிகள் பிடிபட்டாலும்,தொடர்ந்து செய்து கொண்டேதான் இருப்பார்கள் என எண்ணுகிறேன்.
ஆனால் அதற்காகச் சாப்பிடாமல் இருக்க முடியுமா?//
//ஐயா...இது தகுமா...
என்னமா குத்துறீங்க போங்க.//
இப்படியெல்லாம் வேறு இருக்கா இந்தப் பதிவில்!
நிரூபன் கூறியது...
பதிலளிநீக்குஇந்த மாங்கனி ஒரு குடும்பத்திலேயே பிளவை ஏற்படுத்தியதாம்.ஆனால் அது ஒரு ஞானக்கனி!//
//கனி பற்றி உள் குத்தோடு சேர்ந்த ஒரு கனிவான பதிவு!
நீண்ட நாளைக்குப் பிறகு இதனைப் படித்துத் தான் நினைத்து நினைத்துச் சிரித்தேன்.//
உள் குத்தோ,வெளிக்குத்தோ தெரியாது,மனம் விட்டுச் சிரித்தீர்களல்லவா?அது போதும்!
நன்றி நிரூபன்!
அப்பாதுரை கூறியது...
பதிலளிநீக்கு//தாத்தா ஹெட்மாஸ்டராக இருந்தால் எல்லா வகுப்பிலும் படிக்காமலே பாசாகலாம் என்பார்களே?
கேல்சியம் கார்பைடு வைத்து மாம்பழத்தைப் பழுக்க வைக்கிறார்களா? அடப்பாவமே!
கனிமொழியைப் பத்தி யாரும் பதிவு போட மாட்றாங்களே?//
ஒராண்டு மட்டுமே அந்தப் பள்ளியில் படித்தேன்.பின் வேறு ஊர் சென்று விட்டேன்!
நிறையப் பதிவு வந்திருச்சே!
நன்றி அப்பாதுரை!
இராஜராஜேஸ்வரி கூறியது...
பதிலளிநீக்குஞானக்கனி!அது கிடைக்காத முருகன் கோபத்துடன் மலைஏறியதால் நமக்குப் பழனி கிடைத்தது! கனிகளால் செய்யப் படும் பஞ்சாமிர்தமும் கிடைத்தது!//
// very nice..//
நன்றி இராஜராஜேஸ்வரி!
பிளாகர் FOOD கூறியது...
பதிலளிநீக்கு//ராஜ நடராஜன் சொன்னது…
கால்சியம் கார்பைடு கல்லை வைத்துச் செயற்கையாகப் பழுக்க வைக்கும் கனிகள்,அநேக உடல் உபாதைகளை எற்படுத்துகின்றனவாம்.
இதற்கு மாற்றாக ஆபத்தில்லாத ரசாயனக்கலவை வந்து விட்டதாக இன்று செய்தி.முன்பும் விளைச்சல் நன்றாகவே இருந்தது.பழமும் பழுத்தது.இப்பொழுது ஏன் புதிய பிரச்சினைகள் என அறிந்தவர்கள் பின்னூட்டமிடவும்.//
//தற்போது, வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை, 50 மில்லி எத்திரால் திரவம் மற்றும் சோடியம் பைராக்சிட் மாத்திரை பத்து எண்ணம் ஆகியவற்றை 5 லிட்டர் தண்ணீரில் கலந்து, மாங்காய்களுக்கு நடுவில் வைத்து, மாங்காய்களை வியாபார ரீதியில் பழுக்க வைக்க புதிய வழி காட்டியுள்ளனர். இந்த முறையில்,அபாயங்கள் இல்லையென்பதை உறுதி செய்துள்ளனர். தகவலுக்காக.//
புதிய தகவலுக்கு நன்றி!
FOOD கூறியது...
பதிலளிநீக்கு//கால்சியம் கார்பைடு கல்லை வைத்துச் செயற்கையாகப் பழுக்க வைக்கும் கனிகள்,அநேக உடல் உபாதைகளை எற்படுத்துகின்றனவாம்.
இது பற்றி நமது சங்கரலிங்கம் அவர்கள் ஒரு நல்ல விழிப்புணர்வுப் பதிவு எழுதியிருந்தார்கள்.//
// பகிர்விற்கு நன்றிங்க. இதோ அதற்கான லின்க்: http://unavuulagam.blogspot.com/2011/05/blog-post.html//
இதுவரை படிக்காதவர்கள் அவசியம் படிச்சுடுங்க!
தலைப்புல நீங்களும் விளையாட ஆரம்பிச்சாச்சா
பதிலளிநீக்குஉங்களுக்கும் மைனஸ் ஒட்டா?
பதிலளிநீக்குஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
ஷர்புதீன் கூறியது...
பதிலளிநீக்கு//தலைப்புல நீங்களும் விளையாட ஆரம்பிச்சாச்சா//
நல்ல விசயங்களைப் பின் பற்றித்தானே ஆகணும்!
நன்றி ஷர்புதீன்!
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
பதிலளிநீக்கு//உங்களுக்கும் மைனஸ் ஒட்டா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.//
என்னையும் பெரிய பதிவராக்கி விட்டார் ஒருவர்!
நன்றி கருன்!
கனிவாக எழுதி இருக்கும் பதிவை அதே கனிவுடன் படித்து ரசித்தேன்!
பதிலளிநீக்கு