மாரன் என்பது மன்மதனைக் குறிக்கும். அவனது வேறு பெயர்கள், உருவிலாளன், கரும்புவில்லி, , புட்பரசன், மகரக்கொடியோன், மதனன், வசந்தன், வேனிலான், காமன் என்பவை .சாதாரணமாக வழக்கத்தில் இருப்பவை மன்மதன்,காமன் என்பவையே. வேள் என்றும் ஒரு பெயருண்டு. அதன் பொருள் வேட்கையை ஏற்படுத்துபவன்.காமனின் நிறம் கருப்பு. (கருப்பு நிறமுள்ளவர்களே, மகிழ்ச்சியடையுங்கள்,காமனே கருப்புதான்!) முருகனின் நிறம் சிவப்பானதால் அவன் செவ்வேள்.
காமதேவன் அழகு மிகுந்தவன். காதல் தெய்வமெனச் சொல்லப்படுபவன்.
”நெஞ்சில் பாயுது காமன் விடும் பாணம்”
”கண்வழி காமனின் பாணங்கள் பாய்வது
மாலையில் மயங்கிய பொழுது”
என்றெல்லாம் மன்மதனாகிய மாரனின் பாணங்கள் பற்றிச் சினிமாப் பாடலகளில் சொல்லியிருக்கிறார்கள்.
அப்படி அவன் பாணம் என்ன?
(அருவா,கத்தி,கோடாரி,ஈட்டி,சூலம்,வேல்கம்பு?!--மனோ மன்னிக்க!)
குத்திக் கிழித்திக்காயப்படுத்தும் பாணமா!
காயம்தான்;ஆனால் சுகமான வலி உண்டாக்கும் காயம்.
அந்த பாணத்தின் சக்தி,மயங்க வைக்கும், தனியே புலம்ப வைக்கும்,உருக வைக்கும்,விரக தாபத்தில் துடிக்க வைக்கும்!.
ரத்த நாளங்களில்லாம் புது ரத்தம் பாயம்.
இதயம் ’காதல் ,காதல்’ என்றே ஒலிக்கும்!
அப்படிப்பட்ட அவன்,ஆயுதங்கள்தான் என்ன?
கரும்பு வில்;வண்டுகளால் தொடுத்த நாண்!
வில்லுக்கான அம்புகள்?
ஐந்து மலர்களே மாரனின் பாணங்கள்.
தாமரை,அசோகம்,மா,முல்லை, நீலோத்பலம் என்பன அம்மலர்கள்
தாமரை மார்பில் தாக்கும்;காதல் போதையை உண்டாக்கும்.
அசோகம் உதடுகளைத் தாக்கிக் காதலிக்காகப் புலம்பச் செய்யும்.
மாம்பூ தலையைத் தாக்கிப் பித்தனாக்கும்-(சென்னை பித்தன் அல்ல,காதல் பித்தன்!)
முல்லை கண்களைத்தாக்கும்;தூக்கம் தொலைக்கும்.
நீலோத்பலம் உடல் முழுவதும் தாக்கி விரக வேதனை ஏற்படுத்தும்.
“தவமிருந்த சிவன் மீது பாணம் தொடுத்ததால்
’தயா’ இன்றி எரித்து விட்டான் முக்கண்ணனும்
ரதி தன்’ நிதி’யான மாரன் உயிர் வேண்ட
பதியான அவன் உயிர் தந்தான் பரமன்.
இதுவே மாரனின் கதை.
ஒரு சித்தர் பாடல்—கொசுறு
“மாமன் மகளோ மச்சினியோ நானறியேன்,
காமன் கணையெனக்கு, கனலாக வேகுதடி,
மாமன் மகளாகி மச்சினியும், நீயானால்
காமன் கணை மூன்றும், கண் விழிக்க வேகாவோ.”
(மன்னிக்கவும்.தலைப்பில் ஒரு எழுத்துப் பிழை நேர்ந்து விட்டது.எல்லாம் வல்லின,இடையினக் குழப்பம்தான்.மாரன் என்று எழுதுவதற்குப் பதில்,மாறன் என்று எழுதிவிட்டேன்.மாறன் என்ற சொல் பாண்டியனைக் குறிக்குமாம்!)
என்ன தல தயாநிதி மாறான பத்தி ஏதாவது புதுசா தகவல் இருக்கும்னு வந்தா ஏமாத்தி புட்டீங்களே ......
பதிலளிநீக்குசரி வடைய எடுத்துட்டு கெளம்புறேன்.......
பதிலளிநீக்குkoodal bala கூறியது...
பதிலளிநீக்கு//என்ன தல தயாநிதி மாறான பத்தி ஏதாவது புதுசா தகவல் இருக்கும்னு வந்தா ஏமாத்தி புட்டீங்களே ......//
ர வுக்குப் பதில் ற போட்டு விட்டேன்!அதான்!(ஏமாத்து வேலைதான்!) :)
பிளாகர் koodal bala கூறியது...
பதிலளிநீக்கு//சரி வடைய எடுத்துட்டு கெளம்புறேன்.......//
பாத்து,சுடப் போகுது!
( தமிழ் மணம் தகறாறு பண்ணுது! நன்றி பாலா!
ஐயாவுக்குக் குசும்பைப் பாருங்கய்யா..
பதிலளிநீக்குசெங்கோவி கூறியது...
பதிலளிநீக்கு//ஐயாவுக்குக் குசும்பைப் பாருங்கய்யா..
ஹா,ஹா,ஹா!
நன்றி செங்கோவி!
இப்பவெல்லாம் மனசை திடபடுத்திக்கிட்டு தான் வரேன் இங்கே ...உங்க அலுச்சாட்டியம் அந்த அளவுக்கு இருக்குது ஐயா .....
பதிலளிநீக்கு‘மாறனை’ பற்றிய பதிவு என்றதும் புதிய தகவல் ஏதோ தரப்போகிறீர்கள் என நினத்தேன்.வழக்கம்போல்
பதிலளிநீக்கு(ஏ)மாற்றிவிட்டீர்கள். ஆனாலும் காமனைப் பற்றிய புதிய தகவல்கள் கிடைத்தன நன்றி.
ஒருதடவை வாரியார் சுவாமிகள் சொன்னார்.
“அவன் இந்து, கிறித்துவர்,முஸ்லீம் அனைவருக்கும் பொது.அதனால்தான் அவன் ‘காமன்’ (Common)” என்று அழைக்கப்படுகிறான்.” என்று
யாரோ துள்ளி விளையாடுறதா ஒரு பழமொழி இருக்கே அது இதுதானோ ...ஐயா
பதிலளிநீக்குரியாஸ் அஹமது கூறியது...
பதிலளிநீக்கு//இப்பவெல்லாம் மனசை திடபடுத்திக்கிட்டு தான் வரேன் இங்கே ...உங்க அலுச்சாட்டியம் அந்த அளவுக்கு இருக்குது ஐயா .....//
இனிமையான செய்திதானே எழுதியிருக்கிறேன்!பயங்கரமாக ஒன்றும் எழுதவில்லையே! :)
நன்றி ரியாஸ்!
ippadiththaan naama thalaippu paarththu emaanthuporom!!!
பதிலளிநீக்குதமிழ் மணம் தகறாறு பண்ணுது!
பதிலளிநீக்குவே.நடனசபாபதி கூறியது...
பதிலளிநீக்கு//‘மாறனை’ பற்றிய பதிவு என்றதும் புதிய தகவல் ஏதோ தரப்போகிறீர்கள் என நினத்தேன்.வழக்கம்போல்
(ஏ)மாற்றிவிட்டீர்கள். ஆனாலும் காமனைப் பற்றிய புதிய தகவல்கள் கிடைத்தன நன்றி.
ஒருதடவை வாரியார் சுவாமிகள் சொன்னார்.
“அவன் இந்து, கிறித்துவர்,முஸ்லீம் அனைவருக்கும் பொது.அதனால்தான் அவன் ‘காமன்’ (Common)” என்று அழைக்கப்படுகிறான்.” என்று//
சீதை ராமனைப் பார்த்து ”இவன் காமன் அல்லன்” என உணர்ந்தாளாம்.எல்லோருக்கும் ,காமன் அல்ல,எனக்கு மட்டுமே சொந்தம் என்பதாக-இதுவும் வாரியார் சுவாமிகள்தான்.
நன்றி சபாபதி அவர்களே!
இனிமையான செய்தி தான் தலைப்பில் இருந்தா ட்விஸ்ட் தான் சொன்னேன் ஐயா தப்பா நினைக்க வேண்டாம்
பதிலளிநீக்குஇன்ட்லி தமிழ் டென் ஒட்டு போட்டாச்சு
ரியாஸ் அஹமது சொன்னது…
பதிலளிநீக்கு//யாரோ துள்ளி விளையாடுறதா ஒரு பழமொழி இருக்கே அது இதுதானோ ...ஐயா//
யாரைப் பாத்து ‘----’ என்று சொன்னீங்க? வாபஸ் வாங்கும் வரை உண்ணாவிரதம்தான்!(நான் இல்லை,யாராவது,எங்கேயாவது)
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
பதிலளிநீக்கு// ippadiththaan naama thalaippu paarththu emaanthuporom!!!//
ஏமாறச் சொன்னது நானா?
நன்றி கருன்!
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
பதிலளிநீக்கு// தமிழ் மணம் தகறாறு பண்ணுது!//
ஆமாம் கருன்.எத்தனை முறை இணைக்க முயன்றாலும்’புதிய இணைப்பு எதுவும் காணப்படவில்லை” என்றே வருகிறது!
ரியாஸ் அஹமது கூறியது...
பதிலளிநீக்கு//இனிமையான செய்தி தான் தலைப்பில் இருந்தா ட்விஸ்ட் தான் சொன்னேன் ஐயா தப்பா நினைக்க வேண்டாம்
இன்ட்லி தமிழ் டென் ஒட்டு போட்டாச்சு//
ஐயோ,ரியாஸ்!தப்பாக நினைப்பதா?உங்கள் கமெண்டுகளை ரசித்தேன்-துள்ளி விளயாடுறதையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்!
எல்லாமே நகைச்சுவைதான்!
சென்னை பித்தன் சொன்னது…
பதிலளிநீக்குரியாஸ் அஹமது சொன்னது…
//யாரோ துள்ளி விளையாடுறதா ஒரு பழமொழி இருக்கே அது இதுதானோ ...ஐயா//
யாரைப் பாத்து ‘----’ என்று சொன்னீங்க? வாபஸ் வாங்கும் வரை உண்ணாவிரதம்தான்!(நான் இல்லை,யாராவது,எங்கேயாவது)
////
ஒ அப்பா அந்த பாபாவும் இந்த மாதிரி யாராலோ எதுக்காகவோ தான் உண்ணாவிரதம் இருந்தாரோ ..
புரியுது ஆனால் வாபஸ் வாங்க முடியாது ஐயா நெற்றிக்கண் திறப்பினும்
ரியாஸ் அஹமது கூறியது...
பதிலளிநீக்கு//புரியுது ஆனால் வாபஸ் வாங்க முடியாது ஐயா நெற்றிக்கண் திறப்பினும்//
இது பொறுப்பதில்லை !யாராவது எனக்கு சப்போர்ட்டுக்கு வாங்களேன்!
ஐயாவுக்கு ரொம்பத்தான் குசும்பு.
பதிலளிநீக்குநா என்னத்த சொல்ல!.....
போயிற்று வாறேனுங்கோ......
அம்பாளடியாள் கூறியது...
பதிலளிநீக்கு// ஐயாவுக்கு ரொம்பத்தான் குசும்பு.
நா என்னத்த சொல்ல!.....
போயிற்று வாறேனுங்கோ......//
ஹி,ஹி!நன்றி!
மன்மத லீலையை வென்றோர் உண்டோ (ஐயாவுக்கும் சேர்த்து தான் ஹாஹஹா)
பதிலளிநீக்குமெட்ராஸ் வெயிலை விட உங்கள் பதிவின் தலைப்பை நம்பி உள்ளே வந்ததால் காய்கிறது உச்சந்தலை!
பதிலளிநீக்கு! சிவகுமார் ! கூறியது...
பதிலளிநீக்கு//மெட்ராஸ் வெயிலை விட உங்கள் பதிவின் தலைப்பை நம்பி உள்ளே வந்ததால் காய்கிறது உச்சந்தலை!//
இதிலிருந்து பெறப்படும் நீதியாவது--தலைப்பை நம்பி ஏமாறாதே!
நன்றி சிவகுமார்!
கந்தசாமி. கூறியது...
பதிலளிநீக்கு//மன்மத லீலையை வென்றோர் உண்டோ (ஐயாவுக்கும் சேர்த்து தான் ஹாஹஹா)//
இல்லை! இல்லை!
என்ன அருமையான ஒரு பாட்டு,சாருகேசி ராகத்தில்!
நன்றி கந்தசாமி!
நல்ல தகவல்கள்..
பதிலளிநீக்குநல்ல தகவல்கள்..
பதிலளிநீக்குதலைப்பை பார்த்தவுடன், பாண்டிய மன்னனுக்கு மாறன் என்று பெயர் உண்டு என்று தமிழாசிரியர் சொன்னது நினைவுக்கு வந்தது. அதுமாதிரி ஏதாவது இருக்கும் என்று நினைத்தேன். அப்படியே இருக்கிறது. இருந்தாலும் உங்களுக்கு குசும்பு ரொம்ப ஜாஸ்தி...
பதிலளிநீக்குஎப்படியெல்லாம் தமிழ் கற்றுக்கொடுக்க வேண்டியதா இருக்குதுல்ல!
பதிலளிநீக்குசமுத்ரா கூறியது...
பதிலளிநீக்கு//நல்ல தகவல்கள்..//
நன்றி சமுத்ரா!
பாலா கூறியது...
பதிலளிநீக்கு//தலைப்பை பார்த்தவுடன், பாண்டிய மன்னனுக்கு மாறன் என்று பெயர் உண்டு என்று தமிழாசிரியர் சொன்னது நினைவுக்கு வந்தது. அதுமாதிரி ஏதாவது இருக்கும் என்று நினைத்தேன். அப்படியே இருக்கிறது. இருந்தாலும் உங்களுக்கு குசும்பு ரொம்ப ஜாஸ்தி...//
‘குசும்பு’! இருக்கலாம்!
நன்றி பாலா!
ராஜ நடராஜன் கூறியது...
பதிலளிநீக்கு//எப்படியெல்லாம் தமிழ் கற்றுக்கொடுக்க வேண்டியதா இருக்குதுல்ல!//
’நட்சத்திரம்’ மாதிரி பளிச் சுன்னு சொல்லிட்டீங்க!
நல்வரவும் நன்றியும் ராஜ நடராஜன்!
ஹிஹி உங்கள் தமிழின் விளையாட்டு கூடிவிட்டது ஹிஹி
பதிலளிநீக்குமாரன் அம்பு பற்றின சூத்திரம் அறிந்தேன் !
பதிலளிநீக்கு(அருவா,கத்தி,கோடாரி,ஈட்டி,சூலம்,வேல்கம்பு?!--மனோ மன்னிக்க!)///
பதிலளிநீக்குஹி ஹி ஹி ஹி ஹி....
(மன்னிக்கவும்.தலைப்பில் ஒரு எழுத்துப் பிழை நேர்ந்து விட்டது.எல்லாம் வல்லின,இடையினக் குழப்பம்தான்.மாரன் என்று எழுதுவதற்குப் பதில்,மாறன் என்று எழுதிவிட்டேன்.மாறன் என்ற சொல் பாண்டியனைக் குறிக்குமாம்!)///
பதிலளிநீக்குஅய்யோ தல அருவா சொறிச்சல் எடுக்குதே.....
நல்ல தகவல்கள்... தலைப்பைப் பார்த்து தப்பான ஆவலுடன் உள்ளே வரக்க்கூடாது என்பது உங்கள் பதிவுகளைப் பார்த்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்... :)
பதிலளிநீக்குசுவையான மாரன் தொடர்பான செய்திகளுக்கு [!] மிக்க நன்றி.
மைந்தன் சிவா சொன்னது…
பதிலளிநீக்கு//ஹிஹி உங்கள் தமிழின் விளையாட்டு கூடிவிட்டது ஹிஹி//
எல்லாமே விளையாட்டுதான்!
நன்றி சிவா!
ஹேமா கூறியது...
பதிலளிநீக்கு//மாரன் அம்பு பற்றின சூத்திரம் அறிந்தேன் !//
நன்றி ஹேமா!
MANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்கு(அருவா,கத்தி,கோடாரி,ஈட்டி,சூலம்,வேல்கம்பு?!--மனோ மன்னிக்க!)///
//ஹி ஹி ஹி ஹி ஹி....//
ஹா,ஹா,ஹா,ஹா....!
நன்றி மனோ!
MANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்கு(மன்னிக்கவும்.தலைப்பில் ஒரு எழுத்துப் பிழை நேர்ந்து விட்டது.எல்லாம் வல்லின,இடையினக் குழப்பம்தான்.மாரன் என்று எழுதுவதற்குப் பதில்,மாறன் என்று எழுதிவிட்டேன்.மாறன் என்ற சொல் பாண்டியனைக் குறிக்குமாம்!)///
//அய்யோ தல அருவா சொறிச்சல் எடுக்குதே.....//
அய்யோ!பயந்து வருதே!
வெங்கட் நாகராஜ் கூறியது...
பதிலளிநீக்கு//நல்ல தகவல்கள்... தலைப்பைப் பார்த்து தப்பான ஆவலுடன் உள்ளே வரக்க்கூடாது என்பது உங்கள் பதிவுகளைப் பார்த்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்... :)
சுவையான மாரன் தொடர்பான செய்திகளுக்கு [!] மிக்க நன்றி.//
மாறன் பற்றிப் பலர் எழுதுவர்!எனவே மாரன் பற்றி!
நன்றி வெங்கட்!
எழுத்துப் பிழையால் வந்தது ஏமாற்றம்
பதிலளிநீக்குஅல்ல அதனால்தானே தங்களி்ன்
கருத்து மழையில் முழுதும் நனைந்து
போக முடிந்தது
அடடா காமனுக்கு இத்தனை
பெயரா--?
தங்களின் புலமையைப்
பாராட்டுகின்றேன் நன்றி
புலவர் சா இராமாநுசம்
புலவர் சா இராமாநுசம் கூறியது...
பதிலளிநீக்கு//எழுத்துப் பிழையால் வந்தது ஏமாற்றம்
அல்ல அதனால்தானே தங்களி்ன்
கருத்து மழையில் முழுதும் நனைந்து
போக முடிந்தது
அடடா காமனுக்கு இத்தனை
பெயரா--?
தங்களின் புலமையைப்
பாராட்டுகின்றேன் நன்றி//
தமிழ்ப் புலவரிடமிருந்து பாராட்டுப் பெற யான் என்னோற்றேன் கொல்?
நன்றி ஐயா!
அனுபவசாலி நீங்கள் சொன்ன எல்லாம் சரியாத்தான் இருக்கும்
பதிலளிநீக்குமாரன் பற்றிய பதிவு உணர்ச்சி பூர்வமாய் இருந்தது உங்களின் எடுத்து காட்டுகளோடு
A.R.ராஜகோபாலன் கூறியது...
பதிலளிநீக்கு//அனுபவசாலி நீங்கள் சொன்ன எல்லாம் சரியாத்தான் இருக்கும்
மாரன் பற்றிய பதிவு உணர்ச்சி பூர்வமாய் இருந்தது உங்களின் எடுத்து காட்டுகளோடு//
நன்றி ஏ.ஆர்.ஆர்.!
தலைப்பில் தமிழ் வித்தை காட்டி,
பதிலளிநீக்குபதிவினைப் படிக்கையிலோ
மன்மத மாரன் பற்றி மயக்கம் தரும் தகவல்களையும்,
நச்சென்ற உங்களின் நையாண்டிக் கவிதையினையும் ரசிக்க வைத்திருக்கிறது உங்கள் பதிவு!!
நிரூபன் சொன்னது…
பதிலளிநீக்கு// தலைப்பில் தமிழ் வித்தை காட்டி,
பதிவினைப் படிக்கையிலோ
மன்மத மாரன் பற்றி மயக்கம் தரும் தகவல்களையும்,
நச்சென்ற உங்களின் நையாண்டிக் கவிதையினையும் ரசிக்க வைத்திருக்கிறது உங்கள் பதிவு!!//
நன்றி நிரூபன்!
FOOD கூறியது...
பதிலளிநீக்கு//சற்றே கால தாமதமாய் வந்துவிட்டேன்.என் காலை மாற்றி விடாதீர்கள்.//
நன்றி சார்!:)
உங்கள் எழுத்தில் இருபொருள்
பதிலளிநீக்குஇருப்பது எங்களுக்குப் புரியாதா
என்ன? நம்காலத்து மாறனும்
ஒருமாரன்தான்.
@ARUNMULLAI
பதிலளிநீக்கு:) நன்றி!
சூப்பர் ஸார். முன்னாலேயே முடித்து விட்டீர்கள்!
பதிலளிநீக்கு:)))))
இதையும் பார்த்து விடுங்கள் ஸ்ரீராம்!
நீக்குநன்றி
http://chennaipithan.blogspot.com/2011/06/blog-post.html
நீக்கு