தொடரும் தோழர்கள்

புதன், ஏப்ரல் 06, 2011

ராதா,காதல் வராதா!

என் நண்பன் ராதாகிருஷ்ணனின் ரயில் காதல் பற்றி முன்பு ஒரு பதிவு எழுதியிருந்தேன்.

http://chennaipithan.blogspot.com/2010/12/blog-post_13.html

அந்நிகழ்ச்சிக்குப் பின் சில காலம் வரை அவன் காதல் கிறுக்கனாகத்தான்

இருந்தான். அப்போது அவன் கிறுக்கிய கவிதைகள் பல.அப்போதெல்லாம் அவனுக்கு

ஆங்கிலத்தில் எழுதுவது எளிதாக இருந்தது.ஆனால் துரதிருஷ்ட வசமாக அக்கவிதைகள்

காணாமல் போய்விட்டன.எதையோ தேடும்போது ஒரு பழைய டைரியிலிருந்து ஒரு

கவிதையின் சில வரிகள் மட்டும் கிடைத்தன.அவன் அனுமதியுடன் அக்கவிதை வரிகள்

உங்கள் பார்வைக்கு---

She came out of the blue
Like a dream that came true

I could not but wonder
How quick did I surrender

How can love be born so quick
It is nature’s most delicate trick


That two winged playboy cupid
Hath made us both so stupid

Oh!cupid!
Worthless son of a worthy goddess
Why is it that you so torment us

Was your love too born at first sight
Binding you both with fetters tight

Was it Psyche who the first sign gave
Or did you look at her with obvious crave

………..
……….
………….(many lines missing)

Thus the world will go on for ever
Loving loving and stopping never.

ராதாகிருஷ்ணனைக் கவிதையைப் பூர்த்தி செய்து கொடுக்கச் சொன்னேன்.மறந்து விட்டது என்று சொல்லி விட்டான்.

அவளை மறக்கவில்லையாம்;அவள் நினைவில் எழுதிய கவிதை மறந்து விட்டதாம்!

இக்கவிதை தமிழில் எப்படி இருக்கும் என யோசித்தேன்.விளைவு கீழே----

மின்னலாய் வந்தவள் தோன்றினாள்
இன்பமாய் நனவான ஒரு கனவு போல்!

வியந்து போகிறேன் இன்று வரை நான்
விழி வீச்சில் வீழ்ந்த தெப்படி என்றுதான்!

காதல் இத்துணை விரைவாய் வந்தது எப்படி
படைப்பின் இனிய ரகசியத்தின் முதற்படி!

சட்டென்று கணை தொடுத்த அக்காமன்
முட்டாள்களாகி விட்டான் இருவரையும்

மன்மதா!

உங்கள் காதலும் சட்டென்று முளைத்ததா?
சங்கிலி கொண்டு இருவரையும் பிணைத்ததா?

தன் காதல் ரதி முதலில் சொன்னாளா
உன் பார்வை அதையவளுக் குணர்த்தியதா?
………
……..
…….
காதலிக்காத மனிதர்களில்லை
காதலில்லாமல் இவ்வுலகமும் இல்லை!

ராதாகிருஷ்ணனின் அழியாத காதலுக்கு அஞ்சலி!

19 கருத்துகள்:

  1. காதலிக்காத மனிதர்களில்லை
    காதலில்லாமல் இவ்வுலகமும் இல்லை!----- கரெக்டு..

    பதிலளிநீக்கு
  2. அவளை மறக்கவில்லையாம்;அவள் நினைவில் எழுதிய கவிதை மறந்து விட்டதாம்!
    -- இது எப்படி இருக்கு ?

    பதிலளிநீக்கு
  3. சட்டென்று கணை தொடுத்த அக்காமன் --- புரியலையே?

    பதிலளிநீக்கு
  4. How can love be born so quick
    It is nature’s most delicate trick


    ...nice.

    பதிலளிநீக்கு
  5. தன் காதல் ரதி முதலில் சொன்னாளா
    உன் பார்வை அதையவளுக் குணர்த்தியதா?


    ...... Superb!

    பதிலளிநீக்கு
  6. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    //நண்பேன்டா..//
    ஆம்,ஆம்!

    பதிலளிநீக்கு
  7. அழகான காதல் கவிதை! அருமையான மொழிபெயர்ப்பு. ஆனால் இதை மொழிபெயர்க்கவில்லையே!

    Worthless son of a worthy goddess
    Why is it that you so torment us

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    காதலிக்காத மனிதர்களில்லை
    காதலில்லாமல் இவ்வுலகமும் இல்லை!----- //கரெக்டு..//
    மதிப்பெண்ணும் போட்டு விடுங்கள்,ஐயா!

    பதிலளிநீக்கு
  9. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    அவளை மறக்கவில்லையாம்;அவள் நினைவில் எழுதிய கவிதை மறந்து விட்டதாம்!
    //-- இது எப்படி இருக்கு ?//
    நான் நினைத்ததை,நீங்கள் எழுதி விட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
  10. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    //சட்டென்று கணை தொடுத்த அக்காமன் --- புரியலையே?//
    காமனின் கணை கண்கள் கலந்தவுடன்’சட்டென்று’ பாய்ந்து விட்டதல்லவா?

    பதிலளிநீக்கு
  11. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    //மொழிப் பெயற்ப்பு கலக்கல்.//
    வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி,கருன்!

    பதிலளிநீக்கு
  12. Chitra கூறியது...

    How can love be born so quick
    It is nature’s most delicate trick


    // ...nice.//
    thanks!

    பதிலளிநீக்கு
  13. தன் காதல் ரதி முதலில் சொன்னாளா
    உன் பார்வை அதையவளுக் குணர்த்தியதா?


    //...... Superb!//
    மீண்டும் நன்றி சித்ரா!

    பதிலளிநீக்கு
  14. வே.நடனசபாபதி கூறியது...

    //அழகான காதல் கவிதை! அருமையான மொழிபெயர்ப்பு. ஆனால் இதை மொழிபெயர்க்கவில்லையே!

    Worthless son of a worthy goddess
    Why is it that you so torment us

    வாழ்த்துக்கள்!//

    காக்கும் கடவுளின் மைந்தனே காதல் ஏக்கம் கொள்ள எமை வைத்ததேன்”
    சரியா!
    நன்றி சபாபதி அவர்களே!

    பதிலளிநீக்கு
  15. மொழிபெயர்ப்பு அருமை..

    Worthless son of a worthy goddess
    Why is it that you so torment us

    //பொருள் பெற்ற திருவின் பயனற்ற புதல்வனே!
    துயருற்று மனங்களை துவளச் செய்வதும் ஏன்?//

    :)

    பதிலளிநீக்கு
  16. சமுத்ரா கூறியது...

    மொழிபெயர்ப்பு அருமை..

    Worthless son of a worthy goddess
    Why is it that you so torment us

    //பொருள் பெற்ற திருவின் பயனற்ற புதல்வனே!
    துயருற்று மனங்களை துவளச் செய்வதும் ஏன்?//

    :)
    hats off to you samudra!
    பாராட்ட வார்த்தைகள் கிடைக்கவில்லை!
    வருகைக்கும் உங்கள் வரிகளுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  17. நல்ல கவிதை! ஆங்கிலத்திலும் தமிழ் மொழி பெயர்ப்பிலும் நல்ல சொல்லாடல்! பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு