தொடரும் தோழர்கள்

திங்கள், மே 01, 2017

கரதலாமலகம்

என்ன இது ஏதோ கரடு முரடான தலைப்பு என்று சிலர் யோசிக்கலாம்.

தமிழ்ப் பதிவில் வடமொழியில் ஏன் தலைப்பு எனச் சிலர் எண்ணலாம்.

நான் எப்போதும் சொல்வதுதான் பதில்.

தலைப்பைப் பார்த்ததும் என்ன சொல்லியிருக்கிறார் என எண்ணத் தூண்ட வேண்டும்.

கரதலாமலகம்...கரதல ஆமலகம்.

கரம் உங்களுக்குத் தெரியும்.

சில பேருந்துகளில் பார்த்திருப்பீர்கள் ஒரு அறிவிப்பு “கரம்,சிரம் புறம் நீட்டாதீர் “என்று

ஆமலகம் என்றால் நெல்லிக்காய்.

இந்தியில் ஆம்லா என்று சொல்வார்கள்(அமலா இல்லை!}

இதைத்தான் தமிழிலும் சொல்வோம் உள்ளங்கை நெல்லிக்கனி என்று.


நமக்குத் தெரிந்தது இரண்டு விதமான நெல்லிக்காய்கள்

பெரிய நெல்லி,அரநெல்லி
   
நெல்லிக்கனி என்று சொல்லும்போது க ண்டிப்பாக சில செய்திகள்நினைவுக்கு வரும்

தமிழ்ப்பாட்டி அவ்வையாருக்கு அதியமான் ஈந்த நெல்லிக்கனி.

சாப்பிட்டால் நீண்டகாலம் வாழ வைக்கும்கனியைத் தான் உண்ணாமல் அவ்வைக்குக் கொடுத்தான் அதியமான்
.
நம்மை வியக்க வைத்தான்.

இன்னொமொரு நெல்லிக்கனி
.
இளம் பிரம்மச்சாரி.

ஒளி வீசும் கண்கள்.

பார்த்தாலே பக்தி ஏற்படுத்தும் தோற்றம்.  
                
“பவதி பிக்ஷாந்தேஹி”என்று பிக்ஷைப் பாத்திரம் ஏந்தி வருகிறார்

ஒரு வீட்டு வாசலில் நிற்கின்றார்.

வறியவர்கள் வாழும் வீடு.

ஒரே ஒரு நெல்லிக்கனி,தாங்கள் சாப்பிடுவதற்காக வைத்திருக்கிறார்கள்.

அதைக் கொடுத்து விடுகிறாள் அவ்வீட்டுப் பெண்மணி.

அவர்கள் நிலை அறிந்த அவர் பாடுகிறார் “அங்கம் ஹரே:  .....”

“மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வி...”

கனகதாரா  ஸ்தோத்திரம் பிறக்கிறது.

தங்க நெல்லிக்கனிகளாக அவ்வீட்டில் கொட்டுகிறது.

ஆதி சங்கரரின் அற்புதம்.


  • கனகதாரா ஸ்தோத்திரத்தை தமிழில் பொன்மழைஎன்று கவியரசர் கண்ணதாசனும்,பொன்மாரி என்று உளுந்தூர்ப்பேட்டை சண்முகமும் தந்திருக்கின்றனர்.
,

நெல்லிக்காயின் மகத்துவம்,மருத்துவ குணங்கள் பற்றி எல்லாம் நீங்கள் அறியாததா?

எனவே நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை.

எழுதி முடிக்கையில் ஒன்று எனக்குக் கரதலாமலகம் ஆகத் தெரிகிறது.

என்னால் முன்பு போல் எழுத இயலாது என்பது!

சொல்வார்கள்”ஆசை இருக்கிறது தாசில் பண்ண,அதிர்ஷ்டம் இருக்கிறது மாடு மேய்க்க”........

டிஸ்கி:இது நேற்றே வெளி வந்திருக்க வேண்டியது.ஏனெனில் நேற்று சங்கர ஜெயந்தி.

என் மதம் தாமதம்!


23 கருத்துகள்:

  1. வாங்க ஐயா நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்தமைக்கு நல்வரவு.

    நெல்லிக்காயை வைத்தே... காயை நகற்றிய விதம் அருமை.

    என்மதம் தாமதம் ஸூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனி நீண்ட இடைவெளி இல்லாமல் இருக்க இறை அருள் வேண்டுகிறேன்!
      நன்றி கில்லர்ஜி

      நீக்கு
    2. த.ம. இணையவில்லையே ஐயா செல்பேசியில் வருகிறேன்

      நீக்கு
  2. என் மதம் தாமதம்.... :)

    வித்தியாசமாக தலைப்பு வைப்பதில் நீங்கள் வித்தகர் ஆயிற்றே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி வெங்கட்.மறக்கவில்லை என்பது தெரிகிறது!

      நீக்கு
  3. எம்மதம் ஆனாலும் தா’மதமே’ ஆனாலும் சம்மதமே.

    தங்கள் பாணியில் மிகவும் நல்லதொரு பதிவு. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு (அதாவது கடந்த ஆண்டு செப்டெம்பர் திங்களுக்குப் பிறகு) தங்களது வலைத்தளத்தில் நீங்கள் பேச நினைத்ததை பேச வந்தமைக்கு நன்றி! இனி தொடர்ந்து பேசுவீர்கள் என எண்ணுகிறேன்.

    தாமதமாக சொன்னாலும் தரமானதை சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்!

    ஒரு சிறு திருத்தம்: பெரிய நெல்லி, அர நெல்லி என்று சொல்லமாட்டார்கள். அதை பெரு நெல்லி (Phyllanthus emblica) என்றும், அருநெல்லி அல்லது அரைநெல்லி (Phyllanthus acidus) என்றும் சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு நிபுணரிடமிருந்து சரியான தகவல் பெற என் தவறு உதவியது
      நன்றி சபாபதி சார்

      நீக்கு
  5. வணக்கம்.

    தலைப்பு வைப்பதில் உங்களை மிஞ்ச முடியாது என்று மீண்டும் அனுபவத்தில் அறிந்தேன்.:)

    நானும் நீண்ட விடுமுறைக்குப் பின்தான் வந்துள்ளேன் .

    தம

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  6. வழக்கம் போல நல்ல தலைப்பு. போலவே நல்ல பதிவு.

    எனக்கு இன்னொரு நெல்லிக்கனி நினைவுக்கு வருகிறது. சிவகுமார், சிவச்சந்திரன் நடித்த தமிழ்ப்படம். நட்பு பற்றிய அந்தப் படத்தில் உள்ள "நானொரு கோவில் நீயொரு தெய்வம்" என்கிற மறக்க முடியாத பாடலால் அந்த நெல்லிக்கனி நினைவுக்கு வருகிறது!

    :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி ஒரு படம் வந்ததே எனக்கு நினைவில்லை!
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  7. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களின் பதிவு
    தொடருங்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  8. ரெண்டு மூணு முறை சொல்லிப்பார்த்தால்தான் சரியாகச் சொல்ல முடியும்போல் இருக்கிறது. நெல்லிக்காய் விளக்கம் நன்று. (அரி நெல்லி இல்லையோ? அரு, அரை நெல்லியா? நடனசபாபதி அவர்கள் குழப்பிவிட்டார்களே)

    இது என்ன. ஸ்ரீராம் ஒரு பாடல் எழுதியிருக்கிறார். 'நீயொரு கோவில் நான் அங்கு தீபம்' (உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல) என்ற பாடல்தான் என் நினைவுக்கு வருகிறது. இது என்ன படம்?

    பதிலளிநீக்கு
  9. சென்னைப் பித்தன் சார் உங்கள் தலைப்புகளே ஃபேமஸ் தான்...இதுவும் அப்படியே ஆனால் வாசித்துப் பார்க்கத்தான் கொஞ்சம் நேரம் பிடித்தது. சமஸ்கிருதம் வாயிலே வராது!! ஆனா எம் எஸ் பாடியிருக்கும் அங்கம் ஹரே ஏகலைவியாகக் கற்றுக் கொண்டதுண்டு...உச்சரிப்பு கொஞ்சம் பிரஸ்னம்தான்...

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு காண்பதில் மகிழ்ச்சி. தொடர்கிறோம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  10. சென்னைப் பித்தன் சார் உங்கள் தலைப்புகளே ஃபேமஸ் தான்...இதுவும் அப்படியே ஆனால் வாசித்துப் பார்க்கத்தான் கொஞ்சம் நேரம் பிடித்தது. சமஸ்கிருதம் வாயிலே வராது!! ஆனா எம் எஸ் பாடியிருக்கும் அங்கம் ஹரே ஏகலைவியாகக் கற்றுக் கொண்டதுண்டு...உச்சரிப்பு கொஞ்சம் பிரஸ்னம்தான்...

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு காண்பதில் மகிழ்ச்சி. தொடர்கிறோம்...

    கீதா

    பதிலளிநீக்கு