உப்பரிகையில் அமர்ந்து ஓவியம் தீட்டிக் கொண்டிருந்தார்
சிபி.
இன்னும் சில தொடுகைகளே பாக்கி;ஓவியம் முழுமையடைந்து
விடும்.
அப்போது பயத்துடன் குரல் எழுப்பியவாறே அவர் மடியில்
வந்து விழுந்தது ஒரு வெண் புறா.
அதைத் துரத்தி வந்த பருந்தொன்று மாடத்தின் சுவரில் அமர்ந்தது.
புறாவின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.
அப்போது பருந்து சொன்னது”அப்புறா என் இரையாகும்.அதை
என்னிடம் ஒப்படைத்து விடுங்கள்.”
(பருந்து பேசுமா என்று கேட்பீர்களேயாயின்...1.அது
ஒரு விசேடப் பருந்து.மனித மொழிபேசும் அல்லது 2.சிபிக்கு பறவை,விலங்குகள் மொழி தெரியும்!)
”இன்னும் சில விநாடிகளில் நான் உண்ணவில்லையெனில்
என் உயிர் பிரியும் “என்றது பருந்து.
“அப்படியாயின் இதோ உடனே அளிக்கிறேன்” என்று கத்தியால்
தன் தொடைச் சதையை வெட்டப் போனார் சிபி.
பருந்து சொன்னது”நான் நர மாமிசம் சாப்பிடுவதில்லை.நீ
காலம் கடத்தி என் உயிர் பிரியக் காரணமாகப் போகிறாய்.உடனே புறாவைக் கொடு” பருந்து சொன்னது.
சிபி யோசித்தார்.”புறாவை உடனே கொடுக்கவில்லை என்றால்
பருந்து மடியும்.கொடுத்தாலோ புறா மடியும்.ஓர் சிறு உயிரைக் கூடக் காக்க முடியாத நான்
என்ன சக்ரவர்த்தி.நான் இறப்பதே மேல்.”
வாளை எடுத்தார்.தன் கழுத்தை நோக்கி வீசினார்.....
என்ன விந்தை.
வாள் மாலையாக மாறி கழுத்தில் விழுந்தது.
பருந்தும் புறாவும் மறைந்தன
.பருந்து இருந்த இடத்தில்
ஒரு தேவன் நின்றான்
சொன்னான்”நான் தர்ம தேவன்.ஒரு சிறு உயிரைக் காப்பாற்ற
முடியவில்லையே என உன் உயிரை இழக்கத்துணிந்த நீ தர்மத்தின் தலைவன்;தர்மதுரை(பாட்சா,கபாலி
எல்லாம் கிடையாது).நீ பல்லாண்டுக்காலம் ஆட்சி செய்து உன் நாடு எல்லா வளமும் பெற வாழ்த்துகிறேன்.”
சிபி வணங்கினார்.
அப்படியும் அரசர்கள் இருந்திருக்கிறார்கள் என்று நம்ப வேண்டும்!
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்
நீக்குஇந்தக் கதையும் நல்லாத்தானே இருக்கு. ஆனா, சில வினாடிகளில் எப்படி பருந்து புறாவைச் சாப்பிடமுடியும்?
பதிலளிநீக்குசாப்பிட ஆரம்பிச்சாலே பசி கொஞ்சம் அடங்கிடும்.தவிரவும்,வந்திருப்பது தர்மதேவந் ஆயிற்றே.
பதிலளிநீக்குபழைய கள்ளை புதிய மொந்தையில் தந்தது சுவையாய் இருந்தது! இப்படியும் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று வேறுவிதமாக யோசித்து அருமையாய் பதிவிட்டிருக்கிறீர்கள். பாராட்டுகள்!
பதிலளிநீக்குஇப்படிப்பட்ட தர்மத்தின் தலைவன்களை கதையில் தான் பார்க்க முடிகிறது ,அந்த பருந்து இப்போது வந்து மிரட்டினால் அதுவே விருந்தாகிடும் :)
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்கு//”நான் தர்ம தேவன்.ஒரு சிறு உயிரைக் காப்பாற்ற முடியவில்லையே என உன் உயிரை இழக்கத்துணிந்த நீ தர்மத்தின் தலைவன்;தர்மதுரை(பாட்சா,கபாலி எல்லாம் கிடையாது).நீ பல்லாண்டுக்காலம் ஆட்சி செய்து உன் நாடு எல்லா வளமும் பெற வாழ்த்துகிறேன்.”//
பதிலளிநீக்கு(பாட்சா,கபாலி எல்லாம் கிடையாது)
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !
சரியாகச் சொன்னீர்கள். பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.
பகிர்வுக்கு நன்றி அய்யா..
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா.. கடைசியில் சினிமா பெயர்களா ஐயா ?
பதிலளிநீக்குஅருமை ஐயா
பதிலளிநீக்கு