நூலகத்தில் ஒரு இளம்பெண் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள்.
ஒரு இளைஞன் அவளருகில் வந்தான்.
அவளருகில் ஒரு இருக்கை காலியாக இருந்தது.
அவளிடம் மெல்லக் கேட்டான்”நான் இங்கே அமரலாமா?”
அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
பின் உரக்கச் கேட்டாள்”இன்று இரவு உன்னோடு தங்குவதா?என்ன நினைத்தாய்?”
அவள் சப்தம் கேட்டு நூலகத்தில் உள்ள அனைவரும் அவனையே பார்த்தனர்.
அவனுக்கு அவமானமாகி விட்டது.
அங்கிருந்து அகன்று ஒர் காலி இருக்கை தேடி அமர்ந்தான்.
சிறிது நேரம் சென்று அவள் அவன் அருகில் சென்றாள்.
சொன்னாள்”நான் ஒரு மனோதத்துவம் பயிலும் மாணவி.உங்கள் மன நிலையைப் பார்க்க
எண்ணி அவ்வாறு செய்தேன்”
இளைஞன் உரக்கச் சொன்னான்”என்ன?ஓர் இரவுக்குப் பத்தாயிரம் ரூபாய் வேண்டுமா?மிக அதிகம்”
இப்போது அனைவரும் அவளையே பார்த்தனர்.
அவள் குறுகிப் போனாள்.
அவன் சொன்னான்”நான் ஒரு வழக்கறிஞர்.யாரையும் குற்றவாளியாக்க என்னால் முடியும்!”
நன்றி: பதிவர் குட்டன்.
ஜாலிடேக்கு உள்ள கதை மாதிரித் தெரியலையே. த.ம 2
பதிலளிநீக்குஜாலியா இல்லையா
நீக்குநன்றி
இந்தப்பதிவு மிகவும் சூப்பராகவும் சுவையாகவும் உள்ளது ஸார். மிகவும் ரஸித்துப் படித்தேன். ஷார்ட் அண்ட் ஸ்வீட். :)
பதிலளிநீக்குபதிவர் குட்டன் அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
பகிர்ந்து படிக்க வாய்ப்பளித்த தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.
நன்றி சார்
நீக்குஏற்கனவே படிச்ச ஜோக்ப்பா
பதிலளிநீக்குநன்றி பதிவர் குட்டன் என்று போட்டிருக்கிறேனே!
நீக்குநன்றி
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குகுட்டன் GOOD DONE :)
நீக்குவிடாக்கண்டனுக்கு ஏற்ற ஆள்தான்.
பதிலளிநீக்குநன்றி
நீக்குஅதுக்கு இது சரி
பதிலளிநீக்குவல்லவனுக்கு வல்லவன்
வையகத்தில் உண்டுதானே
அதுவும் கிரிமினல் வக்கீல் என்றால்
சொல்லவும் வேண்டுமோ ?
சுவாரஸ்யமான பதிவு
வழ்த்துக்களுடன்...
அதுக்கு இது சரி
பதிலளிநீக்குவல்லவனுக்கு வல்லவன்
வையகத்தில் உண்டுதானே
அதுவும் கிரிமினல் வக்கீல் என்றால்
சொல்லவும் வேண்டுமோ ?
சுவாரஸ்யமான பதிவு
வாழ்த்துக்களுடன்...
வாட்ஸாப்பில் ஏற்கெனவே படித்திருக்கிறேன். சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குஎப்போதுமே வழக்கறிஞர்களிடம் கவனமாக இருக்கவேண்டும் என்பதை ஹாலி டே அன்று ஜாலி யாக ஆக சொல்லியிருக்கிறார் திரு குட்டன் என நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஒருவேளை இந்த பின்னூட்டங்களை திரு குட்டன் படிக்க நேர்ந்தால் திரு திண்டுக்கல் தனபாலன் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க திரும்பவும் பதிவிடத் தொடங்கலாம். எனது விருப்பமும் அதுவே.
விடாக்கண்டன், கொடாக்கண்டன்.
பதிலளிநீக்குஎங்கேயோ வாசித்த நினைவு!!!
பதிலளிநீக்குகீதா