தொடரும் தோழர்கள்

சனி, மே 13, 2017

ப.க.பு.மொ. 3....பாரியும் முல்லையும்

காட்டு வழியில் ரதத்தை வேகமாகச் செலுத்தி வந்த பாரி திடீரென்று நிறுத்தினான்.

உடன் இருந்த அங்கவை,சங்கவை இருவரும் ஒருமித்த குரலில் கேட்டனர்”ஏன் தந்தையே ரதத்தை நிறுத்தி விட்டீர்கள்?”

பாரி”அதோ பாருங்கள்” என்று சுட்டிக்காட்டினான்.

அவன் காட்டிய இடத்தில் பசுமையான முல்லைக் கொடி ஒன்று பற்றிப் படர ஆதரவின்றித் தவித்துக் கொண்டிருந்தது.

பாவம் தந்தையே என்றனர் மகளிர்.

”அதற்கு நாம் உதவி செய்ய வேண்டும்.அருகில்,கொம்பு ஏதாவது இருக்கிறதா பார்க்கலாம்”என்றான் பாரி.

மூவரும் ரதத்திலிருந்து இறங்கித் தேடினர்.அங்கு ஆதாரமாக வைக்கக் கூடிய கொம்பு எதுவும் கிடைக்கவில்லை.

பாரி யோசித்தான்.சொன்னான்”நம் ரதத்தின் மேல் அக்கொடியை படர விட்டு விட்டு நாம் அரண்மனை திரும்பி ஆட்களை அனுப்பிப் பந்தல் அமைத்து விட்டு ரதத்தை எடுத்து வரச் செய்யலாம்.”

அங்கவை சொன்னாள்”தந்தையே!இங்கிருந்து அரண்மனை பத்து காத தூரமிருக்கும்.நாம் நடந்து செல்வது சாத்தியமல்ல.ஒன்று செய்யலாம்.நாங்கள் இருவரும் கொடியை எங்கள் மேல் படர விட்டு நிற்கிறோம்.நீங்கள் சென்று விரைவில் ஆட்களுடன் திரும்பி வாருங்கள்”

பாரி சிரித்தான்”ஒரு கொடிக்கு இரு கொடிகள் கொம்பாவதா?நான் நிற்கிறேன்.நீங்கள் என்னிலும் விரைவாக ரதம் ஓட்டுவீர்கள்.சென்று வாருங்கள்”

அவர்கள் மின்னலெனப் புறப்பட்டனர்


முல்லைக் கொடிக்குத் தானே கொழு கொம்பாகி நின்றான் பாரி!

14 கருத்துகள்:

  1. ஆஹா, புதுப்புதுக்கதைகளாகச் சொல்லி மகிழ்விக்கிறீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழக்கம் போல் உடனடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வைகோ சார்

      நீக்கு
  2. பழைய திரைப்பட பாடல்களை Remix செய்வதுபோல பழைய கதைகளுக்கு/நிகழ்வுகளுக்கு புதிய வடிவம் கொடுத்து ‘இப்படி நடந்திருந்தால்’ எப்படியிருந்திருக்கும் என என்ன வைத்துவிட்டீர்கள். பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  3. ஆஹா கதை புதுமையாக இருக்கின்றதே ஐயா.

    பதிலளிநீக்கு
  4. ஆஹா...அற்புதமான கற்பனை
    சொலிச் சென்ற விதம் அருமை
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  5. ஆஹா... புதுசு புதுசா சிந்திக்க ஆரம்பித்துவிட்டீர்களே..

    காவலுக்கு துணை வீரர்கள் இல்லாமல் அரண்மனையை விட்டு பத்துகாதம் பெண் குழந்தைகளோடு பார் சென்றானா? ஆச்சர்யம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாரியின் நாட்டில் பயமில்லை!
      ஆமாம்,காதம் என்றால் எவ்வளவு?!
      நன்றி நெ.த.

      நீக்கு
    2. 12 விரல் = 1 சாண், 2 சாண் = 1 முழம், 2 முழம் = 1 கஜம், 2 கஜம் = 1 பாகம், 625 பாகம் = 1 காதம், 2 காதம் = 1 கூப்பீடு

      தமிழன் எப்படி அளவிட்டிருக்கிறான். 1 கூப்பீடு என்பது, நாம் கூப்பிட்டால் கேட்கும் தூரம் (ஒரு மாசுவும் இருந்திராத அந்த நாட்களில்கூட, ஒருவன் கூப்பிட்டால் 2 காததூரம் கேட்கும் என்பது அதிசயம்தான்)

      நீக்கு
    3. அசத்திட்டீங்க!
      நன்றி நெல்லைத் தமிழன்

      நீக்கு