”மன்னா!அங்கே பாருங்கள்.”
மந்திரி காட்டிய இடத்தைப் பார்த்தான் அதியமான்.
இருவரும் சில வீரர்களுடன் குதிரையில் சென்று கொண்டிருந்தனர்
“நெல்லி மரம்.இதில் என்ன புதிதாக?”மன்னன் கேட்டான்.
”அதோ உச்சியில் ஒரே ஒரு கனி இருக்கிறது பாருங்கள்.அது
அபூர்வக் கனி.அதை உண்பவர் பல்லாண்டு நோயின்றி வாழலாம்.”
மன்னன் வீரர்களை அனுப்பி அதைப் பறித்து வரச் செய்தான்.
மந்திரி யோசித்தார்”யாருக்குத்தான் நீண்ட நாள் வாழ
ஆசை இல்லை?”
தகவல் கிடைத்தது தமிழ் மூதாட்டி அவ்வையார் காத்திருப்பதாக.
வேகமாகச் சென்றான் ;வணங்கினான்.
”தாங்கள் வந்திருப்பது எல்லையற்ற மகிழ்ச்சி அளிக்கிறது
அவ்வை அவர்களே.”
அவ்வையிடம் கொடுத்து இதைத் தாங்கள் உண்ண வேண்டும்
என்றான்.
அவ்வை யோசித்தார்.சாதாரணக் கனி என்றால் இவ்வளவுக்
கவனமாகக் கொண்டு வந்திருக்க மாட்டான்.கனிவகைகள் பலவற்றை அளித்து உண்ணச் சொல்லும் மன்னன்
ஒரு சிறு நெல்லிக்கனியைத் தருகிறான் என்றால் அதில் ஏதோ சிறப்பு இருக்க வேண்டும்.
கேட்டாள் மன்னனிடம்.
அவன் மழுப்பினான்.
வியந்தாள் அவ்வை மன்னனின் மாண்பு கண்டு.
அந்நேரம் இளவரசன்,சிறுவன் அங்கு வந்தான்
”வணக்கம் அவ்வைப்பாட்டியே”
வணங்கிய பின் தந்தையின் அருகில் சென்று நின்றான்.
சிந்தித்தாள் அவ்வை.
“மன்னா.உன் மகன் மிகுந்த அறிவுக்கூர்மையும் ஆற்றலும்
உள்ளவன்.உனக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்று உன்னிலும் சிறப்பாகச் செயலாற்ற வல்லவன்.அவன்
பல்லாண்டு வாழ்ந்து நாடு செழிக்க வேண்டும் இக்கனியை அவன் உண்பதே சாலச் சிறந்தது.”
மந்திரி ஆமோதித்தார்;மன்னனும் ஏற்றுக்கொண்டான்.
கனியை இளவரசன் உண்டான்!
அப்போ வாரிசு அரசியலை அன்றே ஆரம்பித்துக்கொடுத்துள்ளவர் நம் ஒளவைப்பாட்டி தானோ?
பதிலளிநீக்கு//பழைய கள்,புதிய மொந்தை!-1..அவ்வையும் அதியனும்//
சிறப்பான சிந்தனையுடன் கொடுத்துள்ள பதிவுக்குப் பாராட்டுகள்.
நன்றி வைகோ சார்
நீக்கு#உனக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்று உன்னிலும் சிறப்பாகச் செயலாற்ற வல்லவன்#
பதிலளிநீக்குஅவ்வையின் தீர்க்கதரிசனம் பலிக்கவில்லை,அதியமான் மகன் யாரென்றே தெரிவில்லையே :)
எத்தனையோ பெயெர் தெரியாத நல்ல மன்னர்களில் ஒருவன்!
நீக்குநன்றி ஜி
தன் நலமற்றது தாயின் நெஞ்சம்...
பதிலளிநீக்குஉண்மை.நன்றி ஸ்ரீராம்
நீக்குஅன்று மனிதர்கள் வாழ்ந்தார்கள்
பதிலளிநீக்குஇன்று....?
நீக்குநன்றி ஜி
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
அறிவுக்கு விருந்தாகும் கதை.. அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்
நீக்குஅப்ப நடந்ததுதான் இப்பயும் நடக்குதா?
பதிலளிநீக்குஎன்றும்....
நீக்குநன்றி ஐயா
நமக்குத் தெரிந்த கதைப்படி அதியமான் ஔவை அந்த கனியை உண்டபிறகே அதை உண்ணும் பேறு பெற்றவர் நீண்ட நெடுங்காலம் மரணமிலாப் பெருவாழ்வு பெற்று வாழ்வார் எனும் உண்மையை எடுத்துரைக்கிறான். ஆனாலும் தங்களின் மாறுபட்ட கற்பனை சிறப்பானதுதான். அப்படி நடந்திருந்தால் நண்பர் திரு பகவான்ஜி அதியமான் மகன் பற்றி கேள்வி கேட்டிருக்கமாட்டார்.
பதிலளிநீக்குநன்றி சபாபதி சார்
நீக்குஎன்னே நல்ல உள்ளம் ஔவைப்பாட்டிக்கு!!
பதிலளிநீக்குமீண்டும் வந்தது கண்டு மகிழ்ச்சி. இனிதான் தங்களின் பழைய பதிவுகளையும் வாசிக்க வேண்டும்...தொடர்கிறோம் சார்.
வருகைக்கு நன்றி
நீக்குஆம், இப்படித்தான் இருந்திருக்கவேண்டும். ஆனால் அவ்வைப்பாட்டிக்கு அன்று மிகுந்த பசி. எனவே சின்ன நெல்லிக்கனியானாலும் பரவாயில்லை என்று தானே சாப்பிட்டுவிட்டார். பசி வந்திடப் பத்தும் பறந்திடுமே! தங்கள் கற்பனை அருமை. (இனி இம்மாதிரி இன்னும் எத்தனை கதைகள் வருமோ?)
பதிலளிநீக்குஇராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)
நல்ல பகிர்வு.....
பதிலளிநீக்குமிக ரசித்தேன உறவே....
பதிலளிநீக்குநன்றான கற்பனை.