வீரம்
இல்லாத விவேகம் கோழைத்தனம்;விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்........(பசும்பொன் முத்துராமலிங்கத்
தேவர்)
மனத்தில்
அச்சம் நிறைந்து,ஏதாவது சால்ஜாப்புச் சொல்லிக் கொண்டு எதிர்க்குரல் எழுப்பாமல் இருப்பது
வீரம் அல்ல;கோழைத்தனம்.
சிறந்த
வீரனாயினும்,எதிரியின் வலிமை,காலம் ,இடம் இவற்றைக் கருத்தில் கொள்ளாமல் மோதுவது வீரமல்ல,முரட்டுத்தனம்.
ராஜாராணி
படத்தில்(பழைய படம்) சாக்ரடீஸ் நாடகத்தில் சாக்ரடீஸ்சொல்லும் அறிவுரை,முக்கியமானது.
“வீரம்
விலைபோகாது,விவேகம் துணைக்கு வராவிட்டால்.தீட்டிய வாளும்,தினவெடுத்த தோள்களிலே தூக்கிய
ஈட்டியும் மாத்திரம் போதாது வீரர்களே,இதோ நான் தரும் அறிவாயுதத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்”
வீரம்
என்பது உடல் வலு மட்டும்தானா.சண்டையிட்டு வெல்வது மட்டும்தானா?இல்லை.
எங்கு
குரல் எழுப்ப வேண்டுமோ அங்கு அச்சமின்றிக் குரல் எழுப்புவதும் வீரம்.அதற்கு உடல் வலிமை
தேவையில்லை..மன வலிமை போதும்.
அச்சத்தை
தொலைத்தால்தான்,வீரம் பிறக்கும்.
ஆனால் எங்கு அச்சப் பட வேண்டுமோ அங்கு அஞ்சுவது விவேகம்.
என்னவேதான் வள்ளுவர் சொன்னார்
“அஞ்சுவது
அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்”
என்று.
வீரமும்
விவேகமும் உள்ள ராசாக்கள்தான் அந்தக் காலத்தில் வெற்றிக் கனியைப் பறித்திருக்கிறார்கள்!
.
சூழ்நிலைகள்
மீதும் தன் உடற்குறைகள் மீதும் பழி போட்டுத் தப்பிக்காமல்,இடர்ப்பாடுகள் வென்று சாதனை
படைக்கும் எவருமே வீரர்தான்.
அறிவு,விவேகம்
இணைந்தால்தான்,வீரம் வெற்றி பெறும்.
வீரம்,விவேகம் இரண்டும் இணைந்தவன்,வெல்லப்பட முடியாதவன்....அஜித்(வட மொழியில்)
வீரம்,விவேகம் இரண்டும் இணைந்தவன்,வெல்லப்பட முடியாதவன்....அஜித்(வட மொழியில்)
நல்ல கருத்துகள் அடங்கிய விடயம் ஐயா ஸூப்பர்
பதிலளிநீக்குகடைசியில் சினிமாக்காரனை ஹீரோவாக்கி விட்டீர்களே... ஹி.. ஹி.. ஹி..
வீரமும்,விவேகமும் உள்ளவன்,வெல்லப்பட முடியாதவன்.இதற்கு வடமொழிப் பதம்..அஜித்.இதை சினிமாக்காரன் பற்றிச் சொல்கிறேன் என நீங்களாக நினைத்துக் கொண்டால் நான் என்ன செய்வது?!
நீக்குஅறிவு, விவேகம் இணைந்தால்தான், வீரம் வெற்றி பெறும்.
பதிலளிநீக்குவீரம், விவேகம் இரண்டும் இணைந்தவன், வெல்லப்பட முடியாதவன்....அஜித்(வட மொழியில்)//
வடமொழிச் சொல்லான அஜித் பற்றி அறிந்து மகிழ்ந்தேன். பகிர்வுக்கு மிகவும் நன்றிகள், ஐயா.
நன்றி வைகோ சார்
நீக்குஅவருடைய பெயரின் பொருளை அறிந்துதானோ என்னவோ அஜித் தனது படங்களுக்கு வீரம், விவேகம் என பெயர் சூட்டியுள்ளார் போலும்!
பதிலளிநீக்குபனை மரத்தின் கீழ் இருந்த பாலைக் குடித்தாலும் கள் என்று தானே சொல்வார்கள். அதனால் தான் திரு KILLERGEE அவர்கள் தங்களின் பதிவு சினிமாக்காரர்களைப் பற்றியது என சொல்லிவிட்டார். அவருக்குத் தெரியாது நீங்கள் அஜீத்தை பார்த்தது(?) கூட கிடையாது என்று! என்ன சரிதானே?
சரியாச் சொன்னீங்க சார்
நீக்குநன்றி
அருமை ஐயா
பதிலளிநீக்குநன்றி ஜெயகுமார்
நீக்குதலைப்பும் சொல்லிச் சென்றவிதமும் அருமை
பதிலளிநீக்குகில்லர்ஜீக்குச் சொன்ன பதிலும்...
வாழ்த்துக்களுடன்...
நன்றி ரமணி
நீக்குசாண்டில்யன் கதைகளில் இந்த வீரத்தையும், விவேகத்தையும் இணைத்து அற்புதமாக எழுதுவார். எப்படிக் காதல் காட்சிகள் எழுதுவதில் அவர் வல்லவரே, அதே போல சண்டை, போர்க் காட்சிகள் எழுதுவதிலும் வல்லவர்.
பதிலளிநீக்குகருத்துக்கு நறி ஸ்ரீராம்
நீக்குநன்றி
நீக்குஜித் - அஜித்! நல்ல வார்த்தை விளையாட்டு!
பதிலளிநீக்குதொடரட்டும் தங்கள் பதிவுகள்.
நன்றி வெங்கட்
நீக்குஇந்த கால 'ராஜா'க்களும் வெற்றிக்'கனி 'யைப் பறித்துக் கொண்டுதானே இருக்கிறார்கள் :)
பதிலளிநீக்குயாராவது இதைப் பிடிப்பாங்களான்னு காத்துக்கிட்டிருந்தேன்
நீக்குபகவானாச்சே!
நன்றி ஜி