தொடரும் தோழர்கள்

புதன், மே 31, 2017

இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை!

புகை யி(ல்)லை என்றார்கள்; ஆனால்
சுருட்டிப் பற்ற வைத்தால்
புகைதான்  வருகிறதே!

இழுக்க  இழுக்க  இன்பம்
இறுதி வரை என்பர்
இறுதியே மிக அருகில்தானே?

பன்னீர் புகையிலை, பான் பராக்
வாயிலிட்டுச் சுவைக்கலாம்
சுருட்டு, பீடி, வெண்சுருட்டு
புகை விட்டு ரசிக்கலாம்
எத்தனை வழிகள்
எமனை விரைந்தழைக்க!

புகையை நீங்கள் விட்டீர்கள்,
ஆனால் அப்புகை உங்களை விடாது
உங்கள் புகையைக் காணாமல்!

புண்பட்டநெஞ்சத்தை
புகைவிட்டு ஆற்றுவாராம்

புகை பட்ட நெஞ்சமே
புண்ணாகிப் போகாதோ?i

இன்று
ஒரு நாள் மட்டுமேன்?
ஆண்டு முழுவதும்
எதிர்ப்பு தினமாகட்டும்
இப்பொல்லாத புகையிலைக்கு.

(மீள் பதிவு)

19 கருத்துகள்:

  1. அருமையான கருத்தை சொன்னீர்கள் ஐயா ஸூப்பர்

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. சரியாகத்தானே இருக்கிறது?

      நீக்கு
    2. ஐயா தற்போது செல்போன் இதில் சிலருக்கு த.ம. இணையாமலேயே இருக்கிறது நீங்கள், ஸ்ரீராம் ஜி, கரந்தையார், தில்லைஅகத்தார் போன்றவர்களுக்கு இணையவில்லை ஆகவே நான் ஓட்டு போட இயலவில்லை
      விரைவில் கணினியில் வருவேன்

      நீக்கு
  3. ஆழமாக மனதில் பதியுமாறு கூறியுள்ள மிகவும் அருமையான அறிவுரைகள். மீள் பதிவுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. நல்ல கருத்தைச் சொன்னதால் த.ம. மற்றும் பாராட்டுகள்.

    எனக்கு குடிக்கறவங்களைவிட, புகை பிடிக்கறவங்க அலர்ஜி. அவங்க விடற புகைல நான்னா பாதிக்கப்படறேன். குடித்தா, கூட இருக்கறவனுக்கு கேடு இல்லை.

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு கருத்தை நன்றாகச் சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு
  6. அருமையான விழிப்புணர்வு கவிதை ..100 பேர் இருக்கும் அறையில் ஒருவர் புகைபிடித்துவிட்டு வந்தாலும் அந்த மூச்சு காற்று அங்கிருப்பதை நான் கண்டுபிடிச்சிடுவேன் ..வெரி சென்சிடிவ் புகை டுபாக்கோ ஸ்மெல்லுக்கு ....எனக்கு நெஞ்சீல்லாம் எரியும் அப்போ நினைச்சிப்பார்ப்பேன் இவங்க வீட்டு குழந்தைகள் எவ்ளோ கஷ்டப்படும்னு ..

    பதிலளிநீக்கு
  7. இன்றைய தினத்திற்கு சரியான பகிர்வு ஐயா...

    அருமை...

    பதிலளிநீக்கு
  8. #இறுதியே மிக அருகில்தானே?#
    இந்த கோணத்தில் நானும் ஒருமுறை எழுதியது நினைவுக்கு வருகிறது ....கஞ்சா குடித்தால் முதுமையே வராது ,ஏனென்றால் இளம் வயதிலேயே போய் சேர்ந்து விடுவார்களே :)

    பதிலளிநீக்கு
  9. நல்ல கருத்தை திரும்பத் திரும்ப சொல்லலாம். பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  10. உங்கள் எழுத்துக்களைப் போல் கவிதையும் அருமை ஐயா..

    பதிலளிநீக்கு
  11. தினம் தினம் மனதில் கொள்ள வேண்டிய கருத்திற்கு ஒரு 'தினம்' வைத்துக் கொண்டாட்டமா?

    பதிலளிநீக்கு
  12. நல்ல கருத்து!!

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு